இறை வழியில் நாம்

0 Comments

தஃவாக் களமதிலே தடம்பதிக்கும்- நாமின்று தடை கண்டு-அஞ்சாது தடுமாறிச் செல்லாது தயாளனின் உதவியுடன் தயக்கங்கள் ஏதுமின்றி துணிந்திடுவோம்! முனைந்திடுவோம்! தீனதனைச் சொல்லிடவே! பல்லினத்தவர் மத்தியிலே பரந்து வாழும் நாமின்று பண்பாடுகள் கைக்கொண்டு பண்பாய் நாம் வாழ்ந்திட்டால் வென்றிடலாம் இதயமதை இஸ்லாமிய தீனின்பால்! மொழியறிவு நாம் கற்று மௌட்டீக சிந்தனையும்-நாம் ஒழித்து மதச்சகிப்புத் தன்மையும் மனிதாபிமான உணர்வுகளும் மானிடர் எம் மனங்களிலே மங்காது மலர்ந்திட்டால் மாற்றாரும் இணைந்திடுவர் மணங்கமழும் தீனதிலே! கடமையதை நாம் உணர்ந்து கச்சிதமாய் நேரமதை திட்டமுடன் […]

ஓய்வு நேரம்

0 Comments

ஓய்வைப் பொறுத்தவரை அது எல்லோருக்கும் மிகப் பிரியமானதோர் விடயமே! ஏனெனில் நாள் முழுதும் பல்வேறு வேலைப் பளுக்களுக்கு மத்தியில் பம்பரமாய் வலம் வந்து கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் இவற்றில் இருந்து சற்று ஓய்வு கிடைக்காதா? எனப் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் தருணமதில் அனைத்து வேலைகளிலிருந்தும் விடுபட்டு ஓய்வு எனும் நிலையை நாம் அடையும் போது அது எம்மில் மட்டில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உண்மைதான்! ஓய்வு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். […]

காலம்

0 Comments

காலங்கள் காத்திருப்பதில்லை கனவுகள் நிஜமாக! கால்களும் விரைவதில்லை காரியத்தை நோக்கியதை! முயற்சிகள் ஏதுமின்றி முளைகள் துளிர் விடா! முற்றுகைகள் பல தாண்டி முனைப்புடனே செயற்பட்டால் முன்னோக்கும் உன்னை பல வெற்றிக் கணைகள் சாதாரண மனிதர்க்கும் இருபத்தி நான்கே! சரித்திரம் படைத்தவர்க்கும் இருபத்தி நான்கே! அதை வகுத்தெடுக்கும் வகையதிலே பல ரகம்-பலர்க்கும் இலக்குதனை நாம் எய்த திட்டமின்றிச் பயணித்தால் திசை மாற நேரிடும்-இன்றேல் திரும்பிச் செல்ல நேரிடும் பளுவான வேலை பல பஞ்சமின்றி எம்மை அடைய முன்னே பக்குவமாய்க் […]

அருளான அல்குர்ஆன்!

0 Comments

மலக்குகள் பலர் சூழ மனஅமைதி எமக்கிறங்க மறையோன் அளித்திட்ட மதுரமான வேதமதே மகிமைமிகு திருக்குர்ஆன்! ஒன்றுக்குப் பத்தாய் பல்லாயிரம் நன்மைகளை அடியார்கள் நாம் பெறவே படைப்பாளன் அருளிட்டான் பண்பான பனுவலதை! உள்ளத்தின் ஒளியாய் உண்மையின் உறைவிடமாய் உலகத்தார்க்கு வந்ததுவே உலகமறை வேதம்! சத்திய-அசத்தியத்தை சரியாய் நாம்-புரிந்திடவே அருளாளன் இறக்கிட்டான் சங்கையான இரவினிலே! தஜ்வீத் முறையுடனே தயாளனின் அருள் வேண்டி தெவிட்டல் ஏதுமின்றி ஓதிடும் மறையதுவே தித்திக்கும் திருக்குர்ஆன்! வரவிருக்கும் ரமழானை தவற நாமும் விட்டிடாமல் திருமறையை ஓதியே-நாம் […]

பேனா முனை

0 Comments

வாசிப்பெனும் போசனையை வாசகர்கள் சுவைத்திடவே வழங்கட்டும் களமதனை வளமான-உன் பேனா முனை! பல்நூறு எழுத்துக்களில் பக்குவமான பாடம் பல பயில்ந்திடவே பல்லுள்ளம் பரவட்டும் -உன் பேனா முனை! சந்தேகக் கணைகளை களையட்டும்-உன் பேனா முனை! சரித்திர வரலாற்றை படைக்கட்டும்-உன் பேனா முனை! தஃவாக் களமதிலே தவழட்டும்-உன் பேனா முனை! தடைகள் பல தாண்டியே உயரட்டும்-உன் பேனா முனை! சமூகத்தின் எழுச்சிக்காய் சமாதான விடிவிற்காய் சலிக்காமல் உழைக்கட்டும் சரியான தருணமதில் உள்ளக்கிடக்கைகளை உரசிப் பார்க்கும் ஆயுதமாய் மாறட்டும் உன் […]

மரணபயம்

0 Comments

மரண பீதியதில் மனதில் பல சுமைகளுடன் கொரோனா வைரஸதில் மரணமதை நீர் தேடி மரத்த உடல்களுடன் நிற்கும் உறவுகளே! உங்களுடன் ஓர் நிமிடம்! தொற்றுநோய் நீர் கண்டு தொலைத்திடாதீர்-ஈமானதை! இறைவன் விதியெதுவோ-அதுவே இம்மியளவும் இடரின்றி இனிதாய்-எமை வந்தடையும் ஏடுகளும் காய்ந்தன எழுதுகோல்களும் உயர்ந்தன எமக்கான தருணமதில் அடைந்திடுவோம்-எம்மிடமதனை! முயற்சிகள் பல நாம் செய்து முழுமையான தவக்குலதை முழு உலகின் அதிபதியிடம் முழு மனதுடன் சாட்டிடுவோம்! கொரானாவால் மரணமெனில் அதுவே எமை வந்தடையும் அமல்கள் பல செய்திங்கு அடைந்திடவே […]

முஸ்லிம் சமூகத்தின் தேவை!

0 Comments

இலங்கை நாட்டிலே சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமே! எனினும் அவ் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் அனைவரும் உணர்ந்த ஓர் விடயமே “ஒவ்வொரு துறையிலும் நம் முஸ்லிம் சமூகம் போதியளவு கால்பதிக்க வேண்டும்.” என்பதாகும். இதனையே இஸ்லாமும் வலியுறுத்துகின்றது. அதாவது சமூகத்தில் துறை சார்ந்த அறிஞர்களை உருவாக்குவதை இஸ்லாம் பர்ளு கிபாயாவாக நோக்குகின்றது. இக் கடமையை அச் சமூகத்தில் உள்ள எவரும் செய்யாதுவிடின் அது […]

அன்றும் இன்றும் எம்முள்ளம்…

0 Comments

இறையோனின் இல்லமதில் பாங்கோசை குரலதிலே லயித்த எம்முள்ளம் – அன்று இசையெனும் சதிவலையில் சாத்தானின் தூண்டுதலில் சரிவதுதான் ஏனோ? – இன்று ஸஹாபாக்கள் பலரதின் பண்பான சரிதையதில் பூரித்த எம்முள்ளம் – அன்று சினிமா நடிகர்களின் சீர்கெட்ட காட்சிதனில் மூழ்குவது ஏனோ? – இன்று மாலை உதயமதில் மறையைப் புரட்டிட விரைந்த உள்ளம் – அன்று மஃரிப் ஆனதும் சீரியல் பக்கம் செல்வது ஏனோ?- இன்று கூட்டான வாழ்வுதனை கூடியே வாழ்ந்த நாம் – அன்று தனிமையெனும் […]

இதுவும் ஓர் பாடமோ?

0 Comments

கண்காணா வைரஸதை கணப்பொழுதில் பரவச் செய்து கருணையாளன் உணர்த்திட்டான் கற்றுணர பல் பாடமதை! முகத்திரை வேண்டாமென்று அகற்ற சொன்ன உலகமது-அதை அணியாது வீட்டை விட்டு வெளியேறா என்று சொல்லும் தருணமிது ஜீரணிக்க முடிகிறதா?? ஒருவர் செய்த செயலுக்காய் ஓர் சமூகமே குற்றவாளிக் கூண்டதனில்-அன்று ஒடுக்கிய பலருக்கு ஓரிறைவன் உணர்த்திட்டான் உண்மையான நிலவரத்தை-இன்று சுத்தமெனும் ஸுன்னாவை போதித்த இஸ்லாமது-இன்று சுகாதார மேம்பாடாய் சுழல்கிறது-உலகமதில்… அருள்மிகு மார்க்கமதை நமக்களித்த இறைனோனிற்கு அளித்திடுவோம் நன்றி பல அடைந்திடுவோம் அவனன்புதனை! இறைவன் விதித்த […]