குரங்கு மனசு பாகம் 65

“எல்லாம் என்னால தான்” தன் மீது என்றுமில்லா கவலை உச்சத்தை தொட, தனக்கென்று இரண்டு வாரிசுகள் இல்லாதிருந்தால் சர்மியோடு நிச்சயமாக மாண்டு போயிருப்பான். வீட்டில் சனநெரிசல் மெதுவாக கூட, “ஆன்ட்டீ என் புள்ளக்கி முதல்ல இத ஊத்தி குடுங்க” கொண்டு வந்த பால்மா வை அழுகையோடு மாமியாரிடம் கொடுக்க, ராபியாவும் அதற்காகவே காத்திருந்தவளாய், தாய்ப்பாலை சுவைக்க வேண்டிய சிறிசுக்கு மிகவும் சிரமப்பட்டு போத்தல் பால் வழங்கினாள். “நல்லா இருந்த பொம்புள, திடீருன்னு என்ன ஆவின?” ஊரார், உற்றார் … Read moreகுரங்கு மனசு பாகம் 65

குரங்கு மனசு பாகம் 64

“சர்மி…” அவன் கைகள் நடுங்க, நா வரண்டு போனது. தாயுடன் ஒட்டியிருந்த குழந்தையை மெதுவாக தூக்கி எடுத்தான். தன்னவளுக்கு ஏதோ விபரீதமென்பது மட்டும் புரிய, கால்கள் மெதுவாக பின் வாங்கின. “நோ….” தலையில் கை வைத்தவனாய் கத்த, நாற் திக்கும் அவன் குரல் எதிரொலித்தது. அக் கதறல் கேட்டு கதிகலங்கிப் போன ராபியா, துடித்துக் கொண்டே ஓடி வந்தாள். “என்ன மகன்?” அப்படியே வேரற்ற மரமாக தொப்பென்று நிலத்தில் சாய்ந்தவனைக் கண்ட ராபியாவுக்கு தன் மகளைப் பார்க்கும் … Read moreகுரங்கு மனசு பாகம் 64

குரங்கு மனசு பாகம் 63

அன்றிரவு தன்னவள் இல்லா தாய் வீடு அதீகிற்கு நரகமாக, சர்மியின் நிலையும் பெரும் சோகத்திலேயே முடிந்து போனது. “எப்படா விடிந்து விடுவது?” என்றிருந்தவனாய் அவசர அவசரமாய் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு கிழம்பி வந்த அதீகின் ஏக்கம் அத்தாய்க்கு புரியாமலில்லை, இருந்தும் “ஏன்டா இன்னம் கொஞ்சம் தூங்க இருந்தே? இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?” “அதுவந்து, இல்லம்மா… ஆஹ் இன்னக்கி கொஞ்சம் சீக்கிரமா ஆபீஸ் போகனும், வந்த போல தங்கினதே.. வீடு போய் ரெடி ஆவிட்டு போகனும் அதுதான்…” … Read moreகுரங்கு மனசு பாகம் 63

குரங்கு மனசு பாகம் 62

“எங்கயோ போற ஒருத்திக்காக இந்த உம்மாவ நீ விட்டுக் கொடுத்தப்போ ஒரு கணம் உலகமே வேணாம்னு போயிச்சுடா, உன்ன நெனச்சி உருகி அழுதுட்டு இருந்தன். என்னால எதுவுமே செய்ய முடியல்ல. கண்ண மூடினாலும் உன் முகம் தான் வந்து நிக்கும், பேசாம செத்து விடுவோமான்னு கூட யோசிச்சு பார்த்தன்.” “உம்மா…” “நான் சொல்லுறன்னு தப்பா எடுத்துக்காதடா.. சர்மி யாரு?? ஒருத்தன் கூட வாழ்ந்துட்டு வந்தவள் டா, நீ வேணாம்னு அடிச்சி சொன்னவள் டா, உன் காதல புரிஞ்சிக்காம … Read moreகுரங்கு மனசு பாகம் 62

குரங்கு மனசு பாகம் 61

இங்கு தன்னவனைக் காண வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தவளின் நிலை இளவுகாத்த கிளியாக, அதீகிற்கு அழைப்பு செய்து எங்கிருக்கிறார் என்பதனை விசாரித்துக் கொள்வோமா என்றிருந்தும் ஏதோ அவள் அகம் தடுக்க, பக்கத்தில் கணவனின்றி விசும்பிக் கொண்டிருந்தாள். “புள்ள மகன் வரல்லயா இன்னம்” ராபியாவுக்கும் ஏதோ சங்கடமாயிருக்க, பதிலுக்கு வார்த்தைகளை விடாது மௌனியாய்க் கிடந்தாள் சர்மி. நேரம் பார்த்து அதீக் தரப்பிலிருந்து அழைப்பு வர, அதற்காகவே காத்திருந்தவளாய், “ஹலோ ஹபி எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா? வீட்டு முன் … Read moreகுரங்கு மனசு பாகம் 61

குரங்கு மனசு பாகம் 60

உண்மையில் தன் இந்தப் பயணத்தில் தன்னவளுக்கு துளியும் உடன்பாடில்லையென அதீகிற்கு நன்றாகத் தெரியும். “நான் உம்மாக்கிட்ட போய் வரட்டா?” என்று கேட்டதும் அவள் வதனம் எந்தளவு மாறிப் போனது என்பதை அவன் நன்கு உணர்ந்து கொண்டான். என்றாலும் மனைவியா? தாயா? என்ற நிலையில் குழம்பிப் போயிருந்தவன் அகம் திடீரென இருதரப்புக்கும் சம அந்தஸ்து கொடுக்க சர்மியின் பிரசவ வேதனையைக் கண்ணால் கண்டதும் ஒரு காரணம் தான். ஆம் தன் தாயும் தன்னை இவ்வுலகுக்கு ஒருத்தனாய் பெற்று, ஆளாக்க … Read moreகுரங்கு மனசு பாகம் 60

குரங்கு மனசு பாகம் 59

இங்கனம் இரண்டாவது குழந்தையைக் கண்டு, வீடு வரும் போது தன் மாமியாரைக் காண வேண்டுமென்ற சர்மியின் விருப்பும், அங்கு நடந்த அசம்பாவிதங்களும் இருவர் உள்ளங்களையும் வதைத்துக் கொண்டிருந்தன. இனியும் வாஹிதா இறங்கப் போவதில்லை என்ற நிலையில், தம் மகளைப் பெற்ற சந்தோஷத்தையாவது கொண்டாட முடியாக் கவலையோடு கிடந்தான் அதீக். பதிலுக்கு தன்னவனின் அகத்தே நிறைந்திருந்த ஆற்றப்படா வடுக்களை சரிப்படுத்த திராணியற்றவளாய், தான் செய்த தவறுக்கு தன்னவன் தண்டிக்கப்படும் நிலைமையை எண்ணி உருகிக் கொண்டிருந்தாள் சர்மி. “தங்கச்சிக் குட்டி, … Read moreகுரங்கு மனசு பாகம் 59

குரங்கு மனசு பாகம் 58

சர்மியின் கதறல் நாற்திக்கையும் நடுங்கவைக்க, அவளே உலகமென்று வாழும் அவன் கணவனால், ஒரு உயிரை ஐனனிக்க தன்னவள் கொண்ட அவஸ்தையை எப்படி நேரில் காண முடியுமாயிருக்கும்? அதை எங்கனம் தாக்குப் பிடிக்க முடியுமாயிருக்கும்? “சேர் நீங்க உங்க வைப்கிட்ட போங்க, அவங்களுக்கு அது ஆறுதலா இருக்கும்.” “எ.. என்.. என்னால முடியல்ல டாக்டர். எனக்கு என்னமோ நடக்கும் போல இருக்கு. என் வைய்ப் அ இந்த நிலைமையில சத்தியமா என்னால பார்க்க முடியாது. நா.. நான் வெளியவே … Read moreகுரங்கு மனசு பாகம் 58

குரங்கு மனசு பாகம் 57

இப்படியே ஒன்றிரண்டாய் மாதங்கள் பறந்தோட சர்மியில் நிறைய மாற்றங்கள். ஆரம்பம் முழுவதும் வாந்தியும் மயக்கமுமாய் காலம் கடாத்தியவள் உடல் பருமன் அதிகரித்து, அழகு குறைந்து, பார்க்கப் பாவமாய் கிடந்தாள். ஆயினும் அவளின் இக் கஷ்ட காலத்திலே கணவனின் ஆறுதலும், ஒத்தாசையும், அரவணைப்பும் தாராளம் கிடைத்தது. சின்னவனும் நினைவு வரும் போதெல்லாம் ஓடிவந்து “தங்கச்சிக் குட்டி” எனத் தாயின் வயிற்றில் கைவைத்துக் கொள்வதும், செல்லும் இடமெல்லாம் தங்கச்சிக்கு என்று பொருட்கள் வாங்குவதும், “அவசரமா நாநிகிட்ட வந்துடுங்க தங்கச்சி” என்று … Read moreகுரங்கு மனசு பாகம் 57

குரங்கு மனசு பாகம் 56

“சர்மிம்மா” மெதுவாக மனைவியை நெருங்கி வந்தான் அதீக். “என்ன ஹபி?” இன்னக்கி போல எப்பவும் என்ன பயம் காட்டாத சரியா? அந்த கொஞ்ச நேரத்துல என் உசுரே போயிடும் போல இருந்திச்சு. இந்த தேவதைய ஒரு நிமிஷமும் என்னால இழக்க ஏலாது. அப்புடி ஒரு நிலம வந்தா கடவுள் முதல்ல என்னத் தான் அவன் பக்கம் எடுத்துக்கனும்” “ஆஹ் போதும் இனி, வேற என்ன சரி பேசுவோமா?” “உன்கிட்ட இப்புடி நெருக்கமா இருந்துட்டு என்ன பேச கண்ணு? … Read moreகுரங்கு மனசு பாகம் 56

குரங்கு மனசு பாகம் 55

“ஹபி என்ன விட்டு எங்கயும் போயிட மாட்டீங்களே?” “ஏன்டா உனக்கு இப்புடி ஒரு டவுட், நீ என்னோட பொண்டாட்டி. உன்னவிட்டு நான் எங்கம்மா போகப் போறன்?” பதிலுக்கு இலேசாக புன்னகைத்தாள் சர்மி. “அது சரி, என்மேல இருக்குற கோவத்துல ஏன் உன்ன கஷ்டப் படுத்திக் கொள்ற சர்மி?” “அப்புடி இல்ல ஹபி” “என்ன இல்லாம?? நீ காலையில இருந்து எதுவும் சாப்பிடல்ல, அதனால என் குட்டி பாப்பாவும் பசியில கிடந்து இருக்கு” சோகமாய் முகத்தை வைத்துக் கொண்ட … Read moreகுரங்கு மனசு பாகம் 55

குரங்கு மனசு பாகம் 54

“ஆன்ட்டீ… யாராவது இருக்கீங்களா? பிலீஸ் ஹெல்ப், ஆன்ட்டீ… ஆன்ட்டீ” மருமகன் அலற, சின்னவனோடு விளையாடிக் கொண்டிருந்த ராபியா பதறித் துடித்தவளாக அறை நோக்கி ஓடி வந்தாள். “என்ன மகன்? என்னா?” சர்மி மயங்கிட்டாங்க ஆன்ட்டீ, கொஞ்சம் அவசரமா தண்ணி எடுத்துட்டு வாங்க” மகளின் நிலை கண்ட தாய் துடித்துப் போக, தண்ணீர் சொட்டுக்களால் அவள் அழகிய வதனத்தை ஒத்தடம் செய்தாள். “சர்மி, சர்மிம்மா, சர்மி… புள்ள.. சர்மி, சர்மிம்மா..” தாயும் கணவனுமாக மாறி மாறி அவளை தட்டி … Read moreகுரங்கு மனசு பாகம் 54

குரங்கு மனசு பாகம் 53

ஆனால் அங்கு அதீக் காத்திருப்பிற்கு ஏற்ப வந்தவள் சர்மியல்ல, “மே ஐ கம் இன் சேர்” “இயஸ்” பார்க்க சற்று உயரமானவள், அரபிப் பெண்கள் போன்ற அழகு, மைதீட்டிய கருமையான நீண்ட கண்கள், அழகாக, ஆடம்பரமான உடையணிந்திருந்தாள். “என்ன சேர், நான் யாருன்னு தெரியாம குழப்பத்துல இருக்கீங்க போல?” “ஓ இயஸ்… நீங்க…” உங்க வைய்ப் சர்மீட பெஸ்ட் ஹஸ்பனோட செகன்ட் வைய்ப் “ஓஹ் நீங்களா?” ஏதோ உறவுக்காரர் போல் வாய்பிளந்தான் அதீக். “ஆனா இவள் எதுக்கு … Read moreகுரங்கு மனசு பாகம் 53

குரங்கு மனசு பாகம் 52

“ஹபி, ஹபி” அந்த இருட்டறையில் கணவனை கைகளால் தேடினாள். “எனக்கு என்னமோ போல இருக்கு ஹபி, கொஞ்சம் எழும்புங்களே” கணவன் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. “ஹபி, ஹபி” ஆம் அவள் கூப்பாடு எதையும் வாங்கிக் கொள்ள அவன் பக்கத்தில் இருந்தால் தானே? மெதுவாக எழுந்தவள், அறை மின்குமிழைப் போட, தன்னவனைக் காணாது பயந்து போனாள். “ஹபி… ஹபி…” வீடு முழுவதும் கணவனைத் தேடியவளுக்கு விளக்கம் கொடுக்குமாறு வந்து நின்றாள் ராபியா. “மகன் காலையில ஏர்லியா கிளம்பி … Read moreகுரங்கு மனசு பாகம் 52

குரங்கு மனசு பாகம் 51

“இரியுங்கம்மா, நாநா இப்போ வந்துடுவாரு. கொஞ்சம் பொறுமயா இரீங்கம்மா.. பிளீஸ் மா, பிளீஸ்” “நான் வேணாம்னு போனவன்டா அவன். அவன் வந்தன்னு எனக்கு என்ன கெடச்சிடப் போவுது?” முன்னதாகவே விரைந்து வந்த அதீக் தாயின் கைப்பற்றி எழுந்து நிற்க உதவி செய்தான். “உங்களுக்கு என்னம்மா?” பரிதாபமாய் கேள்வி தொடுத்த அதீகை எண்ணி உள்ளுக்குள் குளிர்ந்தாள் வாஹிதா. ஆயினும் அவள் திட்டம் கைகூடும் வரை விட்டு விடுவாளா என்ன? “நான் எப்புடிப் போனா உனக்கு என்னடா? என்னமோ என் … Read moreகுரங்கு மனசு பாகம் 51

குரங்கு மனசு பாகம் 50

மாலை மயங்க, காற்றெழுதும் கவிதையாய் மேகங்கள் கரைந்தோட, கதிரவன் வருகையால் மாற்றங்கள் நடந்தேற, அந்தி நேரம் செம்மஞ்சலாய் உடைமாற்றிக் கொண்ட அப் பொழுது தனில் மூத்தவனை முடக்கும் முரணற்ற செய்கைக்காய் நரித்தந்திரம் மூட்டிக் கொண்டிருந்தவளுக்கு, அந்தி நேர மாற்றங்களுக்கு ஒப்ப சர்மி வாழ்வு இருளாக மாறிப் போவதில் அந்தளவு பிரியம் தான். ஆம் கணவன் மனைவியாய் சந்தோஷமாயிருக்கும் குடும்பத்தை நிர்க்கதியாய் பிரித்து விட அதீத ஆசை வாஹிதாவிற்கு. தனது மகன் இறுதியாய் தன் நிலையை நிரூபிக்க நடாத்திய … Read moreகுரங்கு மனசு பாகம் 50

குரங்கு மனசு பாகம் 49

அழகான காலை புதுத்தெம்புடன் பூக்க, கணவனை ஆபிஸ் அனுப்பும் பதட்டத்தில் சமையலறையில் பம்பரமானாள் சர்மி. “ஹபி ஹபி…” மனைவி பதட்டமாய் சுழன்றாலும் அதீக் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. “ஹபி டீ ரெடி, எழும்புங்க அவசரமா” செவிடன் காதில் சங்கூதிய நிலையாய் அவன் தான் எதையும் வாங்கிக் கொண்டதாய் விளங்கவில்லை. “ஹபி, என்னடா இன்னமும் எழும்பாம, டெய்ம் எண்ணான்டு பாருங்க…” அறைக்குள் விரைந்தவள் மீள் தட்டி எழுப்ப, மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். “ஹே என்னடா இது? இப்போ தண்ணி … Read moreகுரங்கு மனசு பாகம் 49

குரங்கு மனசு பாகம் 48

இங்கனம் ஒருவருக்கொருவர் அன்புடனும், விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் தம் இல் வாழ்க்கையைக் கடாத்த, சர்மி அதீக் தம்பதியினர் தன் மூத்த பிள்ளையைக் கண்டும், வாஹிதா மனம் இறங்கி இவர்களை சேர்த்துக் கொண்டதாயிருக்கவில்லை. ஆயினும், “என்னோட உம்மா எப்போ சரி எங்கள புரிஞ்சிக்குவாங்க” என வெகுவாய் நம்பி வாழ்ந்தான் அதீக். மூத்தவன் கிடைத்த பொழுது, “உம்மா உங்களுக்கொரு பேரக்குழந்தை வந்திருக்கு” ஏதோ நப்பாசையில் ஆரவாரமாய் சொன்ன பொழுது, “அவ வயித்தால பெத்துக்கிட்டது நம்ம பரம்பரையாவாது” என வெடுக்கென்று தன் … Read moreகுரங்கு மனசு பாகம் 48

குரங்கு மனசு பாகம் 47

“பேர்ஷன் கு ரொம்ப நெருக்கமான யாராவது ஒருத்தர் உள்ள வரலாம்” ஒரு தாதி வந்து சொல்ல, சர்மியும், வாஹிதாவும் ஒரேயடியாக எழுந்து நின்றனர். “இங்க சர்மி யாரு?” கேட்டது அத் தாதிப் பெண் தான். “நா.. நான் தான்” குறைவின்றி வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டவளாய் பதில் கொடுத்தாள். “நீங்க உள்ள வாங்க மெடம், அவரு மயக்கம் தெளிஞ்சதுல இருந்து உங்களத் தான் சொல்லிட்டு இருக்காறு” இப்படியொரு அவமானத்தை வாஹிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சர்மியை முறைத்துப் … Read moreகுரங்கு மனசு பாகம் 47

குரங்கு மனசு பாகம் 46

“இவள் ஒருத்தி” கவலையோடு கிடந்த வாஹிதாவின் வதனம் அவ் அழைப்பைக் கண்டு மீள் சினத்தால் சிவக்க, அழைப்புக்கு பதில் கொடுத்தாள். “என்னடி இப்ப உனக்கு நிம்மதியா?” தன்னவனுக்கு அழைப்பு செய்தால் யாரோ கடுமையாக கத்த, அது தன் அத்தை என்பதை உடனடியாக ஊகித்துக் கொண்டாள். “ஆன்ட்டீ… ஆன்ட்டீ, அதீக்… அதீக் எங்க ஆன்ட்டீ?” “ஓஹ்! நடக்குறது, சொல்லுறது எல்லாம் உன் புருஷன் காதுல ஊதிடுவாய், இப்போ அவன் உசுறுக்கு போராடிட்டு இருக்கான். உனக்கு இப்போ நிம்மதியா?” “நீங்க … Read moreகுரங்கு மனசு பாகம் 46

குரங்கு மனசு பாகம் 45

“அவன் என் வயித்தால பெத்ததுக்கு வயித்துல வெச்சே அழிச்சி இருக்கனும்” பெற்றவளின் சுடு சொற்களால் மிகவும் நொந்து போனவனின் உள்ளம் தாய் வீட்டைக் காணும் வரை அமைதி பெறவில்லை. குதிரை வேகத்தில் வந்து மோட்டார் வண்டியை நிறுத்தியவன், ஒரு அன்னியனாய் தன் வீட்டு வாயிலை அடைந்தான். “உள்ள யாராவது இருக்குறீங்களா?” அவனையும் மீறி வந்த அழுகைக்கு அணைக்கட்டு போட்டவனாய், “யாரு?” என வெற்றிலை வாயோடு முன்னால் வந்த தாயைக் கண்டதும் அவனை அறியாமல் கண்கள் குளமாகிட்டு, “பொறுமை, … Read moreகுரங்கு மனசு பாகம் 45

குரங்கு மனசு பாகம் 44

சர்மி தாயாகப் போகும் பரவசம் அதீக் உள்ளத்தில் ஆனந்தமாய் கிடந்தாலும் தன் தாயிடம் இந்த சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடியாதே என்ற வருத்தம் வெகுவாய் அவன் உள்ளத்தை தாக்கியது. “சர்மி…” ஏதோ ஆறுதல் வேண்டி தன்னவளை அழைத்தவன் பேசியதுமே ஓடி வந்து பக்கத்தில் நிற்கும் மனைவியை காணாமல் அறையை விட்டு வெளியே வந்தான். “ஹலோ ஆன்ட்டீ நா… நா.. நான் சர்மி பேசுறன்” யார்கூடவோ லேன் லைனில் பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு இடைஞ்சலின்றி தூரத்தில் நின்று பார்த்துக் … Read moreகுரங்கு மனசு பாகம் 44

குரங்கு மனசு பாகம் 43

“ஹபி உம்மாக்கிட்ட டீ போட சொல்லவா?” “ஓகே பேபி, நான் வொஷ் ரூம் போய் வாரன். ஏன்ட புள்ள ரெடி ஆவி இரியுங்க, டாக்டர் கிட்ட போய் வந்துடலாம்.” “ஹ்ம்ம் ஓகே ஹபி” கணவனின் மார்பிலிருந்து எழுந்தவள், தாயிடம் தன்னவனுக்காக தேநீர் தயார் பண்ணச் சொல்லி விட்டு, தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள மும்முரமானாள். “சர்மி” “என்னம்மா?” “இங்க கொஞ்சம் வாங்களே புள்ள..” “என்னம்மா சொல்லுங்க.” “அதுவந்து புள்ள உன்கிட்ட பிரக்னன்சி டெஸ்ட் ஸ்ட்ரிப் இருக்கல்ல, டாக்டர் … Read moreகுரங்கு மனசு பாகம் 43

குரங்கு மனசு பாகம் 42

இங்கனம் சர்மி, அதீக் வாழ்க்கை இன்பமயாய் நகர, இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வுடனும், வற்றாத காதலுடனும் காலம் கடத்தினர். இப்பொழுது அதீக் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு விட்டான். மனைவியை பிரிய முடியாத வருத்தம் அவனது வெளிநாட்டு வாழ்க்கைக்கு முடிச்சுப் போட்டிருக்கலாம். ஆயினும் போதுமான சம்பளத்தில் நாட்டிலேயே ஒரு நல்ல தொழில் வாய்ந்ததும் அதீக், சர்மி உட்பட ராபியாவும் குளிர்ந்து போனாள். தனது மகளுக்கு இவ்வளவு பொருத்தமான வாழ்க்கைத் துணையாய் வாயில் தேடி வந்தவரை வார்த்தைகளால் பொசுக்கி திருப்பியனுப்பி … Read moreகுரங்கு மனசு பாகம் 42

குரங்கு மனசு பாகம் 41

“ச்சே! நான் ஒருத்தன் அவசரப்பட்டு உம்மாக்கிட்ட சொல்லிட்டன். யா அல்லாஹ்வே! என் உம்மாவுக்கு ஏதும் நடந்து இருக்கக் கூடாது.” உள்ளம் நிறைய பதட்டத்துடன் வாகனத்தை செலுத்திய ஆதில், தன்னால் எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அந்தளவு அவசரமாய் வீட்டை அடைந்தான். “உம்மா உம்மா” எங்கும் மயான அமைதி. “உம்மா நீங்க எங்க இருக்கீங்க? உம்மா, உம்மா” ஆதிலின் கதறல் நினைவிருந்தும் பேச்சற்றுக் கிடந்த அத் தாயை விம்மி அழ வைத்திட்டு. “உம்மா இங்கயா இருக்கீங்க? உங்களுக்கு என்னமோன்னு … Read moreகுரங்கு மனசு பாகம் 41

Select your currency
LKR Sri Lankan rupee