கேட்டவனின் புலம்பல்

0 Comments

உன்னை அவ்வளவு நம்பினேன் இப்படிச் செய்து விட்டாயே உதவி கேட்டேன் உதாசீனம் செய்துவிட்டாய் உரிமையோடு வந்தேன் உனக்கும் எனக்கும் என்ன உறவென்றாய்? கடனாயெனும் கேட்டேன் கைவிரித்து விட்டாயே எவர் கேட்டும் இல்லாது போகாது எனக்கு மட்டும் என்ன ஆயிற்று தரம் குறைந்து போய்விட்டேனா இல்லை தவறேதும் செய்து விட்டேனா மறுத்து விட்டாய் நீ மனதளவில் வெறுத்துவிட்டேன் நான் அஸானா அக்பர்

நானும் காதலிக்கிறேன்

0 Comments

காதலித்தவர்கள் தான் கவிதை எழுத வேண்டுமென்றால் கவிஞர்கள் பலர் இங்கு தோன்றி இருக்கவே மாட்டார்கள் பிரிந்தவர்கள் தான் கண்ணீர் பற்றி எழுத வேண்டுமென்றால் தினம் தினம் இருப்பவர்களை இறக்கச் செய்திட வேண்டும். போதையைப் பற்றி எழுதுபவரெல்லாம் அதில் மேதையாகிப் போனவர் இல்லை. கண்டதும் கேட்டதுமாய் கற்பனையில் கரைந்தவருமே கவிதையை கருவுருகின்றனர். நானும் காதலிக்கிறேன் வியக்காதே வீணாக சொல்லி விடுகின்றேன். நானும் காதலிக்கிறேன் இயற்கையை – அது நீ அறியாவிட்டால் மழை. நானும் காதலிக்கிறேன் செயற்கையை – அது […]

கால சுழற்சி

0 Comments

வெளுத்துப் போன மேகம் வெடித்துப் போன பூமி வெறிச்சோடிப்போன குளங்கள் வென்னீராய் கொஞ்சம் தண்ணீர் வேறு வழியின்றி நிழல் தேடும் மரக்கிளைகள் வேதனையில் புழுங்கும் சில மனங்கள் வரட்சியின் வருகை பற்றி வானிலை அறிக்கை சொல்லிப்போனது Asana Akbar

மனசாட்சி

0 Comments

கேள்விகள் வேள்வியின் வெற்றிப்படி என்பர் கேட்டவர்கள் தோல்வியை துரத்தி அடித்தர் என்பர். அநீதம் அறங்கேறுகையில் நீதத்தைப்பற்றிக் கேட்க நாதியில்லை அபாண்டம் சுமத்தப்படுகையில் செவி சாய்க்க யாருமில்லை. செவிப்புலன் இருந்தும் செவிடர்களாய் நாவில் நரம்பிருந்தும் ஊமைகளாய் நமக்கென்னவென்று நடைமுறையில் நடைப்பினமாய் நாலடைவில் அங்கவீனமாய்… விடை தெரியாமல் வினாக்குறி இட்டனர் – அன்று விடை தெரிந்தும் குறியீடின்றி வியக்கிறது உலகின்று. நாணயம் இருபக்கம் கொண்டது அது குற்றியில் மட்டுமல்ல குணத்திலும்கூட. பேதங்கள் வேண்டாம் என்கிறது வேதங்கள் குரோதங்கள் வேண்டாமென்று குடிபெயருது […]

ஏதேதோ மாற்றம்

0 Comments

உதவி செய்வதாய் சொல்லி உதாசீனம் செய்கின்றனர். ஆறுதல்கூறும் விதத்தில் ஆசைக்கிணக்க நினைக்கின்றனர். வழி காட்டுவதாய் சொல்லி வழிகேட்டில் இழுக்கின்றனர் நம்பிப் பேசலாமென்று நயவஞ்சகம் செய்கின்றனர். ஊக்குவிக்கும் பெயரில் ஊமையாக்குகின்றனர் சிநேகிதமாய் பேசி சிறை கைதியாக்குகின்றனர். விளக்கம் சொல்வதாய் விதிவிலக்கை மீறுகின்றனர் சகோதரத்துவம் என்று சாக்கடையில் தள்ளுகின்றனர். அகிம்சை எனும்பெயரில் அட்டகாசம் செய்கின்றனர் ஆளாக்குவதாய் சொல்லி ஆளக்குழி வெட்டுகின்றனர். சகஜமான புன்னகையையும் சாதகமாக நினைக்கின்றனர் வெளிப்படை தன்மையைக்கூட வேதனையாய் மாற்றுகின்றனர். ஒழுங்கமைப்பதாய் சொல்லி ஒழக்கக்கோவை மீறுகின்றனர் கட்டுப்படுத்துவதாய் எண்ணி […]

என் – அவன்

0 Comments

என்- அவன் துறை தேர்ச்சி பெற்றவன் மறை வேதம் கற்றவன். ஆன்மீகத்தை அள்ளிப்பருகி ஆயுளை அழகாய் மாற்ற இறைகாதல் கொண்டு இறைவனுக்காய் என்மீது காதல் கொண்டவன். அவன் ஒரு -மார்க்க அறிஞனாயிருந்தால். என்- அவன் பெண் பூவாய் எனை எண்ணி இமையாய் காக்கும் முள் வேலி அவன். நான் ரோஜாவாய் வாழ வழிசெய்யும் என்-ராஜகுமாரனவன். அவன் கன்னிக்கவியும் நானேன்பான், கற்பனையொன்றித்த காதல் கவியை நனவாக்கிடும் கன்னியும் நானேன்பான், என் அவன்- ஒரு கவிக்கோவாயிருந்தால் என்-அவன் மெல்லிசை மறந்து […]

உறவே நீ முந்திவிட்டாய்

0 Comments

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார். இறந்து விட்டார். இல்லை இல்லை இழந்து விட்டோம். ஒரு மறை சுமந்த இதயத்தை ஒரு ஆளுமையை ஒரு அறிஞனை ஒரு சேவையாளனை ஒரு உதவியாளனை ஒரு அறிவிப்பாளனை ஒரு நகைச்சுவையாளனை ஒரு ஆலோசகனை ஒரு நண்பனை ஒரு தியாகியை ஒரு கலைஞனை ஒரு […]

கொரோனாவும் வறுமையும்

0 Comments

நிலவுக் கன்னிக்கு செலவுக்குப் பணமில்லை தொலைவு கண்ணனுக்கு தொழிலுக்கு வழியில்லை அடுப்பு எரிகிறது குழம்புக்கு அரிசியுமில்லை ஆதரம் தேடுவதற்கு தனவந்தரும் பிறக்கவில்லை அரசாங்கப் பணம் அனைவருக்கும் இல்லையாம் வெளிநாட்டு பணம் வந்துசேரும் சொல்லையாம் ஆஸ்ரமத்தில் பிறந்தவருக்கு அனாதை என்றே பெயர் அரவணைக்க அயலாரும் இல்லை இருந்தாலும் அவர்களுக்குத் தொல்லை கொள்ளைக்காசி குவிந்து கிடக்கிறது கொடுத்துதவத்தான் யாரும் இல்லை இறை யாசகி இல்லம் தேடிப்போய் யாசிப்பாளா இதுதான் விதியென்று உள்ளத்திற்கு புரியவைப்பாளா வறுமையில் செம்மை வெறுமையிலும் பொறுமை கொரோனா […]

அலட்சியப் பெண்ணாய் நான்

0 Comments

தெளிவில்லாத இலக்கில் தேர் ஓடிப்பார்ப்பதாய் தெளிவாய் பலர் சொல்லிவிட்டனர். தேர்ந்தெடுக்கையில் தவரென்று தெரிந்தவர்கள் சொல்லி இருந்தால் தேவையில்லாத புலம்பல்கள் ஏன். பெண் பெண்ணாய்தான் இருக்கவேண்டும் விண்ணிற்குச்செல்ல நினைத்தால் மண்ணாய் நினைத்து மிதுத்திடுவார்களாம். படித்தோமா முடித்தோம் பார்த்தவனை கரம் பிடித்தோமா- என பாசங்கு வாழ்க்கைக்கு பழகிடவேண்டுமாம். அவள் சாதித்தாள் இவள் சரித்திரம் படைத்தாள் – என வசனம் பேசினாள் வாயாடியாம். சாதிக்க நினைக்கிறேன் சவால்களை முறியடிப்பேன் – என்றால் வளர்ப்பு சரியில்லையாம். மேடையில் பேச ஆசைப்பட்டேன் முன்னே – […]