திசை மாறும் வாழ்க்கை

0 Comments

எதிர்ப்பாராமல் திசை மாறும் வாழ்க்கைப் பயணம் திடுமென நிகழும் திருப்பங்கள் சில சமயம் தித்திக்கும் சில சமயம் திண்டாட்டம் முடிவுகள் எடுக்க வேண்டிய முக்கிய நிமிடங்கள் – முடிவு சரியா தவறா படைத்தவன் பக்கம் பாரம் சாட்டும் உள்ளம் யாதார்தத்தைப் புரிந்துகொள்ளும் தருணங்களில் தேடாமல் கிடைத்திடும் சில சொந்தங்கள் சொல்லாமலே விடைபெறும் சில சொந்தங்கள் இனம்புரியாத உணர்வுகள் இதயத்தை சூழ மயக்கமா மகிழ்ச்சியா தெரியவில்லை சில நேரம் அலைப்பாயும் சில நேரம் அல்லாடும் நெஞ்சம் வறண்ட பாதைகள் […]

மக்காவின் மைந்தர்

0 Comments

மக்காவில் மலர்ந்தார் மாந்தர்கள் போற்றும் மாநபி. அறியாமை எனும் இருள் அகற்றி அறிவொளி பரப்பினார் அவனியிலே. அன்னையின் அரவணைப்பில் ஆறு வயது வரை அகிலத்தை அறிந்தார் அண்ணல் நபி உண்மையும் நம்பிக்கையும் உயிராக கொண்டு ஊரார் போற்றும் உத்தமர் ஆனார் – உம்மி நபி தனிமையில் தவமிருந்து சமூகத்தின் கறைபோக்க கையேந்தினார் – காத்தமுன் நபி நாற்பதில் நபி பட்டம் பெற்று ஏகனை ஏற்க அகிலத்திற்கு ஏவினார். நற்பண்புகளை நடத்தைகளாக்கி இறைவனின்பால் இதயங்களை ஈர்த்தார் – இறைநேசர். […]

வாசிப்பை நேசிப்போம்.

0 Comments

“வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்துகிறது.” நிச்சயமாக ஒரு மனிதன் முழுமையடைய வாசிப்பு அவனுக்கு உதவுகிறது. வாசிப்பு எமது ஆன்மாவின் பசியைப் போக்குகிறது. அதனை வளப்படுத்துகிறது. ஆனால் நாம் எம் வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையோ நேரத்தையோ ஆன்மாவுக்கு கொடுக்க மறந்து விடுகிறோம். உடல் மட்டும் அல்ல உள்ளமும் தூய்மைப்பெற வேண்டும். இன்று வாசிப்பும் நவீன மயமாகிவிட்டது. எல்லோர் கையிலும் கையடக்க தொலைபேசி (Smart phone) இருப்பதால் எந்தவொரு விடயத்தையும் அதனூடாகவே அறிந்து கொள்ள முற்படுகின்றனர். பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பது […]

மனிதத்தோடு மரணித்திடுங்கள்

0 Comments

சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதனை வாழவைப்பதும் சமூகமே , அதே மனிதனை அடையாளம் தெரியாமல் அழிப்பதும் சமூகமே. மனிதன் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், அவன் செய்த தவறை சொல்லிச் சொல்லியே இந்த சமூகம் அவனை தாழ்த்தி விடுகிறது. தான் செய்யும் தவறை, தப்பை மறைப்பதும் அடுத்தவர் செய்வதை பகிரங்கப்படுத்துவதுமே இங்கே இருக்கும் சிலரின் கீழ்த்தரமான பண்பாகும். ஒரு மனிதன் செய்யும் குற்றத்தை தடுத்து அவனை அதிலிருந்து […]

காதலர்களே!

0 Comments

கண்கள் மோதி காதலில் விழுந்து காயங்கள் தேடும் காதலர்களே! பகட்டான வேஷம் போலியான பாசம் கண்டவுடன் தேசம் சுற்றும் காதலர்களே! முத்தங்கள் பரிமாறி முகவரிகள் வழிமாறி பாதைகள் தடம்மாறி தடுமாறும் காதலர்களே! அவசரத்தில் அலைந்து அத்தனையும் முடிந்து ஒப்பனைகள் கலைந்து அவதியுறும் காதலர்களே! காதல் என்ற பெயரில் காலங்கள் கரைய கனவுகள் கலைய கண்ணீர் சிந்தும் காதலர்களே! மதியிழந்து மாயைகளில் மயங்கிடாமல் உங்கள் புனிதமான காதலை உரிமையுள்ள உங்களுக்கான துணையுடன் பகிர்ந்திடுங்கள் கண்ணியமாய் வாழ்ந்திடுங்கள் காதலர்களே! Rushdha […]

காந்த கரு விழிகள்

0 Comments

அந்திசாயும் நேரம் சாலையோரமாக ஒத்தையாய் நடக்கையிலே கருமேகங்கள் சூழ இடியின் மேளதாளத்துடன் மின்னலும் சேர்ந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வர – கையில் குடை இல்லை. கொட்டும் மழையின் காட்டம் நிற்கும் வரை பாதையோர தேநீர் கடையில் ஒதுங்கினேன் – அந்தநேரம் கண்ணாடி சாளரத்தின் வழியே ஓடும் நீர் துளிகளின் ஊடே அந்த இரு கண்கள் – அல்ல காந்தங்கள் ஏதோ சொல்லி சென்றது திடுக்கிட்டு திரும்பி பார்க்கிறேன் காணவில்லை அந்தக் கருவிழிகளை – மழை நின்றும் […]

ஏழையாய் பிறந்து விட்டேன்

0 Comments

ஏழு தினமும் போராட்டத்தில் ஏட்டுக்கல்வி எட்டாத தூரத்தில் போராடி தோற்றுவிட்டேன் யார் செய்த சதி? ஏன் இந்த கதி? ஏழையாய் பிறந்து விட்டேன். ஆசைகளை அடக்கி விட்டு கனவுகளை கலைத்து விட்டு கால் வயிறு கஞ்சிக்கு கதவோரமாய் கையேந்துகிறேன். எட்டிப்பார்ப்போர் சிலர் ஏறி மிதிப்போர் பலர் பரந்த இந்தப் பாரினிலே சுருங்கிப்போன மனித மனங்கள் ஏழை என்று எள்ளிநகையாடி எடுத்தெறியும் பிம்பங்கள். கிழிந்த ஆடை காய்ந்த உணவு நடைப்பாதை வீடு இதுவே நம் பாடு. எட்டுத்திக்கும் எட்டிமிதிக்கும் […]

ஒருத்தன்

0 Comments

வஞ்சி அவளின் ஆடி அசையும் கொடியிடையில் கோலமிட நினைத்தான் – ஒருத்தன் ஒய்யாரமாக ஒடிந்து செல்லும் அவள் அழகை பருகிட நினைத்தான் – ஒருத்தன் பளிச்சென்ற அவள் பால்முகத்தை ஏலமிட நினைத்தான் – ஒருத்தன் கள்ளமில்லா அவள் உள்ளத்தை களவாட நினைத்தான் – ஒருத்தன் அந்தோ பரிதாபம் கஞ்சி வடிக்க காசு இல்லாத அவள் வறுமையில் துணை நிற்க ஒருத்தனும் இல்லை! Rushdha Faris South Eastern University of Sri Lanka.

அவள் ஒரு அநாதை!

0 Comments

அன்பிருந்தும் அம்மா இல்லை அக்கறையிருந்தம் அப்பா இல்லை பாசமிருந்தும் சகோதரங்கள் இல்லை அறிவிருந்தும் ஆசான் இல்லை நல்ல குணமிருந்தும் நட்பு இல்லை பண்பிருந்தும் பக்கத்தில் யாருமில்லை வெற்றியில் பங்குகொள்ள தோல்வியில் தோள்தர சொந்தமொன்றில்லை கண் எட்டும் தூரம் வரை உலாவித்திரியும் மனித உருவங்கள் அங்கே அவளுக்கென்று யாருமில்லை விரிந்த கடல் பரந்த வானம் வீசும் தென்றல் மணக்கும் மலர்கள் கொட்டும் நீர்வீழ்ச்சிகள் சலசலக்கும் ஆறுகள் வளைந்த வானவில் வட்ட நிலா இயற்கை அன்னையின் அன்பளிப்புகளே அவள் அனந்தர […]