பேருந்து பயணம்

  • 19

விடியற்காலை வேளை
விரைந்தோடும் நேரம்
தூரப்பயணம் அது
ஜன்னல் ஓரத்தில் நான்

குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து
மூக்கினை துளைத்து செல்கிறது
இருக்கையெல்லாம் நிறைந்திருக்க
என் இணையர்களும்
அருகருகே அமர்ந்திருக்க
துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது
பேருந்து பயணம்

செல்லும் வழியிலே
தண்டவாளம் ஒன்று தனியே
அழுது கொண்டிருக்கிறது
தாலாட்ட யாருமில்லையென்று

துணைக்கு நான் வரவா
மனம் கேட்க தோனியது
தேவை ஒன்றிருந்தால்தானே
தேடி வருவாய் என்று
உள்ளுக்குள் சினுங்கியது தண்டவாளம்

வெட்டி விட்ட நீரோடையில்
நீந்த மறந்த மீனாய்
துடி துடித்து போனது இதயம்
தேவைக்காய் பழகுபவன் நானில்லையென்று

துடைத்து விட்டு கண்ணீரை
நகர்ந்து செல்கிறேன்
தொலைதூர பயணம் அது
வலிகளின் விளிம்பில்
பிறந்ததால் என்னவோ
அன்பு என்ற அடைக்கலம்
தேடி நகர்ந்து கொண்டிருக்கிறேன்

அனுகவி றிப்கான்
அட்டாளைச்சேனை-06

விடியற்காலை வேளை விரைந்தோடும் நேரம் தூரப்பயணம் அது ஜன்னல் ஓரத்தில் நான் குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து மூக்கினை துளைத்து செல்கிறது இருக்கையெல்லாம் நிறைந்திருக்க என் இணையர்களும் அருகருகே அமர்ந்திருக்க துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *