பாரியா செலவில் ஜம்மிய்யவின் நூற்றாண்டு விழா காலத்தின் தேவைதானா?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 1924 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் இவ்வமைப்பில் உலமாக்கள், புத்தி ஜீவிகள் என பலரும் பங்கு கொண்டு, தொடர்ந்து பல சவால்களை எதிர் கொண்டு, காலத்தை ஓட்டி வந்தனர். தற்போது இவ்வமைப்பானது நூறு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், இதில் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய மூத்த உலமாக்கள், புத்திஜீவிகள், அனுபவசாலிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்கள் அங்கம் வகித்து சமூக நலன்களையும் சமூகப் பொறுப்புக்களையும். நிறைவேற்றி, ஓயா அலைகளில் ஓடும் […]

Read More

அக்குரனை மக்களே! பிரார்த்தனைக்கு முன் ஒட்டகத்தை கட்டிவையுங்கள்

ஆண்டாண்டு தொடக்கம் வெள்ளப்பெருக்கு பற்றி அறிந்திடாத அக்குரனை நகரம் அண்மைக்காலமாக ஒரு பூனைக்குட்டி சிறுநீர்கழித்தாலும் வெள்ளப் பெருக்கா மாறும் அளவில் நிலமை மோசமடைந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது கானெளிகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. பணம் மட்டும் தான் உலகம் என சிந்திக்கும் ஒரு சில சுயநல வாதிகளின் செயற்பாடே இதற்கான காரணமென உண்மைகள் வெளியாகியுள்ளன. இவர்களின் குறுகிய சிந்தனையால், தன் நலம் மட்டும் என்ற போக்கே இன்று பல குடும்பங்களை நடு வீதியில் நிறுத்தியது. அண்மைக்காலங்களில் […]

Read More

உறுதியான உளத்தூய்மைக்கு உரமிடுங்கள்

அரபு மொழியில்: உஸ்தாத் ஸலாஹ் ஆபிதீன் தமிழாக்கம்: அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ) பயங்கரக் காட்சி (தயவுசெய்து, இதனை வாசிக்கும் போது  மனதையும், சிந்தனையையும் ஒருமைபடுத்திக் கொள்ளுங்கள்) சிந்தனைக்கான பதிவு: اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ. ( سورة الجاثية ٢٩) நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்). என்ற அல்குர்ஆன் வசனத்திற்கான கருத்து. நான் அமெரிக்காவின் (நியூயோர்க் நகரில்) வசித்தபோது, ​​எனக்கு தபாலில் ஓர் கடிதம் […]

Read More

போதை விழிப்புணர்வா? போதை விளம்பரமா?

இன்று ஒரு ஜும்ஆ உரையை கேட்டேன். போதை பாவனை தொடர்பான குத்பா. அதனை கேட்கும்போது போதை விழிப்புணர்வு உரையா? போதை விளம்பர உரையா? என்ற சந்தேகம் எழுந்தது என்னில். Prevention என்ற பெயரில் Promotion செய்தார் பேச்சாளர். பூரண தெளிவின்றி நான்கு இணைய கட்டுரையை வாசித்துவிட்டு புனாத்தியது புரிந்தது. மேலும் கண்ட கண்ட பேச்சாளர்கள் பேசிய கட்டுக்கதை பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு கதையளந்தார். இருக்கின்ற எல்லா போதை பொருளின் பெயரையும் புட்டு புட்டு வைத்தார். அங்கு இருந்த சிறுவர்கள், […]

Read More

வாழ்க்கை

வாழ்க்கை என்பது என்ன. இந்தக் கேள்விக்கான பதில் பெரும் புலம்பலாக இருக்கலாம். வாழ்க்கையின் கடினத்தை உணர்த்த நேர்த்தியான வார்த்தைகள் இல்லாமல் போகலாம். ஆனால் இந்த வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லை. நாம் தான் கடினப் படுத்திக் கொள்கிறோம். என்னை பொறுத்தவரை இந்த வாழ்க்கையை கால நிலைக்கு ஒப்பிடுவேன். இங்கே வசந்த காலங்கள் வரும் ,அதே சமயத்தில் இலையுதிர் காலங்களும் வரத்தான் செய்யும். அடை மழை பெய்யும் சுட்டெரிக்கும் வெயில் அடிக்கும். இதோ நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் […]

Read More

கொண்டாடிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சமர்ப்பணம்

இந்த நாட்களில் ஆசிரியர் சிறுவர் தினங்கள் கொண்டாடப்படுவதால் தனிப்பட்ட விடுமுறையில் இது தொடர்பாக பாடசாலை ஆசிரியர் குழாமை தெளிவுபடுத்தும் பொறுப்பு எமது கரங்களை வந்து சேர்ந்தது. குருநாகல் மாவட்ட சில தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கே நாம் சென்றோம். அது குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலை. நாம் பாடசாலைக்கு செல்லும் போது வாயிற்காவலர் ஒருவர் கூட இல்லை. பாடசாலையின் நிலைமையை புரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு. அந்த பாடசாலை அதிபரால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பு […]

Read More

மக்கள் கைவிட்டபோதும் கைவிடாத கோட்டாவின் மனைவி

ஆர்.சிவராஜா உதவுவதாகக் கூறி இறுதிநேரம் கைவிட்ட இந்தியா இலங்கை விமானப்படை ஹெலி தரையிறங்க மாலைதீவில் அனுமதி மறுப்பு இறுதி நாளில் மிரிஹான வீட்டில் முக்கிய ஆவணங்களை அகற்றிய கோட்டாவின் துணைவியார் கோட்டாபய தோல்வியடைந்த தலைவராக வெளியேறியமைக்கான காரணங்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி வரை எந்த தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை. ஆனால் ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தையடுத்து ஏற்பட்ட அழுத்தங்களினால் அவருக்கு வேறு […]

Read More

இஸ்லாம் எதிர்பார்க்கும் நீதியான ஆட்சி

இலங்கையில் கோட்டா கோ கம மக்கள் எழுச்சியுடன் தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அம் மக்கள் எழுச்சியின் நோக்கம் இலங்கையில் நீதியானதொரு ஆட்சியை உருவாக்குவதாகும். இச் சந்தர்ப்பத்தில் நீதியான ஆட்சியை நிலைநாட்ட இஸ்லாம் வழங்கியுள்ள சில வழிகாட்டலை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்காமாகும். இஸ்லாம் என்பது எக்காலத்திற்கும் பொருத்தமான வாழ்க்கைநெறியாகும். சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நாட்டக்கூடிய ஒரு நடுநிலை மார்க்கமாகவே வள்ளோனவனால் இறக்கியருளப்பட்டது. அந்த வகையில் அனைத்து […]

Read More

எழுதுகிறேன் ஒரு கடிதம்

அன்புச் சகோதரியே! இஸ்லாமியச் சோலையில் பிறந்து, ஈமானிய சுகந்தம் சுமந்த, என்அன்புச் சகோதரியே! அறிவில்ஆகச்சிறந்த அரிவையரை ஈன்ற மார்க்கம் இஸ்லாம், நாணத்தில் சாலச்சிறந்த நங்கைகளால் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம், போர்முனையிலும் வீரமங்கைகளால் ஒளிர்ந்த மார்க்கம் இஸ்லாம். அவர்களின் வெட்கம் விலைபோகவில்லை, அவர்களது ஆடைகள் கோலம் மாறியதில்லை, கேளிக்கைகளை அவர்கள் நாடியதில்லை. நீ! அன்னை பாத்திமாவின் வாரிசு. உனக்கென விரிந்திருப்பது தனிவழி அதைப் பேணி நடப்பதே மாண்பாகும். இஸ்லாத்தின் அடிச்சுவடுகளில் இருந்து உன் பாதங்கள் விலகிடும் கணமெல்லாம் நீ […]

Read More

சர்வதேச மகளிர் தினத்தில் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

சர்வதேச மகளிர் தினம் கடந்த மார்ச் 08ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் ஏற்பாடு செய்யப்படும் விழாக்கள், வைபவங்களில் பெண்களின் உரிமைகள், சமூக ரீதியில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனேக விடயங்கள் அதிகமாக பேசப்படும். அவ்வாறு மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்த பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உடுவர தோட்டத்தின் கீழ் பிரிவில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் கோடரியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு படுகொலை […]

Read More

வரலாறு புரண்ட கதை – நூல் விமர்சனம்

இன்றைய நூல்: வரலாறு புரண்ட கதை நூலாசிரியர்: அஷ்ஷெய்க் அஸ்கர் அரூஸ் (நளீமி), விரிவுரையாளர் ஜாமிஆ நளீமியா கலாபீடம் பேருவளை முதல் தலைப்பு: சிரமப் பணி பக்கம்: 11 முதல் 27 வரை “வரலாறு புரண்ட கதை” என்ற இந்த நூலின் பெயரை பார்க்கும், கேட்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூலின் உள்ளடக்கத்தை அறிய ஆவல் ஏற்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தழுவல் நூலாக இருக்கும் இந்த நூலிற்கு ஜாமிஆ நளீமியா கலாபீட உதவிப் பணிப்பாளர் […]

Read More

தேசத்தின் வெற்றி

எமது இலங்கைத் திரு நாடு பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழுகின்ற ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும் பல்வேறு கலாசாரப் பண்புகளைக் கொண்ட சமூகம் பல்பண்பாட்டுச் சமூகமாக கருதப்படுகின்றது இப் பல்பண்பாட்டுச் சமூகக் காரணிகளில் தம்முடைய வாழ்க்கைக் கோலத்தை கொண்டு செல்லும் மக்கள் தாங்களுக்கிடையே நிலவுகின்ற நல்லுறவிலேயே இத் தேசத்தின் மேம்பாடும் முன்னேற்றமும் தங்கியுள்ளது என்பதைப் புரிந்நு கொள்ள வேண்டும். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வே” என்று பாடினார் […]

Read More

பிரபாகரனை விடுதலை செய்யுமாறு அரச தரப்பிலிருந்து அழுத்தம் வந்தது

“ பிரபாகரனை கைது  செய்து, நான் சிறையில் அடைத்தேன். மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து அவரை கொண்டுசெல்ல முற்பட்டனர். மறுபுறத்தில்  பிரபாகரனை விடுவிக்குமாறு அரச தரப்பில் இருந்தும் கடும் அழுத்தம். எனினும், நான்  அவரை விடுவிக்கவில்லை. இறுதியில் அப்போது வட மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கே வந்து பிரபாகரனை அழைத்துச்சென்றுவிட்டார். அதன்பிறகே அவர் தலைமையில் புலிகள் அமைப்பு தலைதூக்கியது.” இவ்வாறு  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனை […]

Read More

மனித சிந்தனையை குழப்பும் போலி தகவல்கள்

மொஹமட் அல்தாப் நாட்டில் அவ்வப்போது இன ரீதியாக பரப்பப்படும் போலியான தகவல்களால் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். சமூக வலைத்தளங்களின் அபார வளர்ச்சிக்குப் பிறகு இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு சிறு சம்பவத்தைக்கூட மிகைப்படுத்தி வெளியிடப்படும் கருத்துகள் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை, பல சந்தர்ப்பங்களில் ஆறாத காயங்களாக உருவாகிவிடுவதுடன், இன ரீதியான முரண்பாடுகளுக்கு வித்திடுவதாகவும் அமைகின்றன. இலங்கையில் இன மற்றும் சமய ரீதியிலான வன்முறை தொடராக 1915, 1956, 1977, 1983, […]

Read More

நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு கோவிட் மட்டும்தான் காரணமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரமான டொலர் பற்றாக்குறையும் அதன் காரணமாக பொருளாதாரம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையும் கோவிட் பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக சுதந்திரம் பெற்ற காலந்தொட்டே நாட்டின் பொருளாதாரத்தை முறையாக வழிப்படுத்தி முகாமை செய்யத் தவறியதன் காரணமாக ஏற்பட்ட ஒன்றாகும். தற்போது வெறும் 84 பில்லியன் டொலர் பெறுமதியான ஒரு பொருளாதாரத்தை தொடர்ந்து இயங்கச் செய்வதில் திக்கித்திணற வேண்டியிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின் விளைவாக நெருக்கடிகள் […]

Read More

அடக்குமுறையின்றி அனுசரிப்பே என் திறமைகளுக்கு களம் அமைத்தது – இஸ்மத் பாத்திமா

நேர்கண்டவர் : அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ் பானகமுவ ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதிவான் அல்ஹாஜ் ஏ.ஸீ. செய்யது அஹமது அவர்களினதும் மர்ஹூமா ஹாஜியானி கே.ரி. றஹிமா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வியும் பஸ்யாலயைச் சேர்ந்த தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளரான ஜனாப் எம்.ஏ.எம். றிப்தி அவர்களது துணைவியாரும், எம்.ஆர். அகீல் அஹமதுவின் அன்புத் தாயாருமான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று அதிபர், சிறந்த […]

Read More

2022 நிதி ஒதுக்கீடுகள் ஒரே பார்வையில்

ஷம்ஸ் பாஹிம்,லோரன்ஸ் செல்வநாயகம் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ. 30,000 மில்லியன். மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 65 வயதாக அதிகரிப்பு சகல பட்டதாரிகளுக்கும் 2022 ஜனவரி மாதத்துக்குள் நிரந்தர நியமனம் – ரூ. 7,600 மில். மேலதிக நிதி 2015- – 2019 காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ரூ.100 மில்.மேலதிக நிதி காணாமல் போனோருக்கு […]

Read More

பின் இருக்கை மாணவர்கள்

எந்த ஒரு கல்விக்கூடமாகவோ அல்லது கலாசாலையாகவோ இருப்பினும் கூட மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் பின் இருக்கை மாணவர்கள் அதாவது மாணவர்கள் ஆசிரியர்கள் வழக்கில் சொல்லப் போனால் பின்தங்கிய,படிப்பு ஏறாத “மக்கு” மாணவர்கள் வரை கல்வி கற்பது வழக்கம். இதனை யாரும் பிழை காண்பதும் முடியாத காரியமே. இதனை வாசிக்கின்ற நேரத்தில் தாம் எந்த இடத்தில் இருந்தவர்கள் என்றும் அதன் விளைவுகள் எப்படியான தாக்கத்தை எம்மில் ஏற்படுத்தியது என்றும் மனக்கண்முன்னே சில நிழற்படங்கள் வந்து செல்லும் […]

Read More

கிழக்கில் பல ஆண்களின் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதாக அச்சுறுத்தி பணம் பறித்த பெண்

எம். எஸ் முஸப்பிர் சமூக ஊடகங்களுள் பிரபலமான முகநூல் சமூக வலைத்தளத்தின் ஊடாக பெரும்பாலானவர்கள் பயனுள்ள விடயங்களை மேற்கொண்டு வரும் அதே நேரம் சிலர் அதனை பல்வேறு மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். விசேடமாக பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் உலாவும் மோடிக்காரர்களால் விடுக்கப்படும் துன்புறுத்தல்கள் ஏராளமானவை. அவற்றுள் பெண்களின் ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்ட சம்பவங்களும் எண்ணிலடங்காதவை. சில தினங்களுக்கு முன்னர் முகநூல் சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவரால் ஆண்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த மோசடி தொடர்பான செய்தி […]

Read More

ஏற்றுமதி நோக்கான மரமுந்திரிகை உற்பத்தி; பூநகரி பெண் தொழில் முயற்சியாளரின் சாதனைப் பயணம்

ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பதப்படுத்திய மரமுந்திரிகை உற்பத்தியை மேற்கொண்ட கிளிநொச்சி, பூநகரி, மட்டுவில்நாடு பிரதேச தொழில் முயற்சியாளர் ஜெஸ்மின் ஜெயமலர் தனது சாதனைப் பயணம் தொடர்பில் தினகரனுக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: உங்கள் தொழில் முயற்சி, நீங்கள் இத்தொழில் முயற்சியை எப்போது ஆரம்பித்தீர்கள், ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட தொழில் முயற்சியின் மூலம் என்ன வகையான உள்ளூர் உற்பத்திகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறீர்கள்? பதில்: நேச்சவின் பிறைவேற் லிமிட்டெட் (Naturewins Pvt Ltd எனும் வியாபாரப் பெயரைக் கொண்ட எமது […]

Read More