குப்பை முகாமைத்துவம்.

  • 23

இலங்கையில் தற்போது பேசப்படுகின்ற ஓர் பிரச்சினையே  குப்பைப் பிரச்சினை.

கடந்த வாரம் சூடுபிடித்த குப்பைப்பிரச்சினை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் உள்ள பிரச்சினை அல்ல. இலங்கையின் அனைத்து கிராமங்களிலும்  இப்பிரச்சினை உள்ளது. ஏப்ரல் முதலாம் வாரம் ஏற்பட்ட அனர்த்த பதிவுகளில் ஒன்று.

நமது ஊடகக்குழு 2௦16 (STJF I Report) மாத்தறை மாவட்டத்தில் மேற்கொண்ட  சமுகம் சார்ந்த பிரச்சினைகளின் பட்டியலில் மிக முக்கியமாக இணங்காணப்பட்டதொரு பிரச்சினையே கம்புறுப்பிட்டிய பகுதியின் குப்பை மேட்டுப்பிரச்சினை கடந்த ஆண்டு கம்புருபிடியாவில் தனியார் வைத்தியசாலைக்கும், பாலர் பாடசாலைக்கும் அருகில் குட்டி குப்பை மலையொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது

அது பற்றிய காணொளிப்பதிவு

நாம் எதிர்நோக்கியுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு என்ன???

குப்பைகளை பிரதானமாக திண்மக் கழிவு திரவக் கழிவு என இரு வகைப்படுத்தலாம். எமது நாட்டில் இரும்பு, பிளாஸ்டிக், கிளாஸ், பத்திரிகை, உணவு என 4 வகையான குப்பை கூளங்கள் குப்பை மேடுகளில் இருப்பதை காணலாம்.

இன்று இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குப்பைகளை மீள்சுழர்ச்சி செய்து Gas, plastic, paper போன்றவற்றை உற்பத்தி செய்கின்றனர்.

அது பற்றிய காணொளிப்பதிவு

இலங்கையருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அரசியல் பேசி பழகிவிட்டனர். எனவே இதிலும் அரசியல் பேசிகின்றனர். இறுதியில் குப்பைகளை வீசும் இடத்தை மாற்றும் திட்டத்திற்குத்தான் அவர்கள் வருவார்கள். அது ஓர் நிரந்தர தீர்வு அல்ல. ஏனேனில் மீண்டும் ஒரு சில ஆண்டுகளில் நாட்டில் குப்பை மழை உருவாகும். (கடந்த ஆண்டு கம்புருபிடியாவில் தனியார் வைத்தியசாலைக்கும், பாலர் பாடசாலைக்கும் அருகில் குட்டி குப்பை மலையொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது.)

பொது மக்களே குப்பைக்கும் அரசியலை பார்த்திருப்பது பொருத்தமோ தெரியாது. குப்பை முகாமைத்துவம் சம்பந்தமாக ஒரு சில விடயங்களை ஆய்வுக்காக முன்வைக்க விரும்புகின்றேன்.

நமக்கு குப்பை பிரச்சினை உருவாக பிரதான காரணம் சனத்தொகை அதிகரிப்பு, தனி நபருக்கான காணியின் பரப்பளவு குறைந்தமையாகும்.

  1. நமது குப்பைகளில் சேருகின்ற ஓர் குப்பை வகையே உணவுக் கழிவுகள். நாம் இவற்றை குறைப்பதற்கு எமது வீடுகளில் தேவைக்கு அதிகமாக உணவு சமைப்பதையும், மரக்கறிகளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.,
  2. பொதுமக்கள் குப்பைகளை வகைப்படுத்தி வழங்காமையால் குப்பை முகாமைத்துவத்தை மேற்கொள்ளவது கடினமாக உள்ளதாக குப்பை அகற்றும் பணியாளர்கள் தெரிவிகின்றனர். எனவே நாம் குப்பைகளை நகர சபைகளின் ஊடாக அகற்றுவதாக இருந்தால் குப்பைகளை வகைப்படுத்தி வழங்க வேண்டும்.
  3. குப்பைகளில் இரும்பு, பிளாஸ்டிக், கிளாஸ், பத்திரிகை என்பவற்றை மீல்சூழற்சிக்கு உட்படுத்த முடியும். எனவே, எமது நாட்டில் தொழில் இல்லாத பலர் உள்ளனர். அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், குப்பை பிரச்சினையை தீர்க்கவும் ஒவ்வொரு மாகாணங்களிலும் பத்திரிகை, பிளாஸ்டிக், கிளாஸ், இரும்பு என நான்கு மீள் சுழற்சி கம்பனிகளை உருவாக்க வேண்டும்.

கழிவு நீர் முகாமைத்துவம்

நாம் இதுவரை பேசப்படாத ஓர் கழிவே திரவக் கழிவு. அதற்கு ஓர் தீர்வாக பாதைகளில் கால்வாய்களை அமைத்து அதன் ஊடாக வீட்டுத் திரவக் கழிவுகளை அகற்றுகின்றனர். இது விடயத்தில் அதிகாரிகளுக்கும் தெளிவற்ற ஒரு நிலை உள்ளதை அவதானிக்கலாம்.

சில நகர் பிரதேச கால்வாய்களில் செல்லும் திரவக் கழிவுக்காக பொது மக்களை கைது செய்யாத பொலிஸ். கிராமப்புர கால்வாயில் செல்லும் கழிவு நீருக்காக பொதுமக்களை கைது செய்கின்றனர்.

கால்வாய்களின் ஊடாக செல்லும் இக்கழிவு நீர் ஓடைகள் ஊடாக ஆற்றை அடைத்து கடலில் சங்கமிக்கின்றது. இதனால் ஆற்று நீர், கடல் நீர் மாசடைவதுடன், நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அது அமைகின்றது. எனவே திரவக் கழிவை அகற்ற இந்த தீர்வு சரியாக அமையாது. வீட்டினுள் குழிகளை அமைத்து அகற்றவும் முடியாது. காரணம் சிலருக்கு காணி கிடையாது. இருந்தாலும் அவ்வாறு அகற்ற குழிகள் அமைத்தாலும் அவை நிரம்புவதால் மேலும் பல பிரச்சினை உருவாகின்றது.

எனவே நாம் இதற்கு ஒரு தீர்வாக ஒவ்வொரு வீடுகளிலும் சிறு கழிவு நீர் தொட்டிகளை அமைத்து அவற்றின் ஊடாக குழாய் முறையில் ஒரு பொதுவான இடத்திற்கு (நீர் மீள்சுழர்ச்சி கம்பனி) சேகரித்து அவ்விடத்தில் அக்க கழிவு நீரைக் கொண்டு மின்சாரம் அல்லது விவசாயம் செய்ய வேண்டும் அல்லது சுத்திகரித்து கட்டிட நிர்மான வேலைகளுக்கு அல்லது நகரங்களில் உள்ள பூங்கா பராமரிப்புக்கு பயன் படுத்த வேண்டும்.

இலங்கையில் தற்போது பேசப்படுகின்ற ஓர் பிரச்சினையே  குப்பைப் பிரச்சினை. கடந்த வாரம் சூடுபிடித்த குப்பைப்பிரச்சினை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் உள்ள பிரச்சினை அல்ல. இலங்கையின் அனைத்து கிராமங்களிலும்  இப்பிரச்சினை உள்ளது. ஏப்ரல் முதலாம் வாரம்…

இலங்கையில் தற்போது பேசப்படுகின்ற ஓர் பிரச்சினையே  குப்பைப் பிரச்சினை. கடந்த வாரம் சூடுபிடித்த குப்பைப்பிரச்சினை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் உள்ள பிரச்சினை அல்ல. இலங்கையின் அனைத்து கிராமங்களிலும்  இப்பிரச்சினை உள்ளது. ஏப்ரல் முதலாம் வாரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *