சிறந்த பொறுமை

என் பொறுமைக்கு ஏளனப்புன்னகை செய்து என் கண்ணீரை சுவீகரித்துக் கொண்ட உறவுகளே! வாழ்க்கைப் படுவது என்பது சிறிய விடயம் அல்ல! திருமணம் என்பது மேடையில் ஏறி அலங்காரமிட்டு! ஆபரணங்கள் அணிந்து! புத்தாடை உடுத்தி! தலைகுணிந்த படியும், புன்னகையுடனும் அமர்ந்து! கணவன் வந்த பின்னே தலை குணிந்து தலைநிமிர்ந்து கொள்வது மட்டுமல்ல! அந்த மேடையை விட்டு கீழே இறங்கி வாழ்க்கையில் இறுதி வரை சோதனைகளுடனும், வேதனைகளுடனும், நம்மை முடி கொண்டு சொந்தமிட்ட உறவை!! உயிர் போகும் கட்டம் வந்தாலும் … Read moreசிறந்த பொறுமை

அதிசயங்கள் அற்புமானவை

வாழ்வில் எத்தனையோ எதிர்ப்பாராத இழப்புகள் ரத்தம் சிந்தாத காயங்கள் தலை குனித்த அவமானங்கள் நிஜமான ஏமாற்றங்கள் நினையாத துரோகங்கள் தவிடு பொடியாகிப் போன எதிர்ப்பார்ப்புகள் கலங்க வைத்த மாற்றங்கள் கதற வைத்த உண்மைகள் உதறித் தள்ளிய பொய்கள் சின்னாபின்னமான கனவுகள். இப்படி எத்தனையோ வலிகள் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் வெளியில் சொல்ல முடியாமல் கரைந்து போன கண்ணீர் துளிகளின் மௌனமான வலிகள் அந்த வலிகளுக்குள் ஒரு வெறுமை இருக்கும் அந்த வெறுமைக்குள் இனம்புரியாத … Read moreஅதிசயங்கள் அற்புமானவை

இன்றைய நற்பணி

மனது முழுக்க சோகம் மனிதனைக் கொல்லும் கொரோனாவால் மகிழ்ச்சிகள் செத்துக்கிடக்கு மரணங்கள் மட்டும் மலிந்த வண்ணம் கைத்தொலைபேசியோ தொல்லையாக குவிந்து வரும் செய்திகளே துன்பத்தின் அச்சாணிகள் கனவுகள் தொலைந்து பாடசாலைகள் மூடி போரையொத்த காலமிது கவலைகள் ஈன்றெடுக்கும் நேரமிது மனம் மழுங்கியுள்ளதால் மரத்துப்போனதால் மகிழ்வை மனம் கேட்கிறது மீள்வை உள்ளம் நாடுகிறது நண்பா! நல்லதை மட்டும் பரப்புங்கள் நலவை மட்டும் நாடுங்கள்- இன்றைய நற்பணி என்னவென்றால் நல்லபடி மனதை காப்பதாகும் Binth Ameen

கொரோனா

கொரோனா நீ எம்மைத் தாக்க வந்த எமனா?? ஹிட்லரின் தங்கச்சி மவனா??? உன்னை முட்டியில் அடக்கி ஆற்றில் போட்டாங்க… உன் நல்ல நேரம், நீரில் மிதந்து தப்பி வந்தாய்! பாணியில் பிரட்டி உன்னை நக்கிடப் பார்த்தாங்க… உன் நல்ல காலம், நாக்கின் ஓரத்தில் புகுந்து ஓட்டைப் பல்லினூடு காற்றில் பறந்தாய்! எரித்தாலும் எரியாத எரிமலையே! புதைத்தாலும் நிலத்தடி நீரில் கலந்துவிடும் ‘கல்கிரி’யே (කල් කිරි) ! உன் பெயரால் ஏற்பட்ட கடன் கோடி அதனால் மக்கள் போகிறார்கள் … Read moreகொரோனா

உயிர்பெற்ற உன்னத உறவு

கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுத்தாலும் இனம்புரியா இருளொன்று அவளது உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது. தன் அறைத்தோழி ஆய்ஷாவுடன் அதே பெல்கனியில் அமர்ந்து அரட்டையடித்த வண்ணம் தேனீர் பருகிய அந்த அழகிய நாட்கள் உள்ளத்தில் இனித்திட, ஸுபஹ் தொழுகையின்றி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆய்ஷாவை கவலையுடன் நோக்கினாள். … Read moreஉயிர்பெற்ற உன்னத உறவு

இலங்கையில் தேயிலைச் செய்கையின் வரலாறு

பிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது. பல கொள்கைகளை வகுத்து பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்வதில் விசேட கவனம் செலுத்தினர். 1837 தொடக்கம் ஏறக்குறைய 21ம் நூற்றாண்டு ஆரம்ப காலம் வரை இந்நாட்டில் ஏராளமான தோட்டங்களை நிறுவி தோட்ட பயிர்ச்செய்கையை பரப்பினார்கள். அத்தோட்ட விளைபொருட்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல … Read moreஇலங்கையில் தேயிலைச் செய்கையின் வரலாறு

வரலாற்றில் மத்திய மாகாணம்

இலங்கையின் நவீன மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆதிகாலத்திலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும். அனுராதபுரம், பொலன்னறுவை இராசதானி காலங்களில் இது மலையரட்டை, மலைய மண்டலம் என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. ‘செங்கடகல அல்லது சிறீவர்ணபுர’ எனும் புகழ் மிக்க நகரம் காணப்படுவதும் இம்மாகாணத்தின் தனிச் சிறப்பாகும். மன்னன் நிஸ்ஸங்கமல்லன் காலம் இலங்கையை அவர் திரி சிங்களாதீஸ்வர என்று அழைத்து இருந்தான். இங்கு இம்மன்னனால் குறிப்பிடப்பட்ட முக்கிய ஒரு பிரதேசமாக கண்டியை உள்ளடக்கிய மத்திய மலை பகுதி … Read moreவரலாற்றில் மத்திய மாகாணம்

அபலையின் உள்ளம்

பிறப்பு முதல் இறப்பு வரை வேலிக்குள்ளேயே வெதும்புகின்ற அபலை உள்ளங்கள் பல வேலி தாண்டி வெளியேற வழி தேடும் அந்த அபலை உள்ளங்களில் ஒன்று இது ஏவல்கள் இல்லாத அடக்குமுறைகள் இல்லாத அதிகாரம் இல்லாத வரையறைகள் இல்லாத குற்றம் காணாத குறை பிடிக்காத புதிய உலகு வேண்டும் அங்கே நான் மட்டுமே இருக்க வேண்டும் எனக்கான சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு காற்றில் கூட அங்கே கலப்படம் இருக்க கூடாது பாரம்பரியம் பண்பாடு பழக்க வழக்கம் என … Read moreஅபலையின் உள்ளம்

உங்கள் பெற்றோரை முத்தமிடுங்கள்

பெற்றோர்கள் என்பவர்கள் அல்லாஹ் எமக்களித்த மிகப் பெரும் பொக்கிஷங்களாகும். அவர்கள் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எமக்காக தம்மை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களையும் புரிந்து தம் இரவுத் தூக்கங்களைத் துறந்து தம் உடலைக்கசக்கிப் பிழிந்து  உணர்வுகளை அடக்கி எம்மை நல்ல முறையில் வளர்க்கப் பாடுபட்டவர்களாகும். இவை ஒவ்வொன்றையும் நாம் கண்கூடாகவே இன்று கண்டுகொள்கின்றோம். எனவேதான் இஸ்லாத்தில் இத்தகைய பெற்றோர்கள் குறித்தும் அவர்களது சிறப்புக்கள் குறித்தும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் சீரான வழிகாட்டல்களைத் தெளிவாகக் காட்டியுள்ளன. “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். … Read moreஉங்கள் பெற்றோரை முத்தமிடுங்கள்

பலவீனர்களல்ல பாலஸ்தீனியர்கள்

மனித குலத்தில் மனிதமேயற்ற யூத குலமே! துறத்தியடிக்கப்பட்ட உன் சமூகத்தின் துன்பத்தை போக்கிய பலஸ்தீனியர் எமக்கா? இரண்டகம் செய்கின்றாய் நன்றி கெட்டவர்களே! இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்ரேல் என்று நாமமிட்டு தலைமுறையாய் நாங்கள் வாழ்ந்த தேசத்தையே உலக வரைபடத்தில் இருந்தே அகற்றினாய்! சொந்த மண்ணிலே எங்களை அகதிகளாக்குகின்றாய் அடிமைகளாக்குகின்றாய் அடித்து துன்புறுத்துகின்றாய்! உன் வஞ்சத்தை தீர்க்க சின்னஞ் சிறு பாலகர்கள் பெண்கள் என்றும் பாராது ஏவுகனைகளால் மாய்க்கின்றாய்! எங்கள் தேசத்துக்கும் எம் எதிர்கால தலைமுறைக்கும் இன்னும் … Read moreபலவீனர்களல்ல பாலஸ்தீனியர்கள்

யார் ஏமாற்றுக்காரன்?

வாழ்க்கைப் பாதையில் ஓடின என் கால்கள் கால்கள் ஏமாற்றிட தடுமாறி விழுந்தேன். பரிதாபமாய் சமூகம் என்னை நோக்கிடக் கண்டே தூக்கி விடும் என கை கேட்டேன். தரையில் வீழ்ந்த என்னை புகைப்படமாக்கி பிரபலம் கண்டது ஏமாற்றிய சமூகம். தன் கையே உதவியென என் கை ஊன்றி நானே எழுந்தேன் ஓட ஆரம்பித்தேன். முன்னால் ஓடிய மனித தடங்கள் பார்த்தேன் மலைப்பாய் இருந்தது ஏமாந்து நின்றேன். ஜெயிப்பது கடினம் மனது சொன்னது. யாரை ஜெயிக்க ஏமாற்றுக்காரர்களையா? ஒரு குரல் … Read moreயார் ஏமாற்றுக்காரன்?

மரணம்

பலரது வாட்ஸ் ஸ்டேட்டஸில் ஒரு சகோதரியின் தாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு மரணித்ததையும் இன்று அதே சகோதரிக்கு திருமணத்திற்கு பேசி வைத்திருந்த ஆண்மகன் மரணித்ததையும் காணக்கிடைத்தது. இயன்றவரை முயன்றும் அவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை என்னால் சம்பந்தப்பட்ட குடும்பத்தவரை தொடர்பு கொண்டு உறுதி செய்ய முடியவில்லை..நிறைய சகோதர சகோதரிகள் அந்த பெண்ணிற்காக துஆச் செய்ததைக் கண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.. அந்த சகோதரிக்கு இறைவன் பொறுமையையும் மன தைரியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.. நான் இங்கு இதை பதிவிடுவது இதை வாசிக்கும் … Read moreமரணம்

விடை பெறும் ரமழானே ஈத் முபாரக்

ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து என முப்பத்தாய் முத்து முத்தாய் எமக்கு நன்மைகளை அள்ளித் தர வந்த ரமழானே! இன்றுடன் எமது அமல்களை ஏற்க மறுத்து விடை பெறுவதும் ஏனோ! நீ பண்படுத்தி விட்டாய் எங்கள் அனைவரினதும் உள்ளங்களை! இனி மீண்டும் அடுத்த ஆண்டும் முஹமன் செய்து … Read moreவிடை பெறும் ரமழானே ஈத் முபாரக்

இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 05

சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது. எனவே அருளாகவும் இறைமார்க்கத்திலே சுவாசிக்கும் அலங்கார குழந்தைகளாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பும் கடமையுமாகும். இந்த உணர்வானது ஒரு குழந்தை கறுவுற்றதிலிருந்து ஆரம்பமாகிறது. எனவே அந்த அருள் சிற்பங்களைச் செதுக்க கருவைச் சுமக்கும் தாயும் காலமெல்லாம் சுமக்க தயாராகும் தந்தையும் திட்டமிட வேண்டும். அந்த வகையில் … Read moreஇலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 05

துயில் தொலைக்கும் விழிகள்

துயில் தொலைத்த இரவுகள் துக்கம் தொக்கியவை தூங்கிப் போன கவலைகளை துடைத்து எழுப்பாட்டிவிடும் பல்லியின் சத்தம் பாம்பின் சத்தமாக படபடக்கும் நெஞ்சை பாடம் போட்டுக் காட்ட வல்லவை ஏக்கங்கள் விகாரமடைந்து ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி எங்கோ கேட்கும் ஒலியொன்று எம் காதில்தான் ரீங்காரமிடும் மரண பயமொன்று ஒட்டிக்கொள்ள மனதில் வடுக்கள் சுட்டுக் கொல்ல மனதோ இழப்பின் உச்சத்தில் மலையேறிவிடும் கொக்கொரக்கோ சத்தத்தில் காலை விடியலை பார்த்துவிட்டு குப்புறப்படுக்காமல் இனியேனும் கண்விழித்தாக வேண்டும் காரிருள் இரவில் கவனமாய் எடுத்தேன் முடிவு … Read moreதுயில் தொலைக்கும் விழிகள்

முஃமினின் வாழ்க்கையில் சோதனையும் இறைநெருக்கமும்

நிச்சயமாக அல்லாஹ் நாம் நேசிக்கும் விடயத்திலும் நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மை சோதனைக்குட்படுத்துவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப்பட்டவர்களல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழமாட்டோம். நமக்கு ஏற்படும் சோதனையின் முடிவுகளை நாம் முன்கூட்டியே அறியும் ஆற்றலுள்ளவர்களாக இருந்திருந்தால் எவ்வித கலக்கமுமில்லாமல் நாம் அமைதி காத்திருப்போம். ஆதலால் அல்லாஹ் சோதனை எனும் அம்சத்தையும் அதன் முடிவுகளையும் தன் வசமே வைத்துள்ளான், கஷ்டத்திலும், ஆரோக்கியத்திலும், நோயிலும், வறுமையிலும், செல்வத்திலும் சோதனை இருந்து … Read moreமுஃமினின் வாழ்க்கையில் சோதனையும் இறைநெருக்கமும்

சொல்லு சொல்லாக

மாணவர்களுக்காய் செயலமர்வொன்று மதிப்புக்குரிய நிறுவனமொன்றால் இலவசமாக நடந்தேறியது அன்று இடைக்கிடை போய் பார்த்தேன் அழகிய அர்த்தமுள்ள உரைகள் அரங்கேறியது உணவில் விஷமாம் உடலுக்கு ஆபத்தாம் அடியோடு தடுத்து தோட்டங்கள் செய்வோமென்ற தொனிப் பொருளில் மூழ்கியிருந்தனர் தோட்டப் பாடசாலைக்கு வந்த தொண்டர்கள் கடையிலே வேண்டாம் கருப்பட்டிகூட கைபட உழைத்து சாப்பிடாதவிடத்து கலக்கும் நஞ்சு உடம்பில் கடுமையாய் சொன்னார்கள் கவனித்தனர் குழந்தைகள் கவனம் குவிந்தது என்னில் கவனிக்கவென டீ ஊற்ற முனைந்த கல்வித்தாகம் தீர்க்கும் சகஆசான்களிடமே டீ வேண்டாம் மாவு … Read moreசொல்லு சொல்லாக

இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 04

நேசம் கலந்த பயிற்றுவிப்பு இல்லங்களையும் உள்ளங்களையும் உயிரூட்டும் இந்த ரமழானிலாவது பிள்ளைகளுடன் நேசம் கொண்டு முறையான பயிற்றுவிப்பை வழங்குங்கள். அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள், அவர்களுடன் நேசம் கொள்ளுங்கள் அதுவே சிறந்த பிள்ளைகளாக மாற்றுவதற்கு உந்துகோலாக அமையும். அன்பின் பெற்றோர்களே! பிள்ளைகள் மீது வெறும் அன்பு, பாசம் கொடுத்து வளர்த்தால் மட்டும் போதாது. உபதேசம் செய்வது, கல்வி ஞானத்தை வழங்குவது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பாகும். நாம் வழங்கும் அறிவு இம்மையிலும், மறுமையிலும் பயனுள்ளதாக அமைய வேண்டும். இல்லாவிடின் ஈருலகிலும் … Read moreஇலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 04

ஏப்ரல் 21

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம் பெற்று பட்டப்பகலில் பதற வைத்தனர் இறை சந்னிதானத்தில் உயிர்த்த ஞாயிறு உயிர்களை உருகுலைத்தது உணர்வுகள் அற்ற ஒரு சிலரால் உவப்பாய் ஊர் சுற்ற வந்த உல்லாசப் பயணிகளின் உயிர் அற்ற உடல்கள் உணவகத்திலே உயிர்த்த ஞாயிறை உயர்பிக்க வந்த உறவுகள் உயிர் … Read moreஏப்ரல் 21

பிரசவம்

உலகம் உயிர் பெற மங்கையர் மறுபிறப்பெடுக்கும் மகத்தான மணித்துளிகள் தாரத்தை தாயெனப் போற்றும் தருணம் பெண்மையின் பூரணத்தை பூமி போற்றும் பொன்னான நிமிடம் புது உயிர் இதழ் விரிக்கும் இரம்மியமான பாெழுது உறவுகள் ஒன்றுபட ஓர் உயிர் உதவி செய்யும் உன்னதமான கனங்கள் தாய்மையின் ஸ்பரிசத்தை பெண் அவள் உணரும் உணர்ச்சிகரமான நேரம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாய் மாறும் மாண்பான பொழுது உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் நினைவு கூறும் என்றும் மாறா அக்கனத்தை அழுது … Read moreபிரசவம்

x-Zahirians இன் xecutive chef நிகழ்ச்சி

மாவனல்லை சாஹிராவின் நூற்றாண்டை சிறப்பிக்கும் முகமாக பழைய மாணவர்களின் ஒன்றியமான x-Zahirians அமைப்பு பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஓர் அங்கமாக  ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கிடையிலான “xecutive chef” எனும் சமையக்கலை போட்டி நிகழ்ச்சி ஒன்றை அண்மையில் மிகப்பிரமாண்டமாக நயாவல இல்மா வரவேற்ப்பு மண்டபத்தில் நடாத்திமுடித்தது. 20 அணிகள் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்ச்சியில் 5ஸ்டார் ஹோட்டலின் சிரேஷ்ட chef ருக்ஸான் மற்றும் chef ஜெனிபர் ஆகியோர் நடுவர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. வெற்றியீட்டிய அனைவருக்கும் … Read morex-Zahirians இன் xecutive chef நிகழ்ச்சி

இறை படைப்புக்கள் தனக்காக வாழ்வதில்லை!

நீரும், நிலமும், மலையும், காடும் இயற்கை தந்துள்ள காப்பரண்கள். வானுயர்ந்த சோலைகள், படரும் கொடிகள், ஓங்கி வளரும் மரங்கள், பசுமை செடிகள், கண்கவரும் மலர்கள் யாவும் இயற்கையெனும் இறைவன் அருள்கள். சுற்றுச் சூழலை அழகுபடுத்தி மணம் கமழச் செய்யும் வண்ணங்கள். இவை யாவுமே தனக்காக வாழ்வதில்லை. இயற்கையில் எதுவும் தனக்காக வாழ்ந்ததில்லை. சுயநலன்கள் அதற்கில்லை. பிறர் நலன் பேணுவதே இயற்கையில் காணப்படும் இறைவன் படைப்புக்களின் இயல்பm கடல் வளம் ஒரு நாட்டை தலைநிமிர்ந்து வாழ வாரி வழங்குகிறது. … Read moreஇறை படைப்புக்கள் தனக்காக வாழ்வதில்லை!

நான் உன்னை நேசிக்கிறேன்

இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. எனது உள்ளத்தால் உணர்ந்து உனக்காக கூறும் என் இதய வாசகம். என் வாழ்க்கை பயணத்தின் முடிவு வரை உன்னால் என்னோடு பயணிக்க முடியாது என்று தெரியும். நம் பயணம் எப்போது, எச்சந்தர்ப்பத்தில், எங்கு, தரிப்படையும் என்று எனக்கு தெரியாது. எந்த தரிப்பிடத்தில் நீ இறங்கினாலும், இறக்கி வைக்க முடியாது நீளும் உன் நினைவுகள். நீ என் இதயத்தோடு கலந்த பின்னும் எப்படி இறக்கி வைப்பது உன் நினைவுகளை? உன்னை நான் … Read moreநான் உன்னை நேசிக்கிறேன்

இலட்சியக் குடும்பத்தை நோக்கி தொடர் – 02

கணவன் மனைவி உறவு “மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80) இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து கொடுத்தால் நிம்மதி என்று பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதனால் கடமைக்குத் திருமணம் முடித்தாற்போல் துணைகள் வாழ்கிறார்கள்.” ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பது போல் ஆரம்பத்தில் இனிக்கும் கணவன் – மனைவி உறவுகள் பிற்காலத்தில் விரிசல் காண்கிறது. ஏன்? பொருத்தமானவர்களை … Read moreஇலட்சியக் குடும்பத்தை நோக்கி தொடர் – 02

இறைவனின் நாட்டத்திற்காக!

அன்பே! நீ தான் என் உயிர்! நீ தான் என் உடல்! நீ தான் என் உள்ளம்! தீ தான் என் உணர்வுகள்! நீ தான் என் உண்மை! நீ தான் என் பொய்! நீ தான் என் ஜனனம்! நீ தான் என் வாழ்வு! நீ தான் என் சாவு! நீ தான் என் தொடக்கம்! நீ தான் என் முடிவு! நீ தான் என் ஆதி! நீ தான் என் அந்தம்! நீ தான் … Read moreஇறைவனின் நாட்டத்திற்காக!

Select your currency
LKR Sri Lankan rupee