நாங்கள் ஏழைகள்

0 Comments

விடுதலை கிடைக்குமா விடையறியா எங்கள் வாழ்வில் அன்றாடம் அலைந்தால்தான் அடுப்பும் எரியும் விதியே இதுதானா தலைவிதி வயிறு கொதிக்கிறது உலை வைக்க அரிசியில்லை வெளியிறங்கி பிச்சை எடுக்கவும் ஊரெல்லாம் ஊரடங்கு உத்தரவு கொரோனாவே நாங்கள் இருக்கிறோம் உன் வாழ்வை எங்களில் வாழ்ந்து விடு தினம் தினம் நடைபிணமாய் அலைவதை உன் காலடியில் சரணடைகிறோம் கொரோனாவால் இறந்தோம் என்ற அடைமொழியாவது கிடைக்கட்டும் ஏழை என்ற வார்த்தை இனியாவது மடியட்டும் கூலித்தொழில் செய்தால்தானே கூழாவது குடிக்க முடியும் கூண்டுக்கிளியாய் நாங்கள் […]

கொரோனாவே கொல்லாதே

0 Comments

கண்காணாக் தேசத்தில் உதித்த அரக்கனே… கண்ணீர்த்துளிகளை இரக்கமின்றி நொடிக்குக் நொடி குடிப்பவனே.. எதற்காக எம்மத்தியில் நுழைந்தீரோ எதை அடைவதற்கு நீ உருப்பெற்றாயோ விடையறியா எங்கள் வாழ்வில் வழியனுப்ப வந்தவன் நீதானா தூங்காமலே அழுகிறது உலகம் துயரிலே மூழ்கிக்கிடக்கிறது மானிட தேசம் தூய்மை பேண மறந்த நவீன தேசத்தை தூசி தட்டி நினைவு படுத்த வந்தாயா உறவுகளின் மகிமையை உணர்த்த வந்தாயா பழமை வாழ்வை மீட்டல் செய்ய வந்தாயா இயந்திர உலகின் தலைக்கனத்தில் மிதந்த எங்களுக்கு ஓய்வு கொடுக்க […]

கண்ணிலே வைத்து பெண்மையை போற்று

0 Comments

விடியாத இரவுகள் விழிகளுக்கு தூரம்தான் தோன்றாத காட்சிகள் கற்பனைக்கு தூரம்தான்… முற்றாத முதிரைக்கு தோற்றத்தில் விலையில்லை முற்றிய கன்னிப்பெண்ணுக்கு முகவரிக்கு முதலீடு தொல்லை… வீராப்பு பேசிடும் ஆண்மகனே விலைகொடுத்து வாங்குவதற்கு பெண்மை என்ன விலைகொடுத்து வாங்கும் சந்தைப்பொருளா ஆடை விலகிடுகையில் அலங்கரிக்கும் உன்விழிகள் அழகாத்தான் தோன்றுகிறது அடுத்த உன் சந்ததிகள் கட்டிய மனைவிதானே கக்குவதெல்லாம் கேட்டுதான் ஆகனும் கண்டபடி கசக்கி பிழியும் கதாபாத்திரத்தின் நாயகத்தலைவனே அடக்கியாண்டது போதும் சிறகையுடைத்து சித்திரவதை செய்தது போதும் சுதந்திர பறவைகளாய் பறந்திடட்டும் […]

நீ வந்து போன வாசனை நெஞ்சோடு

0 Comments

இமைக்காது விழித்தேன் – நான் இரவுகளை தொலைத்தே பேசாது மௌனித்தேன் – நான் கெஞ்சல்களை ரசிச்தே இரவல்கள் வாங்கினேன் – நான் இதயத்தை தொலைத்தே நூலகம் மறந்தேன் – நான் அவள் நூலியிடை ரசித்தே கருமேகம் சந்திப்பில் – நான் கார்கூந்தல் ரசித்தேன் விண்மீனை விலைபேசி – நான் அவள் கரும்புள்ளி மச்சங்கள் ரசித்தேன் நதிசேரும் பாலமாய் – நான் அவள் விழியிமை ரசித்தேன் பிரமிடுகளின் அதிர்வில் – நான் முன்கோபுரங்களின் அழகை ரசித்தேன் ஒவ்வொரு பக்கமாய் […]

மின்னலின் வெட்கம் நீ

0 Comments

தென்றலாய் நுழைந்தாய் இதயத்தின் வாசலில் தெரிசம் நிறைந்த ஏகாந்தம் சூழ்ந்த வாழ்வில் நீ பௌர்ணமி நிலவாய் ஒளியூட்டி நகர்ந்தாய்… அதரத்தால் வழியே சிறுபுன்னகை செய்தே சிறைப்பிடித்து சென்றாய் அகிலம் நீயேன அடம்பிடித்துக் கொண்டிருந்தேன் அக்கறை மிகுந்ததில்… அனவரதம் உன்னைக்காண விழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன் அடலை சூழ்ந்தபோதும் பேதை உன்னை மறந்திட தெரியவில்லை ஆழ்மனதிற்கு… ஆகாரம் தேடி அழுதிடும் மழலைப்போல உகிர் சுவைத்து உமிழ்தலின் போது பேரழகி நீயே… மடந்தை வயதில் வங்கணம் நுழைந்ததில் தையல் உன்னை தைத்திட்டேன் […]

புன்னகை வேலி

0 Comments

தோட்டாக்களின் சத்தத்தில் தொலைந்து போனது என் புன்னகை தேசம் தேடுகிறேன் இணையத்தில் இன்று உதடுகள் எல்லாமே ஊமையாகி விட்டது உதிரம் எல்லாம் உறைந்து விட்டது கண்ணீர் எல்லாம் வற்றி விட்டது சொந்தம் இன்றி அநாதையாகி விட்டேன் பூங்காவனம் என்று என் தாய்ப்பூமியை நம்பியதிற்கு தலைத்தெறிக்க சிதற ஓடக் கண்டேன் இதுதானா என் தேசம் என்று உள்ளுக்குள் பேசிக்கொள்கிறேன் யாரோ தவற விட்ட பித்தளை பாத்திரத்தோடு இன்று முள்வேலிக்குள் கைதியாய் நான் இதுதான் என் அரண்மனையோ என் தேசத்தின் […]

தனித்தீவில் நான்

0 Comments

விடியல் இல்லாத தீவு தென்றல் நுழைந்திடாத குடிசை எதிரியுமில்லை எதிரிலும் யாருமில்லை பாசம் என்ற பெயரில் பாசாங்கு காட்டும் உறவுகளும் தேவையில்லை தனித்தீவில் தனிமையில் நீந்திட போகிறேன் உன்னோடு அல்ல உன் நினைவுகளோடு பாசத்தை உன்னிடம் படித்த பாவத்திற்கு கருசுமந்தவளோடு தோள் சாய்ந்ததில்லை கருவிழியில் உன்னை சுமந்திருக்கிறேன் பாசம் என்ற அடைமொழியை கற்ற பாவத்திற்கு உன்னிடம் தாயவள் மார்பில் தூங்கியதில்லை என்றாலும்- இதயத்தை உன்னோடு வைத்து தூங்கிய பழகிய பாவத்திற்கு தவிப்புகளின் நீந்துகிறேன் தினம் கண்ணீர் விட […]

நினைவுகளில் வாழ்கிறாய் நீ

0 Comments

தடுக்கி விழும் போது எல்லாம் தாய்மடியாய் தனியிடம் கொடுத்து தாங்கி பிடித்திட்டாய் தனிமையில் தவிக்கிறேன் உன் துணையின்றி தடுமாறி தடம் புரள்கிறேன் நானடி நிலவு இன்றி கதிரொளியும் சுழன்றிடுமா நீ இன்றி என் நிழலும் வாழ்ந்திடுமா நிதர்சனம் தெரிந்து கொண்ட பின்னும் நீ குறைகுடமாய் தளும்புவது ஏனடி வெற்றுப்பாத்திரமாய் கரல் படிந்து  கிடந்த என்னுள்ளத்தில் சில்லறையாய் வீசி விட்டாய் உன் அன்பினை பொங்கி நிறைகிறது ஏக்கங்கள் என்னுள் உன் நினைவுகளின் கோட்டைக்குள் தனிமையில் நான் வந்து விடு […]

பேருந்து பயணம்

0 Comments

விடியற்காலை வேளை விரைந்தோடும் நேரம் தூரப்பயணம் அது ஜன்னல் ஓரத்தில் நான் குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து மூக்கினை துளைத்து செல்கிறது இருக்கையெல்லாம் நிறைந்திருக்க என் இணையர்களும் அருகருகே அமர்ந்திருக்க துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது பேருந்து பயணம் செல்லும் வழியிலே தண்டவாளம் ஒன்று தனியே அழுது கொண்டிருக்கிறது தாலாட்ட யாருமில்லையென்று துணைக்கு நான் வரவா மனம் கேட்க தோனியது தேவை ஒன்றிருந்தால்தானே தேடி வருவாய் என்று உள்ளுக்குள் சினுங்கியது தண்டவாளம் வெட்டி விட்ட நீரோடையில் நீந்த மறந்த […]