ஒரு மனநல அமர்வு

  • 11

மனதில் பல கவலைகளையும் வெறுப்புகளையும் சொல்லாத பல துயரக் கதைகளையும் மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அடக்கி, அமுக்கி வைத்திருக்கின்றோம். அவற்றை வெளிப்படுத்த முயற்சிப்பதில்லை. பொய்யாக புன்னகைத்துக் ( (Fake Smile) கொண்டு உள்ளுக்குள் அழுகின்றோம். மனதளவில் மறைவாக சோகத்தில் உழன்று கொண்டிருக்கின்றோம்.

மற்றவர்கள் தம்மைப் பற்றி இழிவாக நினைப்பார்கள் அல்லது தப்பாக கணக்குப் போடுவார்கள் என்பதற்காக மனதளவிலும் திரைமறை வாழ்வை வாழ முனைகின்றோம். அனைத்து மனக் கிலேசங்களையும் ரகசியமாகப் பத்திரப்படுத்தி இருப்பதால் பல்வேறுபட்ட உடலியல் உபாதைகளுக்கும் உள்ளாகும் அபாக்கிய நிலையும் தோன்றி விடுகின்றது. அத்துடன் மனதளவிலும் வீழ்ந்து விடுகின்றோம். இது ஓர் அபாயகரமான நிலையாகும். அது மகிழ்ச்சியான வாழ்வுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி விடுகின்றது.

மனக் கிடங்குகளை உரியவர்களிடம் பகிர்தல் வேண்டும். குறிப்பாக சோகமான அந்தரங்கப் பகிர்தல் முக்கியமானது. சிலவேளை மனைவி கணவனிடத்திலோ, கணவன் மனைவியிடத்திலோ அல்லது தங்களது பெற்றோரிடத்திலோ சித்திரவதைகளை தரும் வேதனையை ஏற்படுத்தும் குறிப்பிட்ட உள்ளார்ந்த உணர்வுகளை அல்லது மனவெழுச்சிகளை வெளிக்காட்டாமல் பொய்யாக முகமூடி வாழும் வாழ்க்கைகளைக் காண்கிறோம். குறிப்பாக பெண்களில் பலர் குடும்ப வாழ்வை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சி, மெளனிகளாக ஊமை வாழ்க்கை வாழும் அவல நிலை உள்ளதையும் அவதானிக்கின்றோம். இதனால் எவருக்கும் ஒரு பிரயோசனமோ , நன்மையோ கிடைக்கப் போவதில்லை. இந்த பொய் முலாம் பூசப்பட்ட புன்னகை வாழ்வை Smiling Depression என்பார்கள். இந்த சொல் வழிக்காறில் பொதுவாக இல்லாத புதிய சொல்லாகும்.

எனவே, அத்தகைய எம்மை துண்டாடும் மனக் கவலைகளை வெளிப்படுத்தி, மனசை ஆற்றுப்படுத்த வேண்டும். புன்னகையில் உண்மையிருத்தல் வேண்டும். மனசார சிரிக்க வேண்டும். அதில் பொய்யும் ஏமாற்றலும் நடிப்பும் இருக்கக் கூடாது. பொய்யான அபிநயங்களும் முகச்சாயலும் மனசிற்கு தெம்பை அளிக்காது. எமது சோகமான மனவெழுச்சிற்குரிய வடிகால்கள் முறையாக அமைக்கப்படல் வேண்டும்.

இறைவனிடத்தில் ரகசியமாக தொழுகைகளில் முறையிடுவது, அவனிடம் எமது பாரத்தை இறக்கி வைப்பது, பிரார்த்தனைகளில் அவனிடம் மன இறுக்கங்களை கொட்டித் தீர்த்து மன்றாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் எமக்கு ஆறுதல்களைத் தேடிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் விட மேலானது. தன்னை படைத்த இறைவனிடம் சாய்வது மனிதனுக்கு பெரும் அருள் மருந்தாகின்றது.

மற்றவர்கள் தம்மைப் பற்றி பிழையாகக் கருதுவார்கள் என்று பயந்து வாழுவதும் மேலும் மனச் சுமைகளை அதிகரிக்கச் செய்து விடும். அதனால் மேலும் பல இறுக்கங்கள் ஏற்படும். வாழ்வு இன்னும் சிக்கலாகும். இதனால் உடல் நிலை பாதிக்கப்படும். ஆரோக்கியமே உலகில் மேன்மையான ஒன்று. அது சிறப்பாக இருந்தாலே இன்ப மகிழ்ச்சி பொங்கும். அது எம் கைகளில் உள்ளது. அது வெளியில் இல்லை. அது உள்ளே உள்ளது.

எம். ரிஸான் ஸெய்ன்

மனதில் பல கவலைகளையும் வெறுப்புகளையும் சொல்லாத பல துயரக் கதைகளையும் மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அடக்கி, அமுக்கி வைத்திருக்கின்றோம். அவற்றை வெளிப்படுத்த முயற்சிப்பதில்லை. பொய்யாக புன்னகைத்துக் ( (Fake Smile) கொண்டு உள்ளுக்குள் அழுகின்றோம்.…

மனதில் பல கவலைகளையும் வெறுப்புகளையும் சொல்லாத பல துயரக் கதைகளையும் மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அடக்கி, அமுக்கி வைத்திருக்கின்றோம். அவற்றை வெளிப்படுத்த முயற்சிப்பதில்லை. பொய்யாக புன்னகைத்துக் ( (Fake Smile) கொண்டு உள்ளுக்குள் அழுகின்றோம்.…

One thought on “ஒரு மனநல அமர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *