நான் அரசியல் பேசவில்லை

  • 9
உங்கள் ஒரு விரலில் கரைபடிந்ததில் குற்றமில்லை, ஆனால் எதிர்கால உங்கள் சந்ததியினரின் வாழ்க்கையில் கரைபடிந்திடாமல், 16ம் திகதி சிந்தித்து,வாக்களியுங்கள்.

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமக்களின் உரிமை. நீங்கள் விரும்பும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க பூரண உரிமை உண்டு. ஒரு விரல் கரைபடிந்தாலும், உங்கள் குழந்தையின் எதிர்காலம் கரைபடியாமல் இருக்க, சிந்தித்து செயல்படுங்கள். யாருக்கு வாக்களித்தீர் என்பது ஒவ்வொருவரின் அமானிதமாகும். அதனை பகிறங்கப்படுத்த அவசியம் இல்லை. வேட்பாளர்களுக்காக நாம் சண்டையிட தேவையும் இல்லை.

இந்த நாட்டில் நாங்கள் சிறுபான்மையர். எமது முகநூல் பதிவுகளால் வாதங்களினால் அல்லது தர்க்கங்களினால்.. எமக்கும் பெரும்பான்மை இனத்திற்கும் இடையில் சண்டை, சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. எந்த கட்சி வந்தாலும், எந்த ஆட்சி வந்தாலும், எந்த வேட்பாளர் வந்தாலும். நாம் கருவேப்பிலை தான். அவர்கள் ருசி அறிந்த பிறகு நாம் குப்பை தொட்டியில் தான் என்பதை கடந்த கால நிகழ்வுகள் உணர்த்தி இருக்கும்.

வெற்றியை அமைதியுடன் கொண்டாடுங்கள். தோல்வியை மதார ஏற்றுக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன். வெற்றியோ, தோல்வியோ.. சிருபான்மை இனமான நாம் அமைதியாகவே இருப்போம்.

“யா அல்லாஹ்! அநியாயம் விளைவிக்கும் கூட்டத்திடம் இருந்து, எம்மையும், எம் சொத்துக்களையும், உடமைகளையும், உயிர்களையும், உன் ஆலயங்களையும் பாதுகாப்பாயாக! ஆமீன்.

சிமாஸ் ஹுஸைன்

உங்கள் ஒரு விரலில் கரைபடிந்ததில் குற்றமில்லை, ஆனால் எதிர்கால உங்கள் சந்ததியினரின் வாழ்க்கையில் கரைபடிந்திடாமல், 16ம் திகதி சிந்தித்து,வாக்களியுங்கள். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமக்களின் உரிமை. நீங்கள் விரும்பும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க பூரண உரிமை…

உங்கள் ஒரு விரலில் கரைபடிந்ததில் குற்றமில்லை, ஆனால் எதிர்கால உங்கள் சந்ததியினரின் வாழ்க்கையில் கரைபடிந்திடாமல், 16ம் திகதி சிந்தித்து,வாக்களியுங்கள். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமக்களின் உரிமை. நீங்கள் விரும்பும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க பூரண உரிமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *