சுவனம் நோக்கிய பயணத்திற்கு!

  • 5

ஐந்து தசாப்த தேடலின் பின்னர் கைக்கு எட்டிய பொக்கிஷம் தான் எனது தந்தையின் தந்தையின் போட்டோ அதனை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி என் தந்தை எத்தனையோ தடவை அதனை தேடிச் சென்றிருக்கிறார். அதனை பெற்று எம்மிடம் காட்டும் போது அவரது கண்ணில் கண்ட சந்தோஷம் வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

போட்டோ பிரதி வாட்ஸ் அப் செயலியில் பகிரப்பட்ட போது என் தந்தையின் உடன் பிறந்தவர்களின் சந்தோஷ வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பகிரப்பட்டது. சிறுவயதிலேயே தந்தையை இழந்து வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து எத்தனையோ தியாகத்தின் பின் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்தவர்கள் என்றாலும் தந்தையின் இழப்பை வார்த்தையால் வர்ணிக்க முடியுமா??

இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள முடியும்???

வாழ்க்கையில் தந்தையின் இழப்பு யாராலும் மீள் நிரப்ப முடியாது. வாழ்க்கை பாதையில் எம் வெற்றிக்குப் பின் எத்தனையோ நபர்கள் இருப்பார்கள் அவர்கள் அத்தனை பேரின் அன்பின் முழு வடிவம் தான் தந்தையின் அன்பு. ஒவ்வொரு தந்தையின் ஆனந்தமும் தன் பிள்ளையின் வெற்றியில் தான் தங்கி இருக்கிறது ஆனால் இன்று நாம் அதனை புரிந்து கொள்ள முடியாதவர்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் பல கட்டம் தாண்டி பயணித்தவர்கள் நிச்சயம் அவர்கள் எம் வெற்றிக்கு உறுதுணையாக தான் இருப்பார்கள்.

இருக்கும்போது புரிந்து கொள்ளப்படாத அன்பு இழந்தபின் எவ்வளவு அழுதாலும் புரண்டாலும் கிடைக்காது எனவே பெற்றோர்கள் எம் வாழ்வின் பொக்கிஷங்கள் அதனை அழகிய முறையில் பாதுகாத்து சுவனம் அடைய முயற்சி செய்வோம்.
நாம் செய்யும் நன்மைகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கும் சென்று கொண்டிருக்கும் அவர்களுக்கு சிறந்த பிள்ளையாய் நாம் இருந்தால் தான் எம் பிள்ளைகள் நாளை எமக்கு அப்படி இருப்பார்கள்.

” முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனவே இரு உலகிலும் வெற்றி அடைந்தவர்களாய் மாறுவோம். இன்ஷா அல்லாஹ்.

Binthi Nazeer
LIS/KKLC
Reading B.A

ஐந்து தசாப்த தேடலின் பின்னர் கைக்கு எட்டிய பொக்கிஷம் தான் எனது தந்தையின் தந்தையின் போட்டோ அதனை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி என் தந்தை எத்தனையோ தடவை அதனை தேடிச் சென்றிருக்கிறார். அதனை பெற்று…

ஐந்து தசாப்த தேடலின் பின்னர் கைக்கு எட்டிய பொக்கிஷம் தான் எனது தந்தையின் தந்தையின் போட்டோ அதனை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி என் தந்தை எத்தனையோ தடவை அதனை தேடிச் சென்றிருக்கிறார். அதனை பெற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *