அம்மா

0 Comments

உனக்காக ஒரு கடிதம் அம்மா நீ பெற்ற பிள்ளை கண்ணீருடன் எழுதும் ஒரு கடிதம் ஏமாற்றும் உலகில் என்னை நீ பெற்று விட்டாய் நானோ யார் பேச்சை நம்புவதென்றே தெரியாமல் ஏமாந்து போகின்றேன் புன்னகைப்பாய் என்னை பார்க்கின்றனர் ஆனால் மறுபுறம் பார்த்தாலோ அவர்கள் அனைவரும் விஷம் கொண்ட தேள்கள் உடன் பிறவி கூட துரோகி யாக இருக்கின்றான் நம்பி காதலித்தவன் கூட கைவிட்டுச் செல்கின்றான் இறைவன் படைப்பில் இந்த உலகம் மட்டும் தான் இப்படி மோசமானதாக இருக்க […]

தியாகத் தாயே

0 Comments

உன் உதிரத்தை பாலாக்கி உன் உயிருக்கு உயிர் கொடுத்தாய் உன் இரவுகளை எல்லாம் பகலாக்கி என் உறக்கத்திற்கு வழி அமைத்தாய் உன் உணர்வுகளில் எல்லாம் என்னை வைத்து உன் உயிரை மொத்தமாக என் மீது உன்  உத்தமாக்கினாய் என் மீதான கனவுகளை நீ தாங்கி உன் இரக்க விழிகளை என் மீதான காவலனாக்கினாய் உன் வயிற்றுக்குள் எனை சுமந்த தாயே என் பசிதாலாமல் நான் உன் வயிற்றை உதைக்கும் போது உன் உணவில் எனக்கும் பங்கு கொடுத்து […]

முற்றுப்புள்ளி

0 Comments

தொடர் வரியாய் எழுத நினைத்து மனதினில் ஓராயிரம் கற்பணைகள் சுமந்து! முதல் எழுத்து எழுத முனைந்தேன்! பேனையின் உயிர் துறக்கும் நிலைதனில் திக்கியது ஒரு மைத்துளி அதுவே முற்றுப்புள்ளி. H.F. Badhusha

என்ன தவம் நான் செய்தேன்?

2 Comments

மசக்கை கொண்டு மயங்கிய நொடி முதல் உன்னை நான் ஒரு இரத்தத்துளி என வயிற்றில் சுமந்தேன். பத்துத் திங்கள் கடந்து கைகள் இரண்டிலும் ஒரு சிசுவென உன்னை தாங்கிய பொழுது நான் ஒரு தாய் எனும் நிலை தனை அடைந்தேன். பசிதீர வேண்டி நீயழுது தாய்ப்பால் தரும் நொடி வரை என் மார்பால் தாய்ப்பால் அதை நான் சுமந்தேன். என்ன தவம் நான் செய்தேன்? “அம்மா” என்று என் பிள்ளை எனை பார்த்து இனிமையாய் அழைக்கும் நொடி […]

தாயே!

0 Comments

உன் உதிரம் உரைய உரைய உன் உயிராய் என்னை வளர்க்கிறாய் உன் உள்ளம் உருக உருக உன் பாசத்தில் என்னை பிசைக்கிறாய் உன் துன்பங்கள் எல்லாம் மறந்து என் சிரிப்பில் உன் இன்பம் வளர்க்கிறாய் உன் வலிகளை மறந்து என் மொழிகளில் மோட்சம் பெறுகிறாய் தாயே ஏன் இன்று உன் உயிரை எனக்கு கொடுத்து விட்டு! என் உயிரை மொத்தமாய் வாங்கிக் கொண்டு என்னை விட்டுப் பிரிகிறாய்! Fathima Badhusha Hussain Deen Faculty of Islamic […]

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

0 Comments

அகிலத்தின் தலைவரே அருட்கொடைகளின் அகள்விளக்கே அனைத்து இறைத்தூதர்களின் முதல்வரே அன்னை ஆமினாவின் மணிவயிற்றில் அருள் மகனாய் பிறந்தீரே முஹம்மது தாஹாவே! நீர் பிறந்த நொடியில் தான் ஆமினாவின் மணிவயிற்றில் பேரொளியும் தோன்றிய தே! அது தந்த பிரகாசம் தான் ஷாமின் கோட்டைகளே மிளிரச் செய்தனவே இருளில் மூழ்கிக் கிடந்த அறியாமை சமூகத்தை ஒளிபெறச் செய்ய வந்த நபியே! பிறக்கும் முன்னே தந்தையை இழந்து. இளமைதனில் இன்னல் தனை அனுபவித்தீரே! பொறுமையெனும் சின்னத்தை ஏந்திய நபிகள் நாயகமே! இறைத்தூதை […]

காத்திருப்பு

0 Comments

௧டல் கடந்து நீ சென்றாலும் கரையாமல் பதிந்து நிற்கிறது உன் நினைவுகள். கண்ணீர் துடைக்க கண்ணெதிரே நீ இல்லை! என்னிடமே நான் இல்லை! கண்முன்னே நீ வருவாயா கன்னியிவள் கவலை தீர்க்கும் எண்ணம் கொண்டு? கண்களிலே என்னை கைது செய்து விடு. கைவன்னம் என்னிடம் உயிர் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது! Fathima Badhusha Hussain Deen Faculty of Islamic Studies and Arabic Language South Eastern University of Sri Lanka

உன் நினைவுகள் யாவும் படிப்பினைகளாக

0 Comments

காலங்கள் கடந்த பின்னும் நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன். சுட்டெறிக்கும் தீயைப் போல என் மனதை நீ எறித்த பின்னும். இதயமில்லா அறக்கன் ஒருவனை என் இதயத்தின் அருகில் அனைத்த பின்னும். இமைகள் மூட மறுக்கும் நினைவுகளை உன்னால் நான் சுமந்த பின்னும். நீ என்னை விட்டுப் பிரிந்த பின்னும் உன் நினைவுகளை நீ விட்டுச் செல்வதால். உன் நினைவுகள் என்னும் வட்டத்தினுள்ளே நான் சுழன்று என் வாழ்வை நான் தொலைத்து கண்ணீரதனை சொட்டுச் சொட்டாய் சிந்தி […]

வீழாமல் வாழ்கிறேன்

0 Comments

சுட்டெறிக்கும் பாலைவனம் தனில் நீ என்னை விட்டு பிரிந்த போதும். அலை மோதும் உன் நினைவிகளை சுமந்த படியே நான் செல்கிறேன். இடை நடுவே நீ சொன்ன நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்பிக்கை துரோகங்களாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டே சென்றன. கண்ணீரின் விலையதனை உணராமலே இருந்த எனக்கு. கண்ணீரின் பெருமதியை உணரச்செய்த உனக்கு எனது கோடி நன்றிகள். இன்றுடன் உன்னை மறந்திட வேண்டும் என்று நான் தினமும் உத்வேகம் கொண்டாலும். என் பெண்மைக்கு அடக்கம் கற்பிக்கும் உனக்கு நன்றிகள். […]