சீரற்ற முயற்சி மாற்றத்தை கொண்டு வராது.

  • 20

எதிர்பாராத சர்வதேச நிகழ்வுகள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசியல் மற்றும் புவியரசியல் பதட்டங்கள் பல்வேறு நாடுகளில், பிராந்தியங்களில் உச்சநிலைக்கு வந்து மோசமான நிலைய தோற்றுவித்துள்ளன. எழில் மிகு இலங்கை மண்ணிலும் துயரம் தரும் நிகழ்வுகள் துரிதமடைகின்றன.

சவால்களும் ஆபத்துக்களும் நிறைந்த ஒரு அசாதாரண வரலாற்றுக் காலத்தில் நாம் வாழுகின்றோம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் தாய் நாட்டை வளப்படுத்துவது ஒவ்வொரு குடிமகன் மீதுமுள்ள தார்மீகக் கடமையாகும். இலங்கையர்களாகிய நாம் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை கனவு காண்பதும் அதற்காக உழைப்பதும் காலத்தின் தேவையாகும். மனித வளத்தை அழிக்கும் எதிரிகளின் சூழ்சியை கவிழ்ப்பதற்கு நாம் ஒன்படவேண்டும்.

வல்லரசுகளின் ஆடுகளமாக இலங்கை மாறியுள்ளது. அவர்களின் சுயநல ஆசைகள் எமது நாட்டை குட்டிச் சுவராக்குகின்றது. நாங்கள் பலிக்காவாக்கப்படுகின்றோம். இந்த சவால்களுக்கு இலங்கையர்களாகிய நாம் முகம் கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்கு நாட்டில் ஒரு முழுமையான சமூக மாற்றம் தேவைப்படுகிறது.

உண்மையில் அந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. அது அவசியமானது. ஆனால் அந்த மாற்றம் ஒரு வெற்றிடத்தில் இருந்து அல்லது இல்லாமையிலிருந்து தோன்ற முடியாது. அவ்வாறே குழப்பமான சூழ்நிலை அல்லது ஒழுங்கற்ற முயற்சிகளிலிருந்தோ அந்த மாற்றம் வர முடியாது.

உண்மையான மாற்றம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கு திசை அறியப்பட்ட செயற்பாட்டின் விளைவாகும். அனைத்துக்கும் முன்பு மாற்றப்பட வேண்டிய கள யதார்த்தத்தம் பற்றிய துள்ளியமான சரியான புரிதல் அவசியமாகும்.

எமது நாடு பல்லின சமூகங்கள், கலாசாரங்கள் வாழும் பூமி. பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் சிந்தனைகள் ஒன்றுபட வேண்டிய தேவையுள்ளது. வித்தியாசமான கலாசாரங்களுடன் கலந்து வாழம் புரிதல் வளர்க்கப்பட வேண்டியுள்ளது. இறுக்கமான சிந்தனை சிறைகளில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டியுள்ளது.

எமது நாட்டில் வளர்ந்து வரும் அசாதாரண சூழ்நிலைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு மாத்திரம் அன்று. அது நாட்டின் மொத்தமான வளங்களின் மீதுள்ள வெறியால் உருவானது. வல்லரசுகளின் கொலணியாக இலங்கை மாற வேண்டுமானால் உள்வீட்டு பூசல்கள் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் தேவையாகும்.

அதனை எதிர்ப்பதற்கு மண்ணின் மைந்தர்கள் அனைவரும் கூட்டிணைய வேண்டும். தேசத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டங்கள், அசர சார்பற்ற நிறுவனங்களின் முயற்சிகள், சிவில் சமூக நிறுவனங்கள், அமைப்புக்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள் என பலதரப்பும் கூட்டிணைந்து செயற்படும் காலம் வந்துள்ளது. தனித்தனியாக நல்லது செய்வதால் பயனில்லை என்ற நிலை தோன்றியுள்ளது.

அதே நேரம் மாற்றம் தேவை என்பதற்காக பதட்ட சூழலில் எழும்பும் மாற்றத்திற்கான வழிமுறைகள் திருப்பிதியான விளைவுகளை தராது. அடிப்படை மனித விழுமியங்களை மதிக்கும் காலத்துக்கு பொருத்தமான நாகரிகமான முறையில் இந்த மாற்றத்திற்கான நடிவடிக்கைகள் அமைய வேண்டும். அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கு திசை அறியப்பட்ட செயலின் விளைவாக வர வேண்டும்.

அதற்காக சிந்தனைகள் ஒன்றிணைய வேண்டும். பல விட்டுக் கொடுப்புகளுடன் பாடுபட வேண்டும். நல்ல சிந்தனைகள் ஒன்றினைந்தால் ஒன்றுபட்ட சமூக அமைப்பு எழும்பும் நாடும் வளம் பெறும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

எதிர்பாராத சர்வதேச நிகழ்வுகள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசியல் மற்றும் புவியரசியல் பதட்டங்கள் பல்வேறு நாடுகளில், பிராந்தியங்களில் உச்சநிலைக்கு வந்து மோசமான நிலைய தோற்றுவித்துள்ளன. எழில் மிகு இலங்கை மண்ணிலும் துயரம்…

எதிர்பாராத சர்வதேச நிகழ்வுகள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசியல் மற்றும் புவியரசியல் பதட்டங்கள் பல்வேறு நாடுகளில், பிராந்தியங்களில் உச்சநிலைக்கு வந்து மோசமான நிலைய தோற்றுவித்துள்ளன. எழில் மிகு இலங்கை மண்ணிலும் துயரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *