போர்வையில் நாளை ஜும்ஆ தொழுகை இடம்பெறாது

0 Comments

போர்வை முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித்தில் 25.04.2019ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் நாளை 26.04.2019ம் திகதி ஜும்ஆ தொழுகை நடாத்தாப்பட மாட்டாது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு நோக்கம் கருதி அடிக்கடி உங்கள் வீட்டுச் சூழலை பரிசோதித்துக்கொள்ளுமாறும், பெ​ண்களுக்கு அகுறஸ்ஸ, போரதோட்ட போன்ற பிரதேசங்களுக்கு தனியாக செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு போர்வை முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. “ஸியாரம் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான […]

இலங்கையில் குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் தொழிற்சாலை

0 Comments

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு தேவையான அனைத்துவெடிகுண்டுகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பிரித்தானிய ஊடகம் Daily Mail தகவல் வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு இந்தத் தொழிற்சாலை சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்தனர். தாக்குதலுக்கு பிரதான திட்டங்களை தீட்டிய இன்ஷாப் அஹமட் கண்டி பிரதேசத்தில் பிறந்துள்ளார். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுள்ளார் என அவரது மனைவியின் சகோதரர் அக்ஷான் […]

இலங்கை பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்களின் படங்களை ISIS வெளியிட்டது

0 Comments

இலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஏறக்குறைய குண்டுவெடிப்பு நிகழ்ந்து 48 மணிநேரத்திற்கி பின்னர் ISIS அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலைதாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக தற்போது சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.  321 பேர் கொல்லப்பட்ட இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய எட்டு குண்டுத்தாக்குதல்தாரிகளின் புகைப்படமொன்றை ISIS செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.  பயங்கரவாத தாக்குதல்களுக்கு சற்று முன்னதாக IS கொடிக்கு முன்னால் புகைப்படம் எடுக்கப்பட்டதாக அந்த குழுவின் […]

இலங்கை தற்கொலை குண்டுத்தல்களை ISIS பொறுப்பேற்றது

0 Comments

இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான வெடிகுண்டு தாக்குதல்களுக்கு Islamic state என அழைக்கப்படும் ISIS அமைப்பு அவர்களின் AMAQ news agency மூலம்   உரிமை  கோரி உள்ளதாக    ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 321 பேர் உயிரிழந்த, 500 பேர் காயமடைந்த இந்த தாக்குதல்களுக்கு ISIS  உரிமை கோரியுள்ள நிலையில், அந்த அமைப்பு அதற்கான  எந்த வித சாட்சியஙகளையும் முன் வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

தொடர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி பற்றிய தகவல்கள்

0 Comments

தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.   நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 […]

அரச பாடசாலைகள் அனைத்தும் 29ம் திகதி மீண்டும் திறக்கப்படும்

0 Comments

அரச பாடசாலைகள் அனைத்தும் (Government & Semi Government)   இன்னும் ஒரு வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரச பாடசாலைகள் அனைத்தும் இம்மாதம் 29 ஆம் திகதி திங்கள் கிழமை அன்று 2ம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக  ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

பொய் பிரச்சாரம் செய்யும் மக்களுக் கெதிராக SLTJ யின் ஊடக அறிக்கை…

0 Comments

நேற்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட (8) எட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு 500 மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இன மத வேற்பாடுகளுக்கு அப்பால் இலங்கை வாழ் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த படு மோசமான செயலை நினைக்கும் போதே இரத்த கண்ணீர் வடிக்கும் அளவுக்கு வேதனை அளிக்கிறது. மனித நேயத்தை கடுகளவும் விரும்பும் எவரும் இந்த செயலை ஆதரிக்கமாட்டார்கள். ஶ்ரீ லங்கா தவ்ஹீத் […]

ராஜித வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்

0 Comments

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்று தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களை உள்ளடக்கி தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு […]

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள் ACJU வேண்டுகோள்

0 Comments

2019.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஒர் உயிரைக் கொலை செய்தாலும் அது முழு மனித சமூகத்தையும் கொலைசெய்யும் குற்றமாகும் என்று கூறுகின்ற இஸ்லாம் இத்தகைய மிருகத்தனமான தீவரவாதச் செயலுக்கு ஒரு போதும் துணைபோகாது. இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுவோருக்கும் இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதுடன் இது தீவரவாதச் செயலாகும். தீவரவாதத்துக்கும் மதம் இல்லை […]