எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 9

  • 10

பதில் தருவார்கள் என்று காத்திருந்த சுபைதா இன்னும் பதில் வர வில்லை என்ற கவலையில் இருந்தாள் இறைவன் தனக்கு பெரிய ஒரு அருள் நாடியுள்ளான் என்று அறியதவளாய். கை வண்ண கலையில் சிறப்பு பெற்ற ருஷா தாயின் கவலை அறிந்தும் அறியாததுமாய் டிஸு பொக்ஸ் கவர் பிண்ணி கொண்டு இருந்தாள். எதிர் பாராத விதமாய் கார் சத்தம் வாசலில் ஒலிக்க திடீர் என்று எழும்பி,

“உம்மா உம்மா நம்ம வாசல்ல கார்ல யாரோ வந்திகாங்க மா… என்று பதட்டமாக சொன்னாள் ருஷா”

அந்த பதட்டம் அவளுக்குத்தான் தெரிந்தது அது நிசாத்தின் வீட்டாக்களாகத் தான் இருக்க முடியும் என்று, அதை சுபைதா உணரவில்லை.

“அது நம்ம வீட்ட இருக்காதுமா. ரோட்ல போரதாக்கும்.”

“ரோட்ல போரது எப்டிமா, நம்மட கேட் முன்னுக்கு நிற்கிற.”

“நம்மட கேட் முன்னுக்கா?”

என்று சொல்லும் போது ஸலாம் சொல்லி கொண்டு நிசாத்தின் குடும்பத்தினர்கள் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். என்ன சொல்வது என்று அறியாது பதில் ஸலாத்தை சொன்னவள் ருஷாவை பார்க்கையில் மகள் தன் பக்கத்தில் நின்ற இடம் தெரியாது ஓடி மறைந்தாள்.

“ஆஹ் வாங்க எல்லாரும் இருங்க”

என்று அழைத்து விட்டு படித்துக் கொண்டு இருந்த ருஷாவின் தம்பி ரோசனை அழைத்தார். ரோசன் வந்தவர்களுக்கு கதிரையை போட்டு விட்டு தாயின் கட்டளைக்கு இணங்க ரோசனும் ஒரு கதிரையில் அமர்ந்தான்.

“என்னமா கோள் பண்ணி சொல்லுறம் எனுட்டு திடிர்னு  வந்திருக்கிங்க. ரொம்ப சந்தோசமா  இருக்கு.”

“எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சு போயிட்டு அபோ திடீர்னு வந்துட்டம்”

என்று சாரா சொல்ல சுபைதாவின் சந்தோசம் எல்லை இன்றியதாய் அமைந்தது.

“அல்ஹம்துலில்லாஹ் உங்கட வீட்டுக்கு மருமகளா வர எங்கட மகள் கொடுத்து வெச்ச பிள்ள.”

“என்ன சுபைதா இப்படி சொல்றிங்க உங்கட மகள் எங்க வீட்டுக்கு வர நாங்க தான் கொடுத்து வெச்சவங்க.”

என்று சித்தி அண்டி சொல்ல எல்லோரும் சந்தோசத்தோடு  வந்த ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

“சரி வந்த காரியத்த சட்டு புட்டுன்னு முடிப்பமே என்று சித்தி அண்டியின் கணவர் சொல்ல…”

“பொண்ணை பார்க்கலாமா?”

கூட்டிட்டு வாங்க அண்டி என்று பாத்திமா சொன்னவுடன், சுபைதா ருஷாவை அழைத்து வர சென்றார். அப்போது நிசாத்தின் எதிர்பார்ப்பு ஏங்கி கொண்டு தான் இருந்தது தன்னுடைய ஏன்ஜலின் வருகைக்கு.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

பதில் தருவார்கள் என்று காத்திருந்த சுபைதா இன்னும் பதில் வர வில்லை என்ற கவலையில் இருந்தாள் இறைவன் தனக்கு பெரிய ஒரு அருள் நாடியுள்ளான் என்று அறியதவளாய். கை வண்ண கலையில் சிறப்பு பெற்ற…

பதில் தருவார்கள் என்று காத்திருந்த சுபைதா இன்னும் பதில் வர வில்லை என்ற கவலையில் இருந்தாள் இறைவன் தனக்கு பெரிய ஒரு அருள் நாடியுள்ளான் என்று அறியதவளாய். கை வண்ண கலையில் சிறப்பு பெற்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *