இதுவும் கடந்து போகும்

  • 8

உயர்த்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சமர்ப்பணம்.

“நாள் நெருங்குகிறதே, நெருங்கிவிட்டதே, என்ன செய்வேன் என்று அங்கலாய்ப்புடன் மனக்கலக்கங்களுடன் ஒரு சிலர், சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்து இன்னும் சிலர்.”

“சுற்றத்தாருக்கு பயந்து, நண்பர்களுக்கு பயந்து முற்றத்துக்கு இறங்காமல் தப்பிப்பது எப்படி” என்று திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்கள் பலர்,

ஆம், இவர்கள் முன்னால் உயர்தர வாசிகள் இவர்களின் காத்திருப்பு கட்டிக் கொடுக்கப்பட்ட விடைத்தாளிற்கு கிடைக்கவிருக்கும் பெறுபேறுகளுக்காகவும் வெட்டுப் புள்ளிகளுக்காகவுமே காத்திருக்கிறார்கள். பெறுபேறு வெளியாகும் அத்தினத்தை நினைத்து பல உணர்வுக் கலவைகளை சுமந்துக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு இன்பமாகவும், சிலருக்கு பூரிப்பாகவும், வேறு சிலருக்கு ஏமாற்றமாகவும், இன்னும் பலருக்கு சோகமாகவுமே நிறைவு பெறும் அத்தினம். யாருக்கு எவ்வாறு நிறைவு பெற்றிருப்பினும், பல பாடங்கள் சொல்லி தந்து விட்டே செல்லும் என்பதே யதார்த்தம்.

மாணவர்களே நீ கலங்காதே! ஒரு பெறுபேறில் உன் வாழ்வை தீர்மானிக்காதே! பரீட்சைகளில் தோற்றவர்கள் சரித்திரம் படைத்ததை நீ அறியவில்லையா!

உன்னைச் சுற்றி பல நண்பர்களின் கையில் பணம் புலங்குவதை பார்த்து கவலை கொள்ளாதே! அவ்வாறு கவலைப்பட்டிருந்தால் இன்று அபதுல்கலாமை சரித்திரம் பேசியிருக்காது. பல தோல்விகள் காண்பாய் உன் விடா முயற்சியை கைவிட்டுவிடாதே!

உன் மேல் வீசப்படும் நக்கல், நையாண்டிகளையும் வைராக்கியத்துடன் சிரிப்புடன் ஏற்றுக்கொள் அப்போதே நீ வெற்றி பெற்றுவிட்டாய்.

உங்கள் பெறுபேறுகள், நீங்கள் எழுதிய குறித்த வினாப்பத்திரத்திற்காக பெறும் பேறே அன்றி, உங்கள் வாழ்க்கையில் பெறப் போகும் நிலையான பேறு அல்ல! எம் வாழ்வு அத்தினத்தையும் கடந்து தான் போகும். முயற்சியே உன்னை வெற்றியாளனாக்கும்.

பரீட்சையில் வெற்றியா? தோல்வியா? என்று பார்க்காதே. அது நிலையானதல்ல! உயர்தரத்தில் வழுக்கிய பலர் அவர்களது வாழ்வில் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

துவண்டு விடாதே! வெட்டுப்புள்ளியைக் கண்டு, அது அரசாங்க பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்ய தீர்மானிக்கப்படும் வெட்டுப்புள்ளியே அன்றி உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முற்றுப்புள்ளியன்று. உன் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டியவன் நீயே!

மாணவர்களே! எதிர்காலம் உங்கள் கையில், “நீ சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், உன்னை தடுக்க யாராலும் முடியாது!” என்ற உணர்வுடன் போராடு. இன்னொருவரின் பாதையில் செல்ல எத்தனிக்காதே! தெரிவு செய், உனக்கான ஒரு புது பாதையை நீ இன்று பார்த்தது ஒரு பரீட்சை தான் நீ காண வேண்டிய பல பரீட்சைகள் காத்திருக்கின்றன உன் முன்னே!

போராடு மூச்சுள்ளவரை ! உன் இதயம் போராடும் வரையில் தான் உன் மூச்சு இருக்கும். அதே போல் நீ உன் இலட்சியத்திற்காக போராடு வெற்றி பெறுவாய்! ஒன்றை புரிந்து கொள் அறிவு என்பது பெறுபேறுகளிலோ சான்றிதழ்களிலோ அல்ல சகோதரா  அப்படியெனின்,

‘உலக பணக்காரன் பில்கேட்ஸ்’ பல்கலைகழக பட்டம் பெறாதவன், வாழ்க்கையில் சாதிக்கவில்லையா? பக்கத்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்து உலகம் போற்றப்படும் ஒருவராக இருந்தாரே அப்துல் கலாம் விமான ஓட்டுனர் பரீட்சையில் தேர்ச்சி பெறாதவர் சாதிக்கவில்லையா? எடிசன் ஆசிரியரிடம் முட்டாள் எனும் பெயர் எடுத்தவர் சாதிக்கவில்லையா? ‘ஸ்டீவ் ஜாப்ஸ் ‘இவர்கள் எல்லாம் வெற்றியை மட்டும் கண்டவர்கள் அல்ல. ஒன்றை மட்டும் புரிந்துகொள் தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படியாகும். நிலைகுழைந்து விடாதீர்கள்.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

உயர்த்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சமர்ப்பணம். “நாள் நெருங்குகிறதே, நெருங்கிவிட்டதே, என்ன செய்வேன் என்று அங்கலாய்ப்புடன் மனக்கலக்கங்களுடன் ஒரு சிலர், சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்து இன்னும் சிலர்.” “சுற்றத்தாருக்கு பயந்து, நண்பர்களுக்கு பயந்து…

உயர்த்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சமர்ப்பணம். “நாள் நெருங்குகிறதே, நெருங்கிவிட்டதே, என்ன செய்வேன் என்று அங்கலாய்ப்புடன் மனக்கலக்கங்களுடன் ஒரு சிலர், சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்து இன்னும் சிலர்.” “சுற்றத்தாருக்கு பயந்து, நண்பர்களுக்கு பயந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *