வெறுமையின் விம்பம்

  • 6

கண்ணே!
என் தாய்மையின் வரைபடம்
உருவழிந்து கொண்டிருக்கிறது.
காத்திருப்புகள் காற்றாடி வீச,
உருவம் காட்டும் மாத உதிரம்
எப்போது தான் உன் உருவம்
காட்டுமோ?

சமூகத்தின் தீட்டுப்பட்ட வார்த்தைகள்
தினமும் என்னைத் தீண்டுகின்றன
கழிவு நீராக-அவை
எலும்புகளையும் நரம்புகளையும்
சேதமாக்குகிறது கண்ணே!

முலை நுகரப்படாத உயிராய்
வாழ்வதாலோ, மலடியெனும்
மகுடம் சூடி மகிழ்கின்றனர்.
காலத்தின் பழுத்த சருகுகள்
முதுகில் சுமையேற-என்
கனத்த தனங்கள்
அழுகிக் கொண்டுடிருக்கிறது

புண்ணான என் நெஞ்சில்
புழுப்பிடிப்பான நினைவுகள்
வடிக்க முடியா வார்த்தைகளாக
வரம் பெற்றதுவோ?

கருவறைக்குள் வெறுமையின் விம்பம்
வெறித்துக் கொண்டிருக்க,
காலப் பருவத்தில்-தாய்மையை
எப்போது உணர்வேன்
கண்ணே?

என் உப்பிய வயிற்றின் மீது
உன் அப்பாவின் இதழ்கள்
எப்போது பதியும்?
உனக்கான
ஆசை முத்தங்களாக.

தவிப்பில் உன் தந்தையும்
சொல்லாது பருகும்
வார்த்தைகளால்,
வெளிச்சமற்ற தேசமாகிறது
உனக்கான என் உலகம்.

நிலாக்கவி நதீரா முபீன்
வியூகம் வெளியீட்டு மையம்

கண்ணே! என் தாய்மையின் வரைபடம் உருவழிந்து கொண்டிருக்கிறது. காத்திருப்புகள் காற்றாடி வீச, உருவம் காட்டும் மாத உதிரம் எப்போது தான் உன் உருவம் காட்டுமோ? சமூகத்தின் தீட்டுப்பட்ட வார்த்தைகள் தினமும் என்னைத் தீண்டுகின்றன கழிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *