ஜும்மா நாளின் மகத்தான கூலிகளை நழுவ விடாதீர்கள்.

  • 7

ஜும்மா நாளன்று பள்ளிக்கு, எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலியை சூறையாட வேண்டுமா…??

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்பநேரத்திலேயே புறப்பட்டு முந்தியே(பள்ளிக்கு) வந்து, இமாமுக்குநெருக்கமாக இருந்து உரையைசெவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர்ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டுநின்று வணங்கிய கூலி உண்டு” என்றுநபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி) (நூல்: அஹ்மத், அபூ தாவூத், அத்திர்மிதி)

“இந்த ஹதீஸை விட அதிக கூலி, நன்மை தரும் நபி (ஸல்) அவர்களுக்குரிய எந்த ஒரு ஹதீஸையும் எம்மால் அறியக் கிடைக்கவில்லை” என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு கால் எட்டும் 365 நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று, விழித்திருந்து நின்று வணங்கியதற்குச் சமம். அல்லாஹ் எம்மீது கொண்டுள்ள அருள்தான் இலேசான வணக்கங்களுக்கு அதிகபட்ச கூலிகள்.

மேலும், இறைவன் இந்த சமுதாயத்தினரை மிகக்குறைந்த “அமல்” புரிந்து, மிக அதிக அளவில் நன்மைகளை அடைபவர்களாக தனித்துவம் பெறச் செய்திருக்கிறான்.

இம் மகத்தான கூலிகளை பெற, சில நிபந்தனைகள். அவையாவன:

  1. குளித்தல்.
  2. நேர காலத்துடன் பள்ளிக்குச் செல்லல்.
  3. பள்ளிக்கு நடந்து செல்லல்.
  4. இமாம் கொத்பா பிரசங்கம் செய்பவருக்கு நெருக்கமாக இருத்தல்.
  5. இமாமின் உரையை அமைதியாக இருந்து, செவிசாய்த்தல்.

அறிஞர்: ஸாலிஹ் அல் பவ்zஸான் ஹபிலஹுல்லாஹ் அவர்களின் உரையிலிருந்து.

بكل خطوة ، عمل سنة أجـر صيامها وقيامها

عـن أوس بـن أوس الثقفي يقول : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : 🔺” من غسّل يوم الجمعة واغتسل ، وبكّر وابتكر ، ومشى ولم يركب ودنـا من الإمام فاستمع ولـم يُلغِ ، كان له بكل خطوة ، عمل سنة أجـر صيامها وقيامها “🔺 📜رواه أحمد وأبو داود والترمذي

وصححه العلامة الالباني

 يقول أهـل العلم : لا نعلم حديث للنبي صلى الله عليه وسلم أكثر ثواباً من هذا الحدي
كل خطوة تعادل : أجر صيام وقيام سنة ، خطـوة واحدة تســـاوي : ( صيام وقيام 365 يوم !! )

من فضل الله علينا أن جعل لنا عبادات يسيرة لها أجور كثيرة !! واختص الله هذه الامة بأنها أمة أقل عملاً وأكثر أجراً
( بـخـمـسـة شــروط هـي ) :
❶ الاغتســـال
❷ الذهاب مبكراً للمسجد
❸ المشي إلى المسجد
❹ الإقتراب من الخطيب
❺الإستماع والإنصات للخطيب🎥 استمع للشيخ صالح الفوزان ماذا يقول عن هذا الحدي

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன் ஆமீ

ஜும்மா நாளன்று பள்ளிக்கு, எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலியை சூறையாட வேண்டுமா…?? யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்பநேரத்திலேயே புறப்பட்டு முந்தியே(பள்ளிக்கு)…

ஜும்மா நாளன்று பள்ளிக்கு, எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலியை சூறையாட வேண்டுமா…?? யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்பநேரத்திலேயே புறப்பட்டு முந்தியே(பள்ளிக்கு)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *