பஸ்குவில் தொடங்கி முபராஹ்வில் முடிந்த விவாகரத்து

திருப்பு முனை பாகம் 31 சிலர் இப்படி தான் அவர்கள் செய்த தவறை மூடி மறைத்து விட்டு நம் மீது வீண் பழி சுமத்திய பிறகு அவர்கள் நல்லவர் வேஷம் போடுவார்கள். அந்த சமயத்தில் நாம் உடைந்து போகாமல் நிதானமாக இருக்க வேண்டும். சுமத்திய பழி தற்காலிகமானது. ஆனால் அவர்கள் சுமக்கப் போகும் பாவத்தின் எடை நிரந்தரமானது. எனவே நீ தவறு செய்யவில்லை எனில் தைரியமாக இரு. இறைவன் பார்த்து கொள்வான். லீனா வீட்டுக்கு வந்த செய்தி … Read moreபஸ்குவில் தொடங்கி முபராஹ்வில் முடிந்த விவாகரத்து

மென்டல்தானே கெம்பஸ் வரக்கும் படிக்க போ போகுது

திருப்பு முனை பாகம் 30 காதியாருக்கோ பேரதிர்ச்சி. “என்ன இது காக்காவும் தம்பியும் எதிர் எதிரா வந்து இரிக்கிறீங்க. இப்படி ஒரு வழக்கு நா இது தான் மொத மொதலா பாக்குறேன்.” என்றார். பின்னர், “என்னா பிரச்சின இவங்களுக்கு பிரியனும்டே சொல்றாங்க” உடனே மாமா குறுக்கிட்டு, “அது இவக்கு வாழ ஏலாதாமே ஹஸரத் டிவொர்ஸ்தான் வேணுமாம். அவங்க கேக்குறதயே குடுங்க.” “அப்படி நீங்க சொல்ற மாதிரி அவசரத்துல குடுக்க ஏலாதே.” ருஸ்னி மாமா, “இல்ல ஹஸரத் ரெண்டு … Read moreமென்டல்தானே கெம்பஸ் வரக்கும் படிக்க போ போகுது

பொய் ஹஸரத் இவர் தான் வீல் பேசியே தந்தாரு

திருப்பு முனை பாகம் 29 நேரம் 3.45 அப்போது தான் இவர்கள் வீட்டை வந்தடைந்தனர். வந்ததும் அவளுக்கு அழுது அழுது உடல் சோர்ந்திருந்தது. எனவே முகம் கை கால் கழுவி விட்டு கட்டிலில் சாய்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். பிறகு அப்ரா தனியார் வகுப்பு முடிந்து வந்து லீனாவை மெதுவாக தட்டவே அப்போது தான் லீனாவும் எழுந்தாள். “எப்ப வந்தீங்க தாத்தி?” என்றாள் ரகசியமாக. “இப்ப கொஞ்சத்துல தான்.” “ம்ம் எல்லாம் எடுத்து கொண்டா வந்தீங்க.” “ம்ம்” … Read moreபொய் ஹஸரத் இவர் தான் வீல் பேசியே தந்தாரு

போவாதீங்க லீனா

திருப்பு முனை பாகம் 28 மாமாவின் அலட்சியம் லீனாவை சங்கடப்படுத்தியது. பிறகு மாமா சித்திக்கு கோல் எடுத்து. “இங்க பாருங்க லீனா ஊட்டுக்கு வரனும்டு புடியா இரிக்கிறா ஷரீப் ஓட வாழ ஏலாதாம் அவக்கு. நீங்க கொஞ்சம் சொல்லுங்க அவக்கு நாங்க சொன்னா ஒன்டும் வெளங்குதில்ல.” “நா என்னத்த சொல்ல. அவக்கு ஊட்டுக்கு போகனும்டா கூட்டி போங்க. இனி வாழ்ந்து தான் அவ என்னத்த கண்டா.” “என்ன நீங்க இப்படி பேசுறீங்க.” “மறுகா அவக்கு விருப்பமில்லாட்டி என்னத்துக்கு … Read moreபோவாதீங்க லீனா

நீங்க ஒஙட ​ரெஸ்பெக்ட்அ பத்தி யோசிக்கிறீங்க. இங்க ஏன்ட வாழ்க்கயே போச்சி.

திருப்பு முனை பாகம் 27 மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு வாசலில் அமர்ந்திருந்தனர். லீனா டீ ஊற்றி கொண்டு வந்து கொடுத்தாள். எல்லோர் முகமும் ஒவ்வொரு பக்கம் தொங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் மாமி லீனாவை அழைத்து, “லீனா அப்ப நீங்க வர வானா. நாங்க உம்மாவ மட்டும் கூட்டிட்டு போறோம். ஏதோ கோவத்துல ராவ் ஒவ்வொன்டு பேசி பட்டுட்டு அதுவல மனசுல வெச்சிக்கோ வானா.” என்று அவள் … Read moreநீங்க ஒஙட ​ரெஸ்பெக்ட்அ பத்தி யோசிக்கிறீங்க. இங்க ஏன்ட வாழ்க்கயே போச்சி.

ஏன்ட உம்மாட மேல மட்டும் கைய வெச்சால்

திருப்பு முனை பாகம் 26 எப்போதுமே பேசிக் கொண்டிருப்பவள் திடீரென மௌனம் காத்தாள் அவன் மனம் உடைந்திருக்கிறான் என்று அர்த்தம். எப்போதுமே பேசாதவன் திடீரென பேசுகிறான் என்றால் அவன் பொறுமை இழந்து விட்டான் என்று அர்த்தம். அது போல் தான் எப்போதுமே எவரையும் எதிர்த்து பேசாத லீனா அன்று பொறுமை இழந்து விட்டாள். அதன் விம்பமே அவளை இந்தளவுக்கு பேச வைத்தது. அது அவள் இத்தனை காலம் அவளுக்குள் அடக்கி வைத்த வேதனைகளின் ஓலக் குரல். பின்னர் … Read moreஏன்ட உம்மாட மேல மட்டும் கைய வெச்சால்

வாழ்க்கன்டா சந்தோசமும் உண்மயும் இரிக்கனும் அது இல்லாட்டி வேல இல்ல

திருப்பு முனை பாகம் 25 அன்று வியாழக் கிழமை. மர்யம் லீனாவை அழைத்து, “லீனா நா சனிக்கெழம ஊட்டுக்கு போகனும். நீங்களும் எல்லாதயும் ரெடி பண்ணி வைங்க.” “சரி உம்மா நா ஏற்கனவே எல்லாத்தயும் ரெடி பண்ணி தான் வெச்சிரிக்கேன்.” “அது நல்லம் லீனா நெனவ் காட்டுங்க ஷரீப்கு” “ம் சரிம்மா” சிறிது நேரத்தில் ஷரீப் வந்தான். அப்போது லீனா, “உம்மாக்கு சனிக்கெழம ஊட்டுக்கு போகனுமாம். உம்மாவோட நானும் போகனும்.” “நா இரிக்க கொல நீங்க எப்படி … Read moreவாழ்க்கன்டா சந்தோசமும் உண்மயும் இரிக்கனும் அது இல்லாட்டி வேல இல்ல

பாருங்க உம்மா சல்லி இல்லாட்டி எஙல யாரும் மதிக்கிறாங்களே இல்ல

திருப்பு முனை பாகம் 24 லீனாவின் முழுக் கதையையும் கேட்ட மர்யம் அவளை வாரி அணைத்து அழுதாள். “இவ்வளவு நடந்தும் எப்படிம்மா இதுவல தாங்கிட்டு இருக்கிறாய். எனக்கே இதுவல கேக்க கொல மேல் கூசுது. பாரு அல்லாஹ் ஏன்ட புள்ளட நெலமய. இதுகள யார்ட சொல்லி அழ லீனா. வாப்பா இருந்திருந்தா ஒஙல இப்படி ஒரு நெலமயில உட்டிருக்க மாட்டாரு. இத்துன காலம் நானே ஒஙல வளர்க்க எடுத்த புள்ள என்டு பிரிச்சி பாத்ததில்ல. அப்படி ஒரு … Read moreபாருங்க உம்மா சல்லி இல்லாட்டி எஙல யாரும் மதிக்கிறாங்களே இல்ல

ஒரே ஒஙட கொறய தான் மாமி கதக்கிற.

திருப்பு முனை பாகம் 23 அவள் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள். “தங்கச்சி” என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள். வாசலில் சலீமா தாத்தா நின்றிருந்தாள். “ஆ! தாத்தா நீங்களா? வாங்க உள்ளுக்கு” சலீமாவிடம் நடந்ததை கூறினாள் லீனா. “இது ஒஙட வாழ்க்க தங்கச்சி. நீங்க யோசிச்சி ஒரு முடிவெடுங்க. ஷரீப்ப திருத்தவே ஏலாதா” “எனக்கு என்டா அப்படி ஒரு நம்பிக்கயே இல்ல தாத்தா. இனி பேசி வேலல்ல.” “ம்ம். கவல பட வானா தங்கச்சி. எல்லாம் … Read moreஒரே ஒஙட கொறய தான் மாமி கதக்கிற.

ஷரீப் எனக்கு இதுக்கு மேல மனுசர்க்காக நடிக்க ஏலா எனக்கு divorce வேணும்.

திருப்பு முனை பாகம் 22 “டொக் டொக்” கதவு தட்டும் சத்தம் கேட்டது. லீனா சென்று கதவை திறந்தாள்.ஷரீப் வந்திருந்தான். “லீனா நா கொஞ்சம் வெளிய ஒரு பயணம் போகனும் பெய்த்துட்டு வாறேன்.” என்று அவளது கையைப்பிடித்து அவளை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். “இது என்னா புதுசா?” என எண்ணினாள் லீனா. அது அவளுக்கு பிடிக்கவில்லை. மெதுவாக அவனிடமிருந்து விலகினாள். “லீனா நா வர கொல ஒஙலுக்கு என்னா கொண்டு வருவேன்டு தெரியுமா?” “தெரியா.” “ஒங்களுக்கு … Read moreஷரீப் எனக்கு இதுக்கு மேல மனுசர்க்காக நடிக்க ஏலா எனக்கு divorce வேணும்.

எனய கொன்டே போட்டாலும் கேக்க யாரும் வர மாட்டாங்க சாச்சி

திருப்பு முனை பாகம் 21 வீட்டுக்கு வந்த லீனா கட்டிலில் சாய்ந்து கொண்டு யோசனையில் இருந்தாள். அன்றிரவு முழுக்க அவள் உறங்கவில்லை. ஒரு வாரமாக அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. அவளது மௌனம் ஷரீப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவள் என்ன முடிவோடு இருக்கிறாள் என்பதும் கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனாலும் அவளது வேதனை என்ன என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை. இதனால் அவளை வீட்டுக்கு கூட்டி செல்லவும் அவன் தயங்கினான். அன்று மாமி … Read moreஎனய கொன்டே போட்டாலும் கேக்க யாரும் வர மாட்டாங்க சாச்சி

ஷரீப் நானாக்கு முந்தில இருந்து எஙட உம்மாட மேல தான் கண்

திருப்பு முனை பாகம் 20 லீனா யோசிக்க தொடங்கினாள். அவளால் சாரா கூறியதை ஏற்க முடியாமல் இருந்தது. “நா ரோஸி ஆன்டிய எவ்வளவு நம்பினேன். கடசில ஏன்ட வாழ்க்ககே எமனா வந்துட்டாவே ச்சீ” அந்த ரோஸி வேறு யாரும் இல்லை. ஷரீப்பின் தந்தையின் சகோதரனின் மனைவி. அவனது சித்தி. இதுவா இஸ்லாம் காட்டிய உறவு? அஜ்னபி மஹ்ரமி எல்லை பேணப்பட்டால் சித்தி முறையில் இருப்பவள் கள்ளக்காதலியாக தேவையும் இல்லை. மகன் முறையில் இருப்பவன் கள்ளக் காதலனாகவும் தேவை … Read moreஷரீப் நானாக்கு முந்தில இருந்து எஙட உம்மாட மேல தான் கண்

அந்த ரோஸி அவ எங்க இரிக்கிறா?

திருப்பு முனை  பாகம் 19 அம்னாவுடன் மனம் விட்டு பேசியவளுக்கு ஆறுதலாக இருந்தது. பிறகு அவள் அன்று குறித்து வைத்த இலக்கத்திற்கு கோல் எடுக்க நினைத்தாள். ‘சாச்சி கிட்ட இருந்தும் ஒரு பதிலும் இல்ல. எதுக்கும் நானே அந்த number கு எடுத்து பாத்தா நல்லம்.’ என எண்ணியவள் அந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தாள். உள்ளுக்குள் பதற்றமாகவும் இருந்தது. ஸலாத்துடன் தன்னை அறிமுகம் செய்தாள். மறுமுனையில், “வஅலைக்கும் ஸலாம். சொல்லுங்க. நா சாரா தான் பேசுறேன்.” சாரா … Read moreஅந்த ரோஸி அவ எங்க இரிக்கிறா?

ஒனய படிக்க உடுவ தானே ஓன்ட மாப்புள?

திருப்பு முனை பாகம் 18 லீனா வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்து கைத்தொலைபேசியை கையில் எடுத்தாள். எடுத்த எடுப்பிலேயே மீதியை பார்த்தாள். 6 ரூபாய் தான் மீதமிருந்தது. இது போதாதே, சரி ஷெரீனுக்கு card ஒன்டு போட சொல்வோம் என நினைத்து அவளுக்கு அழைப்பை எடுத்தாள். “ஹலோ!” “மறுமுனையில் ஒரு ஆணின் குரல். அது ஷெரீனின் கணவன்.” “ஹலோ! ஷெரீன் இரிக்கிறாவா” “அவ ஊட்ல நா இங்க townல இரிக்கிறேன். யாரு நீங்க?” “ஆ, லீனா … Read moreஒனய படிக்க உடுவ தானே ஓன்ட மாப்புள?

நா கெம்பஸ் போற முடிவுல தான் இரிக்கிறேன்

திருப்பு முனை பாகம் 17 மணி இரவு 7.30 இருக்கும். கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி. முன்னால் மாமாவும் மாமியும் நின்றிருந்தனர். ஸலாத்துடன் அவர்களை வரவேற்றாள் லீனா. அவர்களுக்கு வந்த களைப்புக்கு லீனா டீயுடன் சிற்றுண்டியும் சேர்த்து வழங்கினாள். சிறிது நேரம் சுகம் விசாரித்து உரையாடி விட்டு திடீரென மாமி. “என்ன லீனா திரும்ப புதுசா கெம்பஸ் கத எல்லாம் கதக்கிறீங்களாம்?” “ஓ! கதச்சேன். முடிக்க முன்னுக்கு அதுக்கு எல்லாம் ok சொன்ன … Read moreநா கெம்பஸ் போற முடிவுல தான் இரிக்கிறேன்

வளர்க்க எடுத்த புள்ளகள்கு சொத்துலயே பங்கில்ல.

திருப்பு முனை பாகம் 16 ஒருநாள் வீட்டிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. லீனா இந்தாங்க. ஊட்ல கோல். “ஹலோ. அஸ்ஸலாமு அலைக்கும்.” “வஅலைக்கும் ஸலாம். என்ன லீனா ஒரு கோல் சரி இல்ல ஏன்?” என்று மாமி கேட்க, “நா ஊட்டுக்கு கோல் எடுத்து தர சொன்னா அவர் எடுத்து தாரல்ல. அதுக்கு 1008 கத சொல்ற. நா என்னா செய்ய அதுக்கு? யாருக்கும் எனய பத்தி கணக்கு இல்லயே. எல்லாம் ஏன்ட விதி. என்னா லீனா … Read moreவளர்க்க எடுத்த புள்ளகள்கு சொத்துலயே பங்கில்ல.

ஒஙல நம்பி எஙட புள்ளய தந்தா நீங்க இப்படிய வெச்சிருக்கிறீங்க?

திருப்பு முனை பாகம் 15 பிறகு தனது Autograph இல் இருந்து number எடுத்து நண்பிகளுடனும் உறவுகளுடனும் கதைத்து விட்டு சலீமாவிடம் 4nஐ கையளித்தாள். “தாத்தா சாச்சி கிட்ட இருந்து கோல் வந்தா மட்டும் எனக்கு கொஞ்சம் போனஅ கொணந்து தாங்க கோவிக்காம. please.” “சரி தங்கச்சி, நீங்க ஒன்டும் யோசிக்க வானா. சாச்சி கோல் எடுத்தா நா கட்டாயம் சொல்றேனே.” “சரி தாத்தா. லீனா நன்றியுடன் சலீமாவை பார்த்து புன்னகைத்தாள்.” மறுநாள் திடீரென மாமாவும் மாமியும் … Read moreஒஙல நம்பி எஙட புள்ளய தந்தா நீங்க இப்படிய வெச்சிருக்கிறீங்க?

மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்

திருப்பு முனை பாகம் 14 வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை போல ஷரீப்பின் நடவடிக்கைகளும் முன்பு போல மாறி இருந்தன. சில சமயங்களில் அவன் லீனாவுடன் காரணம் ஏதுமின்றி சண்டை போட்டான். காரணம் கேட்டாள் வார்த்தைகளால் அவளை திட்டி தீர்த்தான். இதனால் அவள் அவனுக்கு பயந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். அவனது எல்லை தாண்டிய அடக்குமுறைகள் அவளுக்குள் ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டது. ஒரு நாள் சலீமா தாத்தா வெகு கால இடைவெளிக்கு … Read moreமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்

சமூகத்தை மயக்கவோர் உம்றா

திருப்பு முனை பாகம் 13 திடீர்ன்னு இவர்க்கு என்னாச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாரு? இவருக்கு ஒவ்வாரு time கு என்னா ஆகுதுன்டே புரீதில்ல. லீனா மனதுக்குள் புலம்பினாள். பல மணி நேர பயணம் இரவு 8 மணியோடு நிறைவுக்கு வந்தது. அவள் முகம் கை கால் கழுவி  விட்டு வுழூவுடன் வந்து மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதாள். அவளுக்கு அசதியாக இருந்தது. சற்று நேரம்  கட்டிலில் சாய்ந்திருந்தாள். மறுபக்கம் தலையும் மனமும் கனமாக வலித்தது. … Read moreசமூகத்தை மயக்கவோர் உம்றா

நீங்க நின்னுட்டு போக வரல்லயா மகள்?

திருப்பு முனை பாகம் 12 மணி 7.30 ஐ காட்டியது. அப்போது தான் அவர்கள் வந்திறங்கினர். வாசலில் நின்றிருந்த மாமி இவர்களை வரவேற்றாள். லீனா ஸலாத்துடன் மாமியை கட்டியணைத்தாள். “வாங்க மேடம். சரியான புடிவாதம் தான் எனா ஒஙலுக்கு?” என்று மாமி கூற, “இல்லயே” என்று கூறிக் கொண்டே லீனா உள்ளே சென்றாள். வீட்டில் எவரும் இல்லை. “சாச்சி எங்க?” “அவங்க தான் இப்ப உம்மா கிட்ட நிக்கிற.” “ஆ அப்ப மத்தவங்க எல்லாம் எங்க?” “புள்ளகள் … Read moreநீங்க நின்னுட்டு போக வரல்லயா மகள்?

இது கனவா? நிஜமா?

திருப்பு முனை பாகம் 11 வீட்டில் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருந்தாள் லீனா. வெகுநேரமாகியும் அழைப்பு வரவில்லை. ‘ஏன்? இவ்வளவு நேரம் கோல் எடுக்க? ஷெரீன் சொல்லி இரிப்பா தானே. ஒரு வேல மாமி ஊட்ல இரிக்கிறாவோ தெரியா.’ ம்ஹூம். என்று பெரு மூச்சு விட்டாள் லீனா. “டொக் டொக்” கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் போனை மறைத்து வைத்து விட்டு வந்து கதவை திறந்தாள். ஷரீப் வந்திருந்தான். “லீனா அந்திக்கி ஊட்டுக்கு போறதுக்கு ரெடியாகுங்க. … Read moreஇது கனவா? நிஜமா?

எனக்கு உம்மாவ பாக்கனும் please

திருப்பு முனை பாகம் 10 இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒருநாள் தாய் மர்யம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவளுக்கு கிடைத்தது. அவள் மிகுந்த மன வேதனையில் இருந்தாள். “ஏன் இப்படி அழுதுட்டு இரிக்கிறீங்க? நீங்க இப்படி அழுற அளவுக்கு அவங்களுக்கு ஒன்னும் ஆகல லீனா” லீனா கண்ணீரை துடைத்து கொண்டே, “எனய ஊட்டுக்கு கூட்டிட்டு போங்க. எனக்கு உம்மாவ பாக்கனும் please.” “எனக்கு இங்க எவ்வளவு வேல இரிக்கி. அதெல்லாம் உட்டுட்டு நா எப்படி வர?” … Read moreஎனக்கு உம்மாவ பாக்கனும் please

இது ஊர்க்கு மட்டும் தெரிஞ்ச கத இல்ல. FACEBOOK லயே வந்த கத

திருப்பு முனை பாகம் 9 “சும்மா யோசீங்க தங்கச்சி ஷரீப்ட உம்மா வாப்பா ஒஙட wedding கு வந்தாங்களா?” “இல்லயே!” “அவங்க ஏன் இவனோட கோவம் என்டு ஒஙல்க்கு தெரியுமா?” “நானும் அத தான் தாத்தா யோசிக்கிறேன். ஆனா ஏன் பேசுறல்லன்டு எனக்கு தெரியா.” “எல்லாத்துக்கும் காரணம் இரிக்கி தங்கச்சி.” என்ன என்பது போல் சலீமாவை பார்த்தாள் லீனா. “நீங்களே சொல்லுங்க தங்கச்சி. எந்த மாமி ஊட்ல சரி மகன எதிர்த்து மருமகள்ட வாழ்க்ககாக வாதாடின மாமா … Read moreஇது ஊர்க்கு மட்டும் தெரிஞ்ச கத இல்ல. FACEBOOK லயே வந்த கத

ஷரீப்ப பத்தி எல்லாம் தெரிஞ்சி தான் நீங்க முடிச்சீங்களா?

திருப்பு முனை பாகம் 8 ஆம்! அவளது பெயர் ரோஸி என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. லீனா அவளது msg ஐ வாசித்தாள். “என்னடா நீ எனய மறந்துட்டியா. புதுசு வந்தா பழசுக்கு இப்ப மதிப்பு இல்ல போல.” இது ரோஸியின் message. அதற்கு ஷரீப். “அப்படி எல்லாம் இல்ல மா. எப்படியும் நீங்க மட்டும் தான் ஏன்ட உலகம். நா ஒஙட மேல தான் உசுரயே வெச்சி இரிக்கேன். நா வாழ்ற வாழ்க்கயே ஒஙல்காக தான். நீங்க … Read moreஷரீப்ப பத்தி எல்லாம் தெரிஞ்சி தான் நீங்க முடிச்சீங்களா?

யா அல்லாஹ்! பாரு எனய எப்படி மொடயாக்கி இரிக்கிறாங்க!

திருப்பு முனை பாகம் 7 லீனா அவனது விவாக பத்திரத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தாள். அது ஒரு  வழக்கு தாள். அதில் பஸ்கு divorce என்று குறிப்பிட்டிருந்தது. மனைவியால் வழங்கப்படும் விவாகரத்துக்கே பஸ்கு divorce எனக் கூறப்படும். அப்படி என்றால் இவர் divorce குடுத்தில்ல. அவங்க தான் divorce பண்ணி இரிப்பாங்க. but மாமி எனக்கிட்ட இவர்  தலாக்  பண்ணினன்டு பொய் தான் சொல்லி இரிக்கிறாங்க. சிந்தித்தவாறே மறு பக்கம் பார்த்தாள். அதில்,  ஷரீப் தனது மனைவிக்கும் மார்க்கத்திற்கும் … Read moreயா அல்லாஹ்! பாரு எனய எப்படி மொடயாக்கி இரிக்கிறாங்க!

Select your currency
LKR Sri Lankan rupee