இந்த அரக்கனுகிட்ட இருந்து காப்பாத்துங்க.

ஊமைக்காதல் நாடகம் காட்சி :- 07 களம்: நுவரெலியா இனியாவின் வீடு, மற்றும் கடைத் தெரு. கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின் தாய்) கெளரி (ராதனின் சகோதரி) அபி (இனியாவின் தங்கை) சுவர்னா (ராதனின் அத்தை) சோமு (காவலாளி) சங்கர் (ராதனின் நண்பன்) ராஜன் (துரையப்பாவின் மகன்) வேலு (ராஜனின் நண்பன்) (துரையப்பா, ராஜன் இருவருமாக இணைந்து ராதனை தீர்த்துக் கட்ட நினைத்தும் அதில் பாரதி உயிரிழந்து போனதால் … Read more

வெளிநாட்டுப் பயணம்

உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு அமர்ந்தவன், “ஸாறா எனக்கு குடிக்க தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வாங்களே” என்று உள்நோக்கி தன் அன்பு மனைவிக்கு குரல் கொடுத்தான். அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தவள் தன் பதியின் அழைப்புக் கேட்டு நீர்க்குவளையை எடுத்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் ஸாறா. “இந்தாங்க தண்ணி. … Read more

இந்த ஓவியமெல்லாம் காதலத்தான பேசுது

அவளோடு சில நொடிகள் தொடர் – 09 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் உள்ள அந்த பெரிய வீட்டு முற்றத்தில் இளைப்பாறியது கியாசின் கார். புதுப் பெண் மாப்பிள்ளையை வரவேற்பதற்காக காத்திருந்த அவனுடைய சொந்த பந்தங்களுக்கு அவர்களின் வருகை பேரானந்தத்தையும் பெரும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. கியாசின் சகோதரர்கள் இருவரும் பசியாவைக் கைப்பற்றாக உள்ளே அழைத்து வந்தார்கள். துணை யாரும் அற்றவன் பேல் அப்பாவியாக உள்நுழைந்தான் கியாஸ். வாழ்க்கையினுடைய சாலைகள் விரிந்து கொடுக்கிறது வடுக்கள் ஆராமலே அப்படித்தான் இருந்தது அவனுக்கும். … Read more

மாற்றம் தந்த காலம்

“நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா. “இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின் கருணையை பொருட்படுத்தாமல், “வர வர சொல்றது ஒன்னுமே வெளங்கமாடிக்கி. என்னட தலையெழுத்து இந்த வீட்டுல நம்ம பிறக்கனும்டு எழுதியிருக்கு சே.” எனும் தனது நிலையை கடிந்து கொள்ளும் தன் இளவரசியின் வார்த்தைகளால் சுக்கு நூறாகிப் போனது அன்னை அஸ்மாவின் மனது. “ஏன் … Read more

கடன்காரனோட பையன நான் சும்மா விடப்போறதில்ல!

ஊமைக் காதல் நாடகம் காட்சி :06 களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம், தேயிலை உற்பத்தி நிலையம் மற்றும் ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) அபி (இனியாவின் தங்கை) மேனகா (இனியாவின் தாய்) பாரதி (இனியாவின் தந்தை) துரையப்பா (தேயிலை பெக்டரியின் முன்னாள் உரிமையாளர்) ராஜன் (துரையப்பாவின் மகன்) சங்கர்(ராதனின் நண்பன்) சோமு (பெக்டரியின் காவலாளன்) பாலு (ராஜனின் வீட்டு வேலைக்காரன்) (இனியா, ராதன் இருவரினதும் புனிதமான காதலில் கலங்கத்தை ஏற்படுத்திய ராஜன் பாரதியை … Read more

இரு மணங்கள் இணையும் நேரம்

அவளோடு சில நொடிகள் தொடர் -08 நாட்கள் விரண்டோடி பேசி முடித்த பத்தாம் திகதியும் வந்தேறியது. கல்யாண வேலைகள் யாவும் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தன. இரு வீடுகளும் பெரும் மக்கள் திரள்களால் நிரம்பிக் கொண்டாட்டம் கண்டன. கல்யாணக் கனவொன்று கைக்கூடி வந்து ஆனந்தக் கண்ணீரால் உள்ளங்கள் குளிர்ந்தன எண்ணங்கள் போலவே. “மாமி இங்க வாங்களன் வந்து இடலாம் கொஞ்சம் சரி பாருங்க எல்லாம் சரியா இருக்கான்னு.” பசியாவின் மைனி தான் அது மாப்பிள்ளை வீட்டாருக்கு என்று … Read more

ரொம்ப நன்றி தம்பி நீங்க பண்ண்ன எல்லா உதவிக்கும் அதோட என் பொண்ணுக்கு தேடிக் கொடுத்த பேருக்கும்

ஊமைக் காதல் நாடகம் காட்சி 05 களம்: நுவரெலியா எஸ்டேட், ராதனின் வீடு, ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) பாரதி (இனியாவின் தந்தை) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின் தாய்) சங்கர் (ராதனின் நண்பன்) சங்கவி (ராதனின் சித்தி) சுவர்னா (ராதனின் அத்தை) ராஜன் (தோட்ட உரிமையாளரின் மகன்) பாலு :- (ராஜனின் வீட்டு வேலைக்காரன்) (சில வாரங்கள் கடந்திருந்த வேலைகளில் ராதன் வசிக்கும் பகுதி முழுவதும் இனியா, ராதன் இருவரையும் … Read more

இவனுக்கு ஏத்த தகுதி அந்த புள்ளைக்கு இல்லயாம்

அவளோடு சில நொடிகள் தொடர் :-07 “கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “ மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை தடுத்து நிப்பாட்டியது ஜெஸீறாவின் குரல். “ம்ம்ம்” தலையசைத்துக் கொண்டே தாயின் அருகில் வந்தமர்ந்தான் கியாஸ். செல்லமாய் மகன் தலையை தடாவிய படி “உனக்கு புடிச்ச கலர்லதான் எல்லாம் எடுத்திருக்கம் ஒரு தடவ நீயும் பாத்து சொல்லிட்டியன்டா திருப்தியா இருக்கும். இல்லன்னா வேறது … Read more

நண்பனின் அறை

அஹ்மதுக்கு இரண்டு கண்களும் இருட்டிவிட்டன. இடது காதிலும் விண் என்ற பயங்கர ஒலி. “உய்ங்.” என்ற இரைச்சல் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின. அலீம் பளாரென்று ஓங்கி அறைவிட்டான். ஐந்து விரல்களும் அப்படியே கன்னத்தில் பதிந்து “சுர்ர்” ரென்று எறிகிறது. உயிருக்குயிரான அலீமா இப்படி அறைந்தான்? ஏன்? என்னாச்சு? அஹ்மதும் அலீமும் குழந்தை பருவத்திலிருந்தே இணைபிரியா தோழர்கள். ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு, ஒரே துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள். அஹ்மத் விபரம் … Read more

%d bloggers like this: