ஏமாற்றம் என்ற ஈன செயல்

  • 37

ஏமாற்றம் என்ற சொல் இன்று ஒர் பிரபல்யமான ஒரு சொல்லாக நம்மிடத்தில் இருந்து வருகின்றது.

இன்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு சொல்லாகவும் பெரும்பாலான மக்களின் மனதை வதைப் படுத்திய ஓர் வார்தையாகவே இன்று இது காணப்படுகிறது.

இது ஒரு பெரும் பாவத்துடைய நிழலில் உள்ள ஒரு பாதாலே சொல்லாக மட்டும் இல்லாமல் ஒரு செயலாகவும் உள்ளது.

இன்று பல வகையிலும் இந்த ஏமாற்றம் நடைப் பெருகின்றது. முதலாளி தொழிலாளியை ஏமற்றுதல், அதிபரை ஆசிரியர்களை ஏமாற்றுதல், ஊர் நிர்வாகம் பொது மக்களை ஏமாற்றுதல், கணவன் மனைவியை ஏமாற்றுதல், மனைவி கணவனை ஏமாற்றுதல், பெற்றோரை, பிள்ளைகளை ஏமாற்றுதல், போன்ற பல வகையிலும் ஏமாற்றங்கள் நடைபெறுகின்றன.

இது இன்று ஒரு நோய் போல் பரவி வருகிறது. இதனை எவ்வாறு நாம் இல்லாமல் செய்ய முடியும். இஸ்லாம் இந்த ஈன செயலை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றது என்பதை நாம் அறிய வேண்டும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

“விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்.” (அல்குர்அன் 5:1)

“நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.” (அல்குர்அன் 16:91)

வாக்குறுதிகளில் முதன்மையானது உன்னைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம் என்று நாம் அல்லாஹ்வுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியாகும். உடன்படிக்கைகளில் நாம் முதலாவது நிறைவேற்ற வேண்டியது உனது தூதருக்கு முழுமையாகக் கட்டுப்படுவோம் என்று அல்லாஹ்வுடன் செய்துள்ள உடன் படிக்கையாகும்.

“இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்.” (அல்குர்ஆன் 33:23)

“இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்”. (அல்குர்ஆன் 23:8)

“இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்”. (அல்குர்ஆன் 23:10,11)

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமல் இருப்பதுமாகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்” என்று பதிலளித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)

“உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.” (அல்குர்அன் 17:34)

இயந்திரமயமான இன்றைய உலகில் மனிதன் பிற மனிதனுக்கு கொடுத்த, கொடுக்கின்ற வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் எல்லாம் சாதாரண ஓர் அம்சமாகவே பார்க்கப்படுகின்றது, இன்று இவ்வாறு செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்பவருக்கு நான்கு நாட்கள் கழித்து போன் செய்தால் அவரை அவரது கைபேசியில் கூட தொடர்புகொள்ள முடியாத அளவு இன்று பொய்யும் ஏமாற்றமும் வாக்குறுதிகளுக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களை மீறுவதும் மலிந்து காணப்படுகின்றன. இது எப்படிப்பட்ட குற்றம் என்பதனை பின்வரும் குர்ஆனிய வசனங்கள் எமக்கு தெளிவு படுத்துகின்றன.

“விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இருக்கின்றது.” ( அல்குர்அன் 61:2,3)

இவ்வாறு இஸ்லாம் அழகாக கூறி இருக்க நாம் எதை செய்கின்றோம் என்பதனை நாம் ஒரு முறை எம்மை பரீசீலனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் ஏற்படும் விபரீதம் என்ன???

  • ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவது
  • நம்பிக்கை மோசடி செய்வது
  • மற்றவர்களைக் கேலி கிண்டலடிப்பது
  • மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பது
  • நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வது
  • மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவது
  • மற்றவர்களை நக்கலடிப்பது
  • நாம் விளையாட்டுக்கு கூட பொய் சொல்லகூடாது.
  • பொய் சொல்வதை நாம் ஊக்கப்படுத்தலாமா. அன்று மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் நாம் தவிர்த்து கொள்ளப்படவேண்டியவை என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
  • இது அற்ப இன்பத்தை தருவதாக இருந்தாலும் இதன் விளைவுகள் பலருக்கு பல விபரீதங்களைக் கொடுத்துள்ளன.
  • ஒவ்வொருவரும் புதிய முறையில் கொண்டாட விரும்பி பலரை பல வழிகளில் ஏமாற்றியும் ஏமாற்றவும் இருக்கிறார்கள். இந்த மூட பழக்கம் இன்று ஏமாற்றுவதை ஆதரிக்கிறது. சந்தோஷத்திற்கு ஆரம்பித்த பழக்கம் இன்று நமது திறமை காட்டுவதாக எண்ணி பலரை ஏமாற்ற வழி செய்யும் அளவிற்கு சீரழிந்து வருகிறது.
  • மறுமையில் இதனால் ஏற்படும் தண்டனைகளை அறிந்தால் வாழ்வில் யாரும் யாரையும் ஏமாற்ற கனவிலும் கூட நினைக்க மாட்டார்கள்.

எனவே இவ்வாறான ஈன செயல்களில் இருந்து நாம் விடுபட்டு இஸ்லாம் கூறும் நற்குணங்களை எம் வாழ்வில் எடுத்து நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

வினா: பிறரிடம் அன்பாய் இருப்பதால் காலப்போக்கில் ஏமாற்றமும், விரக்தியும் தான் வருகிறது. எனவே அன்பு அனாவசியம்தானே?

பதில் : அன்பு என்பது மற்றொருவர் சார்ந்த விஷயமல்ல. மற்றவர் மீது நாம் வைக்கும் உணர்வல்ல. நம் உணர்வுகளை இனிமையான நிலையில் நாம் வைத்திருந்தால், அது தான் அன்பு. இதை உணர்வதற்கு அடுத்தவரின் உதவி நமக்குத் தேவையில்லை. ஆனால் இன்று, அன்பென்ற ஒன்றை நாம் உணரவேண்டுமெனில், நமக்குப் பிடித்தமான ஒருவர் நமக்குத் தேவைப்படுகிறார். அவர் இருந்தால் மட்டுமே அன்பை உணர முடியும் என்ற தவறான கருத்து நம் மனதில் வந்துவிட்டது.

இதனை இல்லாமல் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே ஏமாற்றங்களை களைந்து புது வருடத்தின் முதல் அனைவருடனும் தமது பாசத்தை பகிர்ந்து ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

NAFEES NALEER
IRFANI
SEUSL

ஏமாற்றம் என்ற சொல் இன்று ஒர் பிரபல்யமான ஒரு சொல்லாக நம்மிடத்தில் இருந்து வருகின்றது. இன்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு சொல்லாகவும் பெரும்பாலான மக்களின் மனதை வதைப் படுத்திய ஓர் வார்தையாகவே இன்று இது…

ஏமாற்றம் என்ற சொல் இன்று ஒர் பிரபல்யமான ஒரு சொல்லாக நம்மிடத்தில் இருந்து வருகின்றது. இன்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு சொல்லாகவும் பெரும்பாலான மக்களின் மனதை வதைப் படுத்திய ஓர் வார்தையாகவே இன்று இது…

6 thoughts on “ஏமாற்றம் என்ற ஈன செயல்

  1. The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

  2. Together with almost everything which appears to be building within this specific subject material, all your opinions are fairly exciting. Nonetheless, I am sorry, because I can not subscribe to your whole suggestion, all be it exciting none the less. It seems to everybody that your comments are not totally validated and in reality you are your self not really thoroughly certain of the argument. In any event I did enjoy reading it.

  3. I got what you mean , regards for putting up.Woh I am thankful to find this website through google. “I was walking down the street wearing glasses when the prescription ran out.” by Steven Wright.

  4. whoah this blog is magnificent i love reading your posts. Keep up the great work! You know, lots of people are searching around for this info, you could aid them greatly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *