நிழலாடும் நினைவுகள்

0 Comments

குளிர் காற்று இதமாக மேனியை வருடிச் செல்லும் ரம்மியமான காலைப் பொழுதில் நதிக்கரையில் நடை பயின்று விட்டு வீடு வருகின்றேன். எதேச்சையாக என் கண்கள் நாட்காட்டியை நோட்டமிடுகின்றன. இன்று மே இரண்டாம் திகதி. நான் என் வாழ்க்கை புத்தகத்தின் முக்கியமான ஒரு பக்கத்தை தொலைத்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதை நினைக்கையில் என்னையும் மீறி என் கண்கள் குளமாகின்றன. நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் சென்று விடுகின்றேன். அதீக், என் திருமண வாழ்வில் எனக்கு கிடைத்த […]

அஜினமொடோ சுவையூட்டியின் மறைந்துள்ள பக்கம்

0 Comments

உணவு மனிதனால் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடிப்படைத் தேவையாகும். உணவு இன்றி உயிர் வாழ்வதும் சாத்தியம் அல்ல. நம் முன்னோர்கள் ஆரம்ப காலங்களில் ஆரோக்கிய உணவுகளை உண்டதன் காரணமாகவே நோய்கள் இன்றி சுகதேகியாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று காலச் சுழற்சிக்கு ஏற்றாற் போல் உணவு முறையும் மாறிக்கொண்டு வருகிறது, என்பதே நிதர்சனம். நவீன காலத்து மக்கள் உடற் சத்துக்களை விட ருசிக்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் நாக்குகளும் ருசிக்கே அடிமை ஆகி விட்டது எனலாம். அவ்வாறே […]

காலம் பொன்னானது

0 Comments

இறைவன் எமக்களித்த விலை மதிக்க முடியாத ஒரு பரிசுதான் காலம். காலத்தை சரிவர முறையாகப் பயன்படுத்துபவர்கள் தான் ஞாலத்தில் சிறந்து விளங்குவர். சரியான முறையில் காலத்தை பயன் படுத்தாத சிலர், காலத்தின் மீது பழி சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அடுத்த நொடிகள் நிச்சயமற்றவை, என்பதை கருத்திற் கொண்டு இருக்கும் காலத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். காலம் பொன்னிலும் மேலானது. இழந்து விட்ட பொன்னை மலையளவு செல்வம் கொடுத்தேனும் மீட்டி விடலாம். ஆனால் எவ்வளவு செல்வம் திரட்டினாலும் கடந்து […]

ரமழான் பிரியாவிடை

0 Comments

புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் கண்ணியம்மிக்க ரமழானே கண்ணிமைக்கும் வேகத்தில் நீ மறைய நானோ கண்ணீர்ப்பூக்கள் பறிக்கிறேன் ஊன், உறக்கம் தியாகம் செய்து ஊக்கமுடன் நல்லமல்கள் செய்ய ஊன்று கோலாய் இருந்த நீ ஊதிய தூசென பறப்பது ஏனோ பட்டினி என்பதை பகட்டாய் அறிய வைத்தாய் பத்துக்கள் மூன்று அதை முத்துக்களென உணர வைத்தாய் நல்லமல்களை நாசமாக்கும் தொல்லை தரும் ஷைத்தானை உன் பொன் வரவால் தற்காலிகமாய் சிறை கைதியாக்கினாய் சுவன சோலைகள் அதை அலங்கரித்து புதுப்பித்தாய் நரக […]

அப்பா

0 Comments

குழந்தைகளின் முதல் ஹீரோக்கள் அவர்களின் அப்பாக்களே.எனக்கும் கூட. ஈராறு மாதங்கள் அன்னை நம்மை சுமந்து பெற்றெடுத்தாலும் தன் ஆயுள் வரை அன்னையையும் பிள்ளைகளையும் சுமப்பவர் என்றால் அது அப்பா தான். நாம் வாழ தம் வாழ்க்கை , இளமை இரண்டையும் தியாகம் செய்யும் ஒரு உன்னதமான உயர்ந்த ஜீவன் என்றால் அது அப்பா தான். ஒரு பிள்ளைக்கு தன் தன் தந்தையை விட சிறந்த பாதுகாவலரை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாது என்றே சொல்லலாம். அப்பாக்களுக்கு பல முகங்கள் […]

வீரப்பெண்ணே எழுந்திரு

0 Comments

வீரப்பெண்ணே எழுந்திரு வீர நடை கொண்டு வீண் பேச்சுக்கள் அதை உன் நாவினின்றும் எடுத்தெறி பெண்ணியம் அதற்கு கண்ணியங்கள் கிட்டும் வரை போராடு சமத்துவம் என்பது இங்கில்லை நீ எழுந்து போராடும் வரையிலும் கல்யாணச் சந்தைகளில் காட்சிப் பொருளாகும் நீ இன்றைய உலகச் சந்தைகளில் அறிவுப் பொருளாய் மிளிர்ந்து விடு நாளைய வெற்றிப் பதிவுகள் உனதாகலாம் அடுப்பங்கரைக்குள் அடிமையென வாழாதே அண்டவெளிகளுக்குள் மங்கையர் பெயர் பொறிக்கும் காலம் இது போலிச் சடங்குகள் அதை தூக்கி எறி இந்தக் […]

சோமாலிய சோகங்கள்

0 Comments

அங்கொன்றும் இங்கொன்றும் நிழலாடும் ஊசல்களாய் நிஜ வாழ்க்கை தொலைத்துவிட்ட நிம்மதியற்ற உள்ளங்கள் நிரந்தரமாய் வாழும் இடம் அது இறைவன் அனுப்பிய வறுமைக் கப்பல் நிரந்தரமாய் நங்கூரமிடப் பட்ட சோமாலிய துறைமுகம் அது ஓட்டைக் குடிசைகளில் ஒட்டுத் துணிகளுடனும் வரண்ட நாக்குகளுடனும் வலுவிழந்த தேகத்தினர் வாழும் தேசம் அது வறுமைக் கோட்டின் விளிம்பில் ஊனின்றி போராடி உயிரிழக்கும் பிஞ்சுகள் உறைய வைக்கும் நெஞ்சங்களை துப்பாக்கி முனைகளுக்குள் துட்டுக்களை அடகு வைக்கும் வல்லரசுகள் தட்டுக்களேந்திய சிறார்களை கண்டு கொள்ளாதுர்ப்பாக்கியம் ஏனோ […]

விடியல்

0 Comments

கரு மேகங்கள் வானை சூழ்ந்து வருகின்ற அந்திப் பொழுது அது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரலாம் என்பதன் முன்னறிவிப்பாக எனக்கு தோன்றிற்று. நானோ சிந்தனைகள் விண் தொடர ஒற்றையடிப் பாதையினூடு நடை பயின்று கொண்டிருக்கிறேன். திடீரென கைப் பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, எடுத்துப் படித்தேன் அதில், “பல்கலைக் கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படும்” என்றிருந்தது. அப்பொழுதே வந்தது கொரோனா மீது தீராத கொலை வெறி எனக்கு. நானோ உயர் தரம் எழுதி ஒன்றரை […]

அம்மா

0 Comments

அம்மா கைப்பட தீட்டுகிறேன் சுழன்றோடும் காலச் சக்கரத்தில் சுவடுகளாய் என் மனதில் பதிந்துள்ள நினைவுகளை என் விழிகளில் அழுதிட இமைகளில் சிரித்திட உணர்வுகளில் உறைத்திட இன்னிசையை இரசித்திட கடவுளால் பரிசளிக்கப்பட்ட இனிய தேவதை நீதான் அம்மா அகவை பல கடந்தும் ஆவல் கொள்கிறேன் மீண்டும் உன் மடியில் மழலையாக தவழ்வதற்கமெழுகென உன்னை உருக்கி மெதுவாக என்னைச் செப்பனிட்டு என்னை சுடராய் மாற்றி விட்டாயே நான் சிரித்தால் உன் உதடுகள் சிரிக்கும் நான் அழுதால் உன் கண்ணில் தூரல் […]