மக்கள் மனங்களை வென்றவன்

0 Comments

ஊர்கள் கடந்து பக்கத்து மாவட்டத்தில் பார் ஆளுமன்றம் செல்ல மனித மனங்களை வென்று வந்தான் மனிதம் கொண்ட மனிதனிவன் நேர்மை கொண்ட நெஞ்சனிவன் மக்களுக்கான குரல் இவன் சட்டம் படித்து ஆட்சி செய்ய அரசியல் கற்று வந்தான் ஊழலின்றி ஊரைக் காக்க ஊடகவியலாளனாய் உள்ளம் கவர்ந்து மாவட்டத்திற்கென மலர்ந்து வந்தான் மனித மனங்களை வென்று வந்தான் “முஷர்ரப் முதுநபீன்” சட்டம் உன் குரலால் உயர வேண்டும் நீதி உன் கைகளால் நிமிர வேண்டும் சமூகம் உன்னால் சமத்துவம் […]

மௌனியானவள்

0 Comments

மௌனியானவளுக்கு பேசத் தெரியாது என்பதெல்லாம் இல்லை அவள் உள்ளத்தை உடைப்பதை விடவும் உறவை நிலைக்கச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறாள் உங்களை அவள் நேசித்த காரணத்துக்காகவே அதிகம் விட்டுக் கொடுக்கிறாள் அதிகம் கருணை காட்டுகிறாள் அதிகம் சகித்துக் கொள்கிறாள் அவளை நீங்கள் காயப்படுத்தும் போதெல்லாம் அவள் கண்ணீர்தான் பேசிக் கொள்கிறது அவள் மொழிகள் விலங்கிட்டுக் கொள்கிறது நீங்கள் அவள் உணர்வுகளை உடைக்கும் போதெல்லாம் அவள் இதயம் இறந்து போகிறது அவள் இதழ்கள் மட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாய் காட்டிக் […]

தலைக்கனம் ஒரு தடைக்கல்

0 Comments

வாழ்க்கையின் சாலைகளில் விழுந்து விழுந்து பயணிப்பதால் இனியொரு கட்டத்தில் விருப்பமற்றுக் கூட நீ உன் பயணத்தை நிறுத்தி விடக் கூடலாம் விதி உன்னை அதன் நிர்ணயத்தில் இருந்து நழுவ விடப் போவதில்லை நீ வெறுத்துப் புறந்தள்ளுவதும் கூட உனக்கு நிரந்தரமாகிடலாம் நீ கண்ணீரையே காணாதவன் என்றால் நீ வலிகளையே உணராதவன் என்றால் நீ அடிபட்டு திரும்பாதவன் என்றால் நிச்சயமாக உன் பயணம் உனக்கான சுயநலத்திலேயே அரங்கேறி இருக்கிறது நிச்சயமாக நீ ஒரு நாள் அழுதே தான் தீர […]

நானானவள்-02

0 Comments

விடியல்கள் விழுங்கப்பட்ட நீண்ட இரவுகளில் ஆழ்ந்து கொண்டிருக்க பழகி ஆண்டுகளாகி விட்டது யாரோ வந்தென்னை துயில் கலைத்து விட வேண்டாம் யாரோ வந்தென்னை தலை கோதிடவும் வேண்டாம் என் நேசச் சஞ்சரிப்புக்கள் என் ஆழ் மனம் தேடல்களைப் போல முடிவில்லாத ஒரு தொடக்கப் புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது என் கறுப்புக் கனவுகளுக்கு கலர் தீட்டியவர்கள் அவர்களாகவே அதை களவாடியும் விட்டார்கள் இனியுமொரு நாளில் வாழ்க்கையின் எந்தப் பாகங்களிலும் அவர்கள் பொதிந்திருந்ததாய் ஒரு பக்கம் புறட்டப் பட போவதில்லை […]

மாற்றம் வேண்டும்

0 Comments

மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் நாட்டு கலவரம் தீர நிலவரம் மாற நாடே மாற வேண்டும் சட்டத்தின் ஓட்டைகள் இறுக்கி அடைக்கப்பட வேண்டும் சகல மதமும் சமமெனும் மதசார்பின்மை மிளிர வரவேண்டும் நீதி நியாயம் என்று ஒரு பாடத்திட்டமும் அமுலில் வர வேண்டும் கல்வியமைச்சு அதை தன் கடமை என கொள்ள வேண்டும் திருத்த முடியாத யாப்பு வேண்டும் அதில் மனித உரிமைக்கே முதன்மை வேண்டும் இனம் மதம் என்று பிரிவினை புகுத்தும் கைகளில் விளங்கிட வேண்டும் […]

ஆயுள் உனக்கு நீளனும்

0 Comments

அன்பே வடிவென உணர்ந்தேன் அழகுத் தாயே! ஆயுள் உனக்கு வேண்டி ஆண்டவனை கேட்கிறேன் ஆயுள் உனக்கு நீளனும் அஞ்ஞனம் தீட்டா அழகு விழி விழிக்குள்ளே ஆசைகள் ஆயிரம் ஆகமனம் அன்பு மக்களிடம் ஆயுள் உனக்கு நீளனும். அன்னம் போன்ற அழகியுன் அன்பின் ஆழம் அளவிட ஆழியளவில்லை அதை விஞ்சிய ஆதரம் உன்னிடம் கண்டேன் ஆயுள் உனக்கு நீளனும். அமுதமூட்டி அன்பாலே அறிவூட்டிய அழகியே! ஆராட்டு ஒலிக்கிறதின்னும் ஆகம் நிறைந்த அன்பு உன்னிடம் ஆயுள் உனக்கு நீளனும் அகமொன்று […]

மாய விதி

0 Comments

மாயப் புன்னகை தாளமிடும் அந்த அசுர வனத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சு ரகங்கள் கணக்கிலடங்கா ரணங்கள் யாரோ ஒருவரின் வரையப் படாத கதையொன்று மெல்லமாய் சுவாசம் கொள்வதாய் அசுரவனத்தின் அகாலங்கள் அவ்வப்போது ஓர் அசரீரியில் அமைதி கொள்கிறது தசாப்தங்கள் விரண்டு யுகங்கள் நீண்டு இன்னுமந்த அசரீரி ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது அந்த கதையை மட்டும் படிக்க இயலவில்லை ஒரு கணம் அந்த மாயாவின் தந்திர லீலை இந்த அசரீரியிலாவது அரங்கேறிய இருக்கலாம் இரவுகளின் நிசப்தங்களுக்குள் கங்குள்களின் […]

கற்ற கல்வியே காதல்

0 Comments

ஏகாந்த இரவுகளின் ஏக்கப் போர்வைக்குள் நான் காணும் நிசப்த கனவுகள் கோடி…. அடைவதே என்னொரு உயர்வு… தடை வர  அனுமதி ஏது தளாராதே கனவே…! நெஞ்சாங் குழியோரம் … பஞ்சாக கொஞ்சும் … அஞ்சாத நெஞ்சம் தந்தது கொஞ்சம்… பட்டமும் வாழ்வும்.. காணாமல் போக . காணலை  காதலிப்பேனோ..? காயங்களை நானாய்… கால்களில் லாடங்களாய் கோர்ப்பேனோ..? கன்னியின் கண்ணழகை பாடி நான்.. பாதை தோய்வனோ…? விழி விழித்து நான் படித்து … பழியாக்கி வலி சுமப்பதோ…? புரியாத […]

யாவுமானவன்

0 Comments

பகல்களை விழுங்கி இரவுகளை விசாலமாக்கும் தனிமையான பொழுதுகளிலும் துணையாக ஒருத்தன் இருக்கிறான் பக்கமிருந்து ஆற்றுவதும் தேற்றுவதும் அவனே மறைவாய் இருந்து இரை தருவான் நிறைவாய் என் வாழ்வில் நிறைந்தவன் அவன் அவனுக்காக நடக்கும்போது என் பாதங்களின் தோள்களில் புன்னகையை காண்கின்றேன் அவனுக்காக தனித்து நிற்கும் பொழுதுகளில் அவன் இல்லத்தின் ஒரு தூணாய் மாறி விட துடிக்கின்றேன் அவனுக்காக தரை மீது நெற்றி பதிக்கயில் அதுபோல் ஆறுதல் ஒன்று இல்லாதது போல் உணர்கின்றேன் தனித்திருந்து அவனோடு பேசுகையில் அவன் […]