வரலாற்றுப் புகழ்மிக்க “போர்வை”க் கிராமத்தை காணச் செல்வோம்.

தென்னகத்தின் மாத்தறை மாவட்டத்தில், அக்குரஸைத் தேர்தல் தொகுதியில் அத்துரலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடபிடிய என்றழைக்கப்படும் கிராமத்தின் மற்றொரு பெயர்தான் “போர்வை” என்ற வரலாற்றுப் புகழ்மிக்க அழகிய கிராமமாகும். சுற்றுவட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் கிராமமும் இல்லாத நிலையில் தனிமையில் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இக்கிராமத்தைப் பற்றிக் கேட்க ஆவலாக இருப்பீர்கள் என்று எண்ணியவனாய் இந்த கிராமத்தின் உயிர் நாடியான போர்வை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயலின் உள்ளே நுழைகிறேன். பள்ளிவாசலின் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை அவ்வளவு […]

Read More

போர்வை மத்ரஸாக்களின் வரலாற்றுப் பின்னணி

ஈழத் திரு நாட்டின் தெற்கு திசையிலே, பசுமையான மலைகளை ஊடறுத்துப்பாயும் நதிகளில் ஒன்று நில்வளகங்கை. எழில் மிகு நில்வளகங்கையின் நதித்தீரத்தில் அழகு மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. போர்வை முஹியத்தீன் பள்ளி வாசல். அழகுக்கு மெருகூட்டும் எழில் மிகு கட்டடக் கலைகளை தன்னகத்தே கொண்டு பார்ப்போர் மனதை ஈர்க்கும் வசீகரத் தோற்றத்துடன் கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இப்பள்ளி வாசல் தென்னிலங்கையில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறது. இன்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதையருடைய முயற்சிகளின் பலனாக […]

Read More

சகவாழ்விற்கு வழிகாட்டும் போர்வை முஹியந்தீன் ஜும்மா மஸ்ஜித்

அகுரஸ்ஸவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போது சமன் உபுல் பினிதிய பாதிக்கப்பட்ட ஒருவராவார். ஆனாலும் அந்த குண்டுவெடிப்பின்போது அவருக்கு பக்கத்தில் இருந்தவர் உயிரிழந்தாலும் உபுல் பினிதியவின் உயிர் காக்கப்பட்டது. நான் நினைக்கின்றேன் இந்த பள்ளிவாசலின் அருளால் எனது உயிர் பாதுகாக்கப்பட்டது என்று” இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் நாட்டில் பல பாகங்களிலும் வாழும் மக்களை ஒன்றிணைக்கும் இடமாக இருக்கின்றது. சிங்களவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் அங்கு சென்றால் இறை அருள்கிடைக்கும் என்று நம்புகின்றனர். புண்யவதி என்ற […]

Read More

குண்டு வெடிப்பில் முடிந்த போர்வையின் தேசிய மீலாத் விழா

போர்வையின் 21ம் நூற்றாண்டின் வரலாற்றுப் பார்வை அன்று 2009.03.10 வாழ் நாளில் மறக்க முடியாத நாளாகும். குண்டு வெடித்தாலும் தனக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்றிய நாளகும். அன்றைய தினம் தேசிய மீலாத் தினத்திற்காக ஊரே கலைகட்டியிருந்தது. தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலே பள்ளி முற்றவெளிக்கு சென்றிருந்த எல்லோரையும் பாதுகாப்பு பிரிவினர் பரிசோதனை செய்து உட்செல்ல அனுமதி அளித்தனர். அதிதிகள் வருகைதரும் நேரம் […]

Read More

12ம் நூற்றாண்டிலிருந்து தொடரும் போர்வையின் அடிச்சுவடுகள்

தென்னிலங்கையின் வனப்புக்கும்¸ வளத்திற்கும் அங்கு காணப்படும் மலைத்தொடர்களும் வலைந்து நெளிந்தோடும் நதிகளும் மேருகூட்டுகின்றன. அழகு நங்கையின் அதரங்களாக விளங்குகின்ற நதிகளின் படுக்கைகளில் இடையிடையே கிராமங்களும் பட்டினங்களும் அமைந்து சர்வ சாதாரனமாக அங்கு விளங்குகின்றன. அவற்றுள்ளே “ரக்குவானை குன்றுகளால்” வழிந்தோடும் மதுரமான நீரை தனக்கே சொந்தமாக்கி மேடு பள்ளங்களில் அன்னநடை பகிலுகிறது நீள வள கங்கை அதன் படுக்கையில் அமைந்து பெருமையோடு விளங்கும் போர்வைக் கிராமமோ….. அம்மம்மா… அனைத்து வளங்களையும் வழங்கி இயற்கை அன்னை அழகு பார்க்கிறாள் அங்கு. […]

Read More

1600 முதல் 1985 வரை போர்வை பள்ளி வரலாறு

சலசலத்து ஓடும் அழகு மிகு நில்வள கங்கைத் தீரத்தில் தலைநிமிர்ந்து நிற்பது தான் “போர்வை முஹியந்தீன் பள்ளிவாசல்” அழகுக்கு அழகூட்டும் எழிலான பக்தாதிய கலை அம்சத்தை உள்ள்டக்கி பார்ப்போரின் மனதை ஈர்க்கும் வசிகர சக்தியையும் பக்தியையும் தரக்கூடியதாக அமைந்து இருக்கும் இப்பள்ளிவாசல் தென்னிலங்கையில் மாத்திரமல்ல இலங்கையில் எங்கு முஸ்லிம்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இதன் நாமம் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது என்றால் இதக் சிறப்பு சொல்லாமலே விளங்கும். சிறப்பு மிகு தியாரமும் சிந்தை கவரும் இதன் தோற்றமும் இதற்கு […]

Read More

போர்வையின் பூர்விகம்

நினைவலைகள் நிகழ்வில் முன்னால் அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் நஸீர், M.H.பௌதுல் அமீன், சகோதரர் நுஸைர் ஆகியோரால் எடுத்துறைக்கப்பட்ட போர்வையின் வரலாற்றின் தொகுப்பு முஸ்லிம் மக்களால் போர்வை என்றும், சிங்கள மக்களால் கொடபிடிய என்றும் அழைக்கப்படும் இக்கிராமம் அகுரெஸ்ஸ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இவ் ஊரில் சுமார் 600 குடும்பங்கள் உள்ளன. இவ் ஊரின் முக்கியத்துவம் என்னவெனில், ஊரைச் சுற்றி பௌத்த மக்கள் வாழ்கின்றனர். எனினும் இங்கு மக்கள் ஒற்றுமையுடன் கௌரவமாக வாழ்கின்றனர். இங்கு 1000 […]

Read More

போர்வை குண்டு வெடிப்பு

போர்வை வரலாற்றின் கடிதப் பார்வை M.A. பஸீல் ஹுஸைன், 20/1, கொடபிட்டிய, அகுரெஸ்ஸ. மேன்மைதங்கிய ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன ஐயா, ஜனாதிபதி செயலகம், கொழும்பு. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! 2009 வருடத்தில் அக்குரெஸ்ஸ கொடபிட்டிய முஸ்லிம் பள்ளியில் ஏற்பட்ட குண்டு வெடிப்புத் தொடர்பானது. நபி நாயகம் முஹமது நபி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் அரச அனுசரணையுடன் நடைபெறும் மீலாத் நபி பிறந்த தின உற்சவம் 2009இல் மாத்தறை நகரத்தில் ஜுன் மாதத்தில் 25 […]

Read More