பரீட்சைக‌ளி‌ல் தோற்பவர்கள் எல்லாம் வாழ்கையில் தோற்பவர்கள் அல்ல

  • 17

அன்றும் சொன்னேன்.. இ‌ன்றும் சொல்கிறேன்!

  • அவனுக்கு ஏழும் என்டா.. ஏன் உனக்கு மட்டும் ஏளா?
  • உனக்கு செலவு செய்தது எல்லாம் வேஸ்ட்!
  • உனக்கு படிப்பெல்லாம் சரி வராது… நீ பெரிசானால் ஒரு ஹோட்டல்கு தான் சரி!
  • நீ இப்படி விலாடி.. விலாடியே இருக்க வேண்டியது தான்…

இப்படி ஒரு பரீட்சையில் சித்தி பெறவில்லை அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை எடுக்கா விட்டால் அந்த இளம் சிறுவர்களை மேலுள்ள எதிர்மறையான வார்த்தைகளை சொல்லி அவர்களை இன்னும் காயப்படுத்தி, அவர்களிடம் உள்ள வேறு திறமைகளிலும் நம்பிக்கை இழக்கும் விதமாக இப்படிச் சொல்லும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால்..!

  • நீங்க நல்ல படிக்கிற புள்ள என்டு எனக்கு தெரியும். இந்த சின்ன பரீட்சையில பாஸ் ஆக இல்ல என்பதற்காக கவல பட வானம் மகன் or மகள்
  • உங்களுக்கிட்ட இன்னும் நிறைய திறமைகள் இருக்கு.
  • நாங்க உங்க teacher ர போய் சந்தித்து இவ்வளவு காலமும் பல தியாகங்களுடன் படிச்சி தந்ததுக்கு நன்றி சொல்லிட்டு வருவோம். (இதன் போது ஆசிரியர்களும் அவர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையே சொல்ல வேண்டுகிறேன்)
  • Exam ல பாஸ் ஆகின்ற மாணவர்கள் தான் வாழ்கையில் வெற்றியாளர்கள் என்றில்ல… இதபாருங்க இவங்க எல்லோரும் இப்படியான examகள் ல பாஸ் ஆகாத ஆக்கள் தான் ஆனா அதற்கு பிறகு நம்பிக்கையோடு நன்றாக படித்து இப்ப நல்ல நிலமைகள்ல இருக்குறாங்க

என்று இப்படியான உதாரணங்களை எடுத்துக் காட்டுவார்கள்.  அதே போன்று Exam ல பாஸ் ஆகிய ஒரு சிலர் அதற்கு பிறகு நல்ல முறையில் படிக்காததால் இன்று இப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லி அவர்களது உள்ளங்களில் நம்பிக்கையை ஊட்டுவார்கள்.

இந்த இருவகையினரில் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாமே அறிந்து அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கையை ஏற்படும் வார்த்தைகளை சொல்லி தொடர்ந்து வழிகாட்டினால் நிச்சயமாக அவர்களும் அவர்களது திறமைகள் மூலம் சாதனையாளர்களாக மாறுவார்கள்.

Habeeb Mohamed (Counselor)
Motivational Speaker and Skills Development Trainer,
Youtuber – Motivation 2 Win
வியூகம் வெளியீட்டு மையம்

அன்றும் சொன்னேன்.. இ‌ன்றும் சொல்கிறேன்! அவனுக்கு ஏழும் என்டா.. ஏன் உனக்கு மட்டும் ஏளா? உனக்கு செலவு செய்தது எல்லாம் வேஸ்ட்! உனக்கு படிப்பெல்லாம் சரி வராது… நீ பெரிசானால் ஒரு ஹோட்டல்கு தான்…

அன்றும் சொன்னேன்.. இ‌ன்றும் சொல்கிறேன்! அவனுக்கு ஏழும் என்டா.. ஏன் உனக்கு மட்டும் ஏளா? உனக்கு செலவு செய்தது எல்லாம் வேஸ்ட்! உனக்கு படிப்பெல்லாம் சரி வராது… நீ பெரிசானால் ஒரு ஹோட்டல்கு தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *