குஷிநகர் புனிதத் தலத்தில் விமான நிலையம் பிரதமர் மோடியினால் திறந்துவைப்பு

இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முக்கியஸ்தர்களுக்கு இந்திய உயர்மட்ட குழுவினரால் பெருவரவேற்பு புத்தர் பெருமானின் புனித சின்னங்களுடன், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் உட்பட 100 பௌத்த குருமாரும் பயணத்தில் பங்கேற்பு புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணமடைந்த புனிதம் நிறைந்த தலத்தைப் பார்வையிட வருகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்திரிகர்களுக்கு வசதியாக, உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான …

கண்டெடுத்த தங்கச் சங்கிலியை பொலிஸில் ஒப்படைத்த சிறுவனின் முன்மாதிரி

பேரின்பராஜா சபேஷ் மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சமூகத்துக்கான முன்மாதிரியைக் காண்பித்துள்ளார். மட்டு, மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இராசதுரை தனுகரன் என்ற இச் சிறுவன் கண்டெடுத்த தங்க ச்சங்கிலியை, உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரி, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்தவிடம் நேற்று (20.10.2021) கையளித்தார். இதன்போது பிரதேச கிராம சேவை …

மூன்றாவது தடவை 1.0 பில்லியனை தாண்டிய ஆகஸ்ட் மாத ஏற்றுமதி

அதிகரித்த நிதியியல் உட்பாய்ச்சல்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்திய வேளையில், வணிகப்பொருள் ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டன என்று மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கின்றன. இருப்பினும், இறக்குமதிச் செலவினத்தின் அதிகரிப்பானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டு ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2021 ஆகஸ்ட்டில் சில உத்வேகத்தினைத் திரட்டி, இலக்கங்கள் குறைவாகக் …

2013 முதல் எரியும் முஸ்லிம்களின் வீடுகளும், உடல்களும் – சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை குழுவை வெளிப்படையாக குறிவைக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (18.10.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எரியும் வீடுகள் முதல் எரியும் உடல்கள் வரை இலங்கையில் முஸ்லிம் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை, தேசியவாதத்தின் மத்தியில் 2013 முதல் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வின் …

தல்கஸ்பிடியவில் இரத்ததானமுகாம்

அரனாயக தல்கஸ்பிடியவில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை 2021.10.16 தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தல்கஸ்பிடிய தாஜ்மஹால் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்இரத்ததான முகாமிற்கு இனமத பேதமின்றி பெருந்திரளான ஊர்மக்கள் கலந்துகொண்டு இந்நற்பணியில் இணைந்துகொண்டமை உண்மையில் பாராட்டத்தக்கது. உதிரம் கொடுத்து உயிர்காக்கும் நல்உள்ளங்களுக்கு தாஜ்மகால் நலன்புரிச்சங்கம் மரக்கன்றை பரிசாக வழங்கி பூமி காக்கும் பணியிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பின்த் அமீன்

ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு அரசாங்க நிதி குழு அனுமதி

ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு அரசாங்க நிதி குழு அனுமதி இந்நாட்டுக்கு பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டுவரக்கூடிய 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையில் கடந்த 11 ஆம் திகதி முற்பகல் இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க செயல்நுணுக்க …

அரசிடம் உள்ள பணமும் இல்லாத பணமும்

இப்னு அஸாத் மொட்டுவை நேராக்க கிராமத்துடன் உரையாடலுக்கு 7,124 கோடி, ஆனால் ஆசிரியர் சம்பளம் கொடுக்க பணம் இல்லை. எண்ணெய் கடனை தீர்க்க பணம் இல்லை. ஆனால் கடன்பெறுவதற்கு கம்மன்விலவுக்கு 3552 கோடி கமிஷன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திடம் உள்ள பணம் தொடர்பிலும் இல்லாத பணம் தொடர்பிலும் பல ஆவணங்களுடன் விளக்கமொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கிராமத்துடனான உரையாடல் கிராமத்திற்கு பணம் விநியோகிக்க அரசு தயாராக உள்ளது. அது ஒரு தேர்தல் அருகே வரும் என்பதற்கான …

மாவனல்லை ஸஹிராவில் இரத்த தான நிகழ்வு

மாவனல்லை ஸஹிராக்கல்லூரியின் நூற்றாண்டை சிறப்பிக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக இரத்த தான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் 2021.10.12 செவ்வாய்க்கிழமை நடந்தேறியது. பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் வைத்தியர் சங்கம் பாரிய ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், மாணவிகள் சங்கம் இந்நிகழ்வை நடாத்தி முடிக்க உறுதுணையாய் செயற்பட்டதுடன் இந்த உதிரம் கொடுக்கும் நற்பணியில் இணைந்த ஒவ்வோர் நல் உள்ளங்களுக்கும் பாடசாலை பழைய மாணவிகள் சங்கம் மரக்கன்றை பரிசாக வழங்கி மர …

ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைதான ரிஷாட் பதியுதீன் எம்.பி சுமார் 6 மாதங்களின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் தொடரப்பட்ட வழக்கு, இன்று கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த …

பாடசாலைக்கு வந்த யானைகள்

புத்தல மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன. இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை முடிவுகள் – 2021.10.11

2021.10.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும், அடையாளங் காண்பதற்கும் பொருத்தமான பொறிமுறையைச் சமர்ப்பித்தல். இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பான சட்டம் வகுத்தல். தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதுச் சட்டம். குடியியல் வழக்குக் கோவை (101 ஆவது அத்தியாயம்) திருத்தம் செய்தல். 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் 2021.10.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் …

அமைச்சரவை முடிவுகள் – 2021.10.05

05.10.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கான புவிசார் வளங்களைப் பயன்படுத்தல். ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நியூசிலாந்து மெஸ்ஸி (Massey University of New Zealand) பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம். ‘கிராமத்திற்கு தொடர்பாடல்’ தேசிய கருத்திட்டம். கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டத் தொகுதிக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணி எடுத்தல். ஏற்றுமதி சந்தைக்கான மென்பொருள் அபிவிருத்தியை மேற்கொள்ளும் போது தகவல் தொழிநுட்பங்கள் தொடர்பான சேவைகள் வழங்கும் …

ஒரே நாளில் விலை அதிகரிப்பு செய்யப்பட்ட அத்தியவசிய பொருட்கள்

இராஜதுரை ஹஷான் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை  நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது. அத்தியாவசிய …

புலிகளின் மீள் எழுச்சியை புலம்பெயர் தமிழ் சமூகங்கள் விரும்புகின்றன – பேராசிரியர் குணரத்ன

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு ((NIA) கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் செயலிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வாளரை சென்னையில் கைது செய்தது. இந்தப் பின்னணியில், சண்டே அப்சர்வர் பேராசிரியரிடம் ரோஹன் குணரத்ன அவர்களை பேட்டி கண்டது. பயங்கரவாதக் குழு 2009 ல் இலங்கையில் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும், சர்வதேச முன்னணியில் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக அவர் நம்புகிறார். Q: சென்னையில் இந்த வாரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் புலிகளின் …

மனநலமே பெருவரம்

உலகமனநல தினம் ஒக்டோபர் 10 தனித்து விளையாடும் பிள்ளையிடம் கொஞ்சநேரம் கொஞ்சல் பேச்சு இயந்திரமாய் உலா வரும் அம்மாவுக்கோர் அன்பு முத்தம் அந்திச்சூரியனாய் வீடேறும் அப்பாவிடம் ஒரு புன்னகை சில்லறைகளை கைகளுக்குள் சிறைவைக்கும் பாட்டியிம் கொஞ்சம் அன்பு வார்த்தைகள் இனிப்புக்ளை இனிதுவக்கும் தாத்தாவுடன் சிறு நடை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆர்வமாய் நலம் விசாரிப்பு தெருவோரக் குளிரில் சுருண்டு படுத்திருக்கும் முதியவருக் கொரு போர்வை யாசித்து திரியும் ஏழை கையில் ஓர் உணவுப் பொட்டலம் இதழ்பிரியா அவசரத்தில் ஒரு …

பணம் அனுப்புவதை இலகுபடுத்த மத்திய வங்கியின் புதிய செயலி

‘SL-Remit’ என்ற பணம் அனுப்பும் செயலியொன்றை இலங்கை மத்திய வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் முறையை இழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவிலான பண அனுப்பும் முறைகள், வழிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இலங்கைக்கென புதிய பண அனுப்பும் வழிகளை ஆய்வுசெய்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி குழுவொன்றினை நியமித்துள்ளது. இலங்கையின் அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் மற்றும் …

இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து பெறப்படும் – நீதி அமைச்சர்

இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைபு அறிக்கையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெறுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுக்கு வழங்குமாறு நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.எம். அலி சப்ரி பணிப்புரை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். குற்றவியல் நீதி முறைமையை மறுசீரமைப்பதற்கான ஆரம்ப கட்டமாக இப்பணிப்புரையை வழங்கிய …

60 நிமிடத்தில் விமர்சித்து, ஒரு நாளுக்குள் முடங்கிய வட்ஸ்அப் – 6 மணி நேரத்தில் வழமைக்கு

பேஸ்புக், வட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மீண்டும் வழமைக்கு உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ் எப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், காணொளி அழைப்பு போன்ற பல்வேறு வசதிகளை வட்ஸ் எப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் …

சமூக வலைத்தளங்கள் தீடீர் முடக்கம்

உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ் எப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், காணொளி அழைப்பு போன்ற பல்வேறு வசதிகளை வட்ஸ் எப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று (04) இரவு 9.30 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் திடீரென முடங்கியதால், …

ஊடகவியலாளர்களை CIDக்கு அழைக்கும் முறை – ஊடக அமைப்புகள் கண்டனம்

ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கும் போக்கைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் 6 ஊடக அமைப்புக்கள், இந்த நடவடிக்கை ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதுடன் அத்தகைய சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது என்றும் விசனம் வெளியிட்டிருக்கின்றன. ‘ஊடகவியலாளர்களை வேட்டையாடி ஊழல் வாதிகளைப் பாதுகாக்கும் முயற்சியைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்’ என்ற தலைப்பில் ஊடகத்தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் …

போட்டியோடு போட்டியிட நீங்கள் தயாரா?

BINTH AMEEN BA ( SEUSL) SLTS கோவிட் காலமதில் பாடசாலைகள் மூடப்பட்டு எல்லோரும் வீடுகளிலேயே அடைபட்டுள்ளதால் போட்டிகள் முடிவிலியாக வந்தவண்ணமே இருக்கின்றன.போட்டிகள் உண்மையில் நல்லவிடயமாய், திறமைகளுக்கு களமாய் இருந்தாலும் இன்றைய போட்டிகள் வெறும் பெயருக்காக நடாத்தப்படுபவையாக இருக்கின்றது என்பதே கவலைக்கிடமான செய்தியாகும். தற்கால போட்டிகள் திறமைகளை வெளிக்கொண்டுவர வழியமைக்கின்றதா என்றால் உண்மையில் கேள்விக்குறிதான். ஏனெனில் அவை திறமையை திரைநீக்கம் செய்ததோ, இல்லையோ லைக்களுக்கும் (like ,subscribe) சப்ஸ்கிரைப்களுக்குமே முன்னுரிமையளிக்கின்றன. இது உண்மையில் அவசரமாய் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய …

நாடு இன்று மீளவும் திறப்பு – புதிய சுகாதார வழிகாட்டல்கள் – 01.10.2021

சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு இன்று மீளவும் திறப்பு தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் மேற்படி வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க இன்றைய தினம் முதல் …

தல்கஸ்பிட்டிய கிராமத்தில் அர்ப்பணிப்பான சமூகசேவகர் எம்.ஐ.எம். தாஹா

என்.எம். அமீன் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தல்கஸ்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹும் தாஹா இப்ராஹிம் லெப்பை_ அம்ரத் பீபி தம்பதியரின் மூன்றாவது புதல்வராக 1942.04.25 ஆம் திகதி பிறந்தார். தனது சிறு வயதிலேயே தாயை இழந்ததனால் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி கல்வியைப் பெற்றார். அவர் தல்கஸ்பிடிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று, பின்பு திப்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சேர்ந்து சா.த பரீட்சையில் சித்தி பெற்றார். ஆரம்பத்தில் இவர் மலேரியா திணைக்களத்தில் …

தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்

இலங்கை மண் ஈன்­றெ­டுத்த தேச நல­னுக்­காக செயற்­பட்ட உன்­னத ஆளு­மை­களில் ஒரு­வ­ராக நளீம் ஹாஜியார் திகழ்­கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேரு­வளை சீனன்­கோட்­டையைச் சேர்ந்த முஹம்­மது இஸ்­மாயில், ஷரீபா உம்மா தம்­ப­தி­க்கு வாரி­சாக நளீம் ஹாஜியார் பிறந்தார். மிகுந்த வறு­மைப்­பட்ட குடும்பப் பின்­ன­ணியில் பிறந்து வளர்ந்த அவரால் ஐந்தாம் வகுப்பு வரை மட்­டுமே பாட­சாலைக் கல்­வியைத் தொடர முடி­யு­மாக இருந்­தது. இளம் வய­தி­லேயே சுய­மாக தொழில் செய்து உழைக்க வேண்­டிய நிர்ப்­பந்த …

வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேறு

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றின் படி, வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தெரிவித்தார். பரீட்சைக்குத் தோற்றிய மாணசவர்களுள் 80 சதவீதமானோர் க.பொ.த. உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். சித்தியடைந்தவர்களுள் ஏ.எப்.எப். ஆயிஷா பாஸி, எம்.எச்.எப். ஹப்ஸா ஹாபிழ்தீன், எம்.எம்.எப். ஹுமைரா மர்ஜான், எம்.எப்.எப். ஷஹீமா பைறூஸ் ஆகியோர் 9 பாடங்களிலும ‘ஏ” சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை …