சாபமா?

  • 28
என்னை நானே சபிக்கிறேன்
ஏனிந்த பிறவியின்னு
ஏழெட்டு வயசுல தெரியல
கால ஓட்டத்துல
வீட்டுல தல
புள்ளயா பொறந்திட்டன்னு
பரிதாபமா
அடுத்தவன்
சொல்லிக் காட்டுறப்போதான்
 புரியிது
பொட்ட புள்ளங்களுக்கு
அப்பனுக்கு அடுத்த
அந்தஸ்த்து
நான் தான்னு
பெத்தது
அவரு தானேன்னு
விட்டுட்டு ஒதுங்கவும்
முடியல- மூனு
தங்கச்சிங்க
முகத்த பார்த்தா
வீடு கட்டாமையும்
இருக்க முடியல
காலங் காலத்துல
கலியாணம் முடிச்சி
கொடுக்கனும்னா
அதுதான வேணும்
இங்க
பட்டம் படிச்சி
என்னத்த கிழிச்சம்
இன்னும்
நம்ம ஊரு
கலாச்சாரம் மாறலயே
கிடைக்குற
மாச சம்பளத்துக்கு
கால்வாசி
வீடு கூட கட்டலாது
யாரு செஞ்சிட்டு போன
கட்டவிழா சீதனமோ
கால சுத்திகிட்டே
இருக்கு
காலத்துக்கும்
கூட பொறந்த
ஒன்ன மட்டும்
கர சேத்துட்டு
கண்ண மூடிட்டாரு
பெத்தவரு!
மீதி இருக்குற
இரண்டுல ஒன்னுக்கு
இருந்ததெலாம்
தொடச்சி வழிச்சி
கட்டி வச்சாச்சு
இருக்குறது கைப்பொழப்பு மட்டுந்தான்
அதையும் வித்துடலாம்னு
வெளிநாடு கெழம்பி
நாலு வருசமாச்சி
வயசு முப்பதையும்
தாண்டிருச்சி
என்னோட படிச்சவனெலாம்
தகப்பனாயிட்டானுங்கனு
சேதி வரும்போது தான்
என்னை நானே சபிக்கிறேன்
கவிச்சாரல் சாரா
புத்தளம்

என்னை நானே சபிக்கிறேன் ஏனிந்த பிறவியின்னு ஏழெட்டு வயசுல தெரியல கால ஓட்டத்துல வீட்டுல தல புள்ளயா பொறந்திட்டன்னு பரிதாபமா அடுத்தவன் சொல்லிக் காட்டுறப்போதான்  புரியிது பொட்ட புள்ளங்களுக்கு அப்பனுக்கு அடுத்த அந்தஸ்த்து நான்…

என்னை நானே சபிக்கிறேன் ஏனிந்த பிறவியின்னு ஏழெட்டு வயசுல தெரியல கால ஓட்டத்துல வீட்டுல தல புள்ளயா பொறந்திட்டன்னு பரிதாபமா அடுத்தவன் சொல்லிக் காட்டுறப்போதான்  புரியிது பொட்ட புள்ளங்களுக்கு அப்பனுக்கு அடுத்த அந்தஸ்த்து நான்…

2 thoughts on “சாபமா?

  1. Thanks a bunch for sharing this with all of us you really know what you’re talking about! Bookmarked. Kindly also visit my site =). We could have a link exchange arrangement between us!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *