அறிவைத்தேடி பயணித்தல் கற்காலத்திலும் நெட்காலத்திலும்

  • 8

மனிதனது வாழ்வை ஒழுங்கமைப்பதில் வாசிப்புக்கு மகத்தான காத்திரமான பங்களிப்பு உள்ளதால் தான் மனித வாழ்வை சீரமைத்து சமூகக்கட்டமைப்பை ஒழுங்காக்கி சமூகமாற்றத்தை ஏற்படுத்த வந்த இறுதி இளைவேதமான புனித அல்குர்ஆன் “வாசிப்பீராக” என்ற போதனையுடன் ஏவலுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது

அறிவு இறைவிசுவாசியின் காணாமல் போன செல்வம் அதை எங்கு கண்டாலும் தேடிப்பெற அருகதையும் தகுதியும் உள்ளவன் அவன்

என்பது நபிவாக்கு.

அறிவு ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பிரவாகித்து வெடித்து பலகோணங்களில் சிதறும் யுகத்தில் வாழ்கிறோம். நபிமொழிக்கலை ஆய்வாளர்கள் திறனாய்வாளர்கள் ஆக ஒரு ஹதீஸை (நபிமொழியை) தேடி அதன் அறிவிப்பாளரை (Narrator) தேடி அதன் தரத்தை standard தேடி போலியான இட்டுக்கட்டப்பட்ட fabricated விடயத்தை உறுதிப்படுத்த அந்தக்காலத்தில் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டமை அந்த வரலாறுகள் பதிந்துள்ள உண்மை

ஆனால் இந்தக்கால cyber era வில் இணையத்தில் தேடி அலைந்து மிகச்சரியான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட references/ Authentic sources மூலம் தகவலை பெறுவதென்பது அந்தளவு கடினமானது. அதைவிடவும் உரிய புத்தகங்களை தேடிப்பயணிப்பது வாங்குவது அதற்காக பல கடைகள் பலபடிகள் ஏறி இறங்குவது அதனது பருத்த விலைகளை வாழ்க்கைச்சுமையுடன் சமாந்தரமாக அமைத்து தாங்கிக்கொள்வது நேரமெடுத்து வாசிக்க கடமைகளின் கனதிகளை காலத்தின் பெறுமானத்துக்கேற்ப ஒழுங்கமைத்துக்கொள்வது என்பது மிகுந்த சிரமமான விடயமாகவே நோக்கவேண்டும்.

சாதாரண கீழ்நிலை அடிமட்ட வாசகர்களாகிய எங்களை போன்றவர்களே இத்தகைய சிரமத்தை உணரும் பொழுது, குறிப்பாக இந்த நாட்டில் உள்ள பிரபல வரலாற்று ஆய்வாளர்கள் அதிலும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக (அங்கிங்கெனாதபடி பொறுக்கி எடுத்து copy cut paste பண்ணுபவர்களன்றி) ஆழமாக ஆய்வுசெய்தவர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கவேண்டும் என்றுணரமுடிகிறது.

கடந்த புத்தக கண்காட்சியில் இலங்கை வரலாறு தொடர்பான சிங்கள மொழியிலான (ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) சர்வதேச தரம் வாய்ந்த நூலொன்றை தருவித்து வாசிக்க முற்பட்டபோது அதனது இரண்டாம் பாகமும் இருப்பது தெரிய வந்தது. அந்த நூலைத்தேடி அலைந்து உரிய பதிப்பகத்தை தலைநகர் கொழும்பின் சனநெரிசலுக்கும் வாகன நெரிசலுக்கும் மத்தியில் கண்டு பிடித்து எப்படியோ அந்த பருத்த தடித்த புத்தகத்தையும் எப்படியோ தேடிக்கண்டு பிடித்து எனது மாதாந்த சம்பளத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் கொழுத்த விலைகொடுத்து வாங்கிய பிறகு தான் மனதுக்கு நிம்மதி.

இலங்கையின் முஸ்லிம்கள் தொடர்பான பரந்து பட்ட அகல்விரிநிலைகொண்ட ஆய்வுகள் எல்லாக்கோணத்திலிருந்தும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வு மரபுகள் ஒழுங்குகளை பேணி எழுதப்படவேண்டும் எழுத ஊக்குவிக்கவேண்டும் என்ற மிகப்பிரமாண்டமான பணி கண்முன்னே நிழலாடி நகர்கிறது. எதிர்கால சந்ததிக்காக வரலாற்றை விஷேட துறையாக கற்று நிபுணத்துவம்பெற்றவர்களை உருவாக்கி விடவேண்டியஸதகதுல் ஜாரியாவான பணி எம் அனைவர் முன்னாலும் உள்ளதை மனங்கொள்க.

M.M.A. Bisthamy
BA (pera)
PGDE (OUSL)
வியூகம் வெளியீட்டு மையம்

மனிதனது வாழ்வை ஒழுங்கமைப்பதில் வாசிப்புக்கு மகத்தான காத்திரமான பங்களிப்பு உள்ளதால் தான் மனித வாழ்வை சீரமைத்து சமூகக்கட்டமைப்பை ஒழுங்காக்கி சமூகமாற்றத்தை ஏற்படுத்த வந்த இறுதி இளைவேதமான புனித அல்குர்ஆன் “வாசிப்பீராக” என்ற போதனையுடன் ஏவலுடன்…

மனிதனது வாழ்வை ஒழுங்கமைப்பதில் வாசிப்புக்கு மகத்தான காத்திரமான பங்களிப்பு உள்ளதால் தான் மனித வாழ்வை சீரமைத்து சமூகக்கட்டமைப்பை ஒழுங்காக்கி சமூகமாற்றத்தை ஏற்படுத்த வந்த இறுதி இளைவேதமான புனித அல்குர்ஆன் “வாசிப்பீராக” என்ற போதனையுடன் ஏவலுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *