துயில்

රු2,100.00

  1. Type : நாவல்
  2. Author : எஸ். ராமகிருஷ்ணன்

3 in stock

  Ask a Question
Category:

Description

  1. தமிழ் வாசகத் தளத்திற்கு நல்ல நாவல்கள் அபூர்வமாகவே வெளிவருகின்றன. இருண்மை, புரியாமொழி, கட்டுரைத்தனம், எனக் கதையின்றி வரும் நாவல்கள் வாசகரைச் சித்ரவதை செய்கின்றன.

வாழ்க்கையைப்பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நாவல்கள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தக் களேபரங்களிலிருந்து விலகி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், நோயாளிகளின் வாழ்வையும் முன்வைத்துச் சமூகத்திற்கு யதார்த்தமான நற்செய்திகளைச் சொல்லும் நாவலாய் எஸ்.ராவின் துயில் வெளிவந்துள்ளது.

580+ பக்கங்களுக்கும் மேலிருந்தாலும் நாவல் படிக்க விறுவிறுப்பாகச் செல்கிறது,
வாழ்க்கை எப்போதும் அவலங்களையும், ஆரவாரங்களையும், அபத்தங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. இளகிய மனங்களும் இரக்கமற்ற கல்நெஞ்ங்களும் இணைந்தே ஒருவரோடொருவர் ஒட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாயநடையும் மந்திரச் சொற்களுமாய் யதார்த்த வாழ்வை எழுதிவரும் எஸ்.ரா. இந்த நாவல் யாவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்விதத்தில் வெற்றிகரமாகப் படைத்துள்ளார்.

கதையைச் சொல்லும்போதே பலகிளைக்கதைகள் மாதிரி இயற்கை பற்றியும், சுற்றுச் சூழல்கள் பற்றியும், தத்துவங்கள் மதங்கள் பற்றியும் உள்ள அனைத்திலும் எஸ்.ரா. தனது ஒளியைப் பாய்ச்சிப் பயணிக்கிறார். இவை வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. துயரங்கள் பேரலைகளாய் எழும்போது நாவலை வாசிக்கின்ற நாமும் ஒருவிதக் கொந்தளிப்பான மனநிலைக்கு ஆளாகிவிடுகிறோம்.

நோய் தான் நாவலின் முக்கியக் கருப்பொருள், நோயாளிகளைப் பற்றி இதற்கு முன்பு யாரும் இவ்வளவு நுட்பமாக எழுதியதேயில்லை.

Additional information

Weight .2 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “துயில்”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: