பாரளுமன்றத்திற்குக் முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளீர்ப்பது எவ்வாறு?

  • 26

ஜனாதிபதி தேர்தலின் வரைபட முடிவுகள் இலங்கையில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையிலான மோதலின் உச்ச கட்டத்தை காட்டுவதாக அமைந்தது. அடுத்த கட்டமாக நியமிக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், அமைச்சுப் பதவிகள் முஸ்லிகளுக்கு வழங்காமை. முஸ்லிம்கள் ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில் மற்றும் சஜித் ஆகியோருக்கு இடையிலான தலைமைத்துவ போராட்டம். என்பன முஸ்லிம்களுக்கு மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியமை மட்டுமல்லாது குறிப்பாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதை தீர்மானிக்க முடியாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாட்டிற்கு இனக்கட்சிகள் தேவையா? வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் கட்சிகள் பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமா? என்று பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்த வண்ணமுள்ளது.

இந்நிலையில் தற்போது ஆட்சி அமைத்துள்ள பொதுஜன பெரமுன முஸ்லிம்கள் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர். முதலாவது தமது அரசாங்கத்துடன் முன்னால் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதியுந்தீன் ஆகியோர்களை இணைத்துக் கொள்வதில்லை. இரண்டாவது முஸ்லிம் சமூகத்தை பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அரசியல் நிலைப்பாட்டிற்கான காரணம் அரசியல் சட்ட திருத்தமொன்றை அல்லது யாப்பு மாற்றமொன்றை ஏற்படுத்த பாராளுமன்றத்தில் ⅔ பெரும்பான்மை எடுப்பாதாகும். அதாவது தற்போதைய சூல்நிலையில் பாராளுமன்றத்தில் எவருக்கும் ⅔ பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெரும் நோக்குடன் அவர்கள் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 52% வாக்குகளில் 40% பேரினவாத சிந்தனையூடாக பெறப்பட்ட வாக்குகள் குறைந்துவிடும். எனவே குறித்த வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள ஹக்கீம் மற்றும் ரிஷாத் விடயத்தில் எதிரான போக்கை கைக்கொள்ள வேண்டும்.

பொதுஜன பெரமுனா தற்போது ஆட்சி அமைத்தாலும், பொதுத் தேர்தலின் பின் தொடர்ந்தும் பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவும். தமக்கு பொருத்தமான முறையில் சட்ட திருத்தம் அல்லது யாப்பு மாற்றத்தை செய்ய பாராளுமன்றத்தில் ⅔ பெரும்பான்மை பெறவேண்டும். அதற்காக தற்போதுள்ள 52% ஐ 60% ஆக அதிகரித்துக் கொள்ள முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின வாக்குகளை பெற வேண்டும். எனவேதான் முஸ்லிம் சமூகத்தை தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு பொதுஜன பெரமுனாவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அரசில் மாத்திரமல்ல இந்தியா அரசிலும் பேரினவாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர். இதன் அடையாளங்களாக இந்தியாவில் பாபர் மசூதி தீர்ப்பு, இந்தியா குடியுரிமை திருத்தச் சட்டம் என சட்டரீதியாக சிறுபான்மைக்கு எதிரான போராட்டம் அரங்கேறிய வண்ணமுள்ளது. இவ்வாறான ஓர் சட்டரீதியாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போராட்டம் தற்போது இலங்கையில் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உருவாகியுள்ளது.

இதன் ஓர் அங்கமே பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள 2019.12.18ம் திகதி வெளியான தனியார் சட்ட மூல வர்த்தமானி அறிவித்தல் படி 1951ம் ஆண்டு 13ம் இலக்க விவாக, விவாகரத்து சட்டத்தை ரத்தாக்கும் சட்டமூலம். குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கிகரித்து, அரசு சட்டமாக ஏற்றுக்கொண்டால் இலங்கை முஸ்லிம்களின் சிறப்புரிமையாக இருந்த முஸ்லிம் தனியார் சட்டம் இல்லாமல் ஆகிவிடும். இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படவுள்ள ஓர் அநீதியாகும்.

இவ்வாறு தமிழ் சிங்கள சிறுபான்மைக்கு எதிராக சட்ட திருத்தம் அல்லது யாப்பு மாற்றங்கள் அல்லது சட்டத்தை ரத்து செய்தலூடாக அநீதிகள் இழைக்காமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் தமது அரசியல் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் பாராளுமன்றத்தில் ஓர் சட்டம் நிறைவேற்ற ⅔ ஆதரவு பெற வேண்டும். அவ்வாறே இலங்கையில் பெரும்பான்மை, சிறுபான்மைக்கு இடையிலான விகிதம் ⅔ கு ⅓ ஆகும். இவ்வாறு பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் இன ரீதியிலான பெரும்பான்மை என்பவற்றுக்கு மிக நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது.

இலங்கையில் சிறுபான்மைக்கு எதிராக அநீதியான சட்டங்கள் சமர்பித்து அதற்கு இன ரீதியாக பெரும்பான்மையினர் ஆதரவாளித்தால் சிறுபான்மையினரின் இருப்பு சின்னா பின்னமாகிவிடும். இது நாம் இலங்கையர் என்பதற்கு பதிலாக இன ரீதியாக சிந்தித்து செயற்பட்டதன் ஓர் விளைவாகும். இந்நிலையில் தாம் தொடர்ந்தும் இன அரசியலில் தனித்து பயணித்தால் பேரினவாத அரசியல் முறுகள் நிலை அடையும். இது இலங்கையன் என்ற அடிப்படையில் இன மதங்களை தாண்டி நாட்டின் குடி மக்களை வீழ்ச்சியடையச் செய்யும்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பேரினவாத சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் விதமாக வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்கள் பெரும்பான்மையினருடன் இணைந்து செயற்படத்தான் வேண்டும். இதன் ஓர் அங்கமாக இலங்கை முஸ்லிம்கள், தற்போதைய சூழ்நிலையில் அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொதுஜன பெரமுனா கட்சியுடாக வட கிழக்கிற்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்சம் ஒவ்வொரு வேட்பாளரை களமிறக்க வேண்டும்.

ஆனால் நாம் பொதுத்தேர்தலுக்கு பின் எதிர்பார்க்கின்ற அரசால் முன்வைக்கின்ற அனைத்து வேலைத்திட்டங்கள், சட்டங்களுக்கு “ஆமா. சாமி” என்று கை தூக்கி விட்டு, இன்னொரு தேர்தல் வரும் போது, “நம்மை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. மன்னித்து விடுங்கள்.” என்று சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கும் தலைவர்களையல்ல. மாறாக ஒவ்வொரு திட்டங்களையும் தீர விசாரித்து பொருத்தமான தீர்வுகளை முன்வைக்கும் ஆளுமையுள்ள தலைவர்களையாகும்.

இதன் நோக்கம் இணைந்து செயற்படுவதன் ஊடாக பேரினவாத சிந்தனையை மழுங்கடிப்பதும் சமூகத்திற்கு புதிய அரசியல் தலைவர்களை உருவாக்குவதாகும். இதற்காக முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைவது பொருத்தமில்லை. ஏனேனில் முஸ்லிம் கட்சிகள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிக்காமை அக் கட்சி வாக்காளர்களின் மனங்களில் ஓர் விரக்தியான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் இணைவது பொருத்தமில்லை.மேலும் அது எதிர் கட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 20% – 30% இடைப்பட்ட பௌத்த வாக்காளர்களின் மனங்களில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும். அதாவது முஸ்லிம்கள் எதிர் கட்சி அரசியல் செய்யும் ஆளுமையற்றவர்கள், அமைச்சுப் பதவி மோகம் கொண்டவர்கள். போன்ற தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும்.

இலங்கையில் முஸ்லிம்களை பொறுத்தவரையில் இனக் கட்சிகளுக்குள்ளும், ஆட்சி அமைக்கும் இரு கட்சிகளில் ஓர் கட்சிக்கு மாத்திரம் சார்ந்து நிற்கும் போக்குடன் செயற்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பிரிந்து ஆதரவை வெளிப்படுத்தினால்தான் எக்கட்சி ஆட்சி அமைத்தாலும் தலைநிமிர்ந்து நிற்கலாம்.

எனவே சிறந்த சேவையாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் இன கட்சிகள் ஊடாக தேர்தலுக்கு களமிறக்காமல் பேரினவாதக் கட்சிகள் ஊடாக களமிறக்கி முஸ்லிம்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை உறுதி செய்து கொள்வோம். இதற்காக முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களில் இருவரை களமிறக்கி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவும் வேண்டாம்.

மதம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து, நாடென்ற அடிப்படையில் பெரும்பான்மையுடன் சோரம் போகாமல், கைகோர்த்து அபிவிருத்திக்கான அரசியலை முன்னேடுப்போம்.

Ibnuasad

ஜனாதிபதி தேர்தலின் வரைபட முடிவுகள் இலங்கையில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையிலான மோதலின் உச்ச கட்டத்தை காட்டுவதாக அமைந்தது. அடுத்த கட்டமாக நியமிக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், அமைச்சுப் பதவிகள் முஸ்லிகளுக்கு வழங்காமை. முஸ்லிம்கள் ஆதரவளித்த ஐக்கிய…

ஜனாதிபதி தேர்தலின் வரைபட முடிவுகள் இலங்கையில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையிலான மோதலின் உச்ச கட்டத்தை காட்டுவதாக அமைந்தது. அடுத்த கட்டமாக நியமிக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், அமைச்சுப் பதவிகள் முஸ்லிகளுக்கு வழங்காமை. முஸ்லிம்கள் ஆதரவளித்த ஐக்கிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *