முஸ்லிம் பெண்களும் சமூக வலைதளங்களும்

  • 77

இலங்கைத் திருநாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் யாருக்கு என்பதில் முழு நாடுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் அரசியல் களத்திற்கு சம்பந்தப்படாத ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும் ,பெண்களும் சம்பந்தப்படுகின்ற எம் சமூக அவலத்தைப்பற்றி எழுதுகிறேன்.

“இஸ்லாமிய பெண்களும் சமூக வலைதளங்களும்” என்ற இந்த தலைப்பு ஏராளமான சகோதரிகளின் வேண்டுகோளின்படி எழுதப்படுகிறது என்பதை முதற்கண்
தெரிவித்துக் கொள்வதோடு, விடயத்திற்குள் நுழைவோம்.

சமூக வலைதளங்கள் என நோக்கும் போது தற்காலத்தில் இலங்கைச் சூழலை பொறுத்தவரையில் Face book, WhatsApp, Tik tok, Imo,Instragram,Twitter, போன்ற ஊடகங்கள் இன்று எம் சமூகத்தின் மத்தியில் பரவலாக பாவிக்கப்படும் சாதனங்களாக குறிப்பிடலாம். அதன்படி இவ்வூடகங்களை இரு அடிப்படையில் நாம் பாகுபடுத்தலாம்.

  1. கட்டுப்பாடுடைய ஊடகம்
  2. கட்டுப்பாடற்ற ஊடகம்

வாட்ஸ்அப், ஐமோ போன்றவை கட்டுப்பாடுடைய ஊடகங்களாகவும் பேஸ்புக், டிக்டாக் போன்றவை கட்டுப்பாடற்ற ஊடகங்கள் ஆகவும் வகைப்படுத்தலாம். அந்த அடிப்படையில் இங்கு இஸ்லாமிய அஜ்னமி மஹ்ரமி தொடர்பை பேணி இச்சாதனங்களை பயன்படுத்துவது பற்றி ஆராய்வதே சிறந்தது. மாற்றமாக சமூக வலைதளங்கள் பெண்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் யுவதிகளுக்கு அவசியமா என்ற கேள்விக்கு இங்கு இடமே இருக்க முடியாது. காரணம் நவீன காலத்தைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் இன்றி ஒரு சமுதாயம் உருவாகுமாயின் அது உலகம் தெரியாத கிணற்றுத்தவளை போன்ற சமூகத்தையே உருவாக்கும். இவை ஒருபுறமிருக்க இன்று ஆண்களும் சரி பெண்களும் சரி சமூக வலைதளங்களில் உலா வருவது சாதாரணமான ஒன்றாக காணப்படுகிறது .

இவ்வாறு உலா வரும் நம் முஸ்லிம் சகோதரிகள் வலைத்தளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி அறிந்து செயற்படும் போது சமூக வலைத்தளங்களிலும் வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்காது. ஆகவே நான் இங்கு முஸ்லிம் யுவதிகளை, சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதற்கான நியாயங்களையும் அவை பாவிப்பதன் மூலம் எதிர்நோக்கும் சவால்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

முதலில் நாம் Face book (முகப்புத்தகம்) பற்றி நோக்குவோமாயின், பொதுவாக ஆண் பெண் இருபாலாரும் தமது கருத்துக்களை பதிவிடவும் உலக நடப்புகளை அறிந்து கொள்ளவுமே இச்சாதனத்தை பயன்படுத்துகின்றனர். இத்தளத்தில் முஸ்லிம் யுவதிகளின் பயன்பாடு தொடர்பில் அலசுவோமானால் சிறந்த எழுத்தாற்றல் உள்ள யுவதிகள் பாடசாலை பருவத்துடன் வீடுகளில் முடங்கிவிடுவதை தவிர்த்து இவ்வாறான வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்வதன் மூலம் தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு தமது கருத்துக்கள் சமூகத்தை சென்றடையவும் வழி வகுத்துக் கொள்ள முடியும். இவ்வாறான முகநூல் பாவனையின் போது நம் சகோதரிகள் கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. மெசேஞ்சர் பாவனையை முற்றுமுழுதாக தவிர்த்துக் கொள்ளல்
  2. தனது பதிவிற்கு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்க முயற்சித்தலை தவிர்த்தல்
  3. தமது புகைப்படங்களை பதிவேற்றுவதை தவிர்த்தல்
  4. உள்ளத்தில் நோய் உள்ளவன் (ஷைத்தான்) எவ்வாறாயினும் தன்னை வழிகெடுக்க முயற்சிப்பான் என்பதில் கவனமாக இருத்தல்
  5. போலிக்கணக்குகள் (Fake id) இருக்கின்றன என்பதால் இயன்றளவு தாம் நன்கு அறிமுகமான நேரில் கண்ட உறவுகளுடன் Messenger இல் Chat செய்வதை தவிர்த்தல்.
  6. தான் அறிமுகமான நண்பர்களாயினும் அவர்களது பதிவிற்கு Like Comment இடுவதை தவிர்த்தல்

அடுத்து வாட்ஸ்அப், நம் முஸ்லீம் சமூக யுவதிகள் ஊறிப்போய் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் ஒரு வலைதளம் தான் இந்த வாட்ஸ்ஆப் குரூப் சாட் என்ற பெயரில் அஜ்னமி மஹ்ரமி பேணாது, நண்பர்கள் தானே என வரையறையின்றி செட் பண்ணிக் கொண்டிருப்பதில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் இருக்கின்றனர். இந்த குரூப் செட் தொடர்பான இஸ்லாமிய கருத்து பற்றி ஆராய்கையில் இஸ்லாம் காதலுக்கு வழங்கும் அதே தீர்வு தான் இந்த குரூப் செட்கும் வழங்குகிறது.

எனினும் தமது ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள கட்டுரை கவிதை போன்றவற்றுக்கு ரூட்செட் பண்ணும் போது அங்கு எமது வரையறைகளை நாமே தெரிந்துகொள்ள வேண்டும் நாம் நல்ல நோக்கத்தில் செட் செய்தாலும் அவர்கள் எந்த நோக்கத்தில் சாட் செய்கிறார்கள் என்பதை அவர் அறிய மாட்டார். சில நேரம் அவர்களை விபச்சாரத்தின் பக்கம் தூண்டும் அளவிற்கு கூட நம்முடைய செயல் இருக்கலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அது நம்மை அறியாமலே நடக்கும் .

அதேபோன்றுதான் வாட்ஸ்அப்பில் பெண்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் சேட்டிங். கண்ணால் கண்டிராத, யாரென்று அறிமுகமில்லாத, தெரியாத சகோதர சகோதரிகளையும், நண்பன், அண்ணன், தம்பி, தங்கை என கூறிக்கொண்டு கொண்டிருக்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு தந்த குடும்ப உறவை விட எவர் என்று அறிமுகம் இல்லாதவர்களை எல்லாம் உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஆக்கிக் கொள்வதற்கு அல்லாஹுத்தஆலா உங்களுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. நீங்கள் அங்கத்தவராக்குவீர்களாயின் உங்கள் பெற்றோர்களுக்கு நீங்களே விபச்சாரப்பட்டம் கட்டுகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது

அவ்வாறே தனது நம்பிகளுடன் chat செய்வதாக இருந்தாலும்கூட இயன்றளவு typing மூலமே chat செய்யவேண்டும். முடிந்தவரை குரல் பதிவை தவிர்த்திட வேண்டும்.

அன்பார்ந்த சகோதரிகளே, உங்கள், கை, கால், விரல் என்பவற்றை நீங்கள் ஸ்டேட்டஸ் மூலம் போடுவதில் என்ன இலாபம்? அது மட்டுமின்றி புகைப்படங்களில் முகத்தை மாத்திரம் மறைத்து இஸ்டேட்ஸ் போடுவதால் கூட எந்த இலாபமும் உங்களுக்கு இல்லை. அது உங்கள் மீதான ஒரு கவர்ச்சி ஏற்படவும், அந்த கவர்ச்சியை தூண்டும் இச்சையைத் தூண்டவும் காரணமாகும். அவ்வாறாயின் ஒருவனது இச்சையை தூண்டி அவனை விபச்சாரத்தின் பால் தூண்டியமைக்க்கான பாவத்தையும் சுமக்க வேண்டியவர்களாக மாறுவீர்கள்.

இன்னும் வாட்ஸ்அப் இன் கருத்துக்களுக்கு ஒப்பாகவே Imoவும் இருக்கும். எனினும் live chatting என்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளும்போது அது சொந்த கணவனாக இருந்தாலும் கூட அவ்வாறு தடுத்துக்கொள்வது உங்களது கற்பையும் உங்களையும் பாதுகாக்கும் என்பதை உறுதிப்படுத்தி கூறலாம். அடுத்த டிக் டோக் ஆபாச வலைதளங்கள் இஸ்லாமிய கலாசார ஆடைகள் ஆபாசவலைதளங்களுக்கு எந்த வகையிலுமே அவசியமற்றது .

இறுதியாக, நான் நல்ல நோக்கத்தில் பழகுகிறேன் அவர்கள் எப்படி போனால் என்ன என்று நினைத்து விடாதீர்கள். முஸ்லிம் யுவதிகளாகிய நீங்கள் மறுமைக்காக வாழ்பவர்கள். மறுமையில் இதுவும் ஒரு கேள்வி ஆகிவிடக்கூடாது என அஞ்சிக்கொள்ளுங்கள்

அடுத்து நம் சமூக ஆண்களுக்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டு கொள்கிறேன். முஸ்லீம் சமூகத்தின் பெண்களை பாதுகாப்பது முழுவதும் நம் கைகளிலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்மகனும் தனது சகோதரியை, தனது மனைவியை, தனது மகளை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்தாலே நம் சமூக யுவதிகள் பாதுகாக்கப்படுவார்கள். மாறாக என் தங்கை தங்கம் ஏனையவர்கள் விபச்சாரிகள் என நினைத்துக்கொண்டு ஏனைய பெண்களின் வாழ்க்கையில் விளையாடுவோமே ஆயின், அல்லாஹ் எம் வீட்டிலும் அப்படிப்பட்ட நிலையை உருவாக்க சக்தி பெற்றவன் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

எனவே அன்பு சகோதரிகளே சமூக வலைத்தளங்களை தாராளமாக பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை பகிர ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள். மாற்றமாக இவ்வுலக அற்ப இன்பத்திற்காக உங்களை நீங்களே சீரழித்து கொள்ளாதீர்கள். இதனால் அவஸ்திப்படப் போவது நீங்களும் உங்கள் குடும்பமுமே தவிர, உங்களை நண்பர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் ஒருபோதும் உங்களுக்காக வரப்போவதில்லை. நான் நல்லவன் ஆனால் நான் நல்லவன் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுமாறு வேண்டி, இதுவரை நடந்த என் சகோதரிகளின் தவறு கள் இனி நடைபெறாது எனும் நம்பிக்கையில் நிறைவு செய்கிறேன்.

பஸீம் இப்னு ரஸூல்

இலங்கைத் திருநாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் யாருக்கு என்பதில் முழு நாடுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் அரசியல் களத்திற்கு சம்பந்தப்படாத ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும் ,பெண்களும் சம்பந்தப்படுகின்ற…

இலங்கைத் திருநாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் யாருக்கு என்பதில் முழு நாடுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் அரசியல் களத்திற்கு சம்பந்தப்படாத ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும் ,பெண்களும் சம்பந்தப்படுகின்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *