நானானவள்

  • 34

இந்த பிரபஞ்சத்தின்
காய்ந்து போன துகல்களை
விட்டும்
என்னை வெளியேற்றி
விடுங்கள்

இனி இந்த
பிரபஞ்சத்தின் இரத்தக் கரைகளில்
நனைந்து கொண்டு
என்னால் பயணிக்க முடியாது

நான் மட்டுமான ஒருத்தி
பொய்களை ஏற்க முடியாமல்
அநீதிகளை பொறுக்க முடியாமல்
தூரோகங்களை தாங்க முடியாமல்
தவறுகளை தட்டிக்களிக்க முடியாமல்

இன்னும் எத்தனை நாளைக்கு
இப்படியே எனதான உணர்வுகளோடு
போராடித் தொலைப்பது

சுதந்திரம் என்ற பெயர் சூட்டி
உரிமைகளை பறித்தெடுக்கும் தேசத்தில்
நானொருத்தி நீதிக்காய்
எங்கே போவது

என் முகத்திரையையும் தான்
கழற்ற சொல்வார்கள்
என் அபாயாவுக்குப் பின்னால்
நடத்தையையும் தான் விமர்சிப்பார்கள்

இன்னும்
என்னுடன் இருப்பவர்களே
என் இயல்பை புறக்கணிப்பார்கள்
சில சமயம் என்னை
காட்டியும் கொடுப்பார்கள்

இனியும் இந்த தேசத்தில்
ஒரு குரலோடு
என்ன செய்ய முடியும் என்னால்

ஏரூர் நிலாத் தோழி

இந்த பிரபஞ்சத்தின் காய்ந்து போன துகல்களை விட்டும் என்னை வெளியேற்றி விடுங்கள் இனி இந்த பிரபஞ்சத்தின் இரத்தக் கரைகளில் நனைந்து கொண்டு என்னால் பயணிக்க முடியாது நான் மட்டுமான ஒருத்தி பொய்களை ஏற்க முடியாமல்…

இந்த பிரபஞ்சத்தின் காய்ந்து போன துகல்களை விட்டும் என்னை வெளியேற்றி விடுங்கள் இனி இந்த பிரபஞ்சத்தின் இரத்தக் கரைகளில் நனைந்து கொண்டு என்னால் பயணிக்க முடியாது நான் மட்டுமான ஒருத்தி பொய்களை ஏற்க முடியாமல்…

3 thoughts on “நானானவள்

  1. Thanks for any other excellent article. The place else could anybody get that kind of info in such an ideal approach of writing? I have a presentation next week, and I’m on the search for such info.

  2. I really enjoy examining on this website, it has got good content. “The living is a species of the dead and not a very attractive one.” by Friedrich Wilhelm Nietzsche.

  3. It is the best time to make some plans for the future and it is time to be happy. I’ve read this post and if I could I want to suggest you few interesting things or suggestions. Maybe you can write next articles referring to this article. I desire to read even more things about it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *