மலையகத்திற்கு

  • 14

வேலிகளே பல நாள்
பயிர்களை மேய்ந்தபடி
ஆயினும்
மேட்டுகளில்
லயன்களானாலும்
அறிவில் மேதைகள் நாம்

அறிவிற் சிறந்தோர்
தன்னறிவினை
பலருக்கு
அமுதூட்டியோரே

இனம் என்று
எடுத்தெரியாது
ஏடுகளை
ஏழைகளும் ஏந்த
தன் மண்ணையும்
தமக்கே உரிய
மாண்புகளையும்
மாநிலம் அறிய
நினைவது தவறோ?

விண்ணிலும் வீடு
கட்டினீர்
கடலைக் கூட பாலை
நிலமாக்கினீர்
ஏரைக் கூட இன்று
எந்திரமாக்கினீர்
அட்டையால் உறிஞ்சப்பட்ட
உதிரத்தையே
உரமாக்கும் எங்களின்
எண்ணங்களை
சாத்தியமாக்கிட
முடியாதோ உம்மால்?

சிறு துளியாக
உதிர்ந்த நாம்
புரட்சியாக மாறி
இருக்கிறோம்
வயிற்றில் அடித்தீர்
விதி என்றிட்டோம்
அறிவினை
பல்கலையாக்கி
நாமும்
எஜமானர்களாவோம்
விரைவில்

கவிச்சாரல் சாரா
புத்தளம்

வேலிகளே பல நாள் பயிர்களை மேய்ந்தபடி ஆயினும் மேட்டுகளில் லயன்களானாலும் அறிவில் மேதைகள் நாம் அறிவிற் சிறந்தோர் தன்னறிவினை பலருக்கு அமுதூட்டியோரே இனம் என்று எடுத்தெரியாது ஏடுகளை ஏழைகளும் ஏந்த தன் மண்ணையும் தமக்கே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *