கண்டெடுத்த தங்கச் சங்கிலியை பொலிஸில் ஒப்படைத்த சிறுவனின் முன்மாதிரி

பேரின்பராஜா சபேஷ் மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சமூகத்துக்கான முன்மாதிரியைக் காண்பித்துள்ளார். மட்டு, மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இராசதுரை தனுகரன் என்ற இச் சிறுவன் கண்டெடுத்த தங்க ச்சங்கிலியை, உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரி, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்தவிடம் நேற்று (20.10.2021) கையளித்தார். இதன்போது பிரதேச கிராம சேவை …

வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேறு

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றின் படி, வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தெரிவித்தார். பரீட்சைக்குத் தோற்றிய மாணசவர்களுள் 80 சதவீதமானோர் க.பொ.த. உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். சித்தியடைந்தவர்களுள் ஏ.எப்.எப். ஆயிஷா பாஸி, எம்.எச்.எப். ஹப்ஸா ஹாபிழ்தீன், எம்.எம்.எப். ஹுமைரா மர்ஜான், எம்.எப்.எப். ஷஹீமா பைறூஸ் ஆகியோர் 9 பாடங்களிலும ‘ஏ” சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை …

இலங்கையில் மீண்டும் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கையா?

ஞானசார தேரரினால் இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று ஊடக நேரலையொன்றில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு வாரம் கடந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கைக்குண்டு மீட்பு, மின்னஞ்சல் எச்சரிக்கை என்று சில சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு பரவுகின்ற இன்னொரு செய்தியே தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாகும். தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல்? நேற்றைய தினம் (28) கடற்படை அதிகாரிகள் குழுவினர், ஜா-எல போபிட்டியவிலுள்ள புனித நிக்கலஸ் தேவாலயத்திற்கு சென்று, குண்டுத் தாக்குதல் …

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 ஏக்கரில் எரிபொருள் களஞ்சியம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கையின் மூலோபாய ஆற்றல் மையமாக அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சமீபத்தில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவுடன் (HIPG) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. . உள்ளூர் நுகர்வு மற்றும் ஏற்றுமதியை எளிதாக்கும் சேமிப்பு முனையம் துறைமுகத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள குழாய் வழியாக துறைமுகத்துடன் இணைக்கப்படும். பெரும்பான்மையான பெட்ரோலிய பொருட்களை உள்ளூர் நுகர்வோருக்கு வழங்கும் அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம், இந்த திட்டத்திற்காக இலங்கை மகாவலி ஆணையத்திற்கு …

சிறைச்சாலையில் 56 பட்டதாரிகள்

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19,856 கைதிகள் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தண்டனையை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1,165 கைதிகள் க.பொ.தர உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் என்பதோடு, 3,845 பேர் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, தண்டனைப் பெற்று வருபவர்களில் 56 பட்டதாரிகளும் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தரம் 8 வரை கல்வி பயின்றுள்ள 7,352 கைதிகளும், …

முஸ்லிம் தனியார் திருமண விவகாரத்து சட்ட சீர்திருத்தப் பாதை

1951: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் 1929 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை ரத்து செய்தது. இந்த சீர்திருத்தம் எம்.டி. அக்பர், டி.பி. ஜெயா மற்றும் எம்.ஐ.எம். ஹனிஃபா ஆகிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. 1956 திருமணம் மற்றும் விவாகரத்து ஆணைக்குழு முஸ்லிம் மற்றும் பொது திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கிறது. ஆணைக்குழுவின் தலைவர் திரு A.R.H. கனேகரத்ன Q.C. செயற்பட்டார். 1972: பதிவாளர்-ஜெனரல், …

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல – நியுஸ்லாந்து அரசாங்கம்

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல என்று  நியுஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நியுஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்  குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பென்று தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது, இது ஒரு நம்பிக்கை, இனம் அல்லது கலாச்சாரம் சார்ந்த தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்டார். இன்று (03.09.2021) நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த அடிப்படைவாத கொள்கைகள் …

இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும்

சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்கள், எமது நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார். சீன பாராளுமன்றத்துக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்கும் இடையில் (31) நடைபெற்ற முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவின் மூன்றாவது …

இலங்கையில் பொருளாதார அவசர நிலை சர்வதேச ஊடக அறிக்கைகள் – பதுக்கல் நடவடிக்கை எனக்கூறும் அரச தரப்பு

இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது. மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும், வியாபாரிகளும் இணைந்து பதுக்கல் நடவடிக்கை மூலம் செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சர்வதேச ஊடக அறிக்கைகளுக்கான காரணம் என்ன? இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமுல் – எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு என (01.09.2021) நேற்றைய தினம் பல ஊடகங்கள் அறிக்கைகள் …

அமைச்சரவை முடிவுகள் – 30.08.2021

30.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் விதவைகள், தபுதாரர் மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு வழங்கல் இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்குமிடையே கப்பல் தொழில் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை அங்கீகரித்தல் (Certificate of Recognition) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் …

ஈஸ்டர் தாக்குதலை நல்லாட்சி அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது

எம். அமீனுல்லா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயவென நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது. அத்தீர்ப்பைத் திருத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கண்டி அஸ்கிரிய மகாவிகாரைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்த அவர்கள், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரான வண.வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரிடம் இது …

ஐபிஎல் இல் வனிந்து மற்றும் சமீரா ஒப்பந்தம்

ஐபிஎல் 2021 இல்விராட் கோலி தலைமையிலான ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தியாவில் மே மாதம் கொவிட் தொற்று பரவல் அதிகரித்ததால் ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இறுதிப் போட்டி அக்டோபர் 15 அன்று நடத்தப்படும். வனிந்து ஹசரங்கா தற்போது உலக டி 20 பந்துவீச்சு தரவரிசையில் 2-வது இடத்தில் …

திங்கள் முதல் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பாணின் விலையை ரூ. 5 இனால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை ரூ. 10 இனாலும் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலையை ரூ. 100 இனாலும் அதிகரிக்கவுள்ளதாக, சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையேற்றம், பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக பேக்கரி பொருட்களின் உற்பத்திகளை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சங்கம் மேலும் …

ஆப்கான் குறித்து அலெக்ஸாண்டரின் அனுபவம்

சுமார் 20 வருடங்களாக நீடித்து வந்த யுத்தத்தின் பின் அமெரிக்கா செப்டம்பர் 11ம் திகதிக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்த தனது படைகளை முற்றாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் தொடராக தாலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணத் தலைநகரங்களை கைப்பற்றி தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவர்கள் தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டனர். ஆப்கானிஸ்தான் …

உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கியதால் சபையில் சர்ச்சை

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கிலத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய போது, வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சபாநாயகர் சபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஒழுங்குபிர்ச்சனையை முன்வைத்த ஆளுங்கட்சி உறுப்பினரான கவிந்து குமாரதுங்க, …

தாலிபான் ஆட்சியில் பெண்களின் கல்விக்கு தடை வருமா?

தாலிபான் ஆட்சி என்றால் அனைவருக்கும் எழும் எண்ணம்தான் பெண்களுக்கான சம உரிமை காணப்படாது, பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள் காணப்படும் மற்றும் யுத்த களமாக அந்த பூமி காணப்படும் என்பதாகும். ஆனால் தாலிபான் செய்தித் தொடர்பாளருடன் பி.பி.சி மேற்கொண்ட ​நேர்காணலில் அவர் வழங்கிய பதில்களோ அவர்களின் அமைப்பின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. தாலிபன் போராளிகள் கடந்த சில வாரங்களாகவே தலைநகர் காபூலை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்க ​​ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்களின் கவலையும் அதிகரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் …

பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை உரப் பையிலிட்டு கடை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்ற நபர்

எச்.எம்.எம்.பர்ஸான் “காலையில் வங்­கிக்குச் சென்ற லைலா எனும் பெண்­மணி இன்னும் வீடு திரும்­ப­வில்லை. கண்­ட­வர்கள் எம்மை தொடர்பு கொள்­ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் வியா­ழக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை நேரம் முக­நூலில் அதிகம் பகி­ரப்­பட்­டது. ஆனால் அப் பெண்ணை பின்னர் உயி­ரு­ட­னன்றி சட­ல­மா­கவே கண்­டு­பி­டிக்க முடிந்­தமை துர­திஷ்­டமே. அன்­றைய தினம் காலை 11 மணி­ய­ளவில் வீட்டில் இருந்து வங்­கிக்குச் சென்­றுள்ளார் வாழைச்­சேனை 5 ஆம் வட்­டா­ரத்தில் வசித்­து­வந்த முகம்­மது ஹனீபா சித்தி …

மயான தேசத்தில் ஆட்சி புரிய முடியாது

ராஜபக்ஷ சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டியது கள யதார்த்தத்தினையே ஆர்.ராம் கொரோனா தீவிரத்தன்மை குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம், தாதியர்கள் சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சங்கம், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைப்பிரிவு, சமுதாய மருத்துவ நிபுணர்கள், மருத்துவத்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மதத்தலைவர்கள் என்று அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தனர். இதன்பலனாக கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட குழுவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ …

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்

ஹெய்ட்டியில் ஏற்பட்ட 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கத்தினால் இதுவரை 304 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (14) ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தில் சிக்கி 1,800 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள், அரச தனியார் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதோடு, பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வனர்த்தத்தை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, ஒரு மாத …

கைக்குண்டுடன் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய, விஜேராசா பிராசந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் களுவாஞ்சிக்குடி முகாமுக்கு கிடைத்த தகவலுக்கமைய, அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும்வேளை நேற்றையதினம் (13) காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் குறித்த சந்தேகநபரை சோதனைக்கு உட்படுத்தபடுத்தியபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். …

மீண்டும் கறுப்பு கொடி போராட்டத்திற்கு பேராயர் அழைப்பு

எம்.எம்.சில்வெஸ்டர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுக்கு தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான  விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட  உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள்,  …

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?

இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா …

தம்பிலுவில், திருக்கோவில் பிரதேசங்களில் கடலரிப்பு

ஆர்.நடராஜன் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பிரதேசம் தொடக்கம் தம்பட்டை பிரதேசம் வரை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கடல் அரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னந் தோட்டங்கள் கடலுடன் சங்கமமாகும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. தம்பிலுவில், திருக்கோவில், தம்பட்டை,களுதாவளை, விநாயகபுரம், மங்கமாரியம்மன் தோட்டம் போன்ற கடலை அண்மித்த கிராமங்கள் மீன்பிடி வள்ளங்கள் நிறுத்துவதற்கான இடமும் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமும் இல்லாமல் போகும் ஆபத்து அதிகரித்து வருகின்றது. எனவே, சிறந்த கடற்கரையோர …

அமைச்சரவை முடிவுகள் – 2021.08.09

09.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கோவன் பல்கலைக்கழகத்திற்கும் (Edith Cowan University, Australia இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரச வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக (Re-Energize) சலுகை முறையிலான நிபந்தனைகளின் கீழ் செயற்பாட்டு மூலதனக் கடன்வசதி முறையை நடைமுறைப்படுத்தல் நிலைபேறான விவசாயத்துறைக்கான நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளல் மாகாண சபைகள் மற்றும் மாவட்ட …

அரச ஊழியமும் பொருளாதாரமும் எதிர்காலமும்

என்.கே. அஷோக்பரன் இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மீளெழும் செலவுகளில் கணிசமான விகிதம் அரச ஊழியர்களின் ஊதியத்துக்கும் வருடாந்த ஊதிய உயர்வுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கும் செலவாகின்றன. இதைத் தவிர, அரச நிறுவனங்களையும் திணைக்களங்களையும் நடத்துவதற்கான செலவுகள் வேறானவை. அரச வருமானத்தின் பெரும்பகுதி இந்த மீளெழும் செலவுகளுக்கே …