சலிப்பூட்டும் Quarantine சந்தோஷமாக மாற்றுவதெப்படி?

0 Comments

[cov2019] கொரோனா பற்றிய பீதி உள்ளத்தை ஆட்டம் காண வைக்கிறதோ இல்லையோ சமூக இடைவெளிக்காக நடைபெறும் இந்த தனிமைப்படுத்தல் பலபேரை சலிப்பூட்டி, வெறுப்பூட்டி, வெறுமையை சுமந்து செல்பவர்களாக மாற்றியுள்ளது. வேலைப்பழு அதிகமாக இருக்கும் போது கூட அனுபவித்திராத ஓர் வெறுப்பை, சலிப்பை வெட்டியாக இருப்பதால் அனுபவித்திருப்பீர்கள், கிடைக்கும் சிறு இடைவெளிகளில் எல்லாம் ஸ்மார்ட் போனை நோண்டத் தூண்டும் ஆர்வம். இலவச டேட்டா சலுகைகளுடன் கூடவே தேவைக்கு மிஞ்சிய நேரமும் கிடைக்கப் பெறுகையில் ஆரம்பத்தில் கிக்காக, சுவாரஸ்யமாக இருந்த […]

அவளின் கதையில் திருமணமான பல பெண்களின் உளக்குமுறல்கள்…..

0 Comments

அவள் கணவனின் குடும்பத்தினரால் வெகுவாக கொண்டாடப்பட்ட ஓர் மருமகள். அவளுக்கேயுரிய சிறந்த குணங்களால் அனைவர் மனதிலும் தனி இடம் பதித்தவள். சமீப காலமாக உடல்ரீதியாக, உளரீதியாக, சமூகரீதியாக பல பிரச்சினைகள் அலையாக வந்து அவளை தத்தளிக்க வைக்கின்றன. வைத்தியரின் சிபாரிசின் பெயரில் உளவளத்துணையை நாடுகிறாள். அவளின் கதை திருமணமாகி 3 மாதங்கள் கூட கடக்காத நிலையில் அவளின் உடல் பருமன் மிக வேகமாக அதிகரிக்கிறது. திருமணத்தின் பின் எடை அதிகரிப்பது சாதாரணமான விடயம் தான் என்று எடுத்துக் […]

இது பொய்யல்ல பிரம்மை..

0 Comments

சில வருடங்களுக்கு முன்பு கடுமையான தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, வயிற்று வலி, நெஞ்சடைப்பு போன்ற நோய்களிகளால் மிகவும் அவதியுற்றவாறு ஒரு சேவைநாடி என்னிடம் உளவளத்துணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அவரின் பிரச்சினையை (case study) ஆய்வு செய்யும் போது பல விடயங்கள் புலப்பட்டன. கிட்டத்தட்ட 5 வருடங்களாக இதே நோய்களால் இவர் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். பார்க்காத வைத்தியர்கள் இல்லை, செய்யாத பரிசோதனைகள் (tests) இல்லை. அனைத்துப் பரிசோதனைப் பெறுபேறுகளும் மேற்போந்த நோய்களுக்கான எந்தவொரு அறிகுறிகளையும் காட்டவில்லை. […]

அவளைப் பற்ற வைத்த சந்தேகத் தீ……

0 Comments

ஆளுமைக் குறைபாடு ஓர் அலசல் அவள் நன்கு கற்ற அழகிய தோற்றமுடைய ஓர் குடும்பப் பெண். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஓர் இளம் தாய். சில காலமாக அவளது நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து மெது மெதுவாக விலக ஆரம்பிக்கிறாள். எடுத்ததற்க்கெல்லாம் சந்தேகம். பிறர் மீதுள்ள எந்த கோபத்தையும் பலநாள் ஆகியும் அவளால் மறக்க முடியவில்லை. அடுத்தவரின் சிறு பார்வையும் பெரிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. ஒரு வார்த்தையும் மனதில் ஆழமாய் இறங்குகிறது. காலப்போக்கில் […]

படபடக்க வைக்கும் பதகளிப்பு

0 Comments

எதிர்காலம் பற்றிய பயம் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது. இறப்பு பற்றிய எண்ணம் அடிக்கடி ஊசலாடுகிறது. நிகழ்பவை அனைத்தும் பயங்கரமானதாக திகழ்கிறது. எதிலும் சந்தேகம். குறிப்பாக தான் இறந்தால் அல்லது நோயில் விழுந்தால் கணவன் அல்லது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று வேறொருவரை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்வாரோ என்ற அதீத பயம். எதைச் செய்தாலும் கை கழுவ வேண்டும் என்று தோன்றுகிறது. திரும்ப திரும்ப எத்தனை தடவைகள் கழுவினாலும் இலகுவில் திருப்தியளிப்பதில்லை. மீண்டும் மீண்டும் அதே […]

மீண்டு வர இதாே ஓர் கரம்!

0 Comments

தத்தளிக்கும் தோல்விகள், தள்ளாட வைக்கும் பிரச்சினைகள், மூச்சுத் திணரும் அழுத்தங்கள், மூழ்க வைக்கும் கவலைகள், விருப்பமில்லாத வாழ்க்கை, விரக்தியை தரும் உறவுகள்.. இவைகளிலிருந்து மீண்டு வர இதோ! ஓர் கரம் மனதிற்கொள்க மாற்றம் ஒன்றே மாறாதது. முதலில் ”இது தான் என் நிலை” , “இது தான் என் விதி” என்று ஆழமாக கூறுவதை, நம்புவதை நிறுத்துங்கள். இது நேரான மாற்றத்துற்கான வழிகளை அடைக்கும் ஓர் கற்சுவர். நீங்கள் ஒன்றும் மரம் அல்ல. நகர்வதற்கு உங்களால் முடியும். […]

என்னை நனைத்த அவளின் கண்ணீர்….

0 Comments

என் உளவளத்துணை வாழ்வில் என்றுமே சந்தித்திராத ஒரு வித்தியாசமான உளவளத்துணைநாடிக்கு உளவளத்துணை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரில்லர் படம் பார்ப்பதற்கிணையான ஒரு சூழலில் அவள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாள். என்புடன் ஒட்டிய சதைகள் அவளின் நோயின் வீரியத்தை பறைசாற்றின. அவளை பார்ப்பதற்கே தனி தைரியம் வேண்டும் என்று கூறுமளவு அவளைப் பார்த்தவுடன் கலங்கித் தான் போனேன். உதடுகளையும், கண்களையும் தவிர அனைத்து இடங்களிலும் காயங்கள் அப்பி இருந்தன. இனங்காண முடியாத தொழுநோய் அவளுக்கு. தினம், தினம் […]

உடைந்து போன உள்ளத்திற்கு தொடர் 02

0 Comments

வாழ்வை புரட்டிப் போடும் வலிமிகுந்த ஒரு செயற்பாட்டை நிராகரிப்பு (rejection) எனலாம். திறமையிருந்தும் வாய்ப்பை இழக்கும் இளைஞன், தகுதி இருந்தும் பதவிகள் மறுக்கப்படும் தொழிலாளர்கள், உப்புச்சப்பற்ற காரணத்தினால் திருமண ஒப்பந்தத்தில் நிராகரிக்கப்படும் பெண்கள், தவறேதும் செய்யாமல் விவாகரத்தை வலிந்து கொடுக்க கண்ணீரோடு பெற்றுக் கொள்ளும் துணைவர், திறமையை பணத்தில் அளவிடும் சமூகத்தால் அடிபட்ட அறிவாலிகள், வயதால் மறுக்கப்பட்ட அனுபவசாலிகள் என இவ்வரிசை தொடரும். முதலில் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் பெறுமதியை உணருங்கள். பின் உங்களை நீங்கள் […]

உடைந்து போன உள்ளத்திற்கு தொடர் 01

0 Comments

தொடர்ந்தேச்சையான கவலைகளால் சுழன்று கொண்டிருக்கிறீர்களா? துரோகங்களும், நிராகரிப்புக்களும் உங்களை வீழ்த்துகின்றனவா? தாழ்வு மனப்பான்மையும், அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் உங்களை ஆட்டிப்படைக்கின்றனவா? இறந்தகால கசப்பான அனுபவங்களால் ஆர்ப்பரிக்கிறீர்களா? உதாசீனங்களால் அமைதி இழக்கிறீர்களா? முடிவுகளை எடுக்க முடியாது தடுமாறுகிறீர்களா? இறைவன் மீதும் உங்கள் மீதும் நீங்கள் கொண்ட நம்பிக்கை உறுதியானதும், வலிமையானதுமாக இருந்தால் நிச்சயம் இவை அனைத்தும் தோன்றி மறையும் கானல் நீரே. வாழ்வில் யாராலும் அடைய முடியாத இலக்கு அனைவரையும் திருப்திப்படுத்தல். உலகின் மிகப் பெரிய […]