ரமழான் மாற்றத்தின் மாதம்.

0 Comments

ரமழான் வந்துவிட்டது. ரமழான் மாதம் என்பது மாற்றத்தின் மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு விசேட அம்சங்கள் இருந்தாலும் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது மாற்றமாகும். மாற்றம் எனும்போது, இங்கே தனி மனித மாற்றம், குடும்ப மாற்றம், சமூக மாற்றம் போன்ற சகலதும் இதிலே உள்ளடங்குகின்றது. இலங்கையைப் பொருத்தவரையில் கடந்த பல வருடங்களாக ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு அசம்பாவிதங்களும் அனர்த்தங்களும் ஏற்படுவதை நாம் கண்டு வருகின்றோம். பலரும் இதனை பல்வேறு கோணங்களில் நோக்குகிறார்கள். […]

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 09

0 Comments

மீரா அருகில் வந்தபோது தான் தெரிந்தது… அவள் ஒன்றும் பயத்தில் கத்திக்கொண்டு வரவில்லை. மோப்பம் பிடிப்பதற்காக போலீசார் கொண்டுவந்த இவர்களின் பைகளை விட்டுச்சென்றுள்ளார்கள். அதனை காட்டில் கண்டதும் கொண்ட ஆனந்தத்தில் தான் கத்திக்கொண்டு வந்தாள் என்பது. “உஃப்…. இங்க பார்த்தியா நான் என்ன கொண்டு வந்து இருக்கேன்னு.. நம்ம பேக்ஸ்… காட்டுக்குள்ள கிடந்தது…”என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் மீரா. “இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?…”என்றான் ஆர்தர். பையை திறந்து தன்னுடைய போனை எடுத்து மீரா “உன்னை ரொம்ப மிஸ் […]

தீவிரவாதத்திற்கு மதமில்லை. சிங்கள, முஸ்லிம் பெயர்தாங்கிகளில் எவர் செய்தாலும் தீவிரவாதம்தான்

0 Comments

இலங்கைய ஊடகங்களில் இவ்வாறு ஒரு பேச்சு வழக்கு உள்ளது… அதாவது அலுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன, நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கல்வீச்சு, தீ வைப்பு போன்றவற்றை மேற்கொண்டவர்கள் சிறு குழுவாம் (සුලු පිරිසක්) ஆனால் இலங்கையில் 21ம் திகதி 8 இடங்களில் இடம் பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு,  கிழக்கில் நேரடி மோதல் என்பன தீவிரவாத (ට්‍ර්ස්ටවාත) தாக்குதலாம். தீவிரவாதம் என்பது பொதுமக்கள் தமது கடமைகளை செய்யும் போது அவர்கள் மீது ஏதாவது ஒரு குழு […]

சாளரம் சுவர் சஞ்சிகை ஆசிரியரிடமிருந்து…

0 Comments

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் வெளியீட்டு குழுவானது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாளர சுவர் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றது. 2017/2018 ஆம் கல்வி ஆண்டிற்குரிய இம்முதலாவது சுவர்ச்சஞ்சிகை முதல் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் சஞ்சிகைகள் ஊடாக உங்களோடு தொடர்ந்து பயணிக்க காத்திருக்கின்றோம். அந்த வகையில்¸ சாளரம் சுவர்ச்சஞ்சிகையில் வெளியீட்டுக் குழு சார்பாக ஆசிரியர் உரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இச்சஞ்சிகையானது மாணவர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் முகமாகவும் அவர்களின் திறமைக்கும் ஆற்றலுக்கும் […]

நீர்கொழும்பில் பதட்ட நிலை. ஊரடங்கு சட்டமும் அமுல்..

0 Comments

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளுக்கும் சில கடைகளுக்கும் சேதம் விளைவிக்க பட்டுள்ளது. தற்போது  சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்துள்ள நிலையில் பிரச்சினையை கட்டுப்படுத்த பேச்சு வார்த்தைகளும் இடம்பெறுவதாக தெரிய வருகிறது. அத்துடன் நீர் கொழும்பில் காலை 7 மணி வரை போலீஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது. அங்குள்ள முஸ்லிம்களும் அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கருகில், பெருமளவில் கூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் […]

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 08

0 Comments

மீராவும் ஆர்தரும் போலீசுக்கு முதலே ஆற்றோரத்தை அடைந்தனர். அங்கு ஜெனியும் கில்கமேஷ்ஷும் பேசிக்கொண்டிருக்க அவசர அவசரமாக மூச்சு வாங்க அவர்கள் முன்னாடி போய் நின்றனர். “ஜென்… ஜெனி… போலீஸ் காட்டுக்குள்ள வந்திருக்காங்க…. மோப்ப நாயையும் கூட்டிகிட்டு வந்து இருக்காங்க..” என ஆர்தர் சொல்ல ஜெனி பயத்தில் எழும்பிவிட்டாள். “என்ன சொல்றே… இப்போ என்ன பண்ணுறது….” “எப்படியும் அவங்க கொஞ்ச நேரத்தில் இந்த இடத்துக்கு வந்திடுவாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்மள கண்டுபிடிக்க நம்ம பேக் எல்லாம் […]

பகிடிவதைக்கு மாற்றீடான வழிகாட்டல்கள்

0 Comments

வானத்தின் நட்சத்திரங்களாய் மின்னி பூமியிலே பூத்துக் குலுங்கும் பூக்களாய் பல்கலையில் உங்கள் இதழ்களைப் பரப்ப ஜுனியர்ஸ்களே அன்புடன் வருக! பகிடிவதை என்கிறார்கள் ஆனால் பகிடிவதையல்ல நாளைய தலைவர்களுக்கான வழிகாட்டல்கள் – அது இது தான் நீங்கள் கூறும் பகிடிவதையா? பல்கலைக்கழக மதில் பல்கலையும் கற்றுத் தந்து படிப்பும் சொல்லித் தந்து ஒழுக்க சீலர்களாய் மாற்றும் களம் அது புத்தகத்தைத் திறக்க வைப்போம் நாம் புத்தாக்க அறிவைப் பெருக்கிடவே நல்வழி நடந்திடவே நல்லதையே கூறிடுவோம் விதைத்திடுவோம் விதையை ஒற்றுமை […]

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 07

0 Comments

விடிந்தது….. முதலில் விழித்து கொண்ட ஆர்தர் நீண்ட சோம்பல் முறிவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான்…. “ஆஹ்ஹ்…ஜெனி மீரா… எழும்புங்க… சீக்கிரம்”என அலறினான். “என்னாச்சு… ஏன் இப்படி கத்துறே?” என கேட்டுக்கொண்டே இருவரும் விழித்து கொண்டனர். ஆர்தர் இருவரிடமும் கில்கமேஷ் படுத்து கொண்டிருந்த மரத்தை காட்டினான். “என்ன????” “அவன்… எங்க… எங்க போய்ட்டான்…” என ஜெனியும் பதறிப்போனாள். “போச்சு போ… அவன் நம்மள ஏமாத்திட்டு ஓடிட்டான்….. எல்லாம் போச்சு.. இப்போ எப்படி இங்கிருந்து இறங்குறது…??” ஜெனிக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது.. […]

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 06

0 Comments

“இப்போ என்ன சொல்றது . உண்மையெல்லாம் சொன்னா இவரு என்ன ஆவாரு…? ஒரு வேளை கோபப்பட்டு நம்மள ஏதும் பண்ணிட்டா…”என மீரா இழுக்க “இல்ல இல்ல நாம அவருக்கு உண்மையான விஷயத்தை புரியவைப்போம். ஆனா இப்போ இல்ல. “என்ன சொல்ற ஜெனி!”என ஆர்தர் கேட்டான். “முதலில் நாம இந்த திருட்டு கேஸில் இருந்து வெளியே வரணும். அதுக்கு நமக்கு அந்த எவிடென்ஸ் வேணும்…” சோ… அதனால மியூசியத்துக்குள்ள போய் செல்போனை எடுக்கிற பொறுப்பை நாம கில்கமேஷ் கிட்ட […]