வர்க்க வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இஸ்லாம்!

  • 11

மனிதன் மண்ணில் பிறக்கையிலும் அவனுள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் அவன் ஒரே தாய் வயிற்றில், ஒரே ஊரில், குறிப்பிட கால சூழ்நிலையில் பிறப்பவன் அல்ல. எனவே அவன் இன, நிற, மொழி ,வர்க்க வேறுபாடுகளை இயல்பாகவே கொண்டுள்ளான்.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (49:13)

“வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே ! திண்ணமாக அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (30 : 22)

இவ் இறைவாக்குகளானது வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நிலையை போதிக்கிறது. இஸ்லாத்தில் மக்களிடையே பிரிவினை வாதம் இல்லை என்பதை தகரத்தெறிகின்றது. தற்கால வணிக உலகில் பணத்திற்கு முன் பாசமா என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு இன்றய கால பேசுபொருளாக காணப்படுவது வர்க்க வேறுபாடாகும். இது பணம் , சொத்து என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட சொல்லாடலாகும்.

இவ்வர்க்க வேறுபாடு ஆனது பல புரட்சிகளுக்கு வித்திடும் கொள்கையாக காணப்படுகின்றன. வர்க்க வேறுபாட்டினுள் அகப்பட்ட மனிதன் வாழ்வதற்கு பணம் அவசியம் என்ற நிலையிலிருந்து வாழ்வே பணம் தேடுவதற்குத் தான் என்ற நிலையை அடைந்துள்ளான்.

மனிதனின் வாழ்கை வட்டம் மிருகங்களின் வாழ்க்கையை விட வித்தியாசமானது. இதற்கு அவனது அறிவாற்றல் சன்றாகும். ஆக அவன் சீரான வாழ்வுக்கு தேவையானவற்றை தேடுக்கொள்கின்றான். இதன்நடுவே வாய்ப்பும் வசதியும் ஒரு சிலருக்கு சிறப்பாக அமைந்து விடுகின்றன. இன்னும் சிலருக்கு காலம் தாழ்த்தப்படும், மற்றும் சிலருக்கு வாய்ப்புக்கள் கைகூடாமலும் போகின்றன.

ஆரம்பகாலத்தில் கையளவு பணம் பரிமாற்றம் நடைபெற்ற போது வாய்ப்பு அமையப்பெற்றவன் அப்பாதையில் முயற்சியினை மேற்கொண்டான். வாய்யு பெறாதவனுக்கு அன்பையும் உதவியையும் பரிசளித்து கை கொடுத்தனர்.

கையளவு பணம் மடியளவில் குவிந்த போது உதிவிக்கு நீட்டிய கரங்கள் சட்டென உள்ளெடுக்கப்பட்டன. பண ஆசை பேரசாயாக மாறி அத்தியாவசியம் ஆடம்பரமாய் போய் பதவி வெறி குடிகொண்டு; அதிகாரம் செலுத்துவதில் ஆரம்பித்து அக்கிரமம் புரிவது வரை கொண்டு சென்றது.

உழைப்பவர்களின் சக்திகள் முதலாளிகளால் உறிஞ்சப்பட்டன. உழைப்புக்கு தக்க கூலி வழங்காமையால் நாளாந்தம் நலிவுற்று நல்வாழ்வு இழந்தனர். அட்டைப்புச்சியாய் உழைப்பாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி கொழுத்த வாழ்கை அரங்கேற்றப்பட்டது. குரோதம், வெறுப்பு, பகைமை குடிகொண்டு அது போர்ச்சூழலையும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலுக்கு இட்டுச்சென்று வர்க்க பேதத்திற்கான அடித்தளத்தை இட்டு இறுதியில் முதலாளித்துவ கொள்கை (capitalism), பொதுவுடைமை கொள்கை (Communism) என்பனவற்றை தோற்றுவித்தன.

இவ்வர்க்க வேறுபாடுகளை தகர்த்தெறியும் மூலக் கொள்கையாக இஸ்லாம் காணப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு நபியவர்கள் உருவாக்கிய ஈமானிய சமுதாயமாகும். நபித்துவம் அருளப்படுவதற்கு முன் அக்கால அரபியரிடம் கோத்திர வெறி தலைவிரித்தாடியது. சண்டைகள் வாழையடி வாழையாக தொடர்ந்தன. அடிமை எஜமான் பாகுபாடு நிலைத்திருந்தன. நபித்துவத்தின் பின் இதற்கு முற்றுப்புள்ளி இடப்பட்டன. வர்க்க வேறுபாட்டை இல்லாமல் செய்து ஈமானிய சமூகத்தை உருவாக்கினார்கள்.

அந்த சமூகத்தில் பணம் படைத்தவரும் இருந்தனர் ஏழைகளும் இருந்தனர். ஆனால் பணத்தினால் அதிகார உணர்வோ ஏழ்மையினால் தாழ்வான உணர்வோ காணப்படவில்லை. இதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இஸ்லாம் எனும் ஊற்றாகும். அது மனதளவில் பெரும் செல்வத்தைக் கொடுத்தது. அதன் வழிகாட்டுதல் மனிதனை சீர் நெறியில் பயணிக்க வைக்கின்றன.

மனிதனை இறைவன் தன் பிரதிநிதியாக படைத்து அவனை அவன் கால்போன திசையிலே வெறுமனே வாழ விட்டு விடவில்லை. மாறாக மனோஇச்சையை கட்டுப்படுத்தி அவனுக்கு சிறந்த வாழ்க்கை நெறியினை போதித்து அல்குர்ஆன் மற்றும் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எமக்கு அருளியுள்ளான்.

அதன் படி வர்க்க உணர்வை ஒழிக்க இஸ்லாம் சில வழிமுறைகளை காட்டித்தந்துள்ளன.

  • பணத்திற்கு கொடுக்கப்படும் இடத்தை இறை திருப்திக்கு கொடுத்தல்.

மனோ இச்சையிலிருந்து விடுபட்டு திருப்தி என்பது பணத்தை அதிளவில் பெறுவதில் இல்லை! எனபதை உணர்த்தி இறவனின் திருப்தியே உனன்னதமானது என்ற நிலையை தோற்றுவித்து பண ஆசையை இல்லாமல் செய்கிறது.

  • அல்லாஹ் ஏக கடவுள், மனிதர்கள் அவனது அடியான் என்பதன் மூலம் வர்க்க பாகுபாட்டை நீர்மூலமாக்குகிறது.

அதாவது ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரும் அடிமை என்பதை ஆழப்பபதிப்பதன் மூலம் வர்க்கம் தோற்றம் பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது. இறைவனுக்கு அஞ்சுவதை போதித்து அதன்மூலம் அடிமைத்தனத்தை ஒழிக்கிறது.

  • ஸகாத் ஸதகா போன்றவற்றை கடமையாக்கியுள்ளன.

வசதி படைத்தவர் தம் செல்வத்தை பகிர்வதன் மூலம் செல்வத்தின் மீதான ஆசையை இல்லாமல் ஆக்கி இஸ்லாம் ஏழைகளுக்கு உதவிசெய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏழைகளுக்கு உதவும் கரங்கள் முந்தப்பட்டு வர்க்கப்பிரிவினை ஏற்படுவதிலிருந்தும் தூரப்படுத்தப் படுகின்றன.

“யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். ( 9:60)

ஆகவே பணம்படைத்தவரின் சொத்தில் வறியவருக்கும் பங்குண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் எமது உள்ளம் உலகப்பற்று, கருமித்தனம், பண ஆசை போன்றவற்றை விட்டும் தூய்மை அடைந்து சமூகத்தில் வறுமை நீங்கி சமூகம் வளர்ச்சி அடைய ஸகாத் பெரிதும் துணை புரிகிறது.

  • இபாதத்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம்.

குறிப்பாக நாம் தொழுகையை எடுத்துக்கொண்டால் இங்கு வர்க்கவேறுபாடு முற்றாக புறந்தள்ளப்பட்டுள்ளன. ஏனெனில் ஏழை – பணக்காரன், உயர் ஜாதி – கீழ் ஜாதி என்ற வேறுபாடு இன்றி காலோடு கால் ஒட்டி, தோழோடு தோழ் சேர்ந்து அனைவரும் அடியான் என்ற நிலையில் ஏக இறைவனை வணங்கி வழிபடுகின்றோம். மேலும் ஹஜ் வணக்கம் போன்றவற்றையும் குறிப்பிட முடியும்.

  • ஹலாம் ஹராம் பேணப்படுவதும், நீதி மற்றும் தண்டனைக் கோட்பாடும்.

வியாபாரத்தில் வட்டியை ஹராமாக்கி இருப்பதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் அடிப்பபதை தடைசெய்துள்ளது. இதற்கு தண்டனையை குறிப்பிட்டு கூறி இருப்பதனால் அதனை பாவமாக கருதி விடுபடும் நிலையை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. பிறரின் உழைப்பை உறுஞ்சுவது இஸ்லாத்தில் ஹராமாகும்.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். (2:275)

அத்தோடு பிச்சை எடுப்பது இஸ்லாத்தில் வெறுக்கப்படும் செயலாகும். ஹலாலான முறையில் பணத்தை திரட்டுவதற்கே இஸ்லாத்தில் அனுமதியுள்ளது அதனால் தீய வழிமுறையில் பணத்தை அபகரித்தல், களவு கொள்ளையிடுதல் போன்றவை தண்டனைக்குரிய குற்ங்களாக நோக்கப்படுகின்றன.

  • சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருப்பது.

இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் உருவாக்கி ஒற்றுமையை வளர்த்து வேற்றுமையை இல்லாது ஒழிப்பதுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாய் இருங்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்நபி மொழி மூலம் குரோத செயற்பாட்டை நீக்கி சகோதரத்த்வத்தை பேண வழிகாட்டுகிறது.

  • இஸ்லாம் வர்க்கம், இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை!

ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்ற இறைவிசுவாசத்தின் கோட்பாட்டின் கீழ் உள்ளடக்குகின்றன.

மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவைகள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)

இஸ்லாமிய சமூகமொன்றில் எம்மனிதனும் அவனது பணம் சொத்து அந்தஸ்து போன்றவற்றால் அளவிடப்படுவதில்லை. மாறாக அவனின் ஈமானிய தன்மை, இறைதிருப்தியின் பால் நாடி அவன் செய்யும் நற் செயல்கள் இவைகளே அவனை நினைவுகூரச் செய்கின்றன.

நபி (ஸல்) அவர்களினால் வர்க்க வேறுபாட்டுக்கு இடப்பட்ட முற்றுப்புள்ளியே வல்லரசை உருவாக்க உதவியது. ஆகவே வல்லரசை உருவாக்க எத்தனிக்கும் அரசுகள் வர்க்க வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து சகோதரத்துவத்தை ஏற்படுத்தட்டும்.

மருதமுனை நிஜா
ஹுதாயிய்யா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

மனிதன் மண்ணில் பிறக்கையிலும் அவனுள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் அவன் ஒரே தாய் வயிற்றில், ஒரே ஊரில், குறிப்பிட கால சூழ்நிலையில் பிறப்பவன் அல்ல. எனவே அவன் இன, நிற, மொழி ,வர்க்க…

மனிதன் மண்ணில் பிறக்கையிலும் அவனுள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் அவன் ஒரே தாய் வயிற்றில், ஒரே ஊரில், குறிப்பிட கால சூழ்நிலையில் பிறப்பவன் அல்ல. எனவே அவன் இன, நிற, மொழி ,வர்க்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *