மனித நேயம் கொண்டு பார்ப்போம்

0 Comments

ஒரு வீட்டு வாசலில் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் வந்து நிற்கின்றார். அவரைப் பார்த்து முகம் சுழித்த மகன் தன் தந்தையை நோக்கி, “குப்பைக்காரர் வந்திருக்கின்றார்” என்று கூறினான். அதற்குத் தந்தை மிக நிதானத்தோடும் உறுதியோடும், “இல்லை மகன். நாம்தான் குப்பைக்குச் சொந்தமானவர்கள்; அசுத்தமாக்குபவர்கள். அவரோ சுத்தம் செய்பவர். எமக்கு உதவுவதற்காக வருகை தந்துள்ளார்” என்று கூறினார். எவ்வளவு அழகான, ஆழமான, பண்பாடும் ஒழுக்கமும் உள்ள பிள்ளை வளர்ப்பு. எந்தவொரு மனிதனும், தன்னுடைய நிறம், குடும்பம், பிறப்பிடம், […]

பெண் எனும் பெரும் அமானிதம்

0 Comments

பிள்ளைகள் வளர்ப்பது கடினம்தான். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்த்துக் காப்பது மிகக் கடினமானது. நுட்பமானது கொஞ்சம் சறுக்கினாலும் முடிவு விபரீதமாகும். பெண் ஓர் அத்தியாயத்தின் ஆணிவேர். வெளியில் நடமாடும் போது பெண் பிள்ளைகளின் ஆடைகளைக் கவனியுங்கள் ; நடவடிக்கைகளைப் பாருங்கள். ஆடையென்பது விருந்தல்லஅது பெண்களுக்கான தடுப்பு வேலி. வேலி எந்தளவுக்கு வலுவானதோ அந்தளவுக்கு பாதுகாப்பானது. வீட்டிலிருப்போர் மஹ்ரமான ஆண்களாக இருந்தாலும் நினைத்த மாதிரியான ஆடைகளில் பெண்கள் இருக்க முடியாது. வரம்புகள் உள்ளன. சொல்லிக் கொடுங்கள். இல்லையேல் விரும்பத்தகாத […]

அல் ஷேக் அஹ்மத் ஷபீஃ பின் பரகத் அலி அல் பன்காலி

0 Comments

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞர். கடந்த 18-9-2020 வெள்ளிக்கிழமை தனது 104 வயதில் தலைநகர் டாக்காவில் இறையடிசேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 1916 ஆம் ஆண்டு பங்களாதேஷ் கிராமமொன்றில் பிறந்தார். தன் ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தின் அருகிலுள்ள பாடசாலைகளில் பயின்றார். சிறு வயது முதல் மார்க்கக் கல்வியில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் வேகமாகவே கற்றுக்கொண்டார். பின் பங்களாதேஷின் சிட்டகோங் நகரில் உள்ள பிரபலமான மிகப்பெரும் தனியார் பல்கலைக் கழகமான […]

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை

0 Comments

உயிர் மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அமானிதம். அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தினால் அடையாளம் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய ஐந்து விடயங்களுல் உயிரும் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தனது உயிரையும் பிறர் உயிரையும் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கின்றான். உயிர்களை எக்காரணத்துக்காகவும் சேதப்படுத்தவோ மாய்த்துக்கொள்ளவோ மனிதனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அவ்வாறு தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலையானது மிகப்பெரும் பாவமாகவே மார்க்கத்தில் கருதப்படுகின்றது. “நீங்கள் உங்களை அழிவின் பக்கம் இட்டுச் செல்ல வேண்டாம்” (அல்குர்ஆன்- 2:195) “உங்களை […]

காணிப் பிரச்சினைகளால் கல்லாகும் உள்ளங்களும் காணாமல் போகும் உறவுகளும்.

0 Comments

[edsanimate_start entry_animation_type= “zoomInUp” entry_delay= “1” entry_duration= “2” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “load” scroll_offset= “” custom_css_class= “”] இன்றைய காலத்தில் போலிஸ், நீதி மன்றம், மத்தியஸ்த சபை, உலமா சபை, பள்ளிவாயல்கள் போன்ற இடங்களில் மிகக் கூடுதலாக நிலுவையில் உள்ள விசாரணைகள் காணிப் பிரச்சினை தொடர்பானவையாகும். உறவுகள் முறிந்து சிதறிப்போவதற்கு மூலக் காரணியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதும் காணிப் […]

எலிகளுடனும் கரப்பான் பூச்சிகளுடனுமே நான் தூங்கினேன் – கதறியழும் தாய்

0 Comments

அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஏழு வருடங்களாக கவலையோடும் கண்ணீரோடும் ஒரு தாய் இருக்கின்றாள். உள்ளத்தை உருக்கும் தன் வலிகளை பகிர்ந்து கொள்கிறார். நான் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். என் வலது கால் முழங்காலுடன் கழட்டப்பட வேண்டுமென்று வைத்தியர்கள் அறிவுரை வழங்கினார்கள். சில நாட்களின் பின் என் மகனுடன் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்றேன். மகனுடனும் மருமகளுடனும் மகனின் வீட்டிலேயே சில காலம் தங்கியிருந்தேன். போகப்போக அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கண்டேன். அவர்கள் இருவருக்கும் நான் […]

பிள்ளைகளே! தந்தைகளே! இது உங்களுக்குத்தான்

0 Comments

சற்று சிந்திப்போமா.  மார்க்கம் எமது உயிர். பண்பாடும் ஒழுக்கமும் எமது மூச்சு. உயிரான மார்க்க விடயங்களும், மூச்சான உயர் பண்பாடும் ஒழுக்கமும் படிப்படியாக எம்மிடம் அழிந்து வருவதை அவதானித்தோமா. நபிகளாரின் நற்போதனைகள் அகன்று நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் பேச்சும் செயலும் வேரூன்றி வருகின்றதே. உண்மை உதிர்ந்து கற்பனை முளைக்க ஆரம்பித்து விட்டதே. விழித்துக் கொள்வோம். நம் பிள்ளைகள் தலைமுடி வெட்டும் முறையை அவதானித்தீர்களா. அதில் பல முறைகள் தடுக்கப்பட்டவைகள் என்பதை உணர்ந்தீர்களா? மார்க்க வரையறையைப் பேணி நேர்த்தியாக […]

ஊழல் மோசடி

0 Comments

 ஊழல் மோசடியின் விபரீதம். ஊழல்மோசடி செய்தவர்களின் மறுமை நிலை. அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் தடுக்கப்பட்டவையே. பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பணிக்கு மட்டுமே உரியது. இஸ்லாம் தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டுமென வலியுறுத்தும் இறை மார்க்கம். அதற்காக பல விடயங்களை ஏவியுள்ளதைப் போல் தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் அநீதியிழைக்கும் பல விடயங்களை தடைசெய்துமுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட விடயங்களுல் ஊழல் மோசடி முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஊழல் மோசடியின் விபரீதம் ஊழல் மோசடி இன்று உலகத்துக்கே […]

தேன் துளியும் எறும்பும்

0 Comments

தேன் துளியொன்று பூமியில் விழுந்தது. அவ்விடம் வந்த சிறியதோர் எறும்பு அந்தத் தேன் துளியின் ஓரத்தில் நின்று சுவைக்க ஆரம்பித்தது. பின் அங்கிருந்து செல்வதற்கு நினைத்தது எறும்பு. ஆனால் தேனின் சுவை எறும்பை மிகவும் கவர்ந்து விடவே மீண்டும் தேனை சுவைக்க ஆரம்பித்தது. இரண்டாம் முறையும் திரும்பிச் செல்ல நினைத்த எறும்புக்கு தேன் துளியின் ஓரத்தில் இருந்து கொண்டு தேனை ருசி பார்த்தது திருப்தியாக இருக்கவில்லை. இதை நன்கு உணர்ந்த எறும்பு இன்னும் நன்றாக அனுபவிக்க தேன் […]