கற்புக்களின் கனவுகள்.

  • 7

திருமணம் முடித்து பிரிந்து வாழும் கணவன், மனைவிமார்களுக்கு சமர்ப்பணம்.

கட்டுரையை வாசிக்க முன் இந்தக் கட்டுரை எவரையும் சுட்டிக்காட்டுவதற்கோ, அல்லது அனைவரினதும் நிலை இவ்வாறு என்றோ கூறவரவில்லை. சமூக நலன் கருதி விழிப்புணர்வுக்காக இதை பதிவு செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்.

“இன்று திருமணம் முடித்த எத்தனையோ குடும்பங்களை பார்த்தால் சீரழிந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.” இதற்கான காரணங்கள் பல இருந்தும் இன்றைய நடைமுறைக்கு பொருத்தமான ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

‘திருமணம் முடித்து 10 நாட்களில், 3 மாதங்களில் தொழில் காரணமாக உள் நட்டிலோ, வெளி நாட்டிலோ மனைவியை பிரிந்து சென்று வாழும் பலரை காணலாம்.’ பல வருடங்கள் காத்திருந்து இரு உள்ளங்களும் சேர்ந்த பின் இவ்வாறு பிரிந்து வாழ்தல் என்பது பொருத்தமற்றதாகவே இருக்கிறது. இருவரும் மனதுக்கு ஆறுதலையும் அன்பினையும் கொடுத்து அழகான, ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டியது என்றாலும் சூழ்நிலை பலருடையே வாழ்க்கையை மாற்றுதல் விதிவிலக்கான ஒரு விடயமே.

“வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்கள்”

தீய காரியங்களால் ஷைத்தானின் தூண்டுதலுக்கு துணை போகின்றார்கள். அவற்றையெல்லாம் பட்டியல் போடுவதற்காக நான் இதை கூறவரவில்லை. மாறாக சொந்த ஊரில் சொந்த நாட்டில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு சென்ற பிறகு இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவ்வாறே இன்று பல ஆண்கள் இருக்கிறார்கள். அனைவரும் தவறு செய்கிறார்கள் என்று கூறவில்லை. ஒரு வேளை பதிவிடும் நான் அல்லது என் குடும்பத்தாரும் வெளிநாடு போகவேண்டி ஏற்படும் சிலர் போய் இருக்கலாம். என்றாலும் இதனை ஒரு விழிப்புணர்வுக்கே பதிவிடுகிறேன்.

‘வெளி நாட்டிலோ, உள்நாட்டிலோ’ மனைவியை விட்டு வசிக்கும் ஒருவன் தனிமை என்னும் சோதனையை சந்தித்தே ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பமே மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய ஒன்றாகும். இந்த இக்கட்டான சூழலே அவனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக மாறும். தகாத உறவுகளை வைத்துக்கொள்வதால் எவ்வளவு பெரிய நஷ்டத்தை சம்பாதிப்பான் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.

பெற்றோர்கள் மற்றும் மனைவி மக்களுக்காக குடும்ப கஷ்டத்தை நீக்கிட ஊரைவிட்டு, நாட்டை விட்டு சென்றுள்ளோர் கற்ப்பொழுக்கத்தை கடை பிடிப்பது கட்டாயமாகும். அதை மீறினால் மார்க்கத்தின் அடிப்படையில் பாவியாளனாக கருதப்படுவோம்.

அதேபோல் பெற்றோருக்கும் நமக்காக தியாகத்தோடு காத்திருக்கும் மனைவிக்கும் துரோகம் செய்வதை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். இதனை முறையாக பேணி நடப்பது யாருக்கெல்லாம் சிரமமோ அவர் திருமணம் ஆனவரா? மனைவியை உடன் அழைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பொருளாதார வசதி இல்லையா? திருமணமானவராக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் ஆகாதவராக இருந்தாலும் சரி இது போன்றதோர் வாழ்க்கையை தூர தள்ளிவிட்டு மாற்று வழிகளை தேடுங்கள். உண்மையாக உழைத்தால் எங்குவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.

“நிச்சயமாக உணவு வழங்குபவன் அந்த ஏக இறைவனாகும். நாம் எங்கே இருந்தாலும் நமக்கு அவன் உணவு (ரிஸ்க்) வழங்குவான். இன்ஷா அல்லாஹ்”

அது மாத்திரமா கணவனை விட்டு பிரிந்த மனைவியின் ஏக்கங்கள் பல கடல் தாண்டி சென்றவனே..!!! உனக்காக நாட்களை எண்ணிக்கொண்டு வாழ்கிறேன். எனக்காக நீ வருவாய் என்று.

என்னை நோக்கும் பலரின் பார்வைக்கு இறையாகமல் உன்னை மட்டும் மூச்சாக எண்ணி என்னை பாதுகாத்து வாழ்கிறேன் . நான் என்னவனுக்கு மட்டும் சொந்தம் என்று. உனது அரவணைப்பு, உனது வருடல், உனது அன்புக்காக துடிக்கிறேன். என்னவனே…!

“நபி (ஸல்) அவர்கள்” ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வந்த பின் ஆயீஷா(ரழி) கூறினார்களே “யாரஸூலல்லாஹ் 30 நாட்களையும் எண்ணிக்கொண்டு இருந்தேன். உங்கள் வருகைக்காக இது அந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. அவ்வாறே ஒவ்வொரு பெண்ணினதும் ஏக்கம்.

இந்த காலத்தில்

நான் பார்த்த காலாண்டரை கேட்டு பார் உனக்காக நான் காத்திருந்ததை சொல்லும்,
எனது தலையனையை கேட்டுப்பார்,
நான் வடித்த கண்ணீரை சொல்லும்,
எனது தொலைபேசியிடம் கேட்டுப்பார் அழைப்பிற்காக காத்திருந்த நிமிடங்களை சொல்லும்
என்னவனே!!

என்ற புலம்பல்களை காணலாம்

அது மட்டுமா….? அல்லாஹவின் அச்சம் இல்லாவிடின், உன் மேல் இருக்கும் அன்பு மிகைக்காவிடின் நீ இருக்கும் இடத்தில் இன்னொரு ஆடவனை தேடி இருப்பேன். என்று இறையச்சம் உள்ள பெண் இவ்வாறு கூறுவாள். ஆனால் இதற்கு மாற்றமாக நடப்பவர்களின் செயல்களை வர்ணிக்க தேவையில்லை. என்று நினைக்கிறேன். இன்று சர்வ சாதாரணமாக நடக்கின்றதை காண்கிறோம். இவ்வாறே ஒவ்வொரு மனைவியின் ஏக்கம்.

எனவே வெளிநாட்டு பயணம் தவிர்க்க முடியாவிடினும் பெண்களின் இயல்பை அறிந்து தனியே இருக்க விடாமலும் , தொலைபேசியில் அதிகமாக கதைத்துக்கொண்டும் இருங்கள். அது சில சமயம் அன்பை கூட்டி பாதுகாக்கும் அறணாக மாறலாம். இன்ஷா அல்லாஹ் எனவே இறுதியாக கணவன், மனைவிக்குமான ஒரு சில வார்த்தைகள்.

இஸ்லாமிய சகோதரிகளே!

தனது கரம் பிடித்தவரே உனக்கான படைப்பாக அல்லாஹ் படைத்தான் அதை ஏற்றுக்கொண்டு தனது கணவனின் கரத்தை மாத்திரம் தனது சொந்தமாக நினைப்பாயாக. தனது அழகு என்னவனுக்கு மட்டும் சொந்தம் என்பதை மறந்து விடாதே.

அன்பான சகோதரர்களே!

உன்னை நம்பி வந்திருக்கிறாள், உனக்காகவே பெறும் கஷ்டத்தையை சுமக்கிறாள் இவ்வாறு இருக்கையில் நீ ஏன் மற்ற பெண்களை பார்க்கிறாய் இந்த நொடியிலிருந்து முடிவெடு சகோதரா உன் பார்வை உன் மனைவிக்கு மாத்திரமே.

உன்னவளைக் காப்பது உன் கடமை
உன்னவளுக்கு உண்மையாய் இரு
உன்னவளொன்றே உலகமென்றிரு!.
ஊரவள் ஒதுங்கி விடுவாள்.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

திருமணம் முடித்து பிரிந்து வாழும் கணவன், மனைவிமார்களுக்கு சமர்ப்பணம். கட்டுரையை வாசிக்க முன் இந்தக் கட்டுரை எவரையும் சுட்டிக்காட்டுவதற்கோ, அல்லது அனைவரினதும் நிலை இவ்வாறு என்றோ கூறவரவில்லை. சமூக நலன் கருதி விழிப்புணர்வுக்காக இதை…

திருமணம் முடித்து பிரிந்து வாழும் கணவன், மனைவிமார்களுக்கு சமர்ப்பணம். கட்டுரையை வாசிக்க முன் இந்தக் கட்டுரை எவரையும் சுட்டிக்காட்டுவதற்கோ, அல்லது அனைவரினதும் நிலை இவ்வாறு என்றோ கூறவரவில்லை. சமூக நலன் கருதி விழிப்புணர்வுக்காக இதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *