மலிவு விலையில் சந்தேகம்

  • 16

எங்க பார்த்தாலும் சந்தேகம். யாரை பார்த்தாலும் சந்தேகம் தான். இந்த சந்தேகம் தோன்றியது தவறா? தோன்றாமல் இருப்பது தவறா?

காதலனுக்கு காதலி மேல கணவனுக்கு மனைவி மேல பெற்றோருக்கு பிள்ளைகள் மேல ஆசிரியருக்கு மாணவர்கள் மேல வாங்குவோனுக்கு விற்பவன் மேல மக்களுக்கு ஆட்சியாளன் மேலனு அடிக்கிக்கிட்டே போகலாம்.

இதில் குறிப்பாக கணவன் மனைவி மேல் படும் சந்தேகம் கொஞ்சமில்ல. அதுலயும் குறிப்பா காதலித்து திருமணம் முடித்தவர்கள். (எல்லோரையும் அல்ல சிலர்) காதலிக்கிறப்போ போடுற ரூல்ஸ் இருக்கே! அப்பப்பா…. சாசனம் அது. பாகுபலி படத்தின் டயலோக்ல சொல்லனும்னா “இதுவே என் கட்டளை. கட்டளையே சாசனம்” னு சொல்லுறத போல. அந்த நிமிஷத்துல இருந்து அடி பணிந்த பெண்கள். இன்னும் “இதுதான் தன் கணவனுக்கு கொடுக்கும் மரியாதைனு” அவங்க சொல்லுற அனைத்து விஷயங்களுக்கும் தன்னையே அடக்கி ஒடுக்கி சிறகுகளை கிழித்து இறவாமலும் ஜீவிக்காமலும் வழியின்றி தவிக்கிறார்கள்.

எங்கே என்னுடைய காதலி அல்லது மனைவி வேலை பார்க்க போனா வேற ஆம்பளங்களோட கதைக்க வேண்டி வந்துரும்னு ஒரு பயம். படிச்ச சமூகத்துல இன்னுமே இப்படியான நடத்தைகளோடு ஆம்பளங்க இருக்கத்தான் செய்றாங்க. நம்முடைய பெற்றோரின் வாழ்க்கைய எடுத்துப் பாருங்க. உறவுக்காரங்க, அன்றாட தேவைக்காக வீட்டு வாசலடிக்கு வருகிற வியாபாரிங்க இவங்களோட எலாம் பேசாம கதைக்காம இருக்கிறாங்களா? எந்த காலமும் சந்தேகம்னு ஒன்னு மனசுல உதித்ததே இல்ல. இந்த காலத்தில இரண்டு நாள் பேசுனா மூனாம் நாள் “நான் வாங்கித் தாரன் வீட்டுல இருன்னு” சொல்லுறாங்க.

இதற்கு தொழில்நுட்பம் தான் முக்கிய காரணம்னு சொல்லலாம். சில பேர் அத தவறா உபயோகிக்கிறது எல்லோரையும் அப்படியான கண்ணோட்டத்திலேயே பார்க்க செய்கிறது. You Tube ல எலாம் விழிப்புணர்வுக்காக இடப்படுற காணொளிகள பார்த்துவிட்டு “இப்படி நம்ம மனைவியும் செய்துடுவாளோனு” தோனும் ஒரு துளி விஷம் தான் வாழ்க்கைய நரகமாக்குது. “அதிக கவனம் எடுத்துக் கொள்றன்” என்ற பெயரில “எனக்கு மட்டும் தான் சொந்தம்னு” தோனுறது சில ஆண்கள தவறாக நடக்கச் செய்யுது. குறிப்பாக சொல்லனும்னா நல்ல மனைவியா தன் கணவனுக்கு மட்டும் இருக்கனும்னு நெனக்குறவங்களுக்கு தான் பெரும்பாலும் இப்படி நடக்குது. இதே விடயம் பெண்களால ஆண்களுக்கும் நடக்கிறது என்றால் அதுவும் உண்மை தான்.

சந்தேகம்னு ஒன்னு மனசுல தோன்றிட்டாலே நடவடிக்கைல மாற்றம் வந்திடும். அது ஆணுக்கோ பெண்ணுக்கோ பொது. நாம சந்தேகப்படுறம்னு தெரிஞ்சிட்டுன்னா அதுலயும் வீணா சந்தேகப்படுறதா இருந்தா உலக மகா யுத்தம் தான் வீட்டுல.

இன்னைக்குள்ள முக்கியமான பிரச்சினை தான் மனசு விட்டு நம்மள சுத்தி உள்ளவங்களோட பேசாம எங்கேயோ உள்ள ஒருவரோட மணித்தியாலக் கணக்குல போன் பண்ணி பேசுறதும் பொளம்புறதும். எதுவுமே இதனால மாறப்போறதில்ல. ஆறுதல் சொல்றவரங்க போன் வச்சதும் முடிஞ்சு. சம்பந்தப்பட்டவங்களோட நேரா பேசுனா சரியாகும்னு தெரியும் தப்பா நெனச்சிடுவாங்க என்னை விட்டு போய்டுவாங்கனு பயத்துலயே கதைக்குறதில்ல.

தவறா நடந்தா யாருக்காவது கோபம் வராம இருக்குமா?. வந்த கோபத்துல இரண்டு அரையும் விழும். வாங்கிக்க வேண்டியது தான். தப்புனு ஒன்ன செஞ்சிட்டா தண்டனைய அனுபவிக்க தான வேணும். அதுதான நியதி! கண்டிப்போட பாசமும் இருக்கிற போது சந்தேகம் காணாமல் போயிடும். மனதில் பட்டதை மனம் விட்டுப் பேசுங்கள்.எதையும் தைரியமா எதிர்த்து போராடுங்கள். வாழ்க்கை முடிந்து விட்டதென வாழைமரமாய் சரியாது ஆலமரமாய் புயலுக்கும் புத்தி கூறுங்கள்.

குறிப்பாக கணவன் மனைவி உறவு விரிசலடையிறதே கணவன் வேலை விட்டு களைப்புடன் வீடு வரும் போது மனைவி வரவேற்று உபசரித்து கவனிக்காதது தான். குறைந்தது ஒரு கப் தண்ணீராச்சும் கொடுக்குறல்ல. எம் முன்னோர்கள எடுத்து பார்த்தா இத ஒரு மரபாவே செய்து இருப்பாங்க.

அடுத்தது கணவன பத்தி கணவனுக்கிட்ட பொளம்புறத விட நூறு மடங்கு அடுத்த பொம்பளங்கிட்ட பொளம்புறுது. இது வாய் விட்டு வாய் தாவிப்பாய்ஞ்சு கடைசில சண்டப் போட்டது என்றது அடிச்சு கொண்டே போட்டானாம்னு மாறிறும். பதறிப் போய் வந்து பார்த்தா குத்து கல்லு மாறி வாய் கிழிய கதைச்சு கொண்டு இருக்கும் அந்த பொம்பள. கணவன் மனைவி இருவருமே ஒருத்தர ஒருத்தர் அடுத்தவங்களுக்கிட்ட குற கூறுறத நிறுத்தனும். இது தான் தம்பதி என்றதற்கே அர்த்தம்.

ஆண்கள் என்றது தலைமைக்கு சொந்தமானவங்க. அவங்கள மதிக்கனும். அன்பால மனைவி என்ற ரீதியில வேலைகள செய்றது அடிமைத்தனம் ஆகாது. ஆனா ஆட்டிப்படைக்குற அளவுக்கு அதிகாரத்த கொடுக்கவும் கூடாது. ஒரு முற பிடிக்காததை பிடிச்சவங்களுக்காகத் தானேன்னு ஏத்து கொண்டா கடைசி வர அப்படியே நடக்க வேண்டி இருக்கும். முறுகல்ல தான் போய் முடியும்.

பெண்கள பொறுத்த வர பாராட்டுக்காக ஏங்குறவங்க. சின்ன சின்ன சந்தோசம் தன் கணவரால நிறைவேற்றபடனும்னு அதிகமா நினைப்பாங்க. இத பண்ணி முடிச்சிட்டால் போதும். அவளுக்கிட்ட இருக்குற ஒட்டு மொத்த அன்பையும் காட்டிடுவாங்க.

இந்த உலகத்துல எல்லாரும் அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழனும்னு ஆசப்படுறாங்க. அது சில பேருக்கு அமையுது. சிலருக்கு நேர்மறை. வாழப்போறது கொஞ்ச காலம். சந்தேகத்த விட்டு ஒதுங்கி சந்தோசத்த கொடுத்து வாழப் பழகுங்க. வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

சில பெண்களின் வாழ்க்கை பக்கத்திலிருந்து

கவிச்சாரல் சாரா
புத்தளம்

எங்க பார்த்தாலும் சந்தேகம். யாரை பார்த்தாலும் சந்தேகம் தான். இந்த சந்தேகம் தோன்றியது தவறா? தோன்றாமல் இருப்பது தவறா? காதலனுக்கு காதலி மேல கணவனுக்கு மனைவி மேல பெற்றோருக்கு பிள்ளைகள் மேல ஆசிரியருக்கு மாணவர்கள்…

எங்க பார்த்தாலும் சந்தேகம். யாரை பார்த்தாலும் சந்தேகம் தான். இந்த சந்தேகம் தோன்றியது தவறா? தோன்றாமல் இருப்பது தவறா? காதலனுக்கு காதலி மேல கணவனுக்கு மனைவி மேல பெற்றோருக்கு பிள்ளைகள் மேல ஆசிரியருக்கு மாணவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *