நுண்கடன் திட்டங்களினால் இலங்கையில் 200 மேற்பட்ட பெண்கள் தற்கொலை

எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிராமப்புற பெண்களின் உயிரைப் பறிக்கும் நுண்கடன் திட்டம் ஏற்படுத்திய அழிவின் அளவு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்த ஐ.நாவின் விசேட தூதுவரால் வெளிப்படுத்தப்பட்டது. “கடனுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுவதால் பல பெண்கள் கடனுக்கு இரையாகிறார்கள். இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் 200ற்கும் …

லங்கா பிரிமியர் லீக் இன்று ஆரம்பம்

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது இரண்டாவது தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (05.12.2021) ஆரம்பமாகின்றது. இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும் கேள்விகளுக்கு அப்பால் போட்டித் தொடர் நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. டிசம்பர் 5ம் திகதி தொடக்கம் டிசம்பர் 24ம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதலாம் கட்ட சுற்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாம் …

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயம்

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை இன்று (05.12.2021) மேற்கொண்டுள்ளார். இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன். அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்ய தான் அரசாங்கத்திற்கு ஆலோசனை முன்மொழிவதாக கலபொடவத்த ஞானசார தேரர் தெரிவித்தார். கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா விற்கு விஜயம் செய்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலபொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரை …

மாபெரும் இரத்ததான நிகழ்வு – முதுந்துவ, இப்பாகமுவ

ஹொகரல்ல பொலிஸ் நிலையமும் இலக்கம் 526 மடிகே முதுன்துவ மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இணைந்து முதன்முறையாக மாபெரும் இரத்ததான நிகழ்வை நேற்று 2ம் திகதி திங்கட்கிழமை வெகுசிறப்பாய் நாடாத்திமுடித்தது. இவ் இரத்ததான நிகழ்வுக்கு இன,மத,மொழி பேதமின்றி மூவின ஊர்மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அரசியல் வாதிகள் வருகையளித்து உறுதுணையாய் நின்றது மட்டுமன்றி அனுசரனை வழங்கியமை விஷேட அம்சமாகும். இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரனையை ஜவய மீடியா வழங்கியதுடன் இரத்தம் வழங்கிய நல்உள்ளங்களுக்கு சமூர்த்தியால் சான்றிதழ் வழங்கப்பட்டது மட்டுமன்றி ஏற்பாட்டுக்குழுவால் …

அசாத் சாலி 8 மாதங்களுக்கு பின் நிரபராதி என விடுதலை

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (02) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இத்தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்களால் …

தடைசெய்யப்பட்ட ஜம் இய்யதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியாவின் மனு விசாரணை செய்ய ஏற்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 11 முஸ்லிம் அமைப்புக்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதையடுத்து, அந்த அமைப்புக்களில் உள்ளடங்கும் ஜம் இய்யதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.) அமைப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற, பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரேன் புள்ளேயின் வாதத்தை நிராகரித்து, மனுதாரருக்காக வாதங்களை முன்வைத்த …

சிறுநீரகம் (கிட்னி) தேவை!

சிறுநீரக (கிட்னி) சத்திர சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கோருகிறார்  கொடபிடியவைச் (போர்வை)ச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்! 96/B, கொடவத்த, கொடபிடிய, அக்குரெஸ்ஸ என்னும் முகவாியில் வசித்துவரும் சித்தி நஸீமா (706591028V) என்பவா் தனது இரண்டு கிட்னியும் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவரைப்பரிசோதித்த லங்கா ஹொஸ்பிடலைச் சேர்ந்த வைத்திய நிபுணா் டாக்டா். சுர்ஜித் சோமியஹ் (Dr.Surjit Somiah) அவர்கள் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார். சத்திர சிகிச்சைக்காக O+ …

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் 16 ஆக உயர்வு

நாடளாவிய ரீதியில் இன்றும் (29.11.2021) எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.  இன்று ஹட்டன், ஹங்வெல்ல, ஏராவூர், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வடக்கு, தெற்கு உட்பட இன்று நாடளாவிய ரீதியில் நான்கு எரிவாயு வெடிப்புகள் நேற்றைய லங்கா நெட் நிவ்ஸ் செய்தியறிக்கைகளின் படி நவம்பர் 28 ஆம் திகதி இடம்பெற்ற பத்து வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக வௌியிட்டோம். அவ்வகையில் இன்றும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆராச்சிக்கட்டு சிலாபம் – …

25 நாட்களில் பத்து எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் இன்று (28.11.2021) நான்கு எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கடந்த 25 நாட்களில் மொத்தமாக பத்து எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கல்முனை வட்டவிதான பிரதேசம் மற்றும் கேகாலையில் இன்று காலை இரு எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்விரு வெடிப்புச் சம்பவங்களிலும் உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்பகுதியைச் சேர்ந்த அஹங்கம …

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை

பொலன்னறுவை மாவட்ட சிறுநீரக வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். 12 பில்லியன் ரூபாய் செலவில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார அலுவலக பணியாளர்களின் குறைபாடு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட சேவையினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளதுடன். கடந்த ஜூன் 11 ஆம் திகதி …

இலக்கியத்துறையில் தடம் பதித்த ஆளுமை மிக்க அதிபர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட  “கலை இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2021” நிகழ்வில் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில்  பஸ்யாலயைச் சேர்ந்த அதிபரும் எழுத்தாளரும் கவியரசியுமான எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா மூன்று முதலிடங்களையும் (தமிழ் – கவிதை, சிறுவர் கதை மற்றும் ஆங்கிலம் – கவிதை) ஒரு இரண்டாம் இடத்தினையும் (தமிழ் – பாடலாக்கம்) தனதாக்கி வெற்றியீட்டியுள்ளார். இவர் கடந்த 2019 மற்றும் 2020 களில் பிரதேச மட்டத்தில் ஒன்பது …

08 இடங்களில் தாக்குதல் இடம்பெறலாம் என ஏப்ரல் 20ஆம் திகதியே தகவல் கிடைத்தது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 08 இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாமென 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 04.14 மணிக்கு தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்த்தன (25.11.2021) தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தாம் உடனடியாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக கொழும்பு விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் அவர் …

வெடிகுண்டு போல் மாறியுள்ள இலங்கையின் எரிவாயு சிலிண்டர்கள்

இலங்கை வீடுகளில் எரிவாயு வைத்திருப்பது வெடிகுண்டு இருப்பது போன்று ஆபத்தான விடயமாகியுள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீட்டில் வெடி குண்டு வைத்துக் கொண்டு இருக்கும் நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அண்மைய நாட்களாக பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக அளவில் வெடிப்பதற்கு இந்த இரசாயன …

அமைச்சரவை முடிவுகள் – 23.11.2021

23.11.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் அம்பாறை சரணாலயத்தின் புதிய எல்லையை பிரகடனப்படுத்தல் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கை வகுப்புக்கள், ஒழுக்க விதிகளைத் தயாரித்தல் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடல் LANKAQR ஊடாக டிஜிட்டல்மயப்படுத்தல் தேசிய மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தரவுத்தொகுதியை மேம்படுத்தல் மற்றும் இயலளவை அதிகரித்தல் இலங்கை மற்றும் வியட்நாமிற்கிடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம் தேசிய பெற்றோலிய …

பட்ஜெட் முதல் வாக்கெடுப்புக்கு ⅔ ஆதரவு

2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 2022 வரவுச் செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் …

பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டல் வெளியீடு

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அல்லது படசாலை உறுப்பினர் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. கொவிட் தொற்று தொடர்பான அறிகுறிகள் இனங்காணப்படும் தொற்றாளரை அல்லது சந்தேகத்திற்குரிய நபரை ஏனையோரிடமிருந்து அகற்றி பாடசாலையின் நோயாளர் அறை அல்லது தனிமைப்படுத்திய அறையொன்றில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறை …

நவ. 23 – 26 வரை மாத்தறையில் மதக மங்கள நிகழ்வு

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் இருதி அஞ்சலி நிகழ்வை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். “மதக மங்கள”(மங்கள நினைவு) நிகழ்வு நவம்பர் 23 முதல் 26, 2021 வரை நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. நாடு மூடி இருந்த வேளையில், தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், ஆகஸ்ட் 24ஆம் திகதி திடீரென மறைந்த மங்கள சமரவீரவின் சோக மரணத்தால், அவரது வாழ்க்கைப் பயணத்தில் அவருடன் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றிய அனைவருக்கும் அவரது உடலை பார்க்கக்கூட …

மனித பாவனைக்கு உதவாத 40,000 Kg உருளைக்கிழங்கு தம்புள்ளையில் மீட்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை அண்டிய களஞ்சியசாலையில் இருந்து மனித பாவனைக்கு தகுதியற்ற 40 ஆயிரம் கிலோ கிராம் எடையுள்ள உருளைக்கிழங்குகள் அடங்கிய கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த உருளைக்கிழங்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக, இதன்போது அவை முளைத்த நிலையில் இருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முளை நிலையில் இருந்த உருளைக்கிழங்குகளை சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பத் தயாராகும்போது அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் கைதி தற்கொலை தொடர்பில் இரு பொலிசார் பணிநீக்கம்

எம்.மனோசித்ரா இரத்தினபுரி – பணாமுர பிரதேசத்தில் எம்பிலிபிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேநபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் எம்பிலிபிட்டி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் பணாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நபர் …

நல்லாட்சிக்கால இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு தொடர்பான கோப் அறிக்கை

யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914 ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரியவந்தது. நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட …

நடைமுறைக்கு வந்த ஊழியர் தொடர்பான புதிய இரு சட்டமூலங்கள்

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தினார். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும். இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது …

அடுத்த வருடம் சிகரெட் மூலம் அரசாங்கத்திற்கு 08 பில்லியன் ரூபா வருமானம்

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 08 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சின் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (15.11.2021) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

அமைச்சரவை முடிவுகள் – 2021.11.15

15.11.2021அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் சினிமாவை ஒரு தொழிற்துறையாக ஏற்றுக்கொள்ளல் ஜனாதிபதி ஊடக விருது விழா – 2022 அஞ்சல் அலுவலகங்களை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் பல்துறைசார் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இலங்கை மற்றும் ரஷ்யா இற்கிடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான ஒப்பந்தம் ஸ்ரீலங்கா விமான சேவைகள் கம்பனியின் 21 பயண முடிவுகளுக்கான விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கான பெறுகைகளை வழங்கல் எதிர்வரும் விடுமுறைக் காலத்தை …

புத்தளத்தில் அந்தரத்தில் தொங்கும் புகையிரத பாதை?

புத்தளம் – கொழும்பு புகையிரத பாதையின் மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் புகையிரத பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழகியதுடன், 20 இற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 96 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், பல வீதிகளும் தாழிறங்கியுள்ளதுடன், வீடுகள் பலவற்றின் பாதுகாப்பு மதில்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு முழுமையாக உடைந்து போயுள்ளது. இந்த நிலையில், புத்தளம் – சிலாபம் புகையிரத வீதியின் பல …

இலங்கை வரவு செலவுத் திட்டம் (முழுமையானது) – 2022

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு,செலவுத்திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கிணங்க வரவு, செலவுத்திட்ட விவாதம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. வரவு-செலவுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இம்முறை வரவு, செலவுத் திட்டத்தில் அதிகரித்த நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க பாதுகாப்பு அமைச்சுக்கு 373 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கு நிதி அமைச்சுக்கு 185.9 பில்லியன் ரூபாவும் கல்வி …