ஒரு ஜனாஸாவின் அழுகுரல்

0 Comments

ஆ! ஐயோ! எரிகிறதே! உடலெங்கும் வலிக்கிறதே! ஸக்ராத்தால் நொந்த உடம்பு வெந்து போகிறதே! என் சொல்லொணாத் துயர் உமக்கெல்லாம் புரிகிறதா? எனக்கான கபன் எங்கே? கரமேந்திடும் தொழுகை எங்கே? ஆறடிக் கப்ரு எங்கே? என்னைத் தவிர எல்லாமே புதைக்கப்பட்டு விட்டனவா? ஓரடி தூரத்தில் பரவாத தொற்று ஆறடி ஆழத்திலிருந்து வேரோடி விருட்சமாய் நிலத்தைக் கிழித்து வெளியேறிட கொரோனா ஒன்றும் விதையல்லவே சுகாதாரம் சொல்லும் உலக சொந்தங்களே சோகம் தெரிவிக்கையில் திருநாட்டு உறவுகளோ சகுனி வேடம் பூணுகின்றனரே இன […]

தன்னை உருக்கி ஒளி கொடுத்த தீபம்

0 Comments

ஒளியிழந்த என் வாழ்வில் ஒளி தந்த விளக்கு என் தந்தை பாச மலர் வீசி பாரினிலே முத்து முத்தாய் வியர்வை சிந்தி உருகிடும் மெழுகுவர்த்தியவர் உலகு போற்றும் என் தந்தை கல்விக்காய் கை நீட்டி காசு கேட்கையிலே அள்ளித் தந்து அரவணைத்த வள்ளலவர் எதிர்காலமென்ற கட்டடத்தை தொட்டிடவே உறுதியான உறுதுணையாய் நின்று தட்டிக் கொடுத்த தலைமகனவர் தங்கமான என் தந்தை தன் உதிரத்தில் உருவான மறு உருவத்துக்காய் வாழ்வையே தாரை வார்த்த உத்தமத் தியாகியவர் ILMA ANEES […]

பெண்களும் சாதனை புரியலாம்

0 Comments

இன்று பெண் என்றாலே அவள் அடுக்களைக்குத் தான் சொந்தம் என எம் சமூகத்தினர் வரையறை ஒன்றைக் கற்பித்துள்ளனர். பெண்கள் அடுக்களைக்கு மாத்திரம் தான் சொந்தமா? அவர்களால் சாதிக்க முடியாதா? முடியும். எங்களாலும் சாதிக்க முடியும். நாம் குடும்பத்தையும் நல்ல முறையில் கண்காணித்து சாதனைகளையும் புரியும் உரிமை (மார்க்கத்தின் வரையறைகளைப் பேணி) இஸ்லாத்தில் உண்டல்லவா? நபியவர்கள் காலத்தில் எத்தனையோ முஸ்லிம் வீரப் பெண்மணிகள் திகழ்ந்துள்ளனர். நபியவர்களின் அத்தை ஸபிய்யா அம்மை கூட கைபர் யுத்தத்தின் போது இஸ்லாத்திற்காக வீரத்துடனும் […]

நோம்புக் கஞ்சி

0 Comments

“உம்மோவ்…. வாப்போவ்…. நாளக்கி நோம்பாம்…. இப்ப தான் பள்ளீல சென்ன” “மகேன் பார்த்து மெதுவா வாங்க. எந்தக்கி இப்பிடி ஓடி வார. செல்லீக்கி தானே இப்பிடி பா(f)ஸ்ட்டா ஓடினா புளுவீங்கண்டு” “இல்ல வாப்பா… நாளக்கி நோம்பாமே… அப்ப பள்ளீல கஞ்சி குடுப்பதே. வாப்பா நானும் ஒங்களோட வார. அய்ய்ய்ய் ஜோலி…” ஐந்து வயது மகன் அல்மாஸ் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். “வாப்பாம் மகனும் சேந்து எந்த பேசிட்டு நிக்கிய? நாங்களும் வந்து கலந்து கொண்டா பரவாயில்லயா? எங்கட […]

புனித றமழான்

0 Comments

கருநீல வான்பரப்பில் வெண்ணிறச் சுடரொளியாய் சட்டென மின்னி மறைந்திடும் சிறு கீற்றுப் பிறையின் வருகையால் சங்கை மிகு றமழானும் உதயமாகிறதே…. இதயங்கள் துள்ளிக் குதித்திட இதழ்களில் புன்னகை தவழ்ந்திட இஸ்லாமிய நெஞ்சங்கள் இன்பமாய் வரவேற்றிடும் றமழானிது…. பசித்திருந்து தாகித்திருந்து பகலிரவாய் கரமேந்தி பாவக் கரைகளை நீக்கி சுவனத்தை சுவைத்திட வந்ததே எமக்கு றமழான்….. வேலைப்பளுவின் சுமையாயினும் வேதனை தரும் வெயிலாயினும் பெருமை மிகு றமழானை பக்குவமாய் கடைபிடிக்கனுமே இன்ஷா அல்லாஹ்…. உள்ளங்களை உயிர்ப்பித்து இல்லங்களை ஒளியூட்டி உதித்திடும் […]

முஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பாதுகாத்தல்

0 Comments

வந்தேறு குடிகளென்ற வாதங்களைத் தகர்த்தெறிந்து பூர்வீகச் சொத்துக்களை சேதங்களின்றி காத்தல் வேண்டும் புனிதம் மிகு புண்ணிய பூமிகளும் மனிதம் போற்றும் வாசிகசாலைகளும் தொன்மை நிறை நூதனசாலைகளும் மேன்மையென ஏற்றுதல் வேண்டும் விசித்திரம் நிறைந்த சரித்திரப் புரட்டுகளை சான்று கொண்டு பதித்திடல் சாலச் சிறந்ததன்றோ??? அடிச்சுவடுகளே இன்றி அடியோடு அழிக்கப்படும் வரை நொடிப்பொழுதில் கண்ணிமைத்திடாது விடி கொண்டிட விழித்தெழுவோம்! தார்மீகப் பணிகள் ஏராளமதை தாராளமாகப் புரிந்து பூர்வீக முஸ்லிம்கள் நாமென்றே யுகம் முழுதும் உரைத்திடுவோம்…. ILMA ANEES WELIGAMA […]

நெற்றி முத்தம்

0 Comments

நிலம் தொட்டு நுதல் பதித்து நலம் வேண்டி பிரார்த்தித்தே நித்தமும் சத்தமில்லாத முத்தம் அதுவே உன் நெற்றி முத்தம் கண்ணின் பனித்துளியென மணி மணியாய் சிந்தும் கண்ணீர்த்துளி கொண்டு தரையினை நனைத்திடும் தருணம் திரையின்றி நிலத்தினில் பதிந்திடும் முத்தம் அதுவே உன் நெற்றி முத்தம் உளமதில் உதித்த துயரினை உருக்கமாய் உதிர்த்திட பிறை நுதல் பதித்து இறையோனிடம் இறைஞ்சியே முறையிட்டிடும் சமயம் தரையுடன் உயிர்த்திடும் உன்னத பந்தம் அதுவே உன் நெற்றி முத்தம் ILMA ANEES (WELIGAMA) […]

கொரோனாவும் கூலிவேலையாட்களும்

0 Comments

கம்பீரமாய் காட்சி தந்த கதிரவன், மதி மங்கையவளின் வருகை கண்டு நாணி மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கும் மங்கிய மாலைப் பொழுதினிலே, தன் வீட்டு முற்றத்திலுள்ள பூங்கன்றுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் பாத்திமா தாத்தா. “அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா தாத்தா” சுவனத்தின் காணிக்கைகளை மொழிந்தவளாய் வந்து கொண்டிருந்தாள் கதீஜா. “வஅலைக்கும்முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ… ஆ கதீஜாவா??? வாங்க மகள். சொகமா இருக்கீங்களா?” “அல்ஹம்துலில்லாஹ் ஈக்கிறோம் தாத்தா. ஆனா, நாட்டு நடப்புகள் தான் ரொம்ப மோஷமா ஈக்கிது” “ஓ […]

வெறிச்சோடிப் போன மஸ்ஜித்கள்

0 Comments

இணை துணையில்லா இறையோனின் இல்லமதில் மறை வேதமுரைத்து மறையோனைத் தொழுத மங்காத பொழுதுகள் மறைந்து விட்டன சின்னாட்களுக்கு ஒற்றையைத் தவிர்த்து ஒற்றுமையைப் பறைசாற்றி ஒன்றாய்க் கூடிய ஜமாஅத்கள் நின்று விட்டன காலவரையறை இன்றியே இரவு பகலாய் மக்களின் எண்ணற்ற வரவுகளால் அரவங்கள் குடி கொண்ட அல்லாஹ்வின் மாளிகை தாழிடப்பட்டு ஆளின்றி போனது சதா கேட்கும் அதானொலி செவிகளுக்கூட்டிய உற்சாகத்தால் நவ்வியென துள்ளிக் குதித்து பள்ளி நோக்கிய பாதங்கள் இன்று ஏங்குகின்றன நின்று தொழுத கூட்டுத் தொழுகைக்காய் உடைந்த […]