இயற்கையே

0 Comments

வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது குளிர்காற்றின் தழுவலில் கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க புகைப்படமெடுக்க வந்தது மின்னல் சந்தோஷக் கரவொலியாய் இடியோசை கருக்கொண்ட மேகங்கள் பாய் விரித்தாற் போல் இருக்க அசைந்தாடும் தாவரங்கள் அழகாகச் சாமரங்கள் வீசிநிற்க தூரத்து மலை மேலே சுருள் சுருளாய்ப் புகை பயணம் இருள் சூழும் வேளையிலே இதமாக ஒரு மாற்றம் மனமெங்கும் இயற்கையுடன் ஆடுகின்ற மலர்க்கூட்டம் இயற்கையின் நிகழ்வுகள் இணையில்லாக் கவிதைகள் மக்கொனையூராள்

யோசிப்போமா

0 Comments

காலம் கடந்து போய்விட்டது இயக்கங்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து உனக்கு நானும் எனக்கு நீயும் குற்றமும் குறையும் சொல்லியே காலம் கடந்து போய்விட்டது சாதிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏராளமாய் அணிவகுத்திருக்கும் போதில் வாதப்பிரதிவாதம் செய்தே குதர்க்கம் செய்து பிரிவினை செய்தே சொந்த வண்டவாளம் எல்லாம் இன்று தண்டவாளம் ஏற்றியாச்சு உள்வீட்டுப் பூசல் எல்லாம் ஊதி ஊதி ஊரெல்லாம் பரப்பியாச்சு வலுவிழந்து போனோம் வழு விளைய காரணமானோம் – முடிவு குரங்கின் கையில் பூமாலை. இனிமேலாவது யோசிப்போமா? இல்லையேல் அநியாயக் காரர்களிடம் […]

புது உலகம்

0 Comments

வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதைமை அழித்து போதனை யுரைத்து வாலிப மனங்களை நெய்வோம். குவலயம் சிறக்க குதூகலம் பிறக்க அன்பினால் அனைத்தையும் வெல்வோம். இருட் திரை நீக்கி அருட் திரை போர்த்தி மானிடர் வாழ்க்கையை உயிர்ப்பிப்போம். பிரிவினை யகற்றி புரிதலைப் போற்றி புதியதோர் உலகினை செய்வோம். மக்கொனையூராள்

அவள் என் தோழி

0 Comments

அவளுக்காய் மீண்டுமொருமுறை என் நயனமிரண்டும் துளிர்க்கின்றன அந்தப்பாவை யவள் பாவம் பாசத்தை யாசித்து யாசித்தே நொந்து போன பூவை யவள் புன்னகையைப் பொன்னகையாய் ஏந்தியிருக்கும் பூமுகம் அவளுக்கு நிம்மதிதான் இருக்கவில்லை பூவான அவள் மனதிற்கு சுட்டித்தனமும் குழந்தைப்பேச்சும் அவள் சுபாவம் தேசமிழந்த தேவதை அவள் பாவம். வேதனைகளைப் போட்டுப் பூட்டிப்பூட்டியே. சாதனை செய்ய நாடினாள் வாழ்க்கையெனும் சோதனையில் தனியே வாடினாள் அவள் சுமைகளையும் சுகங்களாக்கிக் கொண்டவள் இன்றோ அவளது சுகங்கள் எல்லாம் சுமைகளாக அவளது கிறுக்கல்கள் கூட […]

பிரார்த்திப்போம்

0 Comments

உயிர்கள் கருகும் தேசமிது சாம்பல் காடாய் மாறிடுமோ உணர்வுகள் என்று விழிப்படையும் உடையும் இங்கே இதயங்களும் அத்துமீறும் ஆணைகளால் உரிமை பேச வந்தோரோ கடமை செய்யத் தவறியோரே எங்கே பாதை செல்கிறது யாரும் அறியோம் யாது செய்ய வேண்டுமென்ற வரைமுறையும் நாமறியோம் பதாகை தாங்கிய கால்நடை போல் எங்கள் பயணம் இருக்கிறது ஏன்?எதற்கு?  வினாத்தொடுக்க வாயின்றி வாடுகிறோம். காலச்சுவடுகள் பல சொல்லும் காயங்கள் இதயத்தை கீறிச்செல்லும் உடைமை இழந்தோம் உயிர்களை இழந்தோம் உரிமையும் இழந்தோம் உண்மை இங்கே […]

மதீனாவில் வாழும் கோன்.

0 Comments

சித்திரை மாத முழுநிலவாக பத்தரைமாற்றுச் சுடரொளியாக இத்தரை மீதில் திருஉருவாக முத்திரை பதித்தார் இறுதி நபியாக குப்பைகளை தன்மீது போடும் மாது ஒரு நாளில் அப்பக்கம் வராத போது நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது பார்பதற்கு சென்ற நபிக்கு நிகரேது சுமைகளைச் சுமந்தபடி மூதாட்டி நபி சென்றார் உதவுதற்கு வழிகாட்டி பயணம் முழுதும் அவள் நபியைத் திட்டி கேட்டிருந்தார் நபியோ கைகட்டி பலி வாங்க சந்தர்ப்பம் கிடைத்த போதும் இழிசெயல் முஃமின் நமக்கு வேண்டாம் என்றார் குழி […]

முகமூடி

0 Comments

முகம் மறைத்து சில பெண்கள் தெருவோரம் போகையிலே முள்வேலி தான் போட்டு முகமூடி நீக்கு என்றார் கண்மட்டும் தெரிகையிலே பொல்லாத பயமென்று முகமூடி நீக்கி விட்டு முன் வா நீ என்றார். பின் வந்த நாட்களிலே கொரோனாவின் கொடுமை தவிர்க்க முகமூடி தான் அணிந்து முழுமையாய் மனிதர்கள் காண்கையிலே நான் நினைத்தேன் “அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்.” மக்கொனையூராள்

சோதரா நீ செல்வதெங்கே!

0 Comments

ஈமானியக்கொள்கை மறந்து இஸ்லாமிய வாழ்க்கை துறந்து ஏகன் அல்லாஹ்வை மறந்து சோதரா நீ செல்வதெங்கே அநாச்சாரங்கள் பல உன் கலாச்சாரமாகிவிட சைத்தானிய உயிர்களுடன் சோதரா நீ செல்வதெங்கே பலஸ்தீன் சகோதரிகள் கண்ணீர் வடிக்க யெமனும்,சிரியாவும் உடைமை இழக்க மியன்மார் உம்மாக்கள் நெஞ்சம் கனக்க உய்குர் முஸ்லிம்கள் உரிமை தொலைக்க சோதரா நீ செல்வதெங்கே அநாகரிகம் நாகரிகமாய் உருவெடுக்க நவீன சுமையாக்கள் உயிர் துறக்க போதையில் பாதை மாறி இஸ்லாத்தின் தூதை மீறி சோதரா நீ செல்வதெங்கே நீ […]

யா ரஸுலல்லாஹ்

0 Comments

மங்காப் புகழ் கொண்ட மஹ்மூத் நபியே! திங்கள் ஒளி விஞ்சிட நின்ற ஸிராஜுன் நபியே! வசந்தமாய் எம் வாழ்வில் வந்த பசீருன் நபியே! வாழ்நாளெல்லாம் மணக்கச் செய்த முஸ்தபா நபியே! அரேபியாவில் பேரொளியிய் உதித்த நூருன் நபியே! அகிலம் அழகாக்கப் பிறந்த யாசீன் நபியே! அல்குர்ஆனை அற்புதமாய் பெற்ற ஹபீப் நபியே! அல்லாஹ்வின் அருளான முஹம்மது நபியே! காலத்தால் அழியாத காவலர் முபீய்னுன் நபியே! காரிருள் அழித்திட்ட பேரொளி நதீருன் நபியே! உம்மத்துக்காய் பரிந்துரைக்கும் காதத்முன் நபியே! […]