விவாகரத்துகள் ஏன் துரிதமாக நிகழ்கின்றன?

0 Comments

விவாக வாழ்வு தம்பதியர்கள் இருதரப்புக்கும் அல்லது ஒரு தரப்புக்கு பொருந்தி வராத போது நிகழும் மோசமான ஒரு விடயமாக விவாகரத்து அமைந்துள்ளது. பலபோது அது பாதிக்கப்பட்ட ஒரு தரப்புக்கு மகிழ்வையும் அடுத்த தரப்புக்கு விடுதலையையும் பெற்றுக்கொடுப்பதாக அமைகிறது. எப்போதும் நெருக்கடியுடன் வாழ்வில் புதையுண்டு கிடைக்காமல் புதிய வாழ்வு ஒன்றின் பால் மனித உள்ளங்களை நகர்த்த இறைவன் வைத்துள்ள நியாயமான சுதந்திரமான ஒழுங்கு முறை தான் விவாகரத்தும் அதற்கான ஒழுங்குகளும். ஆனால் அதற்கான இறுக்கமான ஒழுங்கு முறைகள் விதிகள் […]

ரமழான் சிந்தனை 1.

0 Comments

ங சட உலகிற்கும் ஆன்மீக உலகிற்குமிடையிலான போராட்டத்தை முடுக்கி விட்டுள்ள ரமழான். மற்றுமொரு ரமழான் எம்மை வந்தடைந்துள்ளது. இது அருள் நிறைந்த நாட்களின் தொகுதி. ரமழானின் ஒவ்வொரு பொழுதும் பயனுள்ளவை. வளம் நிறைந்தவை. முதலில் நாம் அதனை முழு மனதுடன் ஆன்மீக தயார் நிலையுடன் மகிழ்வாக வரவேட்கின்றோம். அதன் பாக்கியங்களை பெற ஆசை வைக்கின்றோம். ரமழானின் பகல் காலங்களில் நோன்பிருந்து இராக்காலங்களில் இறைவனை நின்று வணங்குகின்றோம். தியாகமும் பொறுமையும் கடந்து இறைவனை மகிழ்வித்து நாமும் இன்பம் காண்கின்றோம். […]

உலக நாகரிக வளர்ச்சியின் முன்னோடிகள்…

0 Comments

நூல் கடந்த ஒரு சிறு வாசிப்பு உலக வரலாற்றின் போக்கில் கிழக்குலகிற்கும் மேற்குலகிற்கும் இடையில் வரலாற்று வேர் கொண்ட போராட்டமும் முரண்பாடும் தொடர்ந்தும் நிலவி வந்துள்ளது. அதன் வளர்ச்சியடைந்த, திட்டமிடப்பட்ட வடிவமாக அது இஸ்லாமிய உலகிற்கும் மேற்குலகிற்கும் இடையிலான முறுகலாக முரண்பாடாக மோதலாக வடிவெடுத்துள்ளது. வடிவமைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் குரூரமான நேரடி விளைவுகளாக இஸ்லாமிய அறிஞர்களின் புலமைத்துவ, அறிவு ஜீவிதம் ததும்பும் காத்திரமான அறிவியல் பங்களிப்புக்களை புறக்கணித்து, புதைத்து, மூடுண்டசெய்து இருட்டடிப்புக்கும் இழுபறிக்கும் உள்ளாக்கி இஸ்லாத்தையும் […]

மௌனப்பண்பாடு

0 Comments

இது போலோ ப்ரைரே எனப்படும் ஒடுக்கு முறைக்கு எதிராக அறிவுபூர்வமாக கிளர்ந்தெழுந்து மக்களை விளிப்புணர்வுக்குற்படுத்தியவரின் பயன்தரு சிந்தனை. சமூகத்தளத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்ற அழுத்தம் நிறைந்த நெருக்கடிகளுக்குள்ளால் வாழும் மனிதர்கள் அவலத்தையும் விழுங்கிக்கொண்டு அடங்கி அடக்கி வாசிக்கவேண்டும். பேசா மடந்தைகளாக வாய்மூடி மௌனம் காக்கவேண்டும். அதிகார வர்க்கம் விரும்புகின்ற மானசீக கெடுபிடி தான் இது. ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சமூக குழுமத்தின் கேவலமான பரிமாணம் உச்ச நிலையில் எழுகின்ற அதீத பய உணர்வு மேலிடுவதும் தனிநபரையும் […]

கல்விசார் தொழிற்சங்கப்போராட்டங்களும் ஆசிரியர் வேலைபகிஷ்கரிப்பும்

0 Comments

பின்னோக்கியதான ஒரு பார்வை கடந்த மாதம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாடு தழுவிய ரீதியாக ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு தமது பக்கம் உள்ள நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர். நியாயமாக நோக்காத ஒருசிலர் முண்டியடித்துக்கொண்டு ஒட்டு மொத்த பழியையும் ஆசிரியர்கள் மீது திணித்து முதலைக்கண்ணீர் வடித்தனர். ஆசிரியர் தரப்பு நியாயங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கினால் அவர்கள் தமது பணியில் மன நிறைவை வெளிக்கொணர்ந்து விளைதிறன் வினைதிறன் சகிதம் பணியாற்ற முடியாதளவு நடைமுறை சிக்கல்களை அன்றாடம் சந்திப்பது அரசுக்கும் சமூகத்துக்கும் உணர்த்தப்படவேண்டிய […]

அறிவைத்தேடி பயணித்தல் கற்காலத்திலும் நெட்காலத்திலும்

0 Comments

மனிதனது வாழ்வை ஒழுங்கமைப்பதில் வாசிப்புக்கு மகத்தான காத்திரமான பங்களிப்பு உள்ளதால் தான் மனித வாழ்வை சீரமைத்து சமூகக்கட்டமைப்பை ஒழுங்காக்கி சமூகமாற்றத்தை ஏற்படுத்த வந்த இறுதி இளைவேதமான புனித அல்குர்ஆன் “வாசிப்பீராக” என்ற போதனையுடன் ஏவலுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது அறிவு இறைவிசுவாசியின் காணாமல் போன செல்வம் அதை எங்கு கண்டாலும் தேடிப்பெற அருகதையும் தகுதியும் உள்ளவன் அவன் என்பது நபிவாக்கு. அறிவு ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பிரவாகித்து வெடித்து பலகோணங்களில் சிதறும் யுகத்தில் வாழ்கிறோம். நபிமொழிக்கலை ஆய்வாளர்கள் திறனாய்வாளர்கள் […]

சமகால கல்வி நிலையை உற்று நோக்கி………

0 Comments

காலத்துக்கு பொருத்தமானதும் பொருத்தமேயற்றதுமான நியாயப்பாடுகள் குன்றிய சிலவும் நவீன கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதை முற்போக்கான கல்வியியலாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் ஒரே எடுப்பில் மறுதலிக்க முடியாது. குறிப்பாக சிறுவர் கல்வி மற்றும் கலைத்திட்டம் இத்தகைய பன்மைத்துவ அணுகுமுறைகளை வேண்டிநிற்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களை ஒன்றுமேயறியாத அப்பாவி பாப்பாக்களாக தகவமைக்கமுனைவது முறைகேடானது. இன்றைய சிறார்கள் முன்னைய சிறார்கள் போலன்றி மிகவுமே புத்திசாலிகளாக திறன்வாய்ந்தவர்களாக சிந்திப்பவர்களாக வினாத்தொடுப்பவர்களாக உள்ளனர் அவர்களை பிரம்பால், ஏச்சால், பேச்சால், அதட்டலால், மிரட்டலால், பயமுறுத்தலால், அதிகாரத்தால், அடக்கமுனைவது ஆபத்தானது. இன்றைய கலைத்திட்டங்கள் […]

ஆன்மீக வாழ்வு உள்ளத்தை உயிர்ப்பித்தல்

0 Comments

மனிதன் உடலோடு அறிவையும் ஆன்மாவையும் பெற்ற விசேட படைப்பு. உடல் பலவீனம் அவனுக்கு ஆரோக்கிய இழப்பை உண்டு பண்ணி அவனை நோயாளியாக்கி விடுகிறது. அறிவுப்பலவீனம் அவனது புத்தியில் பேதலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆன்மாவின் பலவீனமும் உறங்குநிலையும் அவனது ஆன்மீக வாழ்வில் மந்த நிலையை, பின்தங்கிய நிலையை தோற்றுவித்து இறை உறவு அறுபட்டு சைத்தானிய உணர்வு மிகைத்து பாவங்களில் மையல் கொள்ளவும் அதில் பற்றுக்கொண்டு மூழ்கி விடவும் காரணமாகி விடும். பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அறிவியலுக்கும் தொழில்நுட்ப சாகசங்களுக்கும் […]

இது பாடசாலைகளிடம் பிள்ளைகளை ஒப்படைக்கும் காலம்

0 Comments

எமது சமூகம் பாடசாலைகளை தெரிவு செய்வதில் உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்புவதில் பிள்ளைகளின் கல்வியில் எதிர்காலத்தில் ஆளுமை விருத்தியில் சமூக மாற்றத்தில் எந்தளவு கரிசனை காட்டுகிறார்கள்?? பெரும்பாலும் Single parent(s) வடிவத்தில் தான் பாடசாலைக்கு அறிமுகமாகிறார்கள். உரிய கூட்டங்களுக்கு சந்திப்புக்களுக்கு வருகை தருவது மிகவுமே குறைவு. அதிலும் தாய்மார்கள்தான் அதிகம் பிரசன்னமாகின்றனர். வகுப்பாசிரியரோடோ பாடசாலை சமூகத்தோடோ மிகவும் அரிதான அபூர்வமானஅத்திபூத்தாற் போன்ற தொடர்பு. எத்தனையாம் வகுப்பு /பிரிவு என்பது தெரியாது. பிள்ளையின் வகுப்புக்கூட எங்கு உள்ளதென்றும் தெரியாது. […]