TIK TOK உச்ச கட்டம்

  • 34

“அன்றைய காலம் இஸ்லாமியர்களின் நடத்தைகளை அவதானித்தே பலர் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.”

குறிப்பாக முஸ்லீம் பெண்களின் ஒழுக்கமும், அவர்கள் அணியக்கூடிய ஆடைமுறையுமே ஒரு காரணமாக இருந்தது.

இதுவே ‘இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய தனித்துவம்’ ஆனால் இன்று எமது பெண்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அதனை முறையாக பேணி மார்க்கத்தை அவமதிக்காமல் இருக்கிறார்கள்.

அனைவரும் அறிந்த ஒரு நடிகை தான் “மோனிகா” இஸ்லாமிய பெண்களின் ஆடைமுறையால் கவரப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். இப்படி பல பெண்களுடைய உள்ளத்தை இன்று வரையிலும் முஸ்லிம் பெண்களின் ஆடை வென்றுள்ளது. அதே போல் இஸ்லாத்தில் இருக்கும் பல முஸ்லீம் பெண்களும் ஆடை விடயத்தில் பேணுதலாகவே இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் ஹிஜாபுக்காக உயிர் நீத்த “ஹிஜாபா ஷர்பீனி” போன்ற பல பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இன்றைய யுவதிகள் மாத்திரம் அல்லாது திருமணம் முடித்தபெண்கள், கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகள் பலர் அந்த கன்னியத்தையும், நல்ல இஸ்லாமிய பெண்களின் ஒழுக்க முறையையும் நாசமாக்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேசன் tikotok க்கு அடிமையாக இருக்கிறார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:” இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. “முதலாவது பிரிவினர்” யாரெனில், மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற நீண்ட சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடித்து இம்சிப்பார்கள். “இரண்டாவது பிரிவினர்” யாரெனில், மெல்லிய ஆடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து கர்வத்துடன் நடந்து, அந்நிய ஆடவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 4316)

பிற ஆண்களை தம் அழகை வெளிகாட்டி ஈர்க்கவேண்டும் என கேவலமான எண்ணத்தோடு நடந்துக்கொள்ளும் பெண்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகரக்கூட முடியாத அளவிற்க்கு நரகில் தள்ளப்படுவார்களே! இதை தான் இந்த tiktok அப்ளிகேசன் மூலம் இஸ்லாமிய பெண்கள் செய்துகொண்டு வருகிறார்கள். இதனை ஸ்டேடஸ்களில் வைத்து பிறரின் சிந்தனையை தன்பால் ஈர்ப்பதற்கும், அதனை பொதுத்தளத்தில் பகிர்வதற்க்கும் ஆசைப்பட்டு நரகிலே நுழைய தங்களை தயார் படுத்தி கொண்டுள்ளனர்.

இதனால் இவர்கள் நரகபடுகுழியில் செல்வதால் மட்டுமல்லாது பிற பெண்களையும் அந்த பாதையில் இழுத்துச்செல்ல வழிகாட்டுகின்றனர்.

ஒழுக்கத்தை இழந்து சுவர்க்கத்தை இழந்து மார்க்கத்தை இழந்து சமுதாய அந்தஸ்த்தை இழிவுப்படுத்தி இவர்கள் அடைய கூடிய மகிழ்ச்சி அற்பத்திலும் அற்பம் தானே!!!

தனக்கான அழகை அல்லாஹ் வழங்கியதை நினைத்து அல்லாஹ்விடம் நன்றி கூறவேண்டியவர்கள் அந்த அழகை இது போன்ற ஹராமானவற்றுக்கு பயன்படுத்துகின்றனர். அல்லாஹ் வழங்கிய அந்த அழகை அவனே அழிப்பதற்க்கு எத்துனை மணித்துளிகள் ஆகும்..?

அல்லாஹ் நாடினால் எந்த அழகை ஹராமானவைக்கு பயன்படுத்துகிறோமோ அதே அழகை பறித்து விடமாட்டானா..? எவ்வளவு பெரிய அசிங்கம்.

தன் கணவனல்லாது கண்டவனை பார்ப்பதற்கே அச்சப்படும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். தனது கணவனுக்கு மாத்திரம் காட்ட வேண்டிய அழகை, உடம்பை பிற ஆண்களின் பார்வைக்கு விருந்தாக அளிக்கிறார்கள்.

நாளை மறுமையின் அச்சத்தை உணர்ந்த எந்த பெண்ணும் இவ்வளவு மட்டமாக நடந்து கொள்ளமாட்டாள்.

இதனை பொதுத்தளத்தில் பதியாமல் என் நண்பர்களுக்கே காட்டுகிறேன் என கூறினாலும் நீங்கள் இறைவன் தடுத்த பாவத்தை செய்த பெண்கள் தான்

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!” (குர்ஆன் 2:195)

“அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..”

 Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

“அன்றைய காலம் இஸ்லாமியர்களின் நடத்தைகளை அவதானித்தே பலர் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.” குறிப்பாக முஸ்லீம் பெண்களின் ஒழுக்கமும், அவர்கள் அணியக்கூடிய ஆடைமுறையுமே ஒரு காரணமாக இருந்தது. இதுவே ‘இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய தனித்துவம்’ ஆனால் இன்று…

“அன்றைய காலம் இஸ்லாமியர்களின் நடத்தைகளை அவதானித்தே பலர் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.” குறிப்பாக முஸ்லீம் பெண்களின் ஒழுக்கமும், அவர்கள் அணியக்கூடிய ஆடைமுறையுமே ஒரு காரணமாக இருந்தது. இதுவே ‘இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய தனித்துவம்’ ஆனால் இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *