முயற்சித்தால் முடியாதென்னவோ

0 Comments

உண்மைக்கதை ஓர் வறிய குடும்பத்திற்கு மகளொன்று மாத்திரமிருக்க  ஆண் மகவையொன்று கிடைக்க தந்தையார், பெரிய மார்க்க அறிஞரிடம்  தூஆ கேட்குமாறு பிரார்திக்கவே ஆண்மகனொன்று கிடைக்கப்பெறுகிறது. அடுத்து அவர்கள் அக்காலத்தில் குழந்தையின்  நாற்பதாம் நாள் வைபவத்தை சிறப்பாய் கொண்டாடவே பஞ்சத்தில் அள்ளுண்ட இக் குடும்பமோ பிள்ளையின் நாற்பதாம் நாளுக்கு பிலாக்காய் சமைத்து  பகிர்கின்றதை பார்க்கும் போது அவர்களின் கஷ்டத்தின் உச்சக்கட்டத்தை உணர முடிகின்றது. குழந்தை வளர வளர  தாயார் பாடசாலை கல்வியை எப்படியேனும் வழங்க இரவிரவாய் கயிறு திரிப்பதை […]

மணித்துளி

0 Comments

பார் போற்ற வாழ்ந்த பால்நிலவே எம்நபியே பாசாங்கு இல்லாமல் பண்பாக நடந்தவரே பாழ்உலகை புது உலகாய் படைத்தவரே கண்ணியம் காத்து கருணையில் ஊற்றெடுத்த கற்கண்டு எம்நபியே கற்பூரமே களையெறிந்து காத்திரமாய நடந்தவரே மாமனித முழுநிறைவே முத்தான எம்நபியே மணித்துளியே முகமன் சலாம் சொல்லி மனக்கசப்பை உடைத்தவரே தாயிப் தக்வா என தவறாமல் துதித்திட திடசங்கற்பம் பூண்டவரே திருமணம் தினசரி அத்தனையிலும் திருமறை பேணியவரே சாஸ்திரம் சமிக்ஞைகளை சிறுதுளியும் சேர்க்காமல் சீராய் வாழ்ந்தவரே செம்மல்நபி சுயநலமற்ற நபி சமுதாயத்துக்காய் […]

முகங்கள்

0 Comments

காணாமல் போன அந்த நாட்கள் காத்திருப்புக்கள் இன்னும். குதூகலம் சொறிந்த அக்காலம் கிடைக்காதா மீண்டும் தேடிப்பார்க்கிறேன் பழையவற்றை தொட்டில் தொடக்கம் தொடர்புகள் வரை அத்தனையும் தேய்ந்து விட்டன இயந்திரமில்லா வாழ்வு இருட்டில்லா இதயம் இயல்பான போக்கு இரட்டையடிப் பாதை முயன்று முழுதாய் கொண்டுவரினும் முடியாதல்லோ முழுமதி      முகங்களை மீண்டும் கொண்டு வர மேக்கப்கள் மலிந்துள்ளன மலர்வுகள் மறைந்து கிடக்கிறது. Binth Ameen

ஆசான்

0 Comments

ஆழமாய் வழிகாட்டி ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் சொல்லிக் கொடுத்து அன்பையும் பண்பையும் ஒன்றுசேர எம்முள் புகுத்தி உன்னத வாழ்வை அர்த்தமாக்கியவர்கள் ஆசான்கள். பிறந்தது முதல் சீராட்டி தலாட்டி தடம்புரளாமல் காப்பாற்றும் பெற்றோரும் ஆசானே பெறுமதியுணர்வாய் மகனே உடன் பிறந்த உடன்பிறப்பும் உதவிக்கு நின்ற நண்பனும் ஏன் – எதிரியும் கூட ஆசானே உயரப் பறக்க காரணமனதால் பழைய பிழை அனுபவமாய் உயிர்பெறுகையில் அவமானங்களும் ஆசானே அத்தனையும் ஆழமாய் நோக்கின் எம்மை செதுக்கிப் போட்ட சிறியவையும் […]

இரா நேர மின்வெட்டு

0 Comments

இரா நேர மின் வெட்டு அவ்வளவாய் புடிக்குமெனக்கு திடீரென ஓர் அமைதி திசை திருப்பப்டும் இயந்திரவாழ்வு தனிச் சுகமல்லோ அத்தனை வேலைக்கும் ஓர் இடைவேளை அயராமல் உழைக்கும் சாசர்கு (charger) அளிக்கும் அன்பளிப்பது என்னைப் பொறுத்து சிறுசுகளுக்காய் நேரம் ஒதுக்க சிரிப்பொலிகள் வீட்டில் கேட்கும் சிலகுழந்தைகள் பாடி மகிழும் சந்தோசமயாய் ஒன்றாய் கூடும் காத்திருக்காமல் போய்விடு நேரமே குழந்தைகள் மனதால் எண்ணும் கல்விக்கு களவு பண்ண  காரணமாய் இதனை சொல்லும் மின் மினியின் அழகும் மங்கிய மெழுகுவர்த்தியின் […]

பற்றியெரிந்த கப்பல்

0 Comments

போர் முடிந்த பொழுதுகளில் போற்றிப் புகழ்ந்த முப்படையினரை பகிலிரவு மாறுகையில் பொருட்படுத்தவே மறந்துவிட்டோம் கோரானா வந்திட கவலைகள் கூடிட காக்கும் படை களத்திற்கு வந்திட கட்டுப்பாட்டுக்குள் கொடியவைரஸ் தன் உயிர் மறந்து தாய் நாடு காக்கும் தாய்க்குலம் அவர்கள் தரணிக்கு. நன்றி மறக்க முயல்கையில் நாடுகிறான் கடவுள் ஏதோ பெரிதாய் நடுக்கடலில் பற்றியெரிந்தது கப்பல் நினைவு மீண்டும் நம் முப்படைப்பக்கம் நீள்கிறது. Binth Ameen

கொஞ்சிடுமா?

0 Comments

காட்டிலே வீட்டைக் கட்டி காடையும் அழித்துப் போட்ட காடையர் கூட்டமாய் நாமிருக்க கொஞ்சிடுமா யானைகளும் வளவுக்குள் புகுந்து வெண்டிக்காய் வட்டக்காயென விளைச்சல் செய்த அத்தனையும் வீணாக்கிவிட்டுச் செல்வது வீரத்தை காட்டவல்ல விவரிக்க முடியா கவலையை வடுக்களாய் தந்திடவே தன் இடத்தை பிடித்துக் கொண்டு தண்ணீரையும் நாசமாக்கின் தழைக்கும் தானே கோவமும் தரணியில் வாழ முடியாதென்று யானை மனித மோதல் அடுக்கிக் கொண்டே செல்கிறது எல்லாம் எங்கள் பிழைகளால் தான் அறிந்து அறிவாய் நடந்திடுவோம் BindhAmeen  Seusl

மகிழ்ச்சியின் சங்கமம்

0 Comments

ஒன்றையே பலமுறை கேட்கும் உணுக்கு ஆசையில்லா அன்புள்ளங்கள் ஆராவாரம் ஏதுமின்றி கட்டிலே இருக்கையாய் இவர்களுக்கு என்றும் உடம்போ தளர்வு உள்ளமோ உற்சாகம் அடிக்கடி  விசாரிப்புகள் அடிவயிற்றில் சுமந்த குழந்தைகள் பற்றி மருந்தே வாழ்வென மனது முழுக்க நினைப்பு மூவேளையும் குடித்து முடிந்து மகிழ்ச்சியுடன் தெம்பு மறுக்கமுடியா சொத்து மாளிகையின் முத்து மலரவேண்டும் மனையில் மகிழ்ச்சியின் சங்கமமாக Binth Ameen Seusl மகிழ்ச்சி யின் சங்கமம்

இரா (ரை)

0 Comments

கோரோனா அப்டேட்கள் அடிக்கடி வந்து குவிய கைப்பேசியோ கோரமாக கவலையோடு கட்டிலில் சாய்கிறேன் காதருகே வந்து கிசுகிசுக்கிறது கோபத்தை இருமடங்காக்கிறது கடித்ததால் ஏற்பட்ட தளும்பல் கண்டு கிணத்தாழம் வரை என் விரக்தி எழுந்து கொள்கிறேன் எரியவைத்து விளக்கை ஏடாகூடமாய் என்னில் திட்டிக்கொண்டு அண்ணார்ந்து பார்க்கிறேன் எங்கே அதுவென அலசலொன்று கண்ணால் இரண்டு மூன்றென எண்ணுமளவு கொன்றுவிட்டு இருமாப்புடன் ஓட்டிக்கொள்கிறேன் கட்டிலில் நானும் ஆழமாய் ஓர் தூக்கம் இனியென்ன பிரச்சினை என்று எண்ணி ஆறுதலயாய் மீண்டும் கண்ணயர்கிறேன் அலாரம் […]