தோழமை

  • 19

இயற்கையிலே ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அன்பு, பாசம், அக்கறை போன்றவையை ஏற்படுத்தியுள்ளான். இதனால் ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் அன்பின் மூலம் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரு மனிதன் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளை, ஆசிரியர், மாணவர்கள் என்று இன்னும் பல நிலையைக் கொண்டவனாக அன்பை பகிர்ந்து கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம்.

இது போன்ற உறவுகளில் சிலவற்றை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள், பெரியவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்ந்தெடுக்காமல் இருப்பதில்லை.

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பர்கள் வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டால் நம் முகத்தில் கவலையே பார்க்க முடியாது. சந்தோஷமாக காலத்தை கடப்பதற்கு நட்பு இங்கு தேவைப்படுகிறது.

நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது நண்பர்களிடம் தெரிவிக்கும் போது மனதில் ஏற்பட்ட பாரம் காணாமல் போய் விடுகிறது. இங்கு நட்பு என்பது கட்டடத்தை பாதுகாப்பதைப் போல உதவுகிறது. இன்னும் இது போன்று பல பயன்கள் நட்பின் மூலம் மனிதர்களுக்கு கிடைப்பதால் நபி (ஸல்) அவர்கள் நட்பு வைப்பதை நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

“உ‌ன் ந‌ண்பனை‌க் கா‌ட்டு உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி‌ச் சொ‌ல்‌கிறே‌ன்” எ‌ன்ற பொ‌ன்மொ‌ழி‌யி‌ல் இரு‌ந்தே ந‌ட்‌பி‌ன் வ‌லிமையை நா‌ம் உணரு‌கிறோ‌ம்.

பலரு‌ம் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்ல ந‌ட்பு ‌கிடை‌க்காததா‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாம‌ல் வா‌ழ்‌ந்து வருவதை க‌ண்கூடாக கா‌ண்‌கிறோ‌ம். அதே‌போல், ‌தீய ந‌ட்‌பினா‌ல் வா‌ழ்‌க்கையை இழ‌ந்து ப‌ரித‌வி‌க்கு‌ம் ‌நிலையு‌ம் உ‌ண்டு. ஆக ந‌ட்பு எ‌ன்பது எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ஸ்லா‌ம் ‌நிறைய வ‌ழிகா‌ட்டு‌கிறது. ந‌ண்ப‌ர்‌‌க‌ளை தெரிவு செய்ய வே‌ண்டிய ‌வித‌ம் ப‌ற்‌றியு‌ம் அது அழகாக‌க் க‌ற்று‌த் த‌ந்து‌ள்ளது.

எனவே ந‌பிக‌ர் நாயக‌ம் (ஸ‌ல்) கூறு‌கிறா‌ர், “ம‌னித‌ன் த‌ன்னுடைய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌‌யிலேயே செ‌ல்‌கிறா‌ன். ஆகவே யாருட‌ன் ந‌ட்பு கொ‌ண்டிரு‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.” (திர்மிதி)

“இத‌ற்கு ஒரு உதாரணமு‌ம் உ‌ண்டு, அதாவது உ‌ங்களு‌க்கு இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌க்‌கிறா‌ர்க‌ள், ஒருவ‌ர் உ‌ங்களை படி‌க்க அழை‌க்‌கிறா‌ர், ம‌ற்றொருவ‌ர் எ‌ங்கையாவது வெ‌ளியே செ‌‌ல்லலா‌ம் எ‌ன்‌கிறா‌ர். இ‌தி‌ல் உ‌ங்க‌‌ளி‌ன் உள ‌ரீ‌தியான தொட‌ர்பு யா‌ரிட‌ம் அ‌திகமாக உ‌ள்ளதோ அவருட‌ன் தா‌ன் ‌நீ‌ங்க‌ள் செ‌ல்‌‌வீ‌ர்க‌ள்.”

இதை‌த்தா‌ன் ம‌னித‌ன் த‌ன்னுடை‌ய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌யிலேயே இரு‌க்‌கிறா‌ன் எ‌ன்பத‌ன் அ‌ர்‌த்தமாகு‌ம். நமது நட்பு யாவும் நம்மை படைத்த அல்லாஹ்விற்காகவே இருக்கவேண்டும் என்று சொல்லிக்காட்டுகிறது. அப்போது நம்மை படைத்தவன் நம்மை நேசிப்பான்.

அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் விஷயத்தில் ஒருவருக் கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது.” (ஆதாரம்: அஹ்மத் 21114)

நிழலே இல்லாத நாளில் நிழல் கிடைக்கும் யாருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான்.” (ஆதாரம்: முஸ்லிம் 4655)

நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல். பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் “கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி); நூல்: புகாரி (2101))

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையைத் தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74:45)

எனவே யா‌ரிட‌ம் ந‌ட்பு கொ‌ள்‌கிறோ‌ம் எ‌ன்பது தா‌ன் ந‌ட்புற‌வி‌ல் ‌மிக‌வு‌ம் மு‌க்‌கியமாக நோ‌க்க வே‌ண்டியதாகு‌ம்.

ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம், ந‌ட்பு‌க்கு‌ம் ‌உ‌ரிய ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது இ‌ஸ்லா‌ம் க‌ற்று‌த்தரு‌ம் இ‌னிய ப‌ண்பாகு‌ம்.

நண்பர்கள் தினம் என்று தனி ஒருநாளை தெரிவு செய்து கொண்டாடுவதற்கோ வாழ்த்துக்களை சொல்வதற்கோ இஸ்லாம் சொல்லிக்காட்டவில்லை. இஸ்லாம் சொல்வதை போன்று எல்லா நாட்களிலும் மனிதர்களோடு தோழமை கொண்டு இரு உலகிலும் வெற்றி பெருவோம்.

இன்ஷா அல்லாஹ்
Faslan Hashim
Islahiyya arabic collage®
South Eastern University of Sri Lanka.
BA ®

இயற்கையிலே ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அன்பு, பாசம், அக்கறை போன்றவையை ஏற்படுத்தியுள்ளான். இதனால் ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் அன்பின் மூலம் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரு மனிதன் கணவன், மனைவி, பெற்றோர்,…

இயற்கையிலே ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அன்பு, பாசம், அக்கறை போன்றவையை ஏற்படுத்தியுள்ளான். இதனால் ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் அன்பின் மூலம் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரு மனிதன் கணவன், மனைவி, பெற்றோர்,…

2 thoughts on “தோழமை

  1. You have mentioned very interesting points! ps nice internet site. “The appearance of right oft leads us wrong.” by Horace.

  2. An attention-grabbing discussion is worth comment. I feel that it’s best to write extra on this topic, it might not be a taboo topic however generally people are not sufficient to talk on such topics. To the next. Cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *