உணரப்போவது யார்?

  • 8

தாயை எண்ணி எத்தனையோ
எழுதல்களும் கவிதைகளும்
பார்த்தாயிற்று!
உணர்ச்சிகளும் ததும்பும்!
உண்மைகளும் உரைக்கும்!
ஆனால் கௌரவ பூசல்களுக்குள்
ஒளிந்தபடி தாய்-பிள்ளை குட்டை
அடிக்கடி கலங்கி கொண்டுதான்
இருக்கிறது!
உண்மையோ இல்லையோ
உம்மிடம் தான் விடையும்!

நண்பரே..!
உம் தாய் நொய் நொய் என்கிறார் என்று
அலுத்துக்கொள்பவரா நீங்கள்?
உம் வாதத்திறமையை உங்கள் தாயிடம்
காட்டுபவரா நீங்கள்?
உம் தாயின் புன்னகையை ரசிக்கக் கூட
நேரமில்லாத ஜாம்பவானா நீங்கள்?
அப்படியென்றால் மன்னித்துவிடுங்கள்
நீங்கள் நேரடியாக அதிஷ்டமில்லாதோர்
வரிசைக்குள் உள்வாங்கப்படுகிறீர்கள்!

சரி விடுங்கள்!
சிந்திக்க மறந்த ஒன்றை ஞாபகமூட்டுகிறேன்!
நம் நபியவர்கள் தம் தாயை இழந்த
போது வெறும் ஆறே வயது தான்!
இப்படியிருக்க அவர்கள் எத்தனை
வருடங்கள் தாயோடு இருந்திருக்கலாம்?
அறியாத வயதிலேயே அவர்களுக்கு
எவ்வளவு பெரிய இழப்பு!
ஐம்பது வருடங்கள் கடந்த தம்
முதுமையிலும் இறை தூதர் என்ற
நிலையிலும் தாயிழப்பை
தாங்க முடியாமல் எவ்வளவு
தவித்தார்கள்..! அழுதார்கள்..!

இந்த நிகழ்வை நினைப்பில் கொண்டு
பாருங்கள்! உங்கள் தாயை
குறை சொல்லும் முன்னர்
வெறுக்கும் முன்னர்
அவர்களை உணருங்கள்!
நபியவர்களுக்கு கூட
வழங்காத அதிர்ஷ்டத்தை
அல்லாஹ் தந்திருக்கிறானே
என்பதை சிந்தியுங்கள்!
புரியும் உங்களுக்கும்!

தாயை இழந்தோரிடம்
கேட்டுப்பாருங்கள் தாயில்லாத
வாழ்க்கை எப்படி இருக்குமென்று!
தாயை இழந்துவிட்ட பின் ஒரு சில
நிமிடத்தை மறுபடியும் வாங்கத்தான் முடியுமா?
சிந்திப்போமே!!
நன்றி!

NIFRA A.M.Z
DIGANA
SEUSL

தாயை எண்ணி எத்தனையோ எழுதல்களும் கவிதைகளும் பார்த்தாயிற்று! உணர்ச்சிகளும் ததும்பும்! உண்மைகளும் உரைக்கும்! ஆனால் கௌரவ பூசல்களுக்குள் ஒளிந்தபடி தாய்-பிள்ளை குட்டை அடிக்கடி கலங்கி கொண்டுதான் இருக்கிறது! உண்மையோ இல்லையோ உம்மிடம் தான் விடையும்!…

தாயை எண்ணி எத்தனையோ எழுதல்களும் கவிதைகளும் பார்த்தாயிற்று! உணர்ச்சிகளும் ததும்பும்! உண்மைகளும் உரைக்கும்! ஆனால் கௌரவ பூசல்களுக்குள் ஒளிந்தபடி தாய்-பிள்ளை குட்டை அடிக்கடி கலங்கி கொண்டுதான் இருக்கிறது! உண்மையோ இல்லையோ உம்மிடம் தான் விடையும்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *