தெற்கில் காலூன்றும் இனவாதம்

  • 12

ARA.Fareel

நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் அதற்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.


இது ஒரு பௌத்த நாடு. இந்த நாடு எமக்கு மாத்­தி­ரமே சொந்தம். நாட்டின் பொரு­ளா­தாரம், வர்த்­தகம், கலை, கலா­சாரம் என்­ப­ன­வற்­றுக்கு நாமே சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருக்க வேண்டும் என்று இன­வா­திகள் நினைக்­கி­றார்கள். குறிப்­பிட்ட சில இன­வாதக்  குழுக்கள் இந்த இலட்­சி­யத்தை  நிறை­வேற்றிக் கொள்ள நாட்டின் பல பகு­தி­களில் இன முரண்­பா­டு­களைத் தோற்­று­வித்து குளிர்­காய முயற்­சிக்­கி­றார்கள்.
தென் மாகா­ணத்தில் கடந்த வாரம் இவ்­வா­றான இரு சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் வர்த்­தகம் குறி­வைக்­கப்­பட்­டி­ரு­கி­றது. அதே­வேளை முஸ்­லிம்­களின் பழைமை வாய்ந்த மர­பு­ரிமை தல­மொன்று சிதைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
முஸ்­லிம்­க­ளுக்கு உரிய பாது­காப்பு வழங்­குவோம், அவர்­க­ளது மத ஸ்தலங்கள் மீது நடத்­தப்­படும் தாக்­கு­தல்­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைப்போம், முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­துக்கு பாது­காப்பு வழங்­குவோம் என்னும் வாக்­கு­று­தி­களை வழங்­கியே தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்­தது.
நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒவ்வோர் தேர்தல் மேடை­க­ளிலும் இந்த உறு­தி­மொ­ழி­களை முன்­வைத்­த­தார்கள்.
ஆனால் பத­விகள்  கிடைத்­ததும் அனைத்­தையும் மறந்து விட்­டார்கள். ஏனென்றால் அவர்கள் தான் உண்­மை­யான அர­சி­யல்­வா­திகள்.

போர்­வை­நகர் முஸ்லிம் கடைகள் தாக்­குதல்
தென் மாகா­ணத்தில் கொடப்­பிட்­டி­யவில் அது­ர­லிய பிர­தேச செய­லாளர் பிரி­வி­லேயே போர்வை நகர் அமைந்­துள்­ளது. வர­லாற்றுப் புகழ்­மிக்க போர்வை பள்­ளி­வா­சலும் இங்­கேயே அமைந்­துள்­ளது. இந்தப் பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் பிர­சித்தி பெற்­ற­தல்ல. பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரும் பெரு­ம­ளவில் பள்­ளி­வா­சலில் நடை­பெறும் கந்­தூரி வைப­வங்­களில் கலந்து கொள்­வார்கள்.

போர்வை பள்­ளி­வாசல் ஜமா­அத்தில் சுமார் 540 குடும்­பங்கள் அங்கம் வகிக்­கின்­றன. போர்வை ஓர் சிறிய நக­ர­மாகும். இந்­ந­கரில் சுமார் 15 முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­களும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சொந்­த­மான 4 கடை­களும் இயங்கி வரு­கின்­றன.
கடந்த 16 ஆம் திகதி முழு நாடும் சிங்­கள, தமிழ் புத்­தாண்டைக் கொண்­டாடிக் கொண்­டி­ருந்த நேர­மது. அன்று அதி­காலை 1.40 மணி­ய­ளவில் போர்வை நகர் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.
அதி­காலை வேளை நிசப்­த­மான அந்தச் சந்­தர்ப்­பத்தில் அசா­தா­ர­ண­மான சப்தம் கேட்­பதை அறிந்து கடை­க­ளுக்கு பின்னால் உள்ள வீட்­டி­லுள்ள ஒருவர் எழுந்து ஓடி வந்து பார்த்தார். அங்கே கடைகள் எரிந்து கொண்­டி­ருந்­தன. உடனே அய­ல­வர்­களைக் கூட்டி தீ பர­வாது தடுத்தார்.
சம்­பவம் அக்­கு­ரஸ்ஸ பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. பொலிஸார் உட­ன­டி­யாக ஸ்தலத்­துக்கு விரைந்து தீ பர­வாது தடுத்­தனர். ஆனால் சந்­தேக நபர்கள் அங்­கி­ருந்தும் தப்பிச் சென்­றி­ருந்­தனர். பெற்றோல் குண்டுத் தாக்­கு­தலால் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான மூன்று கடைகள் தீயினால் எரிந்­துள்­ள­துடன் ஒரு கடை சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. பொலிஸார் பெற்றோல் நிரப்­பப்­பட்ட வெடிக்­காத நிலையில் போத்­த­லொன்­றி­னையும் கைப்­பற்­றி­னார்கள்.
அக்­கு­ரஸ்ஸ பொலி­ஸா­ரினால் கைவிரல் அடை­யா­ளங்கள் பதிவு செய்­யப்­பட்­ட­துடன் இர­சா­யன பகுப்­பாய்வுப் பிரி­வி­னரும் தட­யங்­களை பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தி­னார்கள்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்­பவம் அறிந்­ததும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவைத் தொடர்பு கொண்டு போர்­வையில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நி­றுத்­து­மாறும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கும் படியும் கோரிக்கை விடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
இதே­வேளை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தாம­த­மின்றி கைது செய்து சட்­டத்தின் முன்­நி­றுத்­து­மாறு பொலிஸ் மா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.
என்­றாலும் தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்டும் பொலி­ஸா­ரினால் இது­வரை சந்­தேக நபர்­களை இனங்­காண முடி­யாமல் போயுள்­ளது.
அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் போர்வை நகரின் சில சி.சி.ரி.வி கமரா பதி­வுகள்  பெற்று விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தி­யுள்­ளனர். போர்வை பள்­ளி­வா­சலின் சி.சி.ரி.வி. கமரா பதி­வுகள்  தெளி­விள்­ளாமல் இருப்­ப­தனால் அரு­கி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­களின் சி.சி.ரி.வி கமரா பதி­வுகள் பொலி­ஸா­ரினால் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மக்தப் பொறுப்­பாளர் பௌசுல் கரீம் 
வர்த்­தக நிலை­யங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் தொடர்பில் கொடப்­பிட்­டிய மத்­ரஸா மற்றும் மக்தப் பொறுப்­பாளர் பௌசுல் கரீம் தெரி­வித்­துள்ள கருத்­துகள் இத்­தாக்­குதல் சிங்­கள புத்­தாண்­டினை முன்­னிட்டு போர்வை பகு­திக்கு வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வருகை தந்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளதா? என்று சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

ஏனென்றால் பௌசுல் கரீம் போர்வை பகு­தியில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் நீண்­ட­கா­ல­மாக எது­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி ஒற்­று­மை­யா­கவே வாழ்­கின்­றனர் என்று தெரி­வித்­துள்ளார்.
சம்­பவம் தொடர்பில் அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 1.40 மணி­ய­ள­விலே முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
இத்­தாக்­குதல் கார­ண­மாக தொலை­பேசி கடை, ஹோட்டல் ஒன்று மற்றும் பழங்கள் விற்­பனை நிலையம் என்­பன தீப்­பற்றி சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. மற்­றொரு கடைக்கு எறி­யப்­பட்ட பெற்றோல் குண்டு வெடித்துச் சித­றாத நிலையில் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளது.
போர்வை பகு­தியில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் எது­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். இப்­ப­கு­தியில் ஒற்­று­மை­யுடன் வாழும் இரு சமூ­கத்­துக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்ட சதியே இது. இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்த வேண்­டு­மென இப்­ப­குதி பன்­ச­லை­களின் தலைமை தேரர்­களும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர் என்று தெரி­வித்­துள்ளார்.

போர்வை பள்­ளி­வாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் 
போர்வை பள்­ளி­வாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்து தெரி­வித்­துள்ள கருத்­துகள் போர்வை பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்­கு­மி­டையே உள்ள மிக நெருக்­க­மான உற­வினை உறுதி செய்­கின்­றன. அவ்­வா­றாயின் இப்­ப­கு­தியில் முஸ்லிம் சிங்­கள உற­வினை சீர்­கு­லைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் இன­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் இங்கு ஒரே குடும்­ப­மாக சகோ­த­ரர்­க­ளாக வாழ்­கிறோம். நோன்பு காலங்­களில் பள்­ளி­வாசல் வழங்கும் கஞ்­சியை அவர்கள் பெற்­றுச்­செல்­வார்கள். அவர்­க­ளது நிகழ்­வு­களில் நாங்கள் கலந்து கொள்வோம் எங்கள் நிகழ்­வு­களில் அவர்கள் கலந்து கொள்­வார்கள்.
இரத்­த­தான நிகழ்­வு­களில் நாம் இரு தரப்­பி­னரும் வேறு­பா­டு­க­ளின்றி கலந்து கொள்வோம். அக்­கு­ரஸ்­ஸயில் நடை­பெற்ற புது­வ­ருட நிகழ்­வு­களில் நாமும் கலந்து கொண்டோம். சிங்­கள புது­வ­ருட நிகழ்வில் அல்­மத்­ர­ஸதுல் காதி­ரிய்யா மாண­வி­களின் இஸ்­லா­மிய கலா­சார நிகழ்ச்­சி­யொன்­றி­னையும் நடத்­தினோம்.
எமது சிறு­மிகள் பெரும் பாராட்­டு­க­ளையும் பெற்­றனர். இவ்­வாறு எங்­க­ளுக்­கி­டையே ஒற்­றுமை நில­வு­கி­றது. இவ்­வா­றான சூழ்­நி­லையில் எங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்த இந்த சம்­ப­வத்தை யார் நிகழ்த்­தி­னார்கள் என்று தெரி­ய­வில்லை என்று  போர்வை பள்­ளி­வாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் தெரி­விக்­கிறார்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் உட­னடி நட­வ­டிக்கை 
போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் பெற்றோல் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து போர்வை முகைதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜமா­அத்­தார்­களை அழைத்து அறி­வு­ரை­களை வழங்­கி­யது. விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது.

மக்கள் உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டா­மெ­னவும் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை பொலிஸார் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வார்கள் எனவும் அறி­வு­றுத்­தப்­பட்­டது. இப்­ப­குதி மக்கள் பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் எவ்­வித பேதங்­க­ளு­மின்றி ஒற்­று­மை­யாக இருப்­பதால் வேறு பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வ­தற்கு இட­மில்லை என போர்வை முகைதீன் பள்­ளி­வாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் தெரி­வித்தார்.
பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்­லிம்­க­ளுக்கும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறு அக்­கு­ரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியைக் கோரி­ய­தை­ய­டுத்து இரண்டு பொலிஸார் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

விசேட பொலிஸ் பாது­காப்பு
போர்வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் போர்வை நக­ருக்கும் விசேட பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கு­ரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி டி.அபே­விக்­ரம தெரி­வித்­துள்ளார்.
போர்வை பள்­ளி­வா­சலில் பொருத்­தப்­பட்­டுள்ள சி.சி.ரி.வி. கமரா வீதியை நோக்கி பொருத்­தப்­ப­டா­மை­யினால் அதன் பதி­வுகள் தெளி­வற்­ற­தா­யுள்­ளன.

எனவே சி.சி.ரி.வி. கம­ராவை வீதியை நோக்கி பொருத்­து­மாறு பொலிஸார் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­தனர். இதற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்.
தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு பொலிஸார் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­பு­களைக் கோரி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

திணைக்­களம் தகவல் திரட்டு 
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் முஸ்லிம் வர்த்­தக நிலைய தாக்­குதல் தொடர்பில் தக­வல்­களைத் திரட்­டி­யுள்­ளது. திணைக்­க­ளத்தின் கலா­சார உத்­தி­யோ­கத்தர் எச்.ஏ.வாசில் அஹமட் கருத்து தெரி­விக்­கையில்;

போர்வை நகரில் 90 வீத­மான கடைகள் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­வை­க­ளாகும். 4 கடை­களே சிங்­க­ள­வர்­க­ளுக்கு உரி­ய­தாகும். இந்­ந­கரைச் சூழ சிங்­கள கிரா­மங்­களே இருக்­கின்­றன என்றார். போர்வை பள்­ளி­வா­சலின் முன்னால் 2009 ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா ஊர்­வ­லத்தின் மீது தமிழ் ஈழ விடு­தலைப் புலி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தாக்­கு­தலில் 17 பேர் கொல்­லப்­பட்­டனர். அவர்­களில் ஒருவர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உத்­தி­யோ­கத்தர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திட்­ட­மிட்ட சதியா?
போர்­வையில் இடம்­பெற்ற பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்­குதல் அப்­பி­ர­தே­சத்தில் நீண்ட கால­மாக நில­வி­வரும் முஸ்லிம் – சிங்­கள நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­கான ஒரு சதித்­திட்டம் என்றே பல­ராலும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இத்­திட்டம் மிக இர­க­சி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னாலே பொலி­ஸா­ரினால் இது­வரை சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதில் தாம­த­மேற்­ப­டு­கின்­றது எனலாம்.

இது திட்­ட­மிட்ட சதி­யாக இருக்­கலாம் என மாத்தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் கினிகே தெரி­வித்­துள்ள கருத்து கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். பொலிஸார் கருத்­து­களைத் தெரி­விப்­ப­துடன் மாத்­திரம் ஸ்தம்­பித்து விடாது சந்­தேக நபர்­களை கைது செய்து சட்­டத்தின் முன்­நி­றுத்த வேண்டும் என்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது.

காலி ஸியாரம் உடைப்பு
கடந்­த­வாரம் தென் மாகா­ணத்தில் போர்வை நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்களைத் தாக்­கு­வ­துடன் மாத்­திரம் இன­வா­திகள் அமை­தி­ய­டை­ய­வில்லை. காலியில் முஸ்­லிம்­களின் மர­பு­ரிமைச் சொத்­தான ஸியாரம் ஒன்­றி­னையும் சேதத்­துக்­குள்­ளாக்­கி­யுள்­ளனர்.
முஸ்­லிம்­களை ஆத்­தி­ர­மூட்டும் நிகழ்ச்சி நிரல்­களை அரங்­கேற்றி மீண்டும் ஓர் இனக்­க­ல­வ­ரத்தை, வன்­செ­யல்­களை ஏற்­ப­டுத்­து­வதே இன­வா­தி­களின் நோக்­காக இருக்­கின்­றமை இதி­லி­ருந்தும் தெளி­வா­கி­றது.

காலிக்­கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில் இனந்­தெ­ரி­யா­தோரால் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. காலி ஒல்­லாந்தர் கோட்டை நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பி­ருந்தே குறிப்­பிட்ட பகு­தியில் ஷெய்ஹ் ஸாலிஹ் வலி­யுல்­லாஹ்வின் அடக்­கஸ்­த­லமும் அதற்கு அருகில் சுத்­த­மான குடிநீர் கிணறும் காணப்­ப­டு­கின்­றன.
பத்­தி­ரி­மலை என்று அழைக்­கப்­படும் குறிப்­பிட்ட ஸியாரம் சம்­பந்­த­மாக காலி நகர பூர்­வீக வர­லாறு தொடர்பில் பேரா­சி­ரியர் பந்­து­சேன குண­சே­கர எழு­தி­யுள்ள ஆய்­வு­நூ­லிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. யேமன் நாட்­டி­லி­ருந்து ஆன்­மீக நோக்­க­மாக இலங்கை வந்த முஸ்லிம் பெரியார் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் இந்த ஸியாரம் அமைந்­துள்ள இடத்தை சேதப்­ப­டுத்­தி­யுள்ள இன­வா­திகள் முஸ்­லிம்­களின் மர­பு­ரிமை சின்­னங்­களை அழிப்­ப­தற்கு முயற்­சித்து வரு­கி­றார்கள் என்­ப­தனை உறுதி செய்­கி­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான்
காலி ஸியாரம் உடைக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனது கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ள­துடன் அர­சாங்கம் இது தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­துள்­ளது.

காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது தொடர்பில் பாது­காப்பு செய­லாளர் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
இது இன­வா­தி­களின் செய­லெ­னவும், இரா­ணுவ முகாமைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலை தோற்­று­விப்­ப­தற்­கான சதித்­திட்டம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆய்வு
காலி ஸியாரம் சேத­மாக்­கப்­பட்­டது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆய்­வு­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­துடன் இது தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உத்­தி­யோ­கத்தர் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்­டுள்ளார்.
திணைக்­கள உத்­தி­யோ­கத்தர் ஹனூனைத் தொடர்பு கொண்டு வின­விய போது அவர் பின்­வரும் விப­ரங்­களைத் தெரி­வித்தார்.
காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் அமைந்­துள்ள இந்த ஸியா­ரத்­துக்கு செல்­வ­தற்கு ஒரே வழியே உள்­ளது. கடற்­கரை வழி­யாக செல்­வ­தென்றால் அது சிரமம் நிறைந்ததாகும். இந்த ஸியாரத்தை நிர்வகிப்பதை ஒரு தனிப்பட்ட குழுவே மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்துக்கு முன்பு இங்கு கந்தூரி வைபவம் நடாத்தப்படுகின்றது. கந்தூரி நடாத்துவதற்கு இராணுவத்திடம் அனுமதி பெற்றுக் கொள்ளப்படுகிறது.
யுத்தம் நிலவிய காலத்தில் இந்த ஸியாரத்துக்கு இரு இராணுவ வீரரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்த பின்பு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த ஸியாரம் கோட்டை பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இல்லை. தனிப்பட்ட ஒரு குழுவினரே நிர்வகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட குழுவினருடன் பேச்சுவார்ததை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம்
தென் மாகாணத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கெதிரான இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்ப்புகளை வெளியிடாது மௌனமாக இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம்.அஸ்வரே இச்சம்பவங்கள் தொடர்பில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
ஸியாரம் உடைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.ஸல்மான் விசாரணையொன்றினைக் கோரியுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் போர்வை வர்த்தக நிலைய தாக்குதலை எதிர்த்துள்ளார்.
அரசியல் தலைமைகள் தனித்தனியே எதிர்ப்புகள் வெளியிடுவதாலும், அறிக்கைகள் வெளியிடுவதாலும் ஆக்கபூர்வமாக எந்த ஏற்பாடும் நடைபெறப்போவதில்லை. அவை அவர்களை பிரபல்யப்படுத்துவதாகவே அமையும்.
எனவே சமூகம் சார்ந்த விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளைப் புறம்தள்ளி ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டுமென்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

ARA.Fareel நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் அதற்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஒரு பௌத்த நாடு. இந்த…

ARA.Fareel நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் அதற்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஒரு பௌத்த நாடு. இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *